ஜ.உ.சாவின் மாநில தலைவர் ஹஜரத் P.A.K தலைமை இமாமாக உள்ள பள்ளியில் பதவிச் சண்டையா? பதில் சொல்வார்களா? பல்லிழிப்பார்களா?
இடியாப்பம்,
வட்லப்பம், கறி சால்னா, ஆட்டுக்கால் சூப்பு பாயா கொடுத்து ஓட்டு கேட்டார்கள் என்றதும் எங்கே நாங்குநேரியிலா? விக்ரவாண்டியிலா? என்றுதானே கேட்பீர்கள். ஆம் அங்கு கூட இல்லை இது. சுன்னத் ஜமாஅத் பள்ளிவசால்
தேர்தலில் தான் இந்தக் கூத்து. போலீஸ் பாதுகாப்புடன் நடந்துள்ளது. மாத
மாதம் வர வேண்டிய இருபதாயிரம் ரூபாய் வாடகை பணம் 16 ஆண்டுகளாக வரவில்லை எனும்போது இடியாப்பம், வட்லப்பம், கறி சால்னா, ஆட்டுக்கால் சூப்பு பாயா கொடுத்து ஓட்டு கேட்டது ஜுஜுபி.
1400
ஆண்டுகளாக ஒற்றுமையாக இருந்த சமுதாயம். இவர்கள் வந்து பிரித்து விட்டார்கள்.
இப்படிச் சொன்னவர்களும் எழுதியவர்களும் புளுகு மூட்டைகளை சுமந்து திரியும்
பொய்யர்கள். இதை வரலாறுகள் அடையாளம் காட்டிக் கொண்டிருக்கின்றன.
நேற்றைய
(25.10.2019) மேலப்பாளையம் பெரிய கொத்பா பள்ளி சம்பவங்கள் அவர்கள் முகத்தில் கரியை பூசி விட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் மூலம் அவ்வப்போது அவர்கள் முகத்தில் கரியை பூசிக் கொண்டுதான் இருக்கின்றன. இருந்தாலும் அந்த பொய்யர்கள் அந்த
புளுகு மூட்டைகளை விடுவதில்லை.
https://mdfazlulilahi.blogspot.com/2019/10/pak.html
https://mdfazlulilahi.blogspot.com/2019/10/pak.html
ஆயிரம்
ஆண்டுகளுக்கு முந்தைய பள்ளி. இரண்டு நுாற்றாண்டுகளாக ஒரே குடும்பதினரே கதீபாக இருந்தவர்களுக்கு கதீப் குடும்பத்தினர் என்று பெயர் கொடுத்த பள்ளி. தலைமுறை தலைமுறையாக நான்கு தலைமுறை கதீப்களை ஒரே குடும்பத்தில் கண்ட பள்ளி.
ஆற்காடு நவாப்பால் சங்கைமான் என்று பாராட்டை பெற்ற கதீப் இருந்த
பள்ளி. சங்கைமான் என்பது மறுவிதான் பின்னாளில் சங்குமான் என்று ஆகியது.
அந்த
ஆயிரம் ஆண்டு பள்ளியில் தல்சமாத் தொழில் அதிபர்கள் உதவியுடன் பல கோடி செலவில்
அண்டர் கிரவுன்ட் பள்ளி கட்ட உள்ளார்கள். அதற்காக அண்டர் கிரவுன்ட் வேலை ஆரம்பமாகி
விட்டது என்று பரவலாக பேசினார்கள். கடைசியில் என்ன அண்டர் கிரவுன்ட் வேலை
நடந்துள்ளது என்பதை நேற்றைய ஜும்ஆ நிகழ்வுகள் வெளிக் கொண்டு வந்து விட்டன.
1975ல்
மேல கொந்து என்ற எங்கள் முஹல்லாவினருக்கும் இந்த பெரிய கொத்பா பள்ளி நிர்வாகத்துக்கும்
மோதல் ஏற்பட்டது. எங்கள் முஹல்லாவினர் பெரிய கொத்பா பள்ளி நிர்வாகத்தில் இருக்க
மாட்டோம் என்று வெளியேறினார்கள். என்ன நடந்தது தெரியுமா?
அன்றிருந்த
இதே பெரிய கொத்பா பள்ளி நிர்வாகிகள் தெருத் தெருவாக வந்து நீங்கள் பெரிய கொத்பா
பள்ளி நிர்வாகிகளாக இருங்கள் என்று கெஞ்சி அழுது வேண்டுகோள் வைத்தார்கள்.
மோதினார்
தினமும் பள்ளி சாவியுடன் வந்து தெருத் தெருவாக இதோ பெரிய கொத்பா பள்ளி சாவி நீங்கள் வாங்கிக்
கொள்ளுங்கள். நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள் என்று ஒவ்வொருவரையும் பார்த்து கூவினார்.
காசு கொடுத்தால்
காசுக்கு தக்கவாறு எப்படிப்பட்ட ஃபத்வா கொடுக்கவும் தாயராக உள்ள ஹஜரத்கள் கூட்டம்
எல்லா காலத்திலும் இருக்குமே. அந்த ஹஜரத்கள் கூட்டம் ஃபத்வா கொடுத்தது. மேல கொந்து
தனி ஜும்ஆ கண்டது.
மேல
கொந்திலிருந்து எல் - L வடிவில் தெற்கே கடைசி வரை ஒரே ஜும்ஆ பள்ளியாக இருந்த பெரிய
கொத்பா பள்ளியிலிருந்து (நாமறிய) முதலில் பிரிந்தது லெக்ஷ்மிபுரம் தெரு தான். அதை
குண்டுத் தெரு என்பார்கள்.
ஒன்றாக இருந்த ஜமாஅத்தில் பிரிவினை ஏற்படுத்தியதால் குண்டு விழுந்தால் லெக்ஷ்மிபுரம் தெருவில் தான் குண்டு விழனும் என்று மேலப்பாளையவாசிகள் பேச ஆரம்பித்தார்கள் அதனால் தான் குண்டுத்
தெரு என்று பெயர் வந்தது என்பார்கள்.
குண்டுத்
தெரு தர்கா பார்ட்டிகளோ, அஜ்மீர் காஜா நாயகம்
ஒரு மணிக் குண்டை அஜ்மீரிலிருந்து வீசினார். அது லெக்ஷ்மிபுரம் தெருவில்
வந்து விழுந்தது. காஜா நாயகம் குண்டு
விழுந்த அந்த இடத்தில் தான் காஜாநாயகம் தர்கா கட்டப்பட்டது. அதனால் தான் குண்டுத்
தெரு என்று பெயர் வந்தது என்பார்கள்.
ஆக
காட்டுப் பள்ளி, கடையப் பள்ளி, மேலப்பள்ளி, கீழப்பள்ளி நெய்னாம்பள்ளிகளுக்கு என
ஒரே ஜும்ஆ பள்ளியாக இருந்ததை பிரித்தவர்கள் யார்? பிரிக்க ஃபத்வா கொடுத்த ஹஜரத்துகள் யார்? இவர்கள் வந்து பிரித்து
விட்டார்கள், 1400 ஆண்டு கால சமுதாய ஒற்றுமையை குலைத்து விட்டார்கள் என ஜும்ஆ மேடையில் புலம்புபவர்கள் பதில் சொல்வார்களா?
எத்தனையோ
சுன்னத் ஜமாஅத் பள்ளிகளை அது பள்ளி இல்லை என்று அறிவிக்க வேண்டும் என்று வஃக்ஃபு போர்டுக்கு வழக்கு கொண்டு வந்த சுன்னத் ஜமாஅத்கள் ஒன்றா இரண்டா?
மேலப்பாளையம்
நவாப் பள்ளியை இரண்டாக ஆக்க அந்த ஒரு முழ (இலக்கிய) இடைவெளியில் இடையில் டிரைனேஜ் ஓடை - சாக்கடை ஓடுகிறது. ஆகவே இன்னொரு போட்டி பள்ளி
கட்டலாம் என்று ஃபத்வா கொடுத்த ஹஜ்ரத்கள் யார்? பிரிவினையை ஏற்படுத்திய
பிரிவினைவாதிகள் யார்? 1400 ஆண்டு கால
ஒற்றுமை புளுகர்கள் பதில் சொல்வார்களா? பல்லிழிப்பார்களா?
அக்பர்
தொழுகைப் பள்ளியை தொழுகைப் பள்ளி இல்லை என்று அறிவிக்க வேண்டும் என்று வஃக்ஃபு போர்டில் சொல்லுங்கள் என்று மூத்த
வயதுடைய நவாப் பள்ளி கமிட்டியினர் யாரிடம் வந்து நின்றார்கள்?
நவாப்
பள்ளி கமிட்டியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று வஃக்ஃபு போர்டில் சொல்லுங்கள் என அக்பர் பள்ளியைச் சார்ந்த
இளைஞர்கள் பட்டாளம் யாரிடம் வந்து நின்றார்கள்? அல்லாஹ்வின் அருளுக்குரிய தவ்ஹீதுவாதியிடம் தான் வந்து
நின்றார்கள்.
வஃக்ஃபு போர்டு அதிகாரிகளையும் மெம்பர்களையும் தலைவரையும் கொண்டு வந்து. மூத்த
வயதுடையவர்கள் இளைஞர்களை அரவணைத்து செல்ல வேண்டும். இளைஞர்கள் மூத்த வயதுடைவர்களை
மதித்து நடக்க வேண்டும். இப்படி நவாப் பள்ளி மெம்பரிலிருந்து அறிவுரை கூறி ஒற்றுமை பிரச்சாரம்
செய்ய வைத்தது யார்? அல்லாஹ்வின் அருளுக்குரிய தவ்ஹீதுவாதி அல்லவா?
(அடுத்த வெளியீடு நம்புங்கள் இது தக்கலை பிர்தவ்ஸி பற்றியது அல்ல)
இனி உள்ளவை நாம் எழுதியது அல்ல பார்வையில் பட்டவை
(அடுத்த வெளியீடு நம்புங்கள் இது தக்கலை பிர்தவ்ஸி பற்றியது அல்ல)
இனி உள்ளவை நாம் எழுதியது அல்ல பார்வையில் பட்டவை
Hussain Ali மேலப்பாளையம்
பெரிய கொத்பா பள்ளியின் நிர்வாக அலுவலகம் பூட்டி இருந்த நிலையில் முன்னால்
நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல்/ முறையாக பொருப்புகள்/கணக்கு வழக்குகள்
ஒப்படைக்கப்படாத நிலையில் புதிதாக முறையற்ற முறையில் பொருப்பிற்கு வந்த
நிர்வாகத்தில் உள்ளவர்கள் பள்ளி மற்றும் பள்ளியின் நிர்வாக அலுவலக பூட்டை உடைத்து
இருக்கிறார்கள்.....
இது என்ன வழியில் நியாயம்..
Mohamed Shafi நீங்கள்( உங்கள் கூட்டம்) ஒற்றுமை யாக உள்ளீர்களோ????
பிரிவினையை ஏற்படுத்தியதற்கும்,ஒற்றுமை யை
குழைத்தற்கும்
காட்டிகொடுத்தற்கும் உங்களுக்கு
சம்பந்தம் இல்லையா
Mohamed Fazlu Elahee சகோதரர் Mohamed Shafi அவர்களே
ஜமல் யுத்தம் (ஒட்டகப் போர்) துவங்கி கர்பலா என ஆயிரக்கணக்கான சண்டைகளைம் அயிரத்தெட்டு பிரிவுகளையும் கண்டுள்ள வரலாற்றுக்குரியவர்கள். 1400 ஆண்டுகளாக ஒற்றுமையாக இருந்தோம் என்று சொல்லி வருவது பொய் என்றே குறிப்பிட்டுள்ளேன்.
நாங்கள் பிரிவினை இன்றி இருக்கிறோம் என்று சொல்லவில்லை. குர்ஆன் ஹதீஸ்தான் மார்க்கம் என்று சொல்வதில் ஒற்றுமையாக இருக்கிறோம். எருமை மாட்டு குர்பானிக்கு மஷுரா செய்து முடிவு சொல்வோம் என்று சொல்லக் கூடிய மூளையையும் களி மண்ணையும் மண்டையில் உடையவர்ளால் தான் பிரிவுகள் ஏற்பட்டுள்ளது. அதை மறுக்க மாட்டோம்.
காட்டிகொடுத்தற்கும் உங்களுக்கு
சம்பந்தம் இல்லையா என்று கேட்டுள்ளீர்கள் உள்ளீர்கள். காசுக்காக காட்டிக் கொடுப்பதை தொழிலாக ஆக்கிக் கொண்டவர்கள் மீதும் காசு பார்ப்பதற்காகவே தாங்கள் சம்பவங்கள் செய்யச் செய்து விட்டு அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள மாட்டி விட்டு காசு பார்த்தவர்கள் மீதும்
தலைமறைவாக இருப்பவர்களுக்கு உதவுகிறோம் என்ற பெயரில் அவர்களை தங்கள் பொறுப்பில் தங்க வைத்து நல்ல வசூலித்து விட்டு. போலீஸ் மற்றும் உளவுத் துறையிடம் நல்ல பேரம் முடிந்ததும் காட்டிக் கொடுத்து காசு பார்த்தார்களே அந்த நம்பிக்கை துரோகிகள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக ஆமீன் உன் பிடியை இறுக்குவாயாக ஆமீன் என்று நான் பல முறை எழுதி விட்டேன். இது போல் துஆச் செய்ய யாருமே முன் வரவில்லையே ஏன்?

Uvaisul Karani பழைய நிர்வாகம் கலைக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவர் என
அவர்களுக்கு தெரியாதா??? கணக்கு வழக்குகளை நிர்வாகம்
கலைக்கப்படும் அன்றே புதிய நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டாமா? இது என்ன அநியாயம்...
பூட்டை உடைக்கும் அளவிற்க்கா வைப்பது...
பெ.கொ.ப உடைபடுவது இது இரண்டாவது முறை...
பெ.கொ.ப உடைபடுவது இது இரண்டாவது முறை...
Hussain
Ali Uvaisul Karani வந்தவர்கள் புதிய
நிர்வாகிகள் அல்ல..... இதற்கு முன்னால் நிர்வாகிகள்..... பாதியில் பிரச்சனை உடன்
அப்படியே போட்டுட்டு போய்விட்டார்கள்..... இப்பொழுது உள்ளவர்கள் ஊர் ஜமாத் மூலம்
தேர்தெடுக்கப்பட்டு நிர்வாகிகள்.... இப்பம் அரசியல்வாதி மற்றும் போலிஸ் மூலம்
அதிகாரத்தை கைபற்றி இருக்கிறார்கள்.... அவர்களிடம் எப்படி ஒப்படைப்பது.....
Hussain Aliமேலப்பாளையம் பெரிய
கொத்பா பள்ளியின் காசை ருபாய் 3200 சதுர
அடிக்கு பில்டீங் கட்டியதாக கணக்கு காட்டி இருக்கிறார்கள்.....
முன்னால் நிர்வாகித்தவர்கள்.....
பல வருடங்களாக கணக்குகள் தணிக்கை செய்யப்படவில்லை/முறையாக
அடுத்த வந்த நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்படவில்லை...
Comments