இதுவரை விழுந்துள்ள 13 குழந்தைகளில் 3 குழந்தைகள் மட்டுமே உயிரோடு மீட்கப்பட்டுள்ளார்கள்.


விழிப்புணர்வு இனியாவது ஏற்படுமா? கன்னித் தீவு கதையாகவே தொடருமா?
சுஜித் இறந்து விட்டான் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜஊன்
அல்லாஹ் அவனது இழப்பை ஈடு செய்வானாக. அவனது குடும்பத்தாருக்கு அழகிய பொறுமையை கொடுப்பானாக ஆமீன்.

இது போல் ஒரே விஷயத்தைக் கொண்டு  பலரை வழிகேட்டில் விட்டு  வழிகெடும்படியும் செய்து வழிகேட்டில் ஆழ்த்துகின்றான்; இதைக் கொண்டு பலரை நல்வழிப் படுத்தி நேர்வழி பெறும்படியும் செய்து நேர்வழியும் காட்டுகின்றான். கீழ்ப்படியாத குற்றம் புரியும் தீயவர்களான பாவிகளைத் தவிர (மற்றவர்களை) அவன் வழிகேட்டில் விடுவதில்லை. (2:26.  ஜான், பாகவி,  IFT தமிழாக்க தொகுப்பு)
https://mdfazlulilahi.blogspot.com/2019/10/13-3.html




திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் சோளக்காட்டில் ஆழ்துளை கிணற்றில் பிரிட்டோ ஆரோக்கியராஜ்-கலா மேரியின் 2 வயது குழந்தை சுஜித் வில்சன் தவறி விழுந்து இறந்து விட்டது. (இன்னாலில்லாஹி…)

தமிழக வரலாற்றில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் ஆழ்துளை கிணறுகளில் விழுந்த குழந்தைகள் இத்துடன் 13.

இதுபோன்று ஆழ்துளை கிணற்றில் தவறி விழும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. தமிழக அரசும், உபயோகம் இல்லாத ஆழ்துளை கிணறுகளை முறையாக மூடி வைக்க வேண்டும் என்று பலமுறை அறிவுறுத்தியும் எச்சரித்தும் வந்துள்ளது. ஆனாலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடரத்தான் செய்கிறன.

22-02-2009 அன்று தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுமி மாயி 30 மணிநேர போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்டு உயிரிழந்தார். (இன்னாலில்லாஹி…)

27-08-2009ல்  திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த  3 வயது சிறுவன் கோபிநாத் ஜனாஸாவாக - சடலமாக  மீட்கப்பட்டான். (இன்னாலில்லாஹி…)

08-09- 2011 திருநெல்வேலி விஜயநாராயணம் அருகில் உள்ள கைலாசநாதபுரம் 200 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் சுதர்சன் உயிரிழந்தார். (இன்னாலில்லாஹி…)

01-10-2012 கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகில் உள்ள மலைக்கிராமமான கும்பளத்தூரில் விவசாய நிலத்தில் ஆறரை அங்குல அகல அளவுக்கு ஆழ்துளை கிணற்றில் ஆனந்த்-பத்மா ஆகியவர்களின் 3 வயது குழந்தை குணா ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. 4 மணி நேர போராட்டத்துக்கு பின் காயங்களுடன் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

28-04-2013 கரூர் அருகில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமி முத்துலட்சுமி மீட்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகும் இறந்தாள்.

28-09-2013 திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகில் புலவன்பாடி கிராமம் ஆழ்துளைக் கிணற்றில் 4 வயது சிறுமி தேவி  விழுந்து இறந்தாள்.

05-04-2014 திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பக்கத்தில் உள்ள கிடாம்பாளையம் துரை - ஜெயலட்சுமி ஆகியவர்களின் ஒன்றரை வயது பையன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. 160 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணற்றில் 45 அடியில் சிக்கிய குழந்தை 24 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்திற்கு பின்னர் சடலமாக மீண்டது.

அதே நாளில் விழுப்புரம் பல்லகசேரி கிராமம் ஆழ்துளை கிணற்றில் மதுமிதா என்ற மூன்று வயது சிறுமி தவறி விழுந்து, பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டு மறுதினம் உயிரிழந்தாள்.

14-04-2014 நெல்லை சங்கரன்கோவில் அருகே 3 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 6 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டான். அல்ஹம்துலில்லாஹ்

இதற்கு மறுநாள்  15-04-2014ல் திருவண்ணாமலை கலசப்பாக்கம் அருகில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை ரோபோ இயந்திரம் மூலம் மீட்கும் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், 24 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அக்குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.
2014ல் மட்டும் நான்கு சம்பவங்கள் ஒரே மாதத்தில் நடந்துள்ளன.

13-04-2015 வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே 350 அடி ஆழ்துளை கிணற்றில் சிக்கிய இரண்டரை வயது குழந்தை உயிருடன் மீட்கப்பட்டு, பின்னர் உயிரிழந்தது.

2018
ல் நாகப்பட்டினம் ஆழ்துளை கிணற்றில் 15 அடி ஆழத்தில் சிக்கிய 2 வயது சிறுவன், உயிருடன் மீட்கப்பட்டான். அல்ஹம்துலில்லாஹ்

மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்திய இது போன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து வருகின்றன. பத்து சடலங்களை பார்த்த பின்னரும், ஆழ்துளை கிணறு தோண்டுபவர்கள் உரிய முறையில் மூடாமல் அலட்சியமாக விட்டுச் செல்கிறார்கள். இது குறித்த விழிப்புணர்வு இனியாவது ஏற்படுமா? கன்னித் தீவு கதையாகவே தொடருமா?

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு