2 :6 இன்ன - நிச்சயமாக, அல்லதீ(ரீ) ன அவர்கள், க(FA)பறுா - காஃபிராகிவிட்டார்களே,ஸவாாஉன்- சமம்

 இந்த 2:6வசனத்தில் உள்ள இன்ன  என்ற தஃகீத் சொல்லுக்கு   அப்துல் ஹமீது பாகவி, IFT ஆகியவர்கள் பீ.ஜே.யைப்  போல் மொழி பெயர்க்காமல் விட்டு விட்டுள்ளார்கள். 



இன்ன ல்லதீ(ரீ)ன  க(FA)பறுா ஸவாாஉன்  அலைஹிம்  ஃஅஅன்த(ர)ர்த ஹும்  அம் லம் துன்தி(ரி)ர் ஹும் லா யுஃமினுா(ன்)ன


 اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا سَوَآءٌ عَلَيْهِمْ ءَاَنْذَرْتَهُمْ اَمْ لَمْ تُنْذِرْ هُمْ لَا يُؤْمِنُوْنَ‏


إِنَّ -   இன்ன -
 நிச்சயமாக - திண்ணமாக - உறுதியாக






الَّذِينَ -     அல்லதீ(ரீ)ன   அவர்கள் - எவர்கள்


كَفَرُوا - க(FA)பறுா - காஃபிராகிவிட்டார்களே


سَوَاءٌ -   ஸவாாஉன்- சமம் - சமமே - சரியே -ஒன்றுதான்


عَلَيْ -   அலை-  மீது


هِمْ -  ஹிம் - அவர்கள்

 ءَاَنْ - ஃஅஅன்த - நீர்

ذَرْتَ- த(ர)ர்த-எச்சரிப்பது

هُمْ - ஹும்- அவர்களை


أَأَنذَرْتَهُمْ - ஃஅஅன்த(ர)ர்த ஹும் - நீர் அவர்களை எச்சரித்தாலும்


أَمْ - அம்- அல்லது


لَمْ - லம்- இல்லை

 تُنْذِرْ  - துன்தி(ரி)ர் - எச்சரிக்கை -


هُمْ - ஹும்- அவர்களை


تُنذِرْهُمْ -   துன்தி(ரி)ர் ஹும் -அவர்களை எச்சரிப்பீர் 

 لَ - லா -இல்லை - மாட்டார் 

 يُؤْمِنُوْنَ- யுஃமினுா(ன்)ன - நம்பிக்கை -விசுவாசம் - ஏற்றுக் கொள்ளல்

لَا يُؤْمِنُونَ - லா யுஃமினுா(ன்)ன  அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் 


இனி தமிழ் நடையில் பலரது மொழிப்பெயர்ப்புகளைப் பாருங்கள்.


 1. (ஏகஇறைவனை) மறுப்போரை நீர் எச்சரிப்பதும்எச்சரிக்காமல் இருப்பதும் அவர்களைப் பொறுத்த வரை சமமானதே. நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.  (பீ.ஜே.)


2. (நபியே!) நிச்சயமாக நிராகரிக்கிறார்களே அத்தகையோர_அவர்களுக்கு, நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும், அவர்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யாதிருப்பதும், அவர்களுக்குச் சமமே. அவர்கள் விசுவாசங் கொள்ள மாட்டார்கள் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி


3. (இவ்விஷயங்களை) யார் நிராகரித்தார்களோ, அவர்களை நீர் எச்சரிப்பதும், எச்சரிக்காதிருப்பதும் அவர்களைப் பொறுத்தவரை ஒன்றுதான். எவ்வகையிலும் அவர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் அல்லர். (IFT)

4.  நிச்சயமாக காஃபிர்களை நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் அல்லது எச்சரிக்காவிட்டாலும் சரியே! அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள். (KSR இம்தாதி)


5. (நபியே!) எவர்கள் (இவ்வேதத்தை மனமுரண்டாக) நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நீங்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும்எச்சரிக்கை செய்யாதிருப்பதும் உண்மையில் சமமே. அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள் (அப்துல் ஹமீது பாகவி)

6. நிச்சயமாக காஃபிர்களை (இறைவனை நிராகரிப்போரை) நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் (சரி) அல்லது எச்சரிக்காவிட்டாலும் சரியே! அவர்கள் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள். (டாக்டர். முஹம்மது ஜான்)


7. திண்ணமாக, (நரகம் விதிக்கப் பட்டுவிட்ட இந்த) இறை மறுப்பாளர்களை நீர் எச்சரித்தாலும் அல்லது எச்சரிக்காவிட்டாலும் சரியே! அவர்கள் ஓரிறை நம்பிக்கை கொள்ளப் போவதில்லை (அதிரை ஜமீல்)




Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

2. அக்கிரமக்காரர்கள் ‏ ழாலிமீன் ‏ -அநியாயம் செய்தவர்கள் - لظّٰلِمِيْن