சுவாமி அக்னிவேஷ் கேள்வி!
நான் தாக்கப்பட்டபோது பா.ஜ.கவோ, தொலைகாட்சி தொகுப்பாளர்களோ ஏன் கொந்தளித்து கண்டிக்கவில்லை?- சுவாமி அக்னிவேஷ் கேள்வி! மஹாராஷ்ட்ரா மாநிலம் பல்கர் மாவட்டத்தில் சமீபத்தில் கலவரக்கும்பலால் மூன்று பேர் கொல்லப்பட்ட சம்பவம் பா.ஜ.க மற்றும் வலதுசாரி சிந்தனை கொண்டவர்களால் கடுமையாக கண்டித்து கூப்பாடு போடப்பட்டது. கொல்லப்பட்ட மூவரில் இருவர் வாரணாசியில் உள்ள ஒரு அகாராவைச் சேர்ந்த சாதுக்கள் என்பதை மையமாக வைத்து பா.ஜ.க மற்றும் சில தொலைக்காட்சி தொகுப்பாளர்களான வலதுசாரி மதவெறியர்கள் இந்த கொலைக்கு மதசாயம் பூசி மதகுரோதத்தை வளர்க்க முயற்சிக்கிறார்கள். இத்தனைக்கும் இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் அத்தனை பேரும் சங்பரிவாரால் இந்து என கூறப்படும் பழங்குடி சமூகத்தினர்தான்; ஒருவர் கூட முஸ்லிமோ, கிறிஸ்தவரோ கிடையாது. 2018 ஜூலையில் இதே மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் துலே என்ற இடத்தில் கோசாவி பழங்குடியினர் சம்பந்தப்பட்ட இதே போன்ற ஒரு கும்பல் கொலை நடந்தது. ஆனால் அப்போது மஹாராஷ்ட்ராவில் பா.ஜ.க ஆண்டு கொண்டு இருந்ததால் ...