பிலால் ஹாஜியார் என்று அழைக்கப்பட்ட அரை நுாற்றாண்டு சமுதாய ஊழியர் மரணம்
பிலால் ஹாஜியாரை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் குழு பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை மாவட்ட கலெக்டரும் ஏற்றுக்கொண்டார் , சிறை நன்னடத்தை அதிகாரியும் விடுதலை செய்யலாம் என்று பரிந்துரை செய்தார். ஹை கோர்ட்டும் பிலால் ஹாஜியாரை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவு போட்டது. அப்படி இருந்தும் விடுதலை செய்யப்படாதது ஏன்? சிந்தியுங்கள்.
அப்துல் ஹமீது என்ற பெயருடைய அவர் கோவையில் பிலால் ஹார்டுவேர்ஸ் என்ற கடை நடத்தி வந்ததால் பிலால் ஹாஜியார் என்று அழைக்கப்பட்டார். 1989ல் வஃக்பு போர்டு மெம்பராக இருந்தார். இ.யூ.மு.லீக் கோவை மாவட்ட தலைவராகவும். அப்துல் லத்தீப் தலைமையிலான மு.லீக், தேசிய லீக் ஆகியவற்றில் மாநில பொருளாளராகவும் த.மு.மு.க, எஸ்.டி.பி.ஐ.ல் மாநில துணை தலைவராகவும் இருந்தார்.
அப்துல் ஹமீது என்ற பெயருடைய அவர் கோவையில் பிலால் ஹார்டுவேர்ஸ் என்ற கடை நடத்தி வந்ததால் பிலால் ஹாஜியார் என்று அழைக்கப்பட்டார். 1989ல் வஃக்பு போர்டு மெம்பராக இருந்தார். இ.யூ.மு.லீக் கோவை மாவட்ட தலைவராகவும். அப்துல் லத்தீப் தலைமையிலான மு.லீக், தேசிய லீக் ஆகியவற்றில் மாநில பொருளாளராகவும் த.மு.மு.க, எஸ்.டி.பி.ஐ.ல் மாநில துணை தலைவராகவும் இருந்தார்.
1988ல்
கோட்டாறு மாலிக் தீனார் திடலில் அல் ஜன்னத் மாத இதழ் வெளியீட்டு நிகழ்ச்சியுடன்
மாநாடு நடந்தது. இ.யூ.மு.லீக் அகில இந்திய தலைவர் இப்றாஹீம் சுலைமான் சேட் Ex M.P. மாநில பொதுச் செயலாளர் அப்துல் லத்தீப்
போன்றவர்கள் கலந்து கொள்வதாக ஒப்புக் கொண்டிருந்தனர். அன்றைய மாநில தலைமையின்
எதிர்ப்பின் காரணமான வரவில்லை.
கோவை
மாவட்ட இ.யூ.மு.லீக் தலைவராக இருந்த பிலால் ஹாஜியார் அவர்கள் கடும்
எதிர்ப்புகளை மீறி கலந்து கொண்டார். முதலில் தந்தை மார்க்கம் பிறகுதான் தாய்ச்சபை
என்றார்.
1989ல் சமுதாயத்துக்காக
பாடுபடுகின்றோம் என்ற பெயரால் சமுதாயத்துக்கு எதிராகவே அரிவாளுடன் அலைந்தது ஒரு கூட்டம். அது மேலப்பாளையம் ஜாக் தவ்ஹீதுவாதிகளுக்கு
கொலை மிரட்டல் செய்தது. அப்பொழுது பிலால் ஹாஜியாரின் ரியல் எஸ்டேட் பாட்னரான கோவை பாஷாவுடன் மேலப்பாளையம் வந்தார்.
ஜாக் சார்பில் மேலப்பாளையத்தில் நடந்த
வரதட்சணை எதிர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தை
நிறைவு செய்தார். பிறகு பீ.ஜே. பேசிய பொதுக் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். மேலப்பாளையம்
ஜாக் சகோதரர்களை அரிவாளைக் கொண்டு மிரட்டியவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தினார்.
1989ல் குற்றாலத்தில் நடந்த வஃக்பு
போர்டு மீட்டிங்குக்கு வந்த மேலப்பாளையம் வெள்ளை கலீபா ஸாஹிபு தர்ஹா அக்தார்களுக்குள்
நடந்த நிர்வாக பிரச்சனையில் போர்டு மீட்டிங்கில் பேசவில்லை.
பிலால் ஹாஜியார் தங்கி இருந்த அறைக்கு தனியாக அழைத்து வர என்னிடம் சொன்னார். நாங்கள் தர்கா கூடாது என்ற கொள்கை உடையவர்கள் உங்களுக்குள் உள்ள சண்டையால் எங்களிடம் தீர்ப்பு கேட்டு வந்து நிற்கிறீர்கள். சமாதானமாகப் போங்கள் என்ற இரு தரப்புக்கும் தனித்தனியாக அறிவுரை வழங்கினார்.
பிலால் ஹாஜியார் தங்கி இருந்த அறைக்கு தனியாக அழைத்து வர என்னிடம் சொன்னார். நாங்கள் தர்கா கூடாது என்ற கொள்கை உடையவர்கள் உங்களுக்குள் உள்ள சண்டையால் எங்களிடம் தீர்ப்பு கேட்டு வந்து நிற்கிறீர்கள். சமாதானமாகப் போங்கள் என்ற இரு தரப்புக்கும் தனித்தனியாக அறிவுரை வழங்கினார்.
