ஜலால் S.P. பட்டிணம் TNTJ என்பது உண்மையா? மோகன் என்பவர் SDPI யா?
இன்று என் பெயரில் விஸா, பண மோசடி செய்தவர்கள் நாளை உங்கள் பெயரிலோ உங்கள் உறவினர் பெயரிலோ மோசடி செய்தால் உங்கள் நிலை என்ன?
நமது
பதிவைக் கண்ட தலைவர் பேராசிரியர் MHJ அவர்கள் விசாரித்து. இது போல் எந்தவொரு
கூட்டமும் அங்கு நடைபெறவில்லை என்று கூறி இதற்கும் த.மு.மு.க.வுக்கும் சம்பந்தம் இல்லை
என்பதை உறுதி செய்து விட்டார்கள்.
போனில் பேசியவர்கள் SDPI, TNTJ பெயரை படுத்தி
உள்ளார்கள். ஆகவே SDPI தலைமையிலிருந்தும் TNTJ தரப்பிலிருந்தும் பதிலை எதிர்
நோக்கி இதை ஆடியோ ஆதாரத்துடன் வெளியிடுகிறேன். யுடியூப்பில் உள்ள கன்வர்ட்டில் சவுண்டு கம்மியாக உள்ளதால் வாட்ஸப்பில் 2 ஆடியோக்களையும் அனுப்பி உள்ளேன்.
தஃவா
சென்டரில் வேலை செய்து கொண்டு தஷ்ரீக் இல்லாமல் ஹாஜிகளை ஏமாற்றியவர்கள் பற்றிய
வரலாறு நமக்குத் தெரியாது என்று இயக்க வெறியில் உள்ள பலர் பதிவுகளை போட்டுக்
கொண்டு இருக்கிறார்கள். அதை பின்னர் பார்ப்போம்.
ஜமாஅத்திலிருந்து சொன்னார்கள். ஜமாஅத்திலிருந்து உங்கள்
நம்பர் தந்தார்கள். இவ்வாறு விசா மற்றும் பண மோசடியாளர்கள் மூலம் பாதிக்கப்பட்ட
குடும்பங்களிலிருந்து எனக்கு போன்கள் வரும்.
ஜமாஅத்
என்றவுடன் முஹல்லா ஜமாஅத் என்றுதான் எண்ணினோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினோம்.
பாதிக்கப்பட்டவர்களில் முஸ்லிம் அல்லாதவர்களும் உண்டு.
இலவசமாக
ரூமில் தங்க வைத்து உணவும் கொடுத்து சட்ட உதவிகள் செய்தோம். துாரம் தொலைவு என்றால்
அரிசி, பருப்பு, மைதா, எண்ணெய் என்று
கொண்டு போய் கொடுத்தோம். நண்பர்கள் உறவினர்கள் மூலமும் பண உதவி செய்ய செய்தோம்.
இதையெல்லாம்
கணக்கு பண்ணி ஜமாஅத்காரர்கள் பணம் வாங்கினார்கள் என்று அறிந்த பின்தான் இது
முஹல்லா ஜமாஅத்தாக இருக்காது என்று முடிவுக்கு வந்தோம்.
பிறகுதான் டிராவல்ஸ்
பெயரால் மோசடி செய்து பிழைக்கும் கூட்டத்தைச் சார்ந்தவர்கள். ஏதாவது ஒரு ஜமாஅத்
என்ற பெயருடன் இருக்கும் அமைப்பில் பதவியை பெற்றுக் கொண்டு ஏமாற்று வேலை
செய்கிறார்கள் என்பதை கண்டு பிடித்தோம்.
இதன் பிறகுதான் ஜமாஅத்திலிருந்து
சொன்னார்கள் என்று உதவி கேட்கும் யாருக்கும் உதவுவதில்லை என்ற முடிவுக்கு வந்தோம். செய்ததை
சொல்லிக் காட்டுவதாக எண்ணாதீர்கள். ஆள் பெயர் போட்டால் தான் சொல்லிக் காட்டுவது
போல் ஆகும். இது மோசடியாளர்கள் பற்றியது.
இது சம்பந்தமாக ஓராண்டுக்கு முன்பும் இது பற்றி எழுதி
இருக்கிறோம். அவர்கள் எந்த இயக்கத்தைச் சார்ந்தவர்கள் என்று அடையாளம் காட்டவில்லை.
21-10-2019 அன்று மதியம் வந்த போனில் வணக்கம் என்று பேசிய மோகன் என்பவர் SDPI கட்சியிலிருந்து பேசுவதாகக் கூறினார்.
அடுத்து தவ்ஹீது ஜமாஅத்திலிருந்து பேசுவதாக சொல்லி இன்னொருவரிடம் கொடுத்தார். அவர் ராமநாதபுரம் தவ்ஹீது
ஜமாஅத் அலுவகத்திலிருந்து பேசுவதாகக் கூறினார்.
மேலப்பாளையத்தில்
ஒரு அமவுண்டு கொடுக்கணும் என்று உங்கள் நம்பர் கொடுத்து இருந்தோம் என்றார்.
இன்னொருவர் வாட்ஸப்பில் பேசி அனுப்புகிறோம் என்று சொல்லுங்கள் என்கிறார்.
S.P.
பட்டிணம் தாய் கன்சல்டன்ஸிக்குதான் விஸா கொடுத்ததாக கூறுகிறார். கீழக்கரையைச்
சார்ந்த பைரோஸ்கானிடம் பணம் கொடுத்ததாக கூறுகிறார்
மோகன்
என்பவர் காபிர் என்றாலும் முனாபிக் கிடையாது என்கிறார். இந்த குரல்களை வைத்து
உங்கள் கட்சிக்காரர்கள் என்றால் உங்களால் கண்டு பிடிக்க முடியும். இல்லை என்றால்
உங்கள் கட்சிப் பெயரை பயன்படுத்தி 91 96266 77366 என்ற நம்பரிலிருந்து பேசியவர்கள்
மீது நடவடிக்கை எடுங்கள்.
Comments