2 : 8 (அன்)னாஸி - மனிதர்கள், மன் - சிலர், யகூலு - கூறுவான் ,ஆமன்னா - நம்பினோம்
இதில் 2 : 8 வது வசனத்திற்குரிய சொல்லுக்கு சொல்லையும் இறுதியில் 9 மொழி பெயர்ப்புகளிலிருந்து மொழி பெயர்ப்புகளை காண உள்ளீர்கள். அவற்றில் பில்லாஹி என்ற அரபி வார்த்தைக்கு அல்லாஹ்வைக் கொண்டும் என்றும் அல்லாஹ்வின் மீதும் என்றும் அல்லாஹ்வையும் என்றும்
வ பில் யவ்மில் ஆஃகிரி என்ற அரபி வார்த்தைக்கு இறுதி நாளைக் கொண்டும் இறுதி நாள் மீதும், இறுதி நாளையும் என்றும்
வ மா ஹும் பி முஃமினீ(ன)ன் என்ற அரபி வார்த்தைக்கு மு.மின்கள் அல்லர் (பஷாரத்) விசுவாசங்கொண்டவர்களல்லர். நம்பிக்கை கொண்டோர் அல்லர். நம்புவோர் அல்லர் என்றும் மொழி பெயர்த்துள்ளதை அறியலாம்.
https://mdfazlulilahi.blogspot.com/2019/10/2-8_16.html
இவற்றை சிந்தித்து படிக்கும் போது பழைய தமிழ் எது? எளிய தமிழ் எது? நடைமுறைத் தமிழுக்கு பொருத்தமானது எது என்பதை புரிவீர்கள் இன்ஷாஅல்லாஹ். இனி வார்த்தைக்கு வார்த்தை
https://mdfazlulilahi.blogspot.com/2019/10/2-8_16.html
இவற்றை சிந்தித்து படிக்கும் போது பழைய தமிழ் எது? எளிய தமிழ் எது? நடைமுறைத் தமிழுக்கு பொருத்தமானது எது என்பதை புரிவீர்கள் இன்ஷாஅல்லாஹ். இனி வார்த்தைக்கு வார்த்தை
مِنَ - மின - இருந்து From –லிருந்து
النَّاسِ - (அன்)னாஸி - மனிதர்கள்
مَنْ - மன் - சிலர்
يَقُولُ -யகூலு - கூறுவான்
آمَنَّا - ஆமன்னா - நாங்கள் ஈமான் கொண்டோம் - நம்பினோம்
بِ - பி - கொண்டு மீது - மீதும் -யும்
اللَّـهِ - (அ)ல்லாஹி- அல்லாஹ்
بِاللّٰهِ - பில்லாஹி - "அல்லாஹ்வையும்- அல்லாஹ்வின் மீதும் - அல்லாஹ்வைக் கொண்டும்,
وَ - இன்னும்
بِ - கொண்டு
الْيَوْمِ - ( அல் ) யவ்மி - நாள்
الْآخِرِ - (அ)ல் ஆஃகிரி - இறுதி -கடைசி
وَ - இன்னும்
مَا - மா- இல்லை
هُم - ஹும் -அவர்கள்
بِمُؤْمِنِينَ -பி முஃமினீ(ன)ன்.- நம்பிக்கை கொண்டோர்- நம்புவோர்-விசுவாசங்கொண்டவர்
وَمِنَ النَّاسِ مَنْ يَقُولُ آمَنَّا بِاللَّـهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ
வ மினன் னாஸி மன் யகூலு ஆமன்னா பில்லாஹி வ பில் யவ்மில் ஆஃகிரி வ மா ஹும் பி முஃமினீ(ன)ன்.
வ மினன் னாஸி மன் யகூலு ஆமன்னா பில்லாஹி வ பில் யவ்மில் ஆஃகிரி வ மா ஹும் பி முஃமினீ(ன)ன்.
2:8. "அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பினோம்'' எனக் கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர். (ஆனால்) அவர்கள் நம்புவோர் அல்லர். ( பீ.ஜே.)
2 : 8. இன்னும் மனிதர்களில் "நாங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாள் மீதும் ஈமான் (நம்பிக்கை) கொள்கிறோம்" என்று கூறுவோறும் இருக்கின்றனர்; ஆனால் (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர். (அன்வாறுல் குர்ஆன்)
2 : 8 இன்னும் மனிதர்களில் "நாங்கள் அல்லாஹ்வைக் கொண்டும், இறுதி நாளைக் கொண்டும் ஈமான் கொண்டோம்" என்று கூறுவோறும் இருக்கின்றனர்; ஆனால் (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர் (இம்தாதி).
2:8. இன்னும் மனிதர்களில் “நாங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாள் மீதும் ஈமான் (நம்பிக்கை) கொள்கிறோம்” என்று கூறுவோறும் இருக்கின்றனர்; ஆனால் (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர். ( டாக்டர். முஹம்மது ஜான் )
2:8. (நபியே!) அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டிருக்கிறோம் எனக் கூறுபவர்களும் மனிதரில் சிலருண்டு. ஆனால், (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களல்லர். ( அப்துல் ஹமீது பாகவி)
2:8. இன்னும் “அல்லாஹ்வையும் இறுதி(த் தீர்ப்பு) நாளையும் நம்பியிருக்கிறோம்” எனக் கூறுவோர் சிலரும் மனிதர்களில் உளர். ஆயினும், அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர்.(IFT)
2:8. இன்னும், “அல்லாஹ்வையும், இறுதி நாளையும் விசுவாசங்கொண்டிருக்கிறோம்” எனக் கூறுவோர் மனிதர்களில் (சிலர்) இருக்கின்றனர்; அவர்களோ விசுவாசங்கொண்டவர்களல்லர். ( மன்னர் ஃபஹத் வளாகம் )
2;8. மனிதர்களில் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நாங்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டோம். என்று (நாவளவில் மட்டும்) கூறுவோறும் உண்டு. அவர்கள் (உண்மையில்) மு.மின்கள் அல்லர் (பஷாரத்)
2:8 இன்னும் மனிதர்களில் சிலர் நாங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி(த்தீர்ப்பு) நாள் மீதும், நம்பிக்கை கொண்டுள்ளளோம் என்று (நாவினால்) கூறுகின்றனர்; ஆனால் (உண்மையில் இதயத்தால்) அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர் (இஸ்லாமிய மலிவு பதிப்பு).
.
Comments