பித்ராவை முதல்வர் கொரானா நிவாரண நிதிக்கு கொடுக்க வேண்டுமா?

ன்றைய  துபை ஈமான் சங்க நிலை என்னவோ? தெரியாது.

பித்ராவை முதல்வரின் கொரானா நிவாரண நிதிக்கு  கொடுக்க வேண்டும் என்று  முக நுால்  அதி மே(ல்)தாவி அறிஞர்கள் பத்வா வழங்கி வருகிறார்கள்.  

இது சம்பந்தமாக வந்துள்ள கேள்விகளுக்கு நாம் பதில் சொல்வதை விட அல்லாஹ்வின் துாதர் மொழியையே பதிலாகத் தருகிறோம்.  

https://mdfazlulilahi.blogspot.com/2021/05/blog-post_11.html



ஏழைகளுக்கு உணவாகவும் இருக்கும் பொருட்டு நோன்புப் பெருநாள் தர்மத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள்.  அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: அபூதாவூத்

சதகா போன்றவைகளை  முதல்வர் கொரானா  நிவாரண நிதிக்கு  கொடுக்கலாம்ஏழைகளுக்குரிய நோன்புப் பெருநாள் தர்மத்தை முதல்வர் கொரானா  நிவாரண நிதிக்கு  கொடுக்கக் கூடாது என்பதற்கு. 

கண்மூடித்தனமாக பேசாத அறிவுள்ளவர்களுக்கு, அல்லாஹ்வின் துாதரை மதித்து நடப்பவர்களுக்கு மேற்கண்ட  ஆதாரப்பூர்வமான   ஒரு ஹதீஸ் போதும்.


மேலப்பாளையம் உஸ்மானிய்யா அரபிக் கல்லுாரியை கட்டுவதற்காக  1984ல் துபை ஈமான் சங்கத்தை அணுகினோம். அப்போது   தலைவராக இருந்த அப்துல் காதர்  அவரது கறி கடையில் வைத்து  சொன்னார். 

வருடா வருடம் நோன்பில் பித்ராவை வசூலிப்போம். நோன்புப் பெருநாள் கழிந்ததும் தமிழக மதரஸாக்களுக்கு பிரித்து அனுப்புவோம்.  கடந்த ஆண்டு பித்ரா வசூலில் இருந்து 2000 ரூபாய் மேலப்பாளையம்  உஸ்மானிய்யா மதரஸாவுக்கும்  அனுப்பி இருக்கிறோம் என்றார்.  நமக்கு துாக்கி வாரிப் போட்டது.  

குர்ஆனின் குரல், நர்கிஸ், நற்சிந்தனை, ஜமாஅத்துல் உலமா போன்ற மாத இதழ்களையும் இஸ்லாமிய புக்குகளையும் அவரது கறி கடையில் விற்பனை செய்து வந்தார்.

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கி, "இன்றைய தினம் ஏழைகளைத் தேவையற்றவர்களாக்குங்கள்" என்றும் கூறினார்கள்.  என்று அவரது கறி கடையில்  இருந்த புத்தகத்தில் இருந்ததை எடுத்துக் காட்டி கேட்டோம். 

உடனே அவர் சொன்ன பதில் நாங்கள் பத்வா வாங்கி வைத்து இருக்கிறோம் என்று.  இது அன்றைய  துபை ஈமான் சங்க நிலை.  இன்றைய  துபை ஈமான் சங்க நிலை என்னவோ தெரியாது.

என்னதான் குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களைக் காட்டினாலும் முல்லாக்கள் பத்வாக்களளை பிடித்து தொங்குபவர்களை நம்மால் திருத்த முடியாது. 

இதன் பிறகுதான்  நாம் துபையில் பித்ராக்களை வசூலித்து தமிழக ஏழைகளுக்கு வினியோகம் செய்யும் பணியை ஆரம்பித்தோம்.

"இன்றைய தினம் ஏழைகளைத் தேவையற்றவர்களாக்குங்கள்" என்று சொல்லாத  சுன்னத் ஜமாஅத் மவுலவிகளே கிடையாது.  இப்படி சொல்லி விட்டு அவர்களே பித்ராக்களை அள்ளிக் கொண்டு போகிறவர்களாக  இருக்கிறார்கள்.

அதனால், பித்ராவை முதல்வர் கொரானா  நிவாரண நிதிக்கு  கொடுக்க வேண்டும் என்ற தவறான பத்வாவை எதிர்க்க மாட்டார்கள். கண்டு கொள்ளவும் மாட்டார்கள். 

அல்லாஹ்வும் அவனது துாதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் சொன்னது மட்டுமே மார்க்கம் என்ற கொள்கை உடையவர்கள். தான் இந்த மாதிரியான நவீன பத்வா குழப்பவாதிகளை  அடையாளம் காட்ட வேண்டும். 


அரபியில் உள்ள குர்ஆணை தமிழில் எழுதி ஓதலாமா ? என்ற கேள்விக்கான பதிலை அறிய லிங்கை கிளிக் செய்யவும்

https://www.youtube.com/watch?v=OAmnS-L5n20&list=PLUDdx38-wc9yLX5k9_JD0rvJ9Oz8rkpo9&index=401










Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.