- Get link
- X
- Other Apps
மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?
from Muqrin date Jan 17, 2008 9:20 PM subject மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்? mailed-by gmail.com தூய்மையானவன் ஆகிய அல்லாஹ் மறுமை நாள் வரும்போது மனிதனை அவனது வால்போன்ற ஓர் எலும்பிலிருந்து மீண்டும் உயிர்ப்பிர்த்து எழுப்புவான். மக்கள் அனைவரும் வித்துக்களிலிருந்து செடிகள் முளைத்து வருவதைப்போன்று புத்தம் புதிய படைப்பாக எழுந்து வருவார்கள். செருப்பணியாதவர்களாக , ஆடை உடுத்தாதவர்க ளாக, விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாக கப்ருகளில் இருந்து வெளிப்பட்டு வருவார்கள். வண்ணத்துப் பூச்சிகள் அல்லது வெட்டுக்கிளிகளின் வேகத்தில் மஹ்ஷர் மைதானத்தை நோக்கி விரைந்தோடுவார்கள். அம்மைதானத்தின் வழியை அவர்கள் தவறவிட மாட்டார்கள். காட்டுப்புறாக்கள் தங்கள் இலக்கை அறிந்திருப்பதை விட அவர்கள் அம்மைதானத்தின் வழியை நன்கறிந்திருப்பர். முதன் முதலாக நபி (ஸல்) அவர்களுக்காகவே பூமி வெடித்துத் திறக்கும். அவர்களே முதன் முதலாக உயிர் கொடுக்கப்படுவார்கள். அல்லாஹ்வின் நேசராகிய இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களே முதன் முதலில் ஆடை அணிவிக்கப்படுவார்கள். மக்கள் அனைவரையும் பயமும் திகிலும் ஆட்கொண்டிருக்கும். ந...
Comments