ஆளை எதிர்ப்பதா அநியாயத்தை எதிர்ப்பதா? எது இஸ்லாம்? இடையில் புகுந்து குழப்பம் செய்யும் கொடியவர்கள் யார்? பிராத்தல் பீ.ஜே. விவாதமா?
மதுரை லீலாவதி கொலை வழக்கில் கருணாநிதியின் முழு கருணையால் விடுதலை செய்யப்பட்டவர்களின் இன்றைய கதி என்ன?
இரண்டு பேருக்கோ இரண்டு சாராருக்கோ இடையில்
சண்டை – சச்சரவு – மோதல் ஏற்பட்டால் மூன்றாமவர்
என்ன செய்ய வேண்டும்? அவர்களிடையே சமாதானத்தை –இணக்கத்தை- சமரசத்தை –ஒற்றுமையை
ஏற்படுத்த வேண்டும். அதுதான் முஃமின்களின் பண்பாகும்.
அவர்களைத்தான் அல்லாஹ் விரும்புகிறான், நேசிக்கிறான். அவர்கள் மீது அருளும் சொரிகிறான். இதை நாம் சொல்லவில்லை அல்லாஹ்
அல்குர்ஆனில் 49:9,10 சொல்லி உள்ளான். இதைப் பற்றி வாய் கிழிய
தொண்டை தண்ணி வத்த கத்துவார்கள். ஆனால் அவர்கள்தான் செயலில் ஷய்த்தான்களாக
இருக்கிறார்கள்.
எனது அனுபவத்தில் உள்ளதை அதுவும் எனது
வாழ்க்கையில் நடந்ததையே எழுதுகிறேன். 1968 ஆம் ஆண்டு பள்ளி பருவத்திலிருந்து நண்பராக
உள்ளவருக்கும் எனக்கும் மோதல் ஏற்பட்டது.
மேலே உள்ளபடி வாய் கிழிய கத்தும் தொண்டை தொழிலாளியான
ஒரு மவுலவி எங்களுக்கிடையே சண்டைத்தீயை மென்மேலும் மூட்டி விட்டான். நன்றாக குளிர்
காய்ந்தான். இந்த ஷய்த்தான் 1988க்குப்
பிறகுதான் எங்களுக்கு நண்பனாக ஆனான்.
நன்றிக்குரிய நல்ல மனிதர்கள் எங்களிடையே
சமாதானம் செய்து வைத்தார்கள். அல்லாஹ்வின் அருளால் இன்றும் நட்புடன் இருக்கிறோம்.
MJAQH (அதாவது மேலப்பாளையம் ஜாக்) என்ற
டூப்ளிகேட் பெயரால் பள்ளிவாசலை கைப்பற்றியவர்களிடமிருந்து மீட்க அசல் JAQH ஈடுபட்டது. அப்பொழுது ததஜவுக்கு ஆதரவாக அ.தி.மு.க.வும் JAQH தரப்பில் த.மு.மு.க.வும்
நின்றது.
அதனால் ஆத்திரம் அடைந்த PJவின் தூண்டுதலால் அப்பொழுது த.மு.மு.க. மாநில
செயலாளராக இருந்த மவுலவி ஜே.எஸ். ரிபாஇ அவர்களை வீட்டோடு தீ வைத்து கொலை செய்ய த.த.ஜ.
ஆட்கள் முயற்சி செய்துள்ளனர். தீ ஜுவாலையில் பைக் எரிந்தது என்று கிடைத்த தகவலை எழுதினேன். இது நடந்தது. 2006 ஜுலையில்.
பிறகு இது பீ.ஜே. செய்தது இல்லை. இரண்டு சாராருக்கு இடையில் உள்ள
பிரச்சனையை ஒட்டி அல்லாஹ்வின் சாபத்துக்குரியவனின் ஆட்கள் செய்துள்ளார்கள் என்ற உண்மையை
அறிந்தேன்.
உடனே ரிபாயிக்கு போன் போட்டு பீ.ஜே.யின் ததஜ ஆட்கள் இதை செய்யவில்லை. எனவே ததஜ மீது போலீஸில் கொடுத்த கம்ளைண்ட்டை வாபஸ் பெறுங்கள் என்று சொன்னேன்.
இதே போல் அப்போது ஜாக் செயலாளராக இருந்தவர் வீட்டில் தீ வைத்தார்கள். அதிலும் பீ.ஜே.யின் ததஜ ஆட்கள் செய்தார்கள் என்பது பொய் என அறிந்தேன்.
2007ல் தாயகம் சென்றபொழுது பொதுக் கூட்டம் போட்டு இந்த இரு
உண்மைகளையும் சொல்லிக் காட்டினேன். காரணம் நமக்கு நோக்கம் ஆளை எதிர்ப்பது அல்ல.
அநியாயத்தை எதிர்ப்பது தான்.
கடந்த ஆண்டு ததஜ மாவட்ட செயலாளராக இருந்த
ஜுபைர் அவர்களின் 3 கார்கள் எரிக்கப்பட்டது. தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மாநில தலைவர் P.A.காஜா
மைதீன் பாகவி உட்பட சுன்னத் ஜமாஅத்தினர் 9 பேர் வழக்கு பதிவானது.
பீ.ஜே.
இருந்த TNTJயை எதிர்க்கக் கூடியவர்களாக
இருந்தவர்கள் TNTJ ஜுபைர்
தானே தனது கார்களுக்கு தீ வைத்துக் கொண்டார் என்று சொன்னார்கள்
எழுதினார்கள். சந்தர்ப்ப சாட்சியங்களால் நாமும் நம்பினோம்.
கடந்த மாதம் தாயகத்திலிருந்துபொழுது சில
மூத்த
அதிகாரிகளை சந்தித்து சிறைவாசிகள் விடுதலை சம்பந்தமாக பேசியபொழுது.
3 கார்களை எரித்தது TNTJயினர் இல்லை என்று அறிந்தேன்.
இரண்டு சாராருக்கு இடையில் சண்டை
ஏற்பட்டால் சண்டைத்தீயை மென்மேலும் மூட்டி விட்டு குளிர் காய்ந்து விட்டு.
சமுதாயம் சமுதாயம் என்றும் சமுதாயத்திற்காக ஜிஹாது என்றும் வாய் கிழிய கத்தும் தொண்டை
தொழிலாளியான ஷய்த்தானின் கூட்டத்தினர் தான் இதைச் செய்தார்கள் என்று அறிந்தேன்.
3 கார்களை எரித்தது TNTJயினர் இல்லை என்ற இந்த உண்மையை கம்பம் சென்று அண்ணன் ஜபருல்லாஹ் அவர்களிடமும்
நேரில் சொன்னேன்.
TNTJயை என்ற ஒரு அமைப்பை அல்லது அதில் உள்ள
ஒரு ஆளை எதிர்ப்பது மட்டும் நமது நோக்கம் என்றால் இந்த உண்மைகளை சொல்லி இருக்க
மாட்டேன்.
இதை ஏன் எழுதி உள்ளேன் என்றால், ஒரு
பதிவின் பின்னுாட்டத்தில் உள் தொடரில் பிராத்தல் பீ.ஜே. விவாதம் செய்வதை
கவனிக்கவும் என்று இன்று காலை ஒரு மெஸேஜ் வந்தது. பீ.ஜே. வசமாக மாட்டிக் கொண்டார்
என்ற மகிழ்ச்சியுடன் பலருக்கு பார்வேடு செய்து கொண்டு இருந்தேன். இடையில் அந்த பேஸ்புக்கை பார்த்தேன்.
தொண்டைத் தொழிலாளியான ஒரு மவுலவி எனக்கும்
எனது நண்பருக்கும் சண்டைத்தீயை மென்மேலும் மூட்டி விட்டு. குளிர் காய்ந்தானே
அதுதான் ஞாபகத்துக்கு வந்தது.
பின்னுாட்டத்தில் பீ.ஜே என்று சொன்ன சகோதரரே ஒரு மணி நேரத்தில் எழுத்து தப்பு தப்பாக உள்ளது. அதனால் பீ.ஜே தானா என்ற சந்தேகம்
உள்ளது. என்று கூறி விட்டார்.
என்னத்த சட்டத்தை திருத்தினாலும் அப்பாவி சிறைவாசிகள் விடுதலைக்கு இது
போன்றவர்களின் செயல்பாடுகளும்தான் தடையாக இருக்கும்.
மதுரை லீலாவதி கொலை வழக்கில்
கருணாநிதியின் முழு கருணையால் விடுதலை செய்யப்பட்டவர்கள் இன்றைய கதி என்ன? தான் உண்டு தன் குடும்பம்
உண்டு என அமைதியாக தொழில் செய்து பிழைப்பு நடத்தி இருக்க வேண்டும்.
அவர்கள் அப்படி இருக்கவில்லை. அவர்கள் சமுதாய மக்களையே மிரட்டி திண்ணக் கூடியவர்களாக இருந்தார்கள். அதனால்
கருணை அடிப்படையில் பொது மன்னிப்பில் விடுதலையானதை போலீஸ் ரத்து செய்து அவ்வளவு பேரையும் மீண்டும் உள்ளே தள்ளி விட்டது.
ஆகவே துஆச் செய்யுங்கள். முஸ்லிம்
சிறைவாசிகளின் விடுதலைக்கு நமது சமதாயத்தில் உள்ள எந்த துரோகிகளின் செயல்பாடுகளெல்லாம் காரணமாக
உள்ளதோ அவர்கள் அத்தனை பேர் மீதும் யா அல்லாஹ் உன் பிடியை இறுக்குவாயாக ஆமீன்.
Comments