இஜ்மாஃ என்று சொல்பவர்கள், வாதிடுபவர்கள் பற்றி இமாம்கள் என்ன சொல்லி உள்ளார்கள்?

மவுலவி ஸைபுத்தீன் ரஷாதி வாதப்படி இமாம் அபுஹனீபா, ஷாபி, இமாம்ஹன்பலி, இமாம்  மாலிக்கி  ஆகியோர் யார்?  

https://mdfazlulilahi.blogspot.com/2021/05/blog-post_25.html

ஸைபுத்தீன்ரஷாதி P.J.  விவாதம் சுன்னத் ஜமாஅத்  லிங்கிளிருந்து விடியோவாகக் காண கிளிக் செய்யவும்.

https://www.youtube.com/watch?v=mnk2e1p-Rb0



நவவி இமாம் அவா்கள்  இஜ்மாவை அபு ஹனீபா மறுக்கிறாங்களா?

 

ரஷாதி சொன்ன உஸுலு மத்ஹபு அறிஞரை கொண்டே உடைபடுகிறதா?


மதீனாவாசிகளுடைய இஜ்மாஃதான் இஜ்மாவு. வேறு எதுவும் இஜ்மாஃ கிடையாது என்று மாலிக் இமாம் சொல்லி உள்ளார்களா?

இந்தக் காலத்தில் இஜ்மாஃ எடுக்கலாம் என்ற ஸைபுத்தீன் ரஷாதி கருத்தை மாலிக் இமாம் சொல் மறுக்கிறதா?மாலிக் இமாம் சுன்னத் ஜமாஅத்தா வேற ஜமாஅத்தா?


ஷாபி இமாம்ஹன்பலி இமாம்,  மாலிக் இமாம், அபு ஹனீபா இமாம் ஆகியோர்  கருத்துப்படியும் மவுலவி ஸைபுத்தீன் ரஷாதி இஜ்மாஃஇஜ்மாஃ இல்லையா? 

4ஆவது உரையில் பி.ஜே.யின் கேள்வி கள் எழுத்து வடிவில்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு. அன்பிற்குரிய சகோதரா்களே! இந்த 3 ஆவது அமா்விலேயும் கூட  இஜ்மாஃ ங்றது (என்கிறது) மார்க்கத்தினுடைய ஆதாரம் என்பதற்கு ஒரு ஆதாரத்தைக் காட்ட(வில்)லை.  இது இஜ்மாஃ அது இஜ்மாஃ என்று சொல்றாங்களே தவிர, அது ஏன் மார்க்கத்தினுடைய ஆதாரமாக ஆவுது என்பதற்கு எந்த ஒரு ஆதாரத்தையும் அவுங்க காட்ட(வில்)லை.

ஆய்வு செய்ஞ்சி (செய்து) எடுத்தால் நிறைய பேர் ஆய்வு செய்ஞ்சி (செய்து) முடிவு எடுத்தால் தவறா என்று கேட்டால். ஆய்வு சரியாக இருந்தால் சரி. ஆய்வு தவறாக இருந்தால் தவறு. அதுதான் சொல்லணுமே தவிர நிறைய பேர் ஆய்வு செய்ஞ்சி (செய்து) தப்பா சொல்றாங்க. கொஞ்சம் போ் ஆய்வு செய்ஞ்சி (செய்து) சரியா சொல்றாங்க எதை எடுத்துக் கொள்ளணும்.

சரி தவறு என்கிற அடிப்படையில் எடுக்கிற ஒரு விஷயத்தை, நிறைய போ் செஞ்சா சரியா என்ற அடிப்படையிலே கேட்கிறாங்களே அதற்கு என்ன ஆதாரம். அதற்கு அவங்க இதுவரைக்கும் ஆதாரம் தரவே இல்லை.

சரி அடுத்து இஜ்மாவுக்கு மேடையிலே பேசினது வேற விளக்கம். இது வேற விளக்கம் என்றார்கள். அதை விட்டு விடுகிறேன்.(பார்வையாளர்களாகிய) உங்களிடம். அதை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். அவா் வேற அா்த்தத்தில் சொன்னேன் என்கிறார். அந்த கான்செப்ட்டிலே சொல்லலே. ஆனால் அதைப் போய் விவாதமாக்க விரும்பவில்லை. நமக்கு டாபிக்கு முக்கியம்.

அடுத்து பீ.ஜே.யும் ஆரம்பத்திலே இந்த கருத்திலேதான் இருந்தாரு என்று கேட்கிறாரு. நான் இருந்திருக்கிறேன். மத்ஹபுலே இருந்திருக்கிறேனே நான். நான் தர்கா வழிபாட்டில் இருந்திருக்கிறேனே. அதனால் இருந்தார் என்பதை பேசக் கூடாது. ஒப்பந்தத்தில் இருக்கிறது. இப்ப எண்ணத்தில் (எதில்) நம்ம இருக்கிறோமோ> அதுதான் பேசணும் என்று இருக்கிறது.

அப்ப நான் எத்தனையோ விஷயங்களிலிருந்து அது தவறு கண்டு. ஒன்னு ஒன்னா தவறு கண்டு> நான் விலகி வந்திருந்தேன் என்றால். நான் எதில் இருக்கிறேனோ> அதுதான் விவாதத்திற்கு உரியது. அதனால் நான் இருந்ததை நீங்கள் ஆதாரமெல்லாம் காட்ட வேண்டியது இல்லை. அதற்கு மேலே நான் சொல்லுவேன். எல்லாத்திலேயும் இருந்திருக்கிறேன் விளங்குதா?

அந்த புகை பிடித்தல் சொன்னாரு அதெல்லாம் கூட இருந்தேன். அது எவ்வளவு காலம் ஆச்சு விட்டு. அதை சொல்லிக்கிட்டு இருக்கிறாரு. விளங்குதா? சரி.

அடுத்து வருவோம் அப்ப நான் என்ன கேட்கிறேன் என்று கேட்டால். இப்ப இஜ்மா என்பதற்கு ஆதாரம் காட்டவில்லை என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். எல்லாரும். இஜ்மாஃ மார்க்கத்தின் ஆதாரம்தான் இந்தா இருக்கு ஆதாரம். அதுக்கு இந்தா இருக்கு ஆதாரம் அப்படீன்டு (என்று) இது வரைக்கும் சொல்லப்படவே இல்லை. 

இப்ப நான் என்ன கேட்கிறேன் என்று கேட்டால். இஜ்மாவுக்கு ஒரு இலக்கணம் சொன்னாங்க. இந்த சபையிலே வச்சதே நான் எடுத்துக்  கொள்கிறேன். உங்கள் வாதமா(க). (ஸைபுத்தீன் ரஷாதி பொதுக் கூட்டத்தில் பேசிய சி.டி.) கிளிப்பிங்கில் உள்ளதை நான் எடுத்துக் கொள்ளவில்லை.

ஒவ்வொரு காலத்திலும் ரண்டு வகையா இஜ்மா இருக்கு என்றீா்களே அதுதான் உங்கள் கொள்கையா? ஓ.கே. அந்த கொள்கையில் நின்று வாதிடுங்கள். அப்ப ஒவ்வொரு காலத்திலேயும் இந்த மாதிரி சோ்ந்து இஜ்மாஃ பண்ணலாம் அப்படீன்டு (என்று) சொல்கிறீா்கள். அந்த இஜ்மாஃ வந்து ஸஹாபாக்களுடைய இஜ்மாவுக்கு மாற்றமாக இருக்கக் கூடாது. அப்படீங்கிறதையும் (என்றும்) சொல்றீங்க சரியா. நான் உதாரணத்துக்கு ஒன்று சொல்(கி)றேன்.

என்ன சொல்(கி)றேன்னு கேட்டால் ஸகாத்துடைய ஒட்டகம் இருக்கு இல்லையா? அதற்கு வந்து  சூடு போட்டு ஒரு அடையாளம் போடுவாங்க. ஸகாத்துடைய ஒட்டகம் என்று கண்டு பிடிப்பதற்காக வேண்டி. 

இதை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் போட்டு இருக்கிறார்கள். ஸஹாபாக்களும் போட்டு இருக்கிறார்கள். தாபியீன்களெல்லாம் போட்டு இருக்கிறார்கள். அதிகமான பேரு சொல்லி இருக்கிறாங்க. இதை வந்து இது இஜ்மாஃ என்றும் சொல்றாங்க. நவவி இமாம் அவா்கள் இஜ்மாஃ என்றும் சொல்கிறார்கள். இந்த இஜ்மாவை அபு ஹனீபா மறுக்கிறாங்க.

எப்படி மறுக்கிறாங்க. ஷரஹுன் நவவியிலே இமாம் முஸ்லிம் அவா்கள் சொல்கிறார்கள். வஹாதல்லரீ கத்தம்னாஹு மினிஸ்திஹ்பாபி வஸ்மி நஅமிஸ்ஸகாத்தி வல் ஜிஸ்யத்தி ஹுவ மத்ஹபுனா. வ மத்ஹபுஸ் ஸஹாபத்தி குல்லிஹிம் ரலியல்லாஹு அன்ஹும் வஜமாஹிரில் உலமாயி பஃதஹும் வநகல இப்னு ஸப்பாபுன் வகைருஹு இஜ்மாஃ ஸஹாபத்தி அலைஹி வ கால அபுஹனீபா ஹுவ மக்ரூஹுன்.

அதாவது ரசூலுல்லாஹ் அடையாளம் போட்டு இருக்கிறார்கள். ஸஹாபாக்கள் இஜ்மாஃ பண்ணி அடையாளம் போட்டு இருக்கிறார்கள். அதற்கு பிந்தி வந்த பெரும்பான்மை உலமாக்கள் பண்ணி இருக்கிறார்கள். இவ்வளவு பேரும் செய்திருந்த இஜ்மாவை எதை மீறவே கூடாதோ, எதை மறுக்கவே கூடாதோ. அந்த இஜ்மாவை உடைத்து அது மக்ரூஹு என்று யார் சொல்கிறா? அபுஹனீபா இமாம் அவங்க சொன்னதாக ஷரஹுன் நவவியிலே இமாம் முஸ்லிம் அவா்கள் எழுதி வைக்கிறார்கள்.

அப்ப நான் என்ன கேட்கிறேன் இதற்கு நீங்கள் பதில் சொல்லணும். இஜ்மாவுக்கு நீங்க என்ன அந்தஸ்து வைத்திருக்கிறீா்கள். நீங்கள் அந்த மத்ஹபில் உள்ள ஒரு அறிஞா். மத்ஹபில் உள்ள அறிஞா். மத்ஹபு இமாம் இஜ்மாவை உடைத்து விட்டு போய் விட்டாரே அதற்கு மாற்றமா மீறி இருக்கிறாரே அவா் யார்? அவர் முஸ்லிமா? அல்லது வழி கேடரா? அல்லது சுன்னத் ஜமாஅத்துக்கு வெளியே உள்ளவரா? அவருக்கு மட்டும் ஸ்பெஷலா மீறுவதற்கு அனுமதி இருக்கிறதா? இதற்கு நீங்கள் என்ன செய்யணும். பதில் சொல்லணும்.

அதே மாதிரி வந்து இன்னொரு, நிறைய இருக்கு. அதவாது எல்லாரும் இஜ்மாஃ பண்ணி இருக்கிறார்கள். ஸஜ்தா செய்வதாக இருந்தால். நெற்றி மஸ்ட்டு அவசியம். நெற்றி அவசியம். நெற்றியோடு மூக்கு சேரணுமா? அதில் ரண்டு கருத்து இருக்கிறது. மூக்கு சேர வேண்டாமா? நெற்றி மட்டும் போதுமா? நெற்றியும் மூக்குமா? அதெல்லாம் இருக்கிறது. ஆனால் இஜ்மாஃ எல்லாரும் என்ன சொல்கிறார்கள் என்று கேட்டால், நெற்றி இல்லாமல் மூக்கு வைத்தால் ஸஜ்தா இல்லை.

ஸஜ்தா செய்யும்பொழுது நெற்றி மஸ்ட்டு இருக்ணும். அதோடு மூக்கு சேரலாம் என்று ஒருத்தா். மூக்கு சேராமலும் இருக்கலாம் என்று ஒருத்தர். சொல்கிறார். ரண்டு பேர் கருத்துப்படியம் நெற்றி அவசியம். அப்ப நெற்றியை வைத்து ஸஜ்தா செய்ய வேண்டும் என்பது இஜ்மாஃ.

இஜ்மாஃ என்பது அவ்னுல் மஃபூதிலே சொல்றாங்க. என்ன சொல்றாங்க என்று கேட்டால். காலல் இமாமு அபுஹனீபா அன்னஹு இஜ்ஸு ஸுஜுது அலல் அன்பி வஹ்தஹா. மூக்கை வைத்து மட்டும் நெற்றியை வைக்காமல் ஸஜ்தா செய்தால் கூடும். வகத் நகல இப்னுல் முன்திரி இஜ்மாஃ ஸஹாபத்தி அலா அன்னஹு லா யஜ்ஸிவுஸ் ஸுதுாது அலல் அன்பி வஹ்தஹு.

மூக்கு மேலே மட்டும் ஸஜ்தா செய்வது கூடாது என்று ஸஹாபாக்கள் இஜ்மாஃ செய்திருக்கிறார்கள். அபுஹனீபா வந்து அது வந்து கூடும் என்கிறார்கள். கூடாது என்று ஸஹாபாக்கள் இஜ்மாஃ செய்திருக்கும்பொழுது மூக்க மட்டும் வைத்து செய்யலாம் என்று சொல்லி இருக்கிறார்களே, அப்ப நீங்க சொன்ன உஸுலு இங்கே உடைபடுகிறதே, உங்கள் மத்ஹபு அறிஞரை கொண்டே இன்னும் நிறைய மஸாயில் இருக்கிறது. ஒன்னு ஒன்னாத்தான் எடுத்து கேட்க முடியும். அப்ப இஜ்மாஃ இங்கே காணோமே. இதுக்கு நீங்கள் என்ன செய்யணும் பதில் சொல்ல வேண்டும்.

அடுத்து என்ன நான் கேட்கிறேன் என்று கேட்டால். இப்ப இஜ்மாவுக்கு நீங்க ஒரு கருத்து சொன்னீா்கள். மாலிகி இமாம் என்ன சொல்கிறார்கள். மதீனாவாசிகளுடைய இஜ்மாஃதான் இஜ்மாவு. வேறு எதுவும் இஜ்மாஃ கிடையாது. என்று மாலிக் இமாம் சொல்கிறார்கள். அது மாத்திரம் இல்லை. 

மாலிக் மத்ஹபுடைய கொள்கை அது மாத்திரம் இல்லை. மதீனாவாசிகள் எடுக்கிற இஜ்மாஃ வந்து நக்ல் அதாவது. நஸ்ஸை அடிப்படையாக வைத்து எடுத்ததாக இருந்தாலும் அது ஆதாரம்தான். 

ரஅய்இ எந்த ஆதாரமும் இல்லாமல் அவா்களாக ஒரு அபிப்பிராயத்தில் எடுத்தாலும் மதீனாவாசிகள் செய்து விட்டார்களேயானால் அதுதான் இஜ்மாஃ என்று சொல்கிறார்களே. மற்றவா்களெல்லாம் அதிலே (அந்த கருத்திலே) வராமல் இருக்கிறார்களே. இது என்ன இஜ்மா?

அப்ப மாலிக் இமாம் வந்து உங்கள் இஜ்மாஃ கருத்தை ஏற்றுக்  கொள்ளவில்லை. நீங்கள் எதை இஜ்மாஃ என்கி(றீா்களோ .அதை  மாலிக் இமாம் ஏற்றுக் கொள்ளவில்லை) அவா் மதீனாவாசிகள் மட்டும்தான் இஜ்மாஃ. அதற்குப் பிறகு இஜ்மாஃ என்ற டாபிக்கே அங்கே கிடையாது என்று சொன்னால். இந்தக் காலத்தில் இஜ்மாஃ எடுக்கலாம் என்ற உங்கள் கருத்தை மாலிக் இமாம் மறுக்கிறாரே. அவரு  (மாலிக் இமாம்) சுன்னத் ஜமாஅத்தா வேற ஜமாஅத்தா?

அஹ்மது இப்னு ஹன்பல் இமாம். சொல்கிறார்கள் இஜ்மாஃ என்று சொல்பவன் பொய்யன். ஏன்? இஜ்மாஃ என்று எப்படி நமக்குத் தெரியும். (3ஆவது உரையில்) நான் கேட்டேன். நான் கேட்ட கேள்வி மாதிரி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நானா இதைக் கேட்டேன். நான் கேட்ட கேள்வி ஷாபி இமாம் கேட்ட கேள்வி அஹ்மது இப்னு ஹன்பல் இமாம் கேட்ட கேள்வி.


என்ன கேட்கிறார்கள் எல்லாரும் சோ்ந்து சொன்னார்கள் என்றால் அல்லது மவுனமாக இருந்தார்கள் என்று சொன்னால் ஏற்றுக் கொண்டான் என்று எப்படி அர்த்தமாகும். ஒருவா் ஏற்றுக் கொண்டார் என்று சொன்னால். அவா் வாயிலிருந்து வந்தால்தால்தான் ஏற்றுக் கொண்டார் என்று அா்த்தம். அவருக்கு விளங்காமல் மவுனமாக இருந்திருப்பார். பயந்து கொண்டு மவுனமாக இருந்திருப்பார். வேறு ஏதோ நோக்கத்திற்கு மவுனமாக இருந்திருப்பார். இந்த மெஸேஜ் எட்டாமல் மவுனமாக இருந்திருப்பார். என்ன அர்த்தத்தில் சொல்கிறார்கள் என்று புரியாமல் மவுனமாக இருந்திருப்பார்.

அப்ப மவுனமாக இருந்தார்கள். ஒருத்தர் செய்தார். எல்லாரும் செய்து கொண்டிருக்கிறார்கள். அது அனைவரையும் கட்டுப்படுத்தும் என்று சொன்னால் அனைவரையும் எப்படி முடிவு எடுத்தாங்க. கிதுபு என்கிறார். இஜ்மாவை வாதிடுபவன் பொய்யன். யார் சொல்கிறார்கள். 

மாலிக் இமாமும் இவா்கள் இஜ்மாவை மறுத்து விட்டார் ஹன்பலி இமாமும் இவா்கள் இஜ்மாவை மறுத்து விட்டார். ஷாபி இமாமும் இவ்வளவுதான் சொல்லலாம். என்ன சொல்லலாம். நான் அறிந்தவரை ஒரு கிலாப் மாறுபட்ட கருத்தை அறியவில்லை. அவ்வளவுதான் சொல்லணுமே தவிர அனைவரும் ஏகோபித்து விட்டார்கள் என்று சொன்னால் அவதுாறு.

சபையில் இருக்கிறோம். நான் சொல்கிறேன். நீங்கள் சும்மா இருந்து விட்டீா்கள். எல்லாரும் ஏற்றுக் கொண்டீா்கள் என்றால்  நீங்கள் ஏற்றுக் கொண்டீா்கள் என்று எப்படி ஆகும்? வாயினால் சொன்னார்களா? ஒருவா் சொல்லாத ஒன்றுக்கு நீ எப்படி அவரை பொறுப்பாக (ஆக்க முடியும்.) இதை விட அநியாயம் எதுவும் இல்லை. இதற்கு மிஞ்சின அவதுாறு எதுவும் இல்லை என்று யார் சொல்கிறார் இமாம் ஷாபி அவா்கள் சொல்கிறார்கள்.

ஷாபி இமாம் கருத்துப் படியும் உங்கள் இஜ்மாஃ இஜ்மாஃ இல்லை. 

ஹன்பலி இமாம் உடைய கருத்துப் படியும் உங்கள் இஜ்மாஃ இஜ்மா இல்லை. 


மாலிக் இமாம் கருத்துப்படியும் உங்கள் இஜ்மாஃ இஜ்மாஃ இல்லை. 


அபு ஹனீபா இமாம் கருத்துப்படியும் உங்கள் இஜ்மாஃ இஜ்மாஃ இல்லை. மறுத்து விட்டார் அவா். ஸஹாபாக்கள் இ.ஜ்மாவை துாக்கி போட்டு விட்டு அவா் என்ன செய்து விட்டார் ரண்டுதான் காட்டி இருக்கிறேன் நிறைய காட்டுவேன். ஸஹாபாக்கலெல்லாம் சோ்ந்து இஜ்மாஃ செய்ததை அபு ஹனீபா இமாம் அவா்கள் மறுத்து இருக்கிறார்கள். இதற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும். 

சும்ம ஒரு செய்தியாக சொல்லிக் கொண்டு போகாமல். அவா்கள் சரி இல்லை. ஹன்பலி இமாம் பற்றி உங்கள் கருத்து என்ன? சொல்லணும் எங்களுக்கு. இந்த விஷயத்தில் இப்படி சொல்லி இருக்கிறாரே அவா் இஜ்மாவை மறுத்து விட்டார். பொய்யன் என்கிறார். இஜ்மா என்பது சாத்தியமே இல்லை.

அன்புள்ள சகோதரர்களே! இப்ப நம்ம கேட்ட கேள்வியை நல்ல கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். நாளு(4) இமாம்களுமே இவா்கள் சொன்ன இஜ்மாவுக்கு (ஸைபுத்தீன் ரஷாதி அவா்கள்) ஒரு விளக்கம் சொன்னார்கள் இல்லையா? அந்த விளக்கத்திலே இல்லை. இன்னும் நிறைய அறிஞர்களை நான் சொல்லுவேன். 

யார் யாரெல்லாம் என்ன என்ன கருத்தை சொல்லி இருக்கிறார்கள் என்று சொல்லுவேன். நாளு(4) இமாம்(களுடைய கருத்தை) மட்டும் சொன்னதற்கு காரணம். அவர்கள்தான் சுன்னத் ஜமாஅத் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறதுனாலே. அவா்களுடைய(கருத்)தை சொல்கிறேன்.

இஜ்மாஃ என்பது உஸுல் பிக்ஹ்(என்பதால்), யாருடைய உஸுல் பிக்ஹ்?எந்த உஸுல் பிக்ஹ்? இது என்று கேட்கிறோம். அடுத்து வந்து சில கேள்விக வந்து

நீங்கள் இஜ்மாவுக்கு விளக்கம்(?) சொல்லி விட்டீா்கள். நீங்கள் உங்கள் சைடுலே சொன்ன விளக்கத்திலிருந்து சில கேள்வி இருக்கு அதற்கு நீங்கள் பதில் சொல்லவில்லை. என்ன கேள்வி?

ஒரு காலத்தில் இஜ்மாஃ செய்து விட்டார்கள். அடுத்த காலத்தில் வருகிறவர்கள் அதற்கு மாற்றமா இஜ்மாஃ செய்யலாமா?

ஒரு காலத்தில் இஜ்மாஃ ஏற்கனவே இருக்கிறது. அதை மீறி அடுத்த காலத்தில் வர்றவங்க இஜ்மாஃ செய்யலாமா?

அல்லது ஸஹாபாக்கள் இஜ்மாஃ செய்த பிறகு வேறு யாரும் இஜ்மாஃ செய்யலாமா? 

இதை நீங்க வந்து சொல்லணும். அதே மாதிரி வந்து இஜ்மாஃ என்பது ஒரு மத்ஹபுகாரங்களெல்லாம் இருக்கிறாங்க. அந்த அந்த மத்ஹபுகாரங்களெல்லாம் கூடி இந்த மத்ஹபு கிதாபுகளிலே நிறைய இஜ்மாஃ இஜ்மாஃ என போடுகிறார்கள். 

நாங்க தேடி பார்த்தோம் அது ஷாபிக்கு மாற்றமாக இருக்கிறது. 

நாங்க தேடி பார்த்தோம் அது ஹன்பலிக்கு மாற்றமாக இருக்கிறது. 


நாங்க தேடி பார்த்தோம் அது மாலிக்குக்கு மாற்றமாக இருக்கிறது. ஆனால் இஜ்மாஃ என போட்டு இருக்கிறார்கள்.

அப்பா இஜ்மாஃ என்றால் ஒரு மத்ஹபுகாரர்கள் மட்டும் கூடி செய்கிற மாதிரிலே வருகிறது. அப்படித்தான் நடைமுறையில் பிக்ஹ் நுால்களில் (இருக்கிறது) நான் காட்டுவேன் ஆதாரம். என்ன என்னவெல்லாம் இஜ்மாஃ என சொல்லி இருக்கிறார்கள். 

அந்த இஜ்மாஃ என்று சொன்ன விஷயங்கள் வந்து மூனு (3) மத்ஹபு மறுக்கக் கூடியதாக இருக்கிறது. அல்லது மூனில்(3இல்) ரண்டு மத்ஹபு மறுக்கக் கூடியதாக இருக்கிறது. மூனில்(3இல்) ஒரு மத்ஹபு மறுக்கக் கூடியதாக இருக்கிறது. அப்ப இஜ்மாஃ என்று சொல்வது வந்து உங்களுக்குள்ள என்று சொல்கிறீர்களே அது என்ன?

உங்களுடைய கிதாபுகளிலேயே இஜ்மாஃவுக்கு அர்த்தம் என்னவென்று சொன்னால், அவுங்க கிதாபுகளிலேயே இஜ்மாஃவுக்கு என்ன அர்த்தம் என்று சொன்னால், பெரும்பான்மைதான் இஜ்மாவு. ஒருவர் கூட மாற்றம் செய்யக் கூடாது என்று நீங்கள் சொன்னீா்கள். உங்கள் கிதாபிலே என்ன செய்றாங்க இஜ்மாண்டா என்ன அர்த்தம் அதிகமானது- மெஜாரிட்டி.

மெஜாரிட்டிக்கு லிமிட் போடவில்லை. பிப்டிஒன்னா? ஸிக்ஷ்டியா? செவண்டி பைவா? என்ன கணக்கு (என்ற விபரம் இல்லை) ஓட்டெடுப்பு நடத்தணும்னு சொன்னாங்களே மெஜாரட்டி என்றால் அதற்கு கணக்கு வேணும்லே மெஜாரட்டி என்றால் என்ன மாதிரி மெஜாரட்டி?

மத்ஹபுகளுக்குள்தான் எடுக்கிறது இஜ்மாவாம். மத்ஹபுகளுக்குள் எடுக்கிறதுலே கூட மெஜாரட்டிய கூட நாங்கள் இஜ்மாஃ என்று சொல்லுவோம். எங்கள் வழக்கம் இதுதான். என்று ஹனபி கிதாபுகளிலே என்ன செய்றாங்க(எழுதி வைத்திருக்கிறார்கள்) எங்களுடைய வழக்கத்திலே இதுதான் அர்த்தம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

அப்ப நீங்கள் மெஜாரட்டி(யை) இஜ்மாஃ என்கிறீா்களா? ஒருவர் கூட மாறு செய்யக் கூடாது என்கிறீர்களா? ஷாபியாக்களெல்லாம் கூடி இஜ்மாஃ ஒரு சட்டம் எடுத்து விட்டார்கள். ஹனபியாக்களெல்லாம் கூடி இஜ்மாஃ வேற சட்டம் எடுத்து விட்டீர்கள். இந்த இரண்டிலே எது இஜ்மாஃ?

இந்த இஜ்மாஃவை இவர் (ஷாபி) மீறுகிறாறே. இந்த இஜ்மாஃவை இவர் (ஹனபி) மீறுகிறாறே. யார் இப்ப குற்றவாளி. அல்லது நாளு(4) பேருமா சேர்ந்து எடுக்கணும் என்று சொன்னால் மத்ஹபு இல்லை என்று சொன்னவா்களெல்லாம் அதில் வருவார்களா? வர மாட்டார்களா? மத்ஹபு இல்லை குா்ஆன் ஹதீஸ் மட்டும் சொல்லக் கூடிய பல பிர்க்காகள் இருந்திருக்கிறார்கள் இல்லையா? அவா்கள் வருவார்களாஃ வர மாட்டார்களா?

இந்த விஷயங்களையெல்லாம் நீங்கள் தெளிவுபடுத்தினால்தான் உலகத்திலே இஜ்மாஃ என்பதற்கு நிகரான குழப்பம் கிடையாது (என்பதை) நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். உலகத்திலேயே குழப்பமான ஒரு விஷயம் இருக்கு என்று சொன்னால் இந்த இஜ்மாஃதான். இது மாதிரி யாரும் உளறுனது கிடையாது. பல கருத்து அவ்வளவு கருத்து எத்தனை வகையான கருத்து சுப்ஹானல்லாஹ். இஜ்மாஃன்னா என்ன? என்கிறது.

முதலில் இஜ்மாஃன்னா என்ன? என்கிறது (பற்றி) நீங்கள் கூடி பேசி முடிவு பண்ணி விட்டு வந்து இஜ்மாஃவை விளக்குங்க. எது இஜ்மாஃ என்கிறதில் இஜ்மாஃவைக் காணோமே. எதைத்தான் இஜ்மாஃ என சொல்லப் போகிறீர்கள் என்று கேட்டால் அவா் இல்லை என்கிறார் அவா் பொய்யர் என்கிறார். ஸஹாபி சொன்ன எனக்கு என்ன என்கிறார்? நான் மீறுவேன் என்கிறார். இந்த மாதிரியான விஷயங்களெல்லாம் இருக்கக் கூடிய நேரத்தில் – விளக்கம் வந்து போதுமானதாக இல்லை. 

விளக்கம் வந்து போதுமானதாக இல்லை. நல்ல நிறுவி இருக்கிறேன் ரண்டாவது ஆதாரம் காட்ணும். இஜ்மாஃ நாங்கள் ஏற்றுக் கொள்ளணும் என்று சொல்வதாக இருந்தால், குர்ஆனை வைத்து சொன்னார்கள். ஏற்றுக் கொள்ளணும் என்றால் குர்ஆனை வைத்து சொன்னதற்குத்தான் ஏற்றுக் கொள்கிறோம். நல்ல விளங்கி கொள்ளணும் குர்ஆனை வைத்து சொன்னால் ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா என்று சொன்னால் ஏற்றுக் கொள்வோம்.

இஜ்மாவுக்காக நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. குர்ஆனை காட்டியதற்காக ஏற்றுக் கொள்கிறோம். ஹதீஸை வைத்து சொன்னதற்காக ஏற்றுக் கொள்கிறோம். குா்ஆன் ஹதீஸை வைத்து ஆய்வு செய்து சொன்னால் ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா? கேள்வியே கிடையாது. ஆய்வு என்றாலே. (நேரம் முடிந்து விட்டது)



Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.