மேலப்பாளையம்
நவாப் பள்ளி ஜமாஅத்துக்கும் அக்பர் பள்ளி ஜமாஅத்துக்கும் நடந்த மோதலால் சென்னை வஃக்பு
போர்டுக்கு வந்தவர்களிடமும் . சமாதான பேச்சு வார்த்தை நடத்தியவர் பிலால் ஹாஜியார்.
1991இல் நடந்த தேர்தலில் மு.லீக்
லத்தீப் அணி சார்பில் பிலால் ஹாஜியார் வாணியம்பாடியில்
போட்டியிட்டார். அப்போது ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். உடனே பிலால் ஹாஜியார்
தேர்தல் அலுவலகமாக இருந்த வீட்டை புல்டோசர் வைத்து இடித்தார்கள். இதுபோல் 1997 கோவை கலவரத்திலும் பிலால் ஹாஜியார் பாதிக்கப்பட்டார்.
அதன் பிறகு பிலால் ஹாஜியார் மீது பல்வேறு வழக்குகள் பாய்ந்தன.
அந்த கால கட்டத்தில் அரசியல் விழிப்புணர்வு, கண்டனக் கூட்டங்கள் சிறைவாசிகளுக்கு உதவி,
தலைமறைவாக இருந்தவர்களுக்கு உதவி, கண்டிஷன் பெயிலில்
இருந்தவர்களுக்கு தங்க உதவி. போன்ற ஏராளமான சமுதாயப் பணிகள் ஜாக்
செய்தது. அப்பொழுது கலாச்சாரப் பள்ளி பகுதியில் கண்டிஷன் பெயிலில்
இருந்தவர்களில் பிலால் ஹாஜியாரும் ஒருவர்.
1990ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தில் பிலால் ஹாஜியார் மீது போடப்பட்ட வழக்கில் 2003ல் ஆயுள்
தண்டனை பெற்றார். மேல் முறையீடு செய்த அவருக்கு கடந்த ஆண்டு 2018 அக்டோபரில் ஆயுள்
தண்டனை உறுதி செய்யப்பட்டு சிறை சென்றார்.
90 வயதை நெருங்கிய அவர் சிறையில் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை வழங்க வசதி இல்லை ஆகவே, கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். உடல் நலம் கருதி, அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய கோரி கடந்த ஜனவரி மாதம் அரசுக்கு மனு கொடுக்கப்பட்டது.
மருத்துவ காரணங்களின் அடிப்படையில், பிலால் ஹாஜியாரை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் குழு பரிந்துரைத்தது.
இதை ஏற்றுக்கொண்டு, மாவட்ட
கலெக்டரும், சிறை
நன்னடத்தை அதிகாரியும் பிலால் ஹாஜியாரை முன்கூட்டியே விடுதலை செய்யலாம்
என்று பரிந்துரை செய்தனர்.
ஆனால், பிலால் ஹாஜியார் மீதான குற்றச்சாட்டு தீவிரமானது
என்றும், அவரை
வெளியே விட்டால், மத
கலவரம் ஏற்படும் என்றும் காரணம் கூறி, முன்கூட்டியே விடுதலை செய்யக்கூடாது
என்று சிறைத்துறை ஐ.ஜி. கூறினார்.
இதை ஏற்றுக்கொண்ட தமிழக உள்துறை செயலாளர், பிலால் ஹாஜியாரை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்று
கடந்த ஜூன் 13-ந்தேதி
உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்து பிலால் ஹாஜியாரை முன்கூட்டியே விடுதலை செய்ய
வேண்டும் ஹை கோர்ட் உத்தரவு போட்டது.
பிலால் ஹாஜியாரை முன்கூட்டியே விடுதலை செய்தால் சட்டம்-ஒழுங்கு
பிரச்சினை ஏற்படும் என்பதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை. மருத்துவக்குழுவும், கலெக்டரும், நன்னடத்தை அதிகாரியும்
முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்று பரிந்துரை செய்துள்ளனர்.
வயதாகி, உடல்
நலமும் பாதிக்கப்பட்டுள்ளதால், அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய மறுத்து தமிழக உள்துறை செயலாளர் பிறப்பித்த
உத்தரவை ரத்து செய்கிறோம். பிலால் ஹாஜியாரை 4 வாரத்துக்குள் விடுதலை செய்ய
வேண்டும் என்று கடந்த செப்டம்பர்
முதல் வாரம் ஹைகோர்ட் உத்தரவிட்டது.
ஹைகோர்ட் உத்தரவிட்டும் 90 வயது நெருங்கியவரைக் கூட விடுதலை செய்ய முடியாத அளவுக்கு யாருடைய செயல்பாடுகள் காரணமாகி விட்டதோ அவர்களுக்கு எதிராக இஸ்லாமிய உணர்வுள்ளவர்கள் இறைவனிடம் கையேந்த வேண்டும்.
ஹைகோர்ட் உத்தரவிட்டும் 90 வயது நெருங்கியவரைக் கூட விடுதலை செய்ய முடியாத அளவுக்கு யாருடைய செயல்பாடுகள் காரணமாகி விட்டதோ அவர்களுக்கு எதிராக இஸ்லாமிய உணர்வுள்ளவர்கள் இறைவனிடம் கையேந்த வேண்டும்.
ஹைகோர்ட் உத்தரவிட்டும் விடுதலை செய்யப்படாத பிலால் ஹாஜியாரை அல்லாஹ் விடுதலை செய்ய வைத்து அழைத்துக் கொண்டான். அல்லாஹ் அவருக்கு ஜன்னதுல் பிர்தவ்ஸை நல்குவானாக ஆமீன்
Comments