முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலைக்கு உங்கள் பங்களிப்பை செய்ய மாட்டீர்களா?

இது பொதுத் தளத்தில் வைப்பதற்கான பொதுவான பதிவு அல்ல. எல்லாருக்கும் பார்வேடு பண்ணக் கூடாது.

சமுதாய நலனில் அக்கறை உள்ளவர்கள் என்று நீங்கள் நம்புகிறவர்களுக்கு மட்டும் அனுப்புங்கள். 


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...  கண்ணியத்திற்குரிய கூட்டமைப்பினரே! ஜமாஅத்தார்களே!  சமுதாய சங்கங்களே மற்றும் சமுதாய நலனில் அக்கறை உள்ளவர்களே!  உங்கள் சார்பாக தந்தி, பேக்ஸ், ஈமெயில், வாட்ஸப்,  போஸ்ட் கார்டு என ஏதாவது ஒன்றின் மூலம்.


மாண்புமிகு முதல்வர்  ஸ்டாலின் அவர்களே முஸ்லிம் சிறைவாசிகளை தாயுள்ளத்துடன் விடுதலை செய்யுங்கள்.

என்ற  கோரிக்கையை அனுப்புங்கள். 


பேஸ் வேலிவ் உள்ள  சமுதாய கட்சித் தலைவர்களே! செல்வந்தர்களே! நீங்கள் முதல்வரிடம் நேரில் பார்த்து வலியுறுத்துங்கள். முழுமையாகப் படித்து முயற்சி செய்து அல்லாஹ்வின் அருளைப் பெறுங்கள்.

https://mdfazlulilahi.blogspot.com/2021/05/blog-post_23.html





      முதல்வர் ஈ.மெயில்  cmcell@tn.gov.in




முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை சம்பந்தமாக நாம் ஒரு பதிவு போட்டோம்.  அண்ணா! புகைப்படத்தில் இருக்கும் அத்துணை தலைவர்களிடத்திலும் உங்களுக்கு நேரடி தொடர்பு உண்டல்லவா அண்ணா?  நேராக பேசி தலைவர்கள் பதிலையும் பதிவிடலாமே என்றார்கள். அதற்கான பதிலை முதலில் தருகிறோம்.


முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை சம்பந்தமாக  முதல்வர்  ஸ்டாலின் அவர்களிடம் பேசுங்கள் என்று பெரும்பாலான முஸ்லிம்  சமுதாய கட்சித் தலைவர்களிடமும்  சட்ட மன்ற உறுப்பினர்களிடமும் சிறைவாசிகள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.  பதவி ஏற்று இரு வாரத்துக்குள்   எப்படி சாத்தியம்? என்ற பதிலே  கிடைத்துள்ளது.


மற்ற கட்சிகள் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி  கொலை வழக்கில் உள்ளவர்கள் விடுதலை சம்பந்தமாக கோரிக்கைகள் வைத்தது  மட்டும் ஒரு வாரத்துக்குள் எப்படி சாத்தியமானது என்ற கேள்விக்கு பதில் இல்லை.  


ஆட்சிக்கு வந்த 15 நாட்களிலேயே  பேரறிவாளன் பரோலில் சென்று விட்டார்.  விதிகளை தளர்த்தி சாதாரண  விடுப்பில் முதல்வர் பொறுப்பில் பரோலில் போய் விட்டார். 


தமிழ் தேசிய பற்றாளர்கள், தமிழ் தேசிய ஆதரவாளர்கள் என்றுள்ள எல்லாருமே  கரக்ட்டான  முறையில் காய்களை நகர்த்தி  காரியங்களை சாதித்து வருகிறார்கள். 


தெரிந்தோ தெரியாமலோ 2009ல்  இருந்து முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலையை ராஜீவ் காந்தி கொலை வழக்குடன் இணைத்து விட்டார்கள். 


2010 ஆம் ஆண்டு  செம்மொழி மாநாட்டை ஒட்டி கோவை குண்டு வெடிப்பு வழக்கில் உள்ள  முஸ்லிம் சிறைவாசிகளை  விடுதலை செய்ய வேண்டும் என்ற  முடிவை 2009லேயே  கலைஞர் எடுத்து இருந்தார்.  அந்த நேரத்தில் 


இதை அறிந்த  LTT யினர் திருமாவளவன், நெடுமாறன், வை.கோ. போன்றவர்களுக்கும்  கம்யூனிஸ்டுகளுக்கும் பிரஷ்ஷர் கொடுத்தார்கள். பாய்கள்  மட்டும்  ரிலீஸ் ஆகப் போகிறார்கள்.  பாய்கள்  மட்டும் விடுதலை ஆகப் போகிறார்கள் என்று. 


அப்பொழுது அந்த தலைவர்கள் முஸ்லிம் அமைப்பு தலைவர்களுடன் தொடர்பு கொண்டு நீங்கள்  ராஜீவ் காந்தி கொலை  வழக்கில் உள்ளவர்கள் விடுதலைக்கும் சேர்த்து பேசுங்கள் என்றார்கள். 


இதன் பின்னணியைத் தெரியாத முஸ்லிம் அமைப்புத் தலைவர்கள்  ராஜீவ் காந்தி கொலை  வழக்கில் உள்ளவர்கள் விடுதலையுடன் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் உள்ள  முஸ்லிம்   சிறைவாசிகள் விடுதலையை இணைத்துப் பேச ஆரம்பித்து விட்டார்கள். 


ராஜீவ் காந்தி கொலை  வழக்கில் உள்ளவர்களை தமிழர்கள் என்ற பெயரால் விடுதலை செய்ய கோரிக்கை வைத்து வந்தவர்கள். முஸ்லிம்களை விடுதலை செய்தால்  ராஜீவ் காந்தி கொலை  வழக்கில் உள்ளவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கலைஞரை நிர்ப்பந்தம் செய்து நேரிலும் பேசி மிரட்ட ஆரம்பித்து  விட்டார்கள். 


பாய்களைவிட தமிழர்கள் மோசமானவாகள் இல்லை.  ராஜீவ் காந்தி கொலை  வழக்கில் உள்ளவர்கள் தமிழுக்காக போராடியவர்கள். செம்மொழி மாநாட்டை ஒட்டி பாய்களை விடுதலை செய்தால் இவர்களையும் விடுதலை  செய்ய வேண்டும் என்றார்கள்.  


அதனால் செம்மொழி மாநாட்டை ஒட்டி கோவை குண்டு வெடிப்பு வழக்கில் உள்ள  முஸ்லிம்    சிறைவாசிகள் விடுதலை  என்ற திட்டத்தை கலைஞர்  கை விட்டு விட்டார். 


இதன் பிறகு 13 ஆண்டுகள் சிறையில் இருந்தோர் விடுதலை என்ற GO மூலம்  10 முஸ்லிம்கள் விடுதலை ஆனார்கள். 2 பேருக்கு மட்டும் 6 மாதம் தண்டனை காலம் பாக்கி இருந்தது.  மற்ற அனைவருமே ஒரு வாரம், ஒரு மாதம் இரண்டு மாதம் தண்டனை காலம் பாக்கி இருந்தவர்களே.


ராஜீவ் காந்தி கொலை  வழக்கு என்பது CBI வழக்கு. 

முன்னால் பிரதமரை கொன்றார்கள் என்ற வழக்கு. 

அதுவும் இந்திய வெளியுறவுத்துறையுடன் சம்பந்தப்பட்ட வழக்கு. 

வெளிநாட்டு போராளி குழுக்கள் வெளிநாட்டிலிருந்து வந்து சம்பவம் செய்த வழக்கு. 

பாஸ்போர்ட் ஆக்ட் உட்பட இன்னும் பல சட்ட பிரச்சனைகள்  உள்ள வழக்கு.


