2:9 யுகாதிஃஊன - வஞ்சிக்(கக் கருது)கின்றனர்/ஏமாற்ற நினைக்கின்றார்கள் - யஃக்தஊன - வஞ்சிக்க முடியாது/ ஏமாற்றிக் கொள்கின்றனர்.

திரு குர்ஆன் 2:9வது வசனத்தின் வார்த்தைக்கு வார்த்தை தமிழாக்கம்

https://mdfazlulilahi.blogspot.com/2019/10/29.html

يُخَادِعُونَ - யுகாதிஃஊன  -ஏமாற்ற நினைக்கின்றனர் -


اللّٰهَ -  அல்லாஹ்

 وَ - வ- இன்னும், மேலும், பின்னர், பின்பு, அன்றி   

الَّذِيْنَ -  ல்லதீ(ரீ)ன - சிலர்

 اٰمَنُوْا-   ஆமனுா -       நம்பிக்கை கொண்டார்கள்


وَ - வ- இன்னும், மேலும், பின்னர், பின்பு, அன்றி  




مَا -  மா- இல்லை

 يَخْدَعُوْنَ- யஃக்தஊனஏமாற்றிக் கொள்கின்றனர்


اِلَّاۤ- இல்லாாா  - தவிர

 اَنْفُسَ- அன்Fஸ தம்மைத் தாமே


هُمْ-  ஹும்- அவர்கள்

وَ - வ-

مَا -  மா- இல்லை


 يَشْعُرُوْنَؕ‏-யஷ்ஃஉரூ(ன)ன் - உணர்ந்து கொள்ளல்

தனித்தனியாக உள்ள வார்த்தைகளை இணைத்து படிப்போம்



2:9 يُخٰدِعُوْنَ اللّٰهَ وَالَّذِيْنَ اٰمَنُوْا ‌ۚ وَمَا يَخْدَعُوْنَ اِلَّاۤ اَنْفُسَهُمْ وَمَا يَشْعُرُوْنَؕ‏


யுகாதிஃஊனல்லாஹ  வ ல்லதீ(ரீ)ன ஆமனுா வ மா யஃக்தஊன இல்லாா அன்Fஸ ஹும் வமா யஷ்ஃஉரூ(ன)ன்.


தமிழாக்கங்கள் 9பதிப்புகளிலிருந்து

1. (அப்துல் ஹமீது பாகவி

அவர்கள் (இவ்விதம் கூறி) அல்லாஹ்வையும்நம்பிக்கை கொண்டவர்களையும் வஞ்சிக்(கக் கருது)கின்றனர். ஆனால்அவர்கள் தங்களையேயன்றி (பிறரை) வஞ்சிக்க முடியாது. (இதை) அவர்கள் உணர்ந்துகொள்ள மாட்டார்கள். 2:9.

2, 3 (அன்வாறுல் குர்ஆன் / டாக்டர். முஹம்மது ஜான் )

(இவ்வாறு கூறி) அவர்கள் அல்லாஹ்வையும்ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள் ஆனால் அவர்கள் (உண்மையில்) தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கிறார்களே தவிர வேறில்லைஎனினும் அவர்கள் (இதை) உணர்ந்து கொள்ளவில்லை. 2:9.

4. (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்)

(இப்படிக் கூறி) அவர்கள் அல்லாஹ்வையும்நம்பிக்கை கொண்டோரையும் ஏமாற்றுகின்றனர். ஆனால் (உண்மையில்) அவர்கள் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றனரேயன்றி வேறில்லை! எனினும் (இதனை) அவர்கள் உணர்வதில்லை  2:9.


5.  (சவூதி) 
அவர்கள் அல்லாஹ்வையும்விசுவாசங்கொண்டவர்களையும் வஞ்சிக்கின்றனர். (இதனால்) அவர்கள் தங்களைத்தாமே தவிர (வேறெவரையும்) வஞ்சிக்கவில்லை; (இதை) அவர்கள் உணர்ந்து கொள்ளவும் மாட்டார்கள். 2:9.


6.  (K.S. ரஹ்மதுல்லாஹ் இம்தாதி

அவர்கள்  அல்லாஹ்வையும்,  ஈமான்  கொண்டோரையும்  ஏமாற்ற  நினைக்கின்றார்கள்,  ஆனால்  அவர்கள்  (உண்மையில்)  தம்மைத்தாமே  ஏமாற்றிக்  கொள்கிறார்களே  தவிர  வேறில்லை,  எனினும்  அவர்கள்  (இதை)  உணர்ந்து   கொள்ளவில்லை  2:9.


7. (P.J) 

அல்லாஹ்வையும்நம்பிக்கை கொண்டோரையும் அவர்கள் ஏமாற்ற நினைக்கின்றனர். (உண்மையில்) தம்மைத் தாமே அவர்கள் ஏமாற்றிக் கொள்கின்றனர். அவர்கள் உணர்வதில்லை.2:9.


8. (பஷாரத்)

(நாவினால் மட்டுமே மொழிந்திடும் அந்நயவஞ்சகர்கள்) அல்லாஹ்வையும் அவனை  ஈமான் கொண்டிருப்பவர்களையும் ஏமாற்ற நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்களையே அல்லாமல் (வேறெவரையும்) ஏமாற்றவில்லை. அவர்கள் (இதனை) உணர்வதாக இல்லை. 2:9.



(மலிவு பதிப்பு)

.(இவ்வாறு கூறி) அல்லாஹ்வையும் (அவன் மீது நம்பிக்கை கொண்டோரையும் அவர்கள் ஏமாற்று(வதாக நினைக்கின்)றார்கள். ஆனால் (உண்மையில்) தம்மைத் தாமே தவிர  (வேறு எவரையும்) அவர்கள் ஏமாற்றவில்லை. எனினும் அவர்கள் (இதை) உணர்ந்து கொள்ளவில்லை. 2:9.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு