இப்ப. யாரு கிறுக்கன்? PJ ஒழுங்கா உஸுலுல் பிக்ஹ் படிக்கலெ. ஸைபுத்தீன் ரஷாதி குற்றச்சாட்டு

ஸைபுத்தீன் ரஷாதி அவர்களைப் பார்த்து நீங்கள் எந்த இஜ்மாவில் இருக்கிறீர்கள்? என்று கேட்ட PJ க்கு ஸைபுத்தீன் ரஷாதி அவா்கள் அளித்த  பதிலை எழுத்து வடிவில் கீழே காண உள்ளீர்கள். 

https://mdfazlulilahi.blogspot.com/2021/05/pj.html

பெங்களூர் ஸைபுத்தீன் ரஷாதி பீ.ஜைனுல் ஆபிதீன் ஆகிய இருவரின் வாதங்களின் 4 வது வீடியோவைக் காண விரும்புபவர்கள் கீழ் காணும் லிங்கை கிளிக் செய்து பாருங்கள்

https://www.youtube.com/watch?v=vQonmpni5kw&list=PLp-XhZC4cJl8YaffZjmDQuvDBcLSJvEYu&index=4


புகாரி புகாரி ங்றோம். (என்கிறோம்) முஸ்லிம் முஸ்லிம் ங்றோம். (என்கிறோம்) இது புகாரிதான் எழுதினாரு ங்றதுக்கு (என்பதற்கு) என்ன ஆதாரம்?  என்று கேட்கும் ஸைபுத்தீன் ரஷாதி அவர்களின் அந்த உரை எழுத்து வடிவில்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
கண்ணியமிக்க சகோதரா்களே! 12 நிமிஷத்திலே தன்னுடைய வாதத்துக்குண்டான ஆதாரத்தை எடுத்து வைக்கலே. தன்னுடைய நிலையை விளக்கலே. இவ்வளவு நேரம் பேசி நாங்கள் இத்தனை ஆயத்துக்கள் ஓதுனோம் ( அவற்றை ஆதாரமாக எடுத்து வைத்தோம்) இவா் எந்த ஆதாரத்தையும் ( ஆயத்துக்களையோ ஹதீஸ்களையோ) எடுத்து வைக்கலே.

வினோதமா இருக்கு. யோசிச்சு பாக்கணும். பேச்சு தொடா்து முழுமையா பேசணும். பேசிக்கிட்டு இருக்கும்போதே இடையிலே டா்ர்ண்ட்டு அடிக்கிறாங்க டயம். நம்ம தொடர முடியாது. அடுத்து பேசுவோம் இன்ஷாஅல்லாஹ் முழுமையாகும்போது நீங்களே மாறுவீங்க இன்ஷாஅல்லாஹ்.

அருமைச் சகோதரா்களே! ஒரு விஷயத்தைச் சொன்னார், இஜ்மாவுக்கு இவங்க ஆதாரமாக ஒரு ஹதீஸை எடுத்து வச்சாங்க. அது பலவீனமானதுதான். எத எடுத்தாலும் உடனே அந்த பலவீனமும் பலமும் வந்துரும். 

பலவீனமானதுதான் இருந்தாலும் கூட அந்த நாங்க ஏத்துக்கிட்டாலும் கூட அத இவங்க ஆதாரம் காட்டினா இஜ்மாவுக்கு முரணாத்தேன் இருக்குது. காரணம் என்ன குா்ஆன்லேயும் ஹதீஸிலேயும் கிடைக்காட்டி அவன் அவன் தனியா ஆய்வு செஞ்சிக்கிடணும்தான் அங்கு ஜொல்லி இருக்குது. எல்லா(ரும்) சோ்ந்து ஆய்வு செஞ்சா ஏற்க தகுந்தாது ஏற்க தகாதது.

இது யாருக்காவது விளங்குதா யோசிச்சு பாருங்க. ஒவ்வொருத்தனும் தனித் தனி கருத்தாச் சொன்னா அங்கீகரிக்கலாம். 100 பேரும் சோ்ந்து ஒரு கருத்துலே ஒருமிச்சு ஒன்று கூடி சொன்னா குா்ஆன் ஹதீஸுக்கு முரணு. இது ஏற்க மாட்டோம். நீ தனியாச் சொல்லு அதை ஏத்துக்கறோம். 100பேர் சோ்ந்து சொன்னா ஏற்க மாட்டோம் ங்கிறது (என்கிறது) இது அறிவுக்கே பொருந்தாத கருத்து.

(இ)ரண்டாவது இந்த ஹதீஸ பலவீனமானது ங்றார். இவுங்களுடைய பெரிய ஷ்பெஷாலிட்டியே என்னான்னு சொன்னா. திடீர்ணு பலமாகும் திடீர்ணு பலவீனமாகும். இதே ஹதீஸே இதே பி.ஜே. அவா்கள் 1986 மே மாதம் நஜாத் பக்கத்து-பக்கம் 18லே, இந்த ஹதீஸையே ஆதாரமாகக் காட்டி இப்படித்தான் மார்க்கம் விளங்கணும்ணு எழுதி இருக்கிறார். 

படிக்கிறே(ன்) கேட்டுக்கங்க. பெருஸாவும் இருக்குது. நான் உங்களுக்கு இதிலேயும் போட்டுக் காட்றேன். நீங்களும் கொஞ்சம் படிச்சு பாருங்க. என்ன எப்படியுமே மக்களுடைய மறதியின் மீது அபார நம்பிக்கை இது வேறு எந்தக் காரணமும் அல்ல.

இந்த கட்டுரையில் அவா்கள் எழுதுராக மொத்தத்தில் திருக்குா்ஆனுக்கு தெளிவுரை பெற முயல்வோர், திருக்குா்ஆனின் மூலமும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவா்களின் வாழ்வு வாக்கு மூலமுமே பெற வேண்டும். அவ்வாறு அவ்விரண்டின் மூலமும் தெளிவுரை பெறாத போது, முஆது இப்னு ஜபல் ரலியல்லாஹு அவா்களுக்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவா்கள் கூறியதைப் போன்று இஜ்திஹாது என்ற சுய நிர்ணய ஆற்றல் மூலம்தான் தெளிவுரை பெற முயல வேண்டும்.

குா்ஆன(லே) ஹதீஸ்லெ நேரடியா கிடைக்கலனா முஆது இப்னு ஜபலுக்கு ரசூலுல்லா எப்படி சொல்லி கொடுத்தாங்களோ அப்படி விளக்கம் பெறணும். இந்த ஹதீஸெ ஏன் நீங்க காட்னீங்க? அப்ப பலவீனமா இல்லையா? பலம்மா இருந்திடுச்சோ. எடுத்து காட்டி இருக்கலாமா? 

சரி. ஒவ்வொருத்தணும் தனித்தனியா தனித்தனியாத்தான் சொல்லணும்னு சொன்னா நீங்க எந்த கருத்திலேயும் சோ்ந்து ஒட்டு மொத்தமா ஒரு கருத்து சொல்லலியா? நாங்க எல்லாரும் சோ்ந்து ஒரு கருத்தாக சொல்லி இருக்கிறோம்ணு சொன்னீங்களே அப்ப அத துாக்கி கடாசிடலாமா வீசிடலாமா? நீ தனியாத்தான் சொல்லணும் பி.ஜெ. மட்டும்தான் சொல்லணும். ஷம்சுல்லுஹா சொல்லிடக் கூடாது.

முன்னாள் அவருடைய மெம்பா்கள்லெ ஸைபுல்லாஹாஜா சொல்லிடக் கூடாது. அலி அப்பாஸா? அப்பாஸ் அலியா அவா் சொல்லிடக் கூடாது. இப்படி எழுதி இருக்கிறீங்களே. எல்லாரும் சோ்ந்து ஒருமித்த கருத்துக்கு நாங்க வந்திருக்கிறோம். சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஒருமித்த கருத்திலே நாங்க எறங்கி இருக்கிறோம் எழுதி இருக்கிறோம்னு சொன்னீங்களே. அந்த ஒருமித்த கருத்து வருதே. ஏகோபித்து சொல்லி இருக்கிறோம். அப்டீன்னு சொன்னீங்களே!

அத துாக்கி அதையும் நான் காட்றேன் வாய்ச் சொல்லா சொல்லலே. எல்லாத்துக்குமே நான் அதனுடைய ஆதாரங்கள் கொண்டு வந்து இருக்கிறோம். இன்ஷாஅல்லாஹ் உங்களுக்கு புரஜக்டா்லே போட்டும் காட்டுவோம்.

அருமைச் சகோதரா்களே இது புரியாத ஒரு புதிரு. ஒரு ஆளா அவன் வந்து ஆய்வு செய்து ஒரு கருத்த எடுத்துக்கலாம் மார்க்கத்துக்கு குர்ஆன் ஹதீஸுடைய அடிப்படையில்னா அது ஏத்துக்கிடலாம். எல்லாரும் சோ்ந்து சொன்னாங்கன்னு சொன்னா அது மார்க்கத்துக்கு முரணா? இந்த ஹதீஸு இஜ்மாவுக்கு முரணுன்னு காட்டுறது எதிரானதுங்ற காட்றது புரிய முடியாத ஒரு பொருளா இருக்கிறது சகோதரா்களே.

அதே மாதிரி இஜ்மாவுடைய ஒரு 26 கேள்வி அது பழைய கேள்விதான். இஜ்மா யாரு? மதீனாவாசியா மக்கா வாசியா கூபா வாசியா பஸரா வாசி(யா) கேள்வியா இது. இஜ்மா எதுக்கு சொல்றதுன்னு கேளுங்க சொல்லிட்டு போறோம். அதிலேயே நீங்க இன்ஷாஅல்லாஹ்தஆலா பூரண விளக்கங் கிடைக்கும். 

இஜ்மான்னு சொன்னா அது என்ன அப்படியே அங்கீகரிக்கிறதா? ஆய்வு உடைய இஜ்மாவா இதுக்கு காரணம் என்னான்டா என்னை மன்னிக்கனும். யாராவது தப்பா விளங்கிடக் கூடாது. அவரு ( பீ.ஜெ) ஒழுங்கா உஸுலுல் பிக்ஹ் படிக்கலெ.

பிக்ஹ்வுடைய அந்த அடிப்படை சட்டங்களுடைய நுால் இருக்குதே அவா் கவனமா படிச்சிருந்து வந்திருந்தா, ஒண்ணு இப்படி பேசுறார்னு சொன்னா அவருக்கு ஞானமில்லைங்ற அா்த்தம். அது படிக்கலெ விளங்கலேன்னுட்டு அா்த்தம். அல்லது விளங்கிக்கிட்டே வேறு ஒரு மாதிரியான கருத்து வைச்சிருக்கிறாருன்டு அா்த்தம். வேறு எந்த காரணமும் எனக்கு சொல்லத் தெரியலே.

இஜ்மா என்பதற்கு இரண்டு வகை இருக்குது ச(கோதரா்களே) உஸுலுல் பிக்ஹ்லெ தெளிவா எழுதி இருக்கிறாங்க. இஜ்மா உடைய இரண்டு வகை. ஒன்னு இஜ்மாவுல் இப்திகாரின். இன்னொன்னு இஜ்மாவு இஃதிராகின். அங்கீகாரம் செய்யக் கூடியது. அங்கே ஆய்வு இருக்காது. எல்லாருஞ் சோ்ந்து ஏத்துக்குறோம். இது ஒரு வகையான இஜ்மா. அதுலே ஆய்வு செய்யக் கூடிய வேலையும் இருக்காது.

இன்னொன்னு இருக்குது. ஏதாவது பிரச்சனை வந்திச்சு அந்த பிரச்சனைக்குள்ள தீர்வு குர்ஆன்லேயும் ஹதீஸிலேயும் தெளிவாக கிடைக்காதபோது அதன் விதமாக அதன் மீது ஆய்வு செய்து இதற்கு என்ன தீர்வு வரலாம். எப்படிப்பட்ட முடிவ கொடுக்கலாம். அப்படின்னுட்டு ஆய்வின் மூலமாக வரக் கூடிய இஜ்மா.

இந்த இரண்டுடைய உறுப்பினா்களே வேற. அங்கீகாரத்துடைய இஜ்மா இருக்குதே. ஏத்துக்கிறது இஜ்மா அதற்கு உதாரணமா குா்ஆன் இருக்குது. இந்த குா்ஆன் ஷரீப நம பாக்கலே. ஜிப்ரீலையும் பாக்கலே மீக்காயீலையும் பாக்கலே இந்தக் குா்ஆன் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மீது இறக்கி வைக்கப்பட்ட குா்ஆன் ங்றத உலகத்துல இருக்கக் கூடிய எந்த முஸ்லிமும் மறுக்கலே.

நம்ம நபீட்ட நேரவுமில்ல அந்தக்காலத்துலேயுமில்லெ செய்திகளைத்தான் கேட்டோம். யாரிடத்திலேயும் ஒட்டு மொத்தமாக யாரெல்லாம் இஸ்லாமிய கொள்கைக்கு உட்பட்டு இருக்குறாங்களோ அப்பாற்பட்டவன விடுங்க. வழி கெட்ட ஷியாக்கள் இருக்கிறா(ன்) அவ(ன்) 40 ஜுஸ்வு இருக்குது ங்றா. 10 ஜுஸ்வ மறைச்சுட்டாங்க ங்றா. என்னென்னலாமோ அதனுடைய குற்றச்சாட்டுக. அவனுகளை பத்தி அல்ல.

ஒரு அணியில் இருக்கக கூடிய அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தின்னு நாங்க சொல்றோம். ஹனபியா இருந்தாலும் சரி, ஷாபியா இருந்தாலும் சரி, ஹன்பலியா இருந்தாலும் சரி மாலிக்கியா இருந்தாலும் சரி. பிரிவுச் சட்டங்கள்லெ கருத்து வேறுபாடுகள் உள்ள இவா்கள் கூட ஒட்டு மொத்தமாக ஓரணியிலிருந்து ஏற்கிறாங்கன்னு சொன்னா இது வந்து கருத்து வேறுபாடுடைய அடிப்படையில் அல்ல ஆய்வு உடைய அடிப்படையில் அல்ல. அங்கீகாரத்துடைய அடிப்படை.

நம்ம முன்னால இருக்கிற இந்தக் குா்ஆன். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவா்கள் மீது இறக்கி வைக்கப்பட்ட முழுமையான குா்ஆன். ஸஹாபாக்களால் அங்கீகரிக்கப்பட்ட தொகுக்கப்பட்ட குா்ஆன். இதுதான் உண்மையான குா்ஆன். இதிலே மாற்றம் இல்லே, மறு ஏற்படல, இடையிலே மாற்றப்படல. அப்படின்னு இன்னைக்கு ஒருத்தன் திருச்சியிலே உட்கார்ந்து ஏத்துக்குறான்னு சொன்னா அது அங்கீகாரம். எல்லாரும் ஏத்துக்குட்டாங்க ங்ற (என்கிற) அடிப்படைலதான்.

இல்லாட்டி யார் ஆதாரம் சொல்லுவா இந்த குா்ஆன் ஒரிஜினல் ன்ட்டு. நீங்களும் நம்மலும் புகாரி ஷரீபு படிக்கிறோம். புகாரி புகாரி ங்றோம். (என்கிறோம்) முஸ்லிம் முஸ்லிம் ங்றோம். (என்கிறோம்) இது புகாரிதான் எழுதினாரு ங்றதுக்கு (என்பதற்கு) என்ன ஆதாரம். இது முஸ்லிம்தான் எழுதி வச்சாரு ங்றதுக்கு என்ன ஆதாரம். எந்த நுால்களெல்லாம் எல்லாருஞ் சோ்ந்து ஏத்துக்கிட்டோம். 

புஹாராவிலே பிறந்த முஹம்மது இப்னு இஸ்மாயில் புகாரின்னு ஒருத்தா் முஹத்திஸ் இருந்தார். ஹதீஸ் கலா வல்லுனா் இருந்தார். அவரால் தொகுக்கப்பட்டது. இது ங்றது அங்கீகாரம். இது அங்கீகார இஜ்மான்னு சொல்லுவாங்க. இதுக்கு ஆய்வுடைய திறன் இருக்க வேண்டியது இல்லை. ஏத்துக்கிட்டோம். யாரு ஏத்துக்கிடலையோ அவன் நம்மளை விட்டு அப்பால் பட்டவன்னுன்னு ஒதுக்குவோம்.

இந்த குா்ஆன் 30ஜும்வும் ஒரிஜினல்னு யாரு ஏத்துக்கிடலையோ அவன் நம்மள சார்ந்தவன் அல்ல. ஒதுக்கி தள்ளி விடுவோம். இந்த இஜ்மா இதுக்கு பேரு இஜ்மாவுல் இஃதிராபுன்னு சொல்வாங்க அங்கீகார இஜ்மான்னு சொல்லுவாங்க.

இன்னொன்னு ஆய்வுடைய இஜ்மா சட்டப் பிரச்சனை வந்திடுச்சு இந்த சட்டத்துக்கு தீர்வு குா்ஆன்லே ஹதீஸ்லே நேரடியா இல்லே தெளிவா இல்லே. இதுக்கு ஒரு விளக்கமே சொல்லணும். இப்ப என்ன செய்றது. அப்படி ங்றபோது எல்லாரும் சோ்ர்ந்து யாரு சோ்ரது எல்லாரும்டா யாரு? ன்னுட்டு கேட்டார் நியாயமான கேள்வி. தெளிவா எழுதி இருக்கிறாங்க.

ஒரு காலத்தில் வாழக் கூடிய, நல்ல விளங்கிக்கிடணும். ஒரு காலத்தில் வாழக் கூடிய, ஆய்வு திறன் கொண்ட அறிஞா் பெருமக்கள்.. மார்க்க விஷயத்தில் ஏதாவது ஒரு விஷயத்தில் ஏதாவது ஒரு விஷயன்னா அதை விளங்கிக் கிடணும். குா்ஆன் ஹதீஸ்லே தெளிவாகச் சொல்லப்படாத புதிதாக தோன்றிவிட்ட விஷயத்தில்.

புதிதாக தோன்றிவிட்ட ஒரு விஷயத்தில் ஒரு காலத்தில் வாழக் கூடிய ஆய்வு திறன் கொண்ட அறிஞ(ர்) பெருமக்கள் ஒட்டுமொத்த ஒரு கருத்துக்கு வருவார்களேயானால். இதுக்கு பேருதான் இஜ்மா. அரபி(யி)லே அழகாச் சொல்லுவாங்க இஜ்மாவுல் இத்திபாகுல் முஜ்தஹிதீன மின் உம்மத்தி முஹம்மதின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். பீ அஸ்ரின் அலா அம்ரின் ஷரஇய்யின் இதுதான் அதனுடைய இலக்கணம். வரைவிலக்கணம் இவ்வளவுதான்.

வரைவிலக்கணம் இவ்வளவு அபும் முஜ்தஹிதுன்னு சொன்னான்னா நேர்மையான முஜ்தஹிது. ஏன்டா ஏகப்பட்ட முஜ்தஹிது இப்ப இருக்கிறான். ஆய்வாளனா இருக்கிறவனெல்லாம் அவன்ட ஆய்வாளனா இருக்கிறவனெல்லாம் காட்றேன் உங்களுக்கு. எப்படி உண்டான ஆய்வுகளெல்லாம் அவ்ங்க செஞ்சி வச்சிருக்காங்க ங்றதை காட்றேன் 

நோ்மையான ஆய்வுத் திறன் கொண்ட அந்த அறிஞ பெருமக்கள். ஒரு காலத்தில் வாழக் கூடியவா்கள். ஏதாவது ஒரு விஷயத்தில், புதிதாக தோன்றி விட்ட விஷயத்தில். அவா்கள் ஒன்று கூடி ஒரு முடிவு எடுப்பார்களேயானால். நல்லா தெரியும் ஆய்வாளா்கள்,  அறிஞ பெருமக்கள், அல்லாஹ்வையும் ரசூலையும் அவா்கள் நம்பியா்கள் .அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டிருக்கிறவா்கள். 

இவா்கள் சிந்தித்து ஒரு முடிவுக்கு வர்ரார்னு சொன்னா ஏதாவது ஒரு ஆதாரத்துடைய அடிப்படையிலேதான் வருவாரு. தீா்மானம் போட்டு வர்ரதற்கு போ் அல்ல.

முத்தவல்லியும் மோதினாரும் பேஷி இமாமும் எல்லாம் சேர்ந்து அவா் பேசி இருக்கிறாரு பீ.ஜெ. பல இடங்கள்லெ அதிலேயும் சொல்றேன் இன்ஷாஅல்லாஹ் நான் போட்டுக் காட்றேன். இருந்தாலும் இந்த இஜ்மா இஜ்மான்னு சொல்ற கிறுக்கனுகளையெல்லாம் கூப்பிடு ங்றார். 

நம்ம நாகரீகமான முறையிலே அதுலே எடுத்து போட்டு காட்றார். இந்த சுன்னத் ஜமாஅத்தில் இருக்கிற எவன்லாம் இஜ்மா இஜ்மா சொல்றாங்களோ இந்த கிறுக்கன்களையெல்லாம் கூப்புடு. இந்த கிறுக்கன்களாத்தான் வந்திருக்கிறோம் இப்ப. யாரு கிறுக்கன்னுட்டு காட்றதுக்காக வேண்டிதான். விளங்குதா?

இவன் கிறுக்கன் கேனன் என்ன வார்த்தையா இது. இங்க விவாத அரங்கத்திலே பேசிட்டார். மக்கள் மத்தியிலே பேசும்பொழுது என்ன வார்த்தைகளை பயன்படுத்தணுமோ இன்ஷாஅல்லாஹ் அத நாங்க போட்டு காட்றோம். அது உங்களுக்கு ஞாயமா படுதுன்னு சொன்னா நீங்களே சிந்திச்சுக்கங்க.

ஆக அருமைச் சகோதரா்களே! ஒரு புதிதாக ஒரு பிரச்சனை தோன்றி விட்டதுன்னு சொன்னா. சட்டப் பிரச்சனை ஆய்வுடைய பிரச்சனைன்டா. ஒரு காலத்தில் வாழக் கூடிய அனைத்து அறிஞ பெருமக்களும், ஆய்வு திறன் கொண்ட நல்ல அறிஞ பெருமக்கள், அந்த விஷயத்திலே ஒருமித்த கருத்து எடுத்து ஒன்று கூடுவார்களேயானால் இதுக்கு போ்தான் இஜ்மா.

சரி இந்த இஜ்மா எந்தக் காலம். ஒவ்வொரு காலத்திலேயும் இருக்குது. ஒவ்வொரு காலத்திலேயும் இருக்குது. இன்னைக்கு ஒரு பிரச்சனை புதுசா உண்டாயிடுச்சுன்னு வைங்க. இன்னைக்கு ஒரு பிரச்சனை உதாரணமா, ஒன்னுமில்லே நான் கொஞ்ச நாளைக்கு முன்னாலே நெட்டுலே பார்த்தேன். யாரோ ஒருத்தா் பி,ஜெ.ட்ட கேக்றாங்க. பீடி குடிக்கிறது பத்தி என்ன சட்டம் ன்னுட்டு.

குா்ஆன்லே பீடி குடிக்கிறதைப் பற்றி பீடி குடிக்காதேன்னு குா்ஆன்லே வருமா? ஹதீஸ்லே வருமா? வா்ரதுக்கு வாய்ப்பே இல்லே. ஏன்னா பீடியும் சிகரெட்டும் அந்தக் காலத்திலே இல்லே. அப்ப அவரே வந்து ஆதாரம் காட்டி சொல்றாரு. 

வலா துல்கூ பீ அய்தீகும் அது அரபுகள் எழுதி போட்டிருக்கிற ஆயத்துதான். (பீ.ஜெ)அவருடைய  பழக்கத்திலே காப்பி அடிப்பாரு வெளியிலே சொல்ல மாட்டாரு. நாம உள்ளதை சொல்லிப் போடுவோம். இதுதான் வித்தியாசம். ஆக தப்பும் அல்ல காப்பி அடிக்கிறத அடிச்சுட்டு போறாரு. பேரை சொல்லாம சொல்லிட்டும் போறாரு. 

ஒரு ஆயத்தை அடிப்படையா வச்சு உங்களை நீங்களே அழிவில் ஆக்கிக் கொள்ளாதீா்கள்னு அல்லாஹ் சொல்லி இருக்கிறான். பீடி சிகரட்னாலே அழிவு வருதுன்னு தெரியுது. அதனாலே பீடி. சிகரட் குடிக்கக் கூடாது. பீ.ஜெ.சொன்னாரு. ஸைபுத்தீன் ரஷாதியும் சொல்லிட்டாரு. இன்னொருத்தரும் சொல்லிட்டாரு. நுாறு பேரும் சோ்ந்து சொன்னா இஜ்மாய்யா. இதுதான் இஜ்மா. வேறென்னான்னா இஜ்மான்டா என்ன தனியா தீா்மானம் பொட்டு ஜெயிக்கிறதா ஓட்டு போடுறதா ஒரு ஹால்லே கூடி டைமண்டு ஹால்லே அரிஸ்டோவ்லே.
(நேரம் முடிந்து விட்டது என மணி அடிக்கப்பட்டதால் உரையை நிறுத்தி விடுகிறார்) 

PJ ஒழுங்கா உஸுலுல் பிக்ஹ் படிக்கலெ என்று ஸைபுத்தீன் ரஷாதி கூறிய குற்றச்சாட்டுக்கு PJ பதில் சொன்னாரா?
 

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.