முஸ்லிம் சிறைவாசிகள் வழக்கு அப்படி அல்ல. உள் நாட்டில் நடந்த இரண்டு சாராரின் கலவர வழக்கு தான். LTT மாதிரி  வெளிநாட்டு சக்திகளுடன் தொடர்புடைய பெரிய குற்ற பின்னணிகள் கிடையாது. 


எல்லாருமே பெட்டிக் கடை, டீ கடை என்றிருந்த   சாதாரண தமிழ் மக்கள் தான். தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பினால்   ஆத்திரப்பட்டவர்கள் தான். இந்த தமிழ்நாட்டு தமிழர்களை ராஜீவ் கொலையாளிகளுடன் ஒப்பிட்டது சரி இல்லை. 


முதல்வர்  ஸ்டாலின் முந்தைய அரசுகள் சாதிக்காததை தான் சாதித்து காட்ட வேண்டும் என்று உள்ளார்.  ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவி ஏற்றதும் சிறைவாசிகள் விடுதலை சம்பந்தமான கணக்கு எடுப்புகளை செய்ய  ஆரம்பித்து விட்டார்கள். நம் சமுதாய மக்கள்  விடுதலை விஷயத்தின் நிலை என்ன?  தெரியவில்லை. 


உச்ச நீதி மன்றம் ஆயுள் தண்டனை உறுதி செய்த நிலையில் இருந்த திண்டுக்கல் மீரான் உட்பட ஆறு பேர் விடுதலைக்கு அ.தி.மு.க. ஆட்சியில் வழி செய்தார்கள்.  கோர்ட்டில் மனுச் செய்து  கோர்ட் மூலம் விடுதலை என்பது போல் விடுதலைக்கு வழி செய்தார்கள். எப்படி? 


 20 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறோம். 


2006ல்  திமு.க. ஆட்சிக்கு வந்ததும் 450 பேரை விடுதலை செய்தார்கள்.  எங்களுக்கு உரிமை இருந்தது  விடுதலை செய்யவில்லை.


2008ல் திமு.க. ஆட்சி 1405 பேரை விடுதலை செய்தபொழுதும் எங்களுக்கு உரிமை இருந்தது  விடுதலை செய்யவில்லை.


பிறகு வந்த அ.தி.மு.க. ஆட்சியில் பொது மன்னிப்பில் அதிகமானவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். எங்களுக்கு தகுதி இருந்தும்  விடுதலை செய்யவில்லை.


ஆகவே பொது மன்னிப்பு விடுதலையில் எங்களை சேர்க்க வேண்டும்  என்ற கோரிக்கையை கோர்ட் மூலம் வைக்க வைத்தார்கள்.


20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பது அரசியல் சட்டத்துக்கு விரோதம் என்று  ஹை கோர்ட் தீர்ப்பு அளித்தது.  இந்த தீர்ப்பை 5பேர் மட்டும் சுப்ரீம் கோர்ட்டுக்கு கொண்டு போனார்கள். சுப்ரீம் கோர்ட்டு அவர்கள் 5 பேரை விடுதலை செய்ய சொன்னது. அ.தி.மு.க. அரசு விடுதலை செய்தது. 


25 ஆண்டுகள் தாண்டி சிறையில் உள்ளவர்கள் பெற்றோர்களை இழந்து விட்டார்கள், பிள்ளைகளை இழந்து விட்டார்கள், உடலாலும் உள்ளத்தாலும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 


அ.தி.மு.க. அரசைப் பொறுத்த வரை கோர்ட் சொல்லியது என்ற பெயரால் 5 பேரை விடுதலை செய்தது.  அ.தி.மு.க. அரசு நினைத்து இருந்தால் கோர்ட் தீர்ப்பை கிடப்பில் போட்டு இருக்க முடியும்.  


அ.தி.மு.க. ஆட்சியில் செய்யது ஜஃப்ரு என்பவர் 2018 அக்டோபரில் விடுதலை ஆனார். இதில் விடுதலை பெற்ற அபுதாஹிருக்கு வேறு வழக்கில் தண்டனை உள்ளதால் 2018முதல் 3 ஆண்டுகாலமாக லாங் டைம் பரோலில் இருக்கிறார்.


SDPI கேடர்ஸ் 3 பேர் 2020 பிப்ரவரியில் கோர்ட்டு மூலம் ஸாஜகான், சிராஜ், அபுதாஹீர் விடுதலையானார்கள்.   அமானுல்லாவும் மேற்கண்ட 3 பேருடன் விடுதலையானார்.


உச்ச நீதிமன்றத்தால் தண்டனை உறுதி பெற்றவர்கள் சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தால் விடுதலை சொல்லப்பட்டு அதை உச்ச நீதிமன்றம் ஆமோதித்து விடுதலை ஆனார்கள்.


சங்கிகளின் பினாமி அரசு, சங்கிகளின் அடிமை அரசு என்று சொல்லப்பட்ட  அ.தி.மு.க. அரசே  கோர்ட் மூலமாக மேற்கண்டவர்களை விடுதலை செய்து உள்ளது. முஸ்லிம்கள் நேசிக்கும் மாண்புமிகு முதல்வர்  ஸ்டாலின் அவர்களை நாம் முறையாக அணுகினால் விடுதலை செய்ய மாட்டாரா?


சாதாரணமான 302   கொலை வழக்கு பிரிவில்  17 முஸ்லிம்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் இருக்கிறார்கள்.  கோர்ட் இவர்கள் விடுதலையை பரிசீலனை செய்யுங்கள் என்று கூறி இருக்கிறது. இவர்களை பொது மன்னிப்பில் தாராளமாக விடலாம் ஆனால் விடப்படவில்லை.  பரிசீலனை செய்யுங்கள் என்ற கோர்ட் தீர்ப்புப்படியும் விடுதலை செய்யலாம். 


மேலப்பாளையத்தைச் சார்ந்த தடாமூஸா, முஹம்மது அலி, தடா புகாரி இம்மூவருக்கும் குண்டு வெடிப்பு வழக்கில் நேரடியாக எந்த தொடர்பும் இல்லாத நிலையில் சாட்சியும் சொல்லாத நிலையில் தான் அந்த வழக்கில் மூவரும் 20 ஆண்டுக்கு மேல் சிறையில் உள்ளனர்


மதுரை கம்யூனிஸ்ட் கவுன்சிலர் லீலாவதி கொலையாளிகள்  7 ஆண்டுகள் மட்டுமே சிறையில் கழித்திருந்த நிலையில் 2008 கலைஞர் ஆட்சியில் விடுதலை  செய்யப்பட்டனர்.

 

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்கு தண்டனை பெற்றவர்களை எம்.ஜி.ஆர். பிறந்த நூற்றாண்டை முன்னிட்டு அதிமுக ஆட்சியில் ஆயுளாக மாற்றப்பட்டு விடுதலை  செய்யப்பட்டனர்.


அதுபோல மதுரை மேல வழவு 7 தழித் கொலை வழக்கில் மேல வழவு ராமர் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

 

இவர்கள் எல்லாம் ஆண்டவர்களுக்கு வேண்டியவர்கள் என்பதால் சிறட்பு கவனம் செலுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்




ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உள்ளவர்கள் விடுதலை சம்பந்தமாக முதல்வர் ஸ்டாலின் ரொம்ப அறிவுப்பூர்வமாக செயல்படுகிறார். புதிதாக தனது கோரிக்கையாக வைக்கவில்லை. 


புதிதாக வந்துள்ள தி.மு.க. அரசின் கோரிக்கை என்று வைத்தால் அது 2 ஆண்டுகள் கிடப்பில் கிடக்கும். அப்படி ஒரு சூழல் உருவாகக் கூடாது என்றுதான்  அ.தி.மு.க. முதல்வர் அனுப்பிய  434,435படிதான் அனுப்பி இருக்கிறார்.


கடந்த  (அ.தி.முக.) ஆட்சியில் அமைச்சரவையிலும் சட்ட மன்றத்திலும் போடப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே வலியுறுத்தி அரசியலில் ராஜதந்திரமாக செயல்பட்டு உள்ளார்.  


முதல்வருக்கே உரிய   வானளாவ அதிகாரம் உடையது 161 பிரிவு. அதை பயன்படுத்தி முதல்வர்  அனுப்புவதை இரண்டு முறை திருப்பி அனுப்பி விட்டால்.  


முதல்வருக்கே உரிய   வானளாவ அதிகாரம் உடைய 161ஐ பயன்படுத்தி முதல்வர் ஸ்டாலின்  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உள்ளவர்களை விடுதலை செய்து விட முடியும்.  விடுதலை செய்து விடுவார்.  


ஆக ராஜீவ் கொலை வழக்கில் உள்ளவர்கள் விடுதலை உறுதி ஆகி விட்டது.  முந்தைய அரசுகள் சாதிக்காததை தான் சாதித்து காட்ட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின்  செயல்பாடுகள் வேகமாக போய்க் கொண்டிருக்கிறது. 


APP உட்பட  யார் யாரை அழைத்துப் பேச வேண்டுமோ அவர்கள் அனைவரையும் அழைத்துப் பேசி விட்டார்.  அதற்கான கடித ஆவணங்களை அனுப்ப வேண்டிய இடங்களுக்கு அனுப்பி விட்டார். 


அனைத்து ஜமாஅத்தார்கள்  சமுதாய கட்சித் தலைவர்கள் சமுதாய சங்கங்கள் மற்றும் சமுதாய நலனில் அக்கறை உள்ளவர்கள்  முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலையை பொதுவெளியில்  வலியுறுத்தாமல் முதல்வரின் பேக்ஸ், ஈமெயில், வாட்ஸப்களை  அறிந்து  அவற்றின் மூலம் வலியுறுத்துங்கள்.


வெளிநாடுவாழ் தமிழர்கள் சார்பாகவும் தமிழ் முஸ்லிம் பேரவை போன்ற தமிழ்  அமைப்புகள் மூலமும் 1996ல் தடாவுக்கு எதிராக தந்திகள், பேக்ஸ்கள் ஈமெயில் மூலமாக கோரிக்கை வைத்தார்கள்.  அதனால் தடா வாபஸ் ஆனது. 


அது போல்  முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலைக்கு உங்கள் கோரிக்கைகள் வலு சேர்க்கும். இவ்வளவு கோரிக்கைகள் வந்துள்ளன ஆகவே விடுதலை செய்கிறேன் என்று  முதல்வர் சொல்லி விடுதலை செய்ய  முடியும்.


ஆகவே  ஜமாஅத்தார்களே!  சமுதாய சங்கங்களே மற்றும் சமுதாய நலனில் அக்கறை உள்ளவர்களே!  உங்கள் சார்பாக தந்தி, பேக்ஸ், ஈமெயில், வாட்ஸப்,  போஸ்ட் கார்டு என ஏதாவது ஒன்றின் மூலம்.


மாண்புமிகு முதல்வர்  ஸ்டாலின் அவர்களே முஸ்லிம் சிறைவாசிகளை தாயுள்ளத்துடன் விடுதலை செய்யுங்கள்.

என்ற  கோரிக்கையை அனுப்புங்கள். 

பேஸ் வேலிவ் உள்ள  சமுதாய கட்சித் தலைவர்களே! செல்வந்தர்களே! நீங்கள் முதல்வரிடம் நேரில் பார்த்து வலியுறுத்துங்கள்.

அன்புடன்:-

கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹி





























Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு