இ.யூ. மு. லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பிரபல பத்திரிக்கையாளர் அப்துல் ரசாக் தீபாவளி வாழ்த்துக்கள்.

தீபாவளியை கொண்டாடும் சகோதரர்கள், சகோதரிகள் அனைவருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். 

ஒளி-பிரகாசம்-வெளிச்சம் என்பதுடன் தொடர்புடைய தீபாவளி திருநாளை கொண்டாடும் அனைவரின் வாழ்விலும் நன்மை யும், உண்மையும்,மென்மையும் உன்னத மனிதநேய தன்மையும் ஒளி சிந்திட வாழ்த்துகிறோம்.

https://mdfazlulilahi.blogspot.com/2019/10/blog-post_28.html




இந்தியாவில் வாழும் அனைத்து மத, மொழி, இன, கலாச்சாரங்களை கொண்ட அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வில் வாழ வேண்டும். இந்த உணர்வில் நம்பிக்கையுள்ள நல்லவர் கள், இந்திய தேச மக்களை வேற்றுமை யில் ஒற்றுமை பேணுகிற மக்களாக வாழ வழிகாட்ட வேண்டும்.

உலகளவில் இந்திய ஜனநாயகம் உயர்ந்து நிற்கிறது. இதற்கு காரணம் அண்ணல் மகாத்மா காந்தி, பண்டிதர் ஜவஹர்லால் நேரு, டாக்டர் அம்பேத்கர், சர்தார் வல்லபாய் படேல், மௌலானா அபுல்கலாம் ஆஸாத் போன்ற பெரும் தேசிய தலைவர்கள், எல்லா மதங்களையும் சேர்ந்தவர்கள் இதயப்பூர்வமாக ஒருமனப்பட்டு , ஓர்மை உணர்வோடு வாழ்வதற்கான அரசியல் பண்பாட்டை உருவாக்கி தந்துவிட்டு சென்றிருக்கிறார்கள்.

மத துவேஷம், மத விரோதம், மத குரோதம், மத மறுப்பு, மத வெறுப்பு, மத கிலேசம், மத மாச்சரியம் போன்ற தீமைகளிலிருந்து நாட்டை பாதுக்காக்கக் கூடிய திரு நெறியை முந்தைய தேசிய தலைவர்கள் காட்டிச் சென்றிருக் கிறார்கள். 

அந்த நெறிமுறையை ஒவ்வொரு இந்தியனின் உள்ளத்திலும் ஊட்ட வேண்டிய பொறுப்பு இன்றைய அரசியல் தலைவர்களுக்கு இருக்கிறது.

அவரவர் மதம், அவரவருக்குரியது. அவரவர் செல்லும் வழி, அவரவர் விரும்பும் வழி. இந்திய மக்கள் அனைவரும் செல்லும் பொதுவான வழி இந்திய அரசியல் சாசனம் வழங்கியிருக்கிற வழி. 

அந்த வழியில் எல்லோரும் செல்வோம், இந்திய திருநாட்டை  பொன்கொழிக்கும் நல்லரசாக வெல்வோம்.

எல்லோருக்கும் இதயம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்.
தங்கள் அன்புள்ள,
பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்
தேசிய தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

-------------------------------------------------------------------------
இராமநாதபுரம் பிரபல பத்திரிக்கையாளர் அப்துல் ரசாக் அவர்களின் தீபாவளி வாழ்த்துக்கள்



[28/10, 4:23 pm] +966 54 023 6160: மனவளர்ச்சி குன்றிய இவர்.....இந்த நிகழ்ச்சியே இவருக்குள்ளது போல் உள்ளது.பின்னாடி ஸ்கிரீன் பிரிண்ட்ம் அத்தத்தான் சொல்லுகின்றது


[28/10, 4:33 pm] +966 54 023 6160: உலகமோகமோ என்னவோ..... அல்லாஹ் நம்மையும் நம் குடும்பத்தார்கள் முஸ்லிம்கள் அனைவரையும் நேர்வழியில் கடைசிவரை நிலைத்திருக்கச் செய்திடவேண்டுவோமாக



[28/10, 4:37 pm] +966 54 023 6160: யாரும் யாரையும் பரிகசிக்க வேண்டாம்.தவ்ஹீத் அது அல்லாஹ் ஒருவனைக்குறிக்கும் சொல்.அது எந்த தனிநபருக்கும்,குழுவுக்கும் சொந்தம் கொண்டாட முடியாத வாழ்க்கை நெறி தந்த அவனுக்குரியது.இதில் பெருமை கொள்ள எவருக்கும் உரிமையில்லை என்பதை இதன் மூலம் அல்லாஹ் நமக்கு பாடம் நடத்துகிறான்

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு