ததஜாவின் whats App செய்திகள்

  பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
  சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்..
مَنْ أَظْلَمُ مِمَّن مَّنَعَ مَسَاجِدَ اللّهِ أَن يُذْكَرَ فِيهَا اسْمُهُ وَسَعَى فِي خَرَابِهَا أُوْلَـئِكَ مَا كَانَ لَهُمْ أَن يَدْخُلُوهَا إِلاَّ خَآئِفِينَ لهُمْ فِي الدُّنْيَا خِزْيٌ وَلَهُمْ فِي الآخِرَةِ عَذَابٌ عَظِيم  
      இன்னும் அல்லாஹ்வுடைய பள்ளிவாசல்களில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள்,இவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவுதான்;மேலும் மறுமையில் இவர்களுக்கு கடுமையான வேதனையும் உண்டு.2:114.

     சகோதரர்களே!மேற்கண்ட வசனம் இறையில்லங்களைப் பாழாக்குவோர் பற்றியது.கடையநல்லூர் மக்கா நகரின் பொறுப்பாளர் அப்துல்காதர் என்பவர் whats Appல் ஒரு வீடியோ போட்டுள்ளார், அதில் கடையநல்லூர் மக்கா நகரில் ததஜாவிற்காக பள்ளிவாசல் இடம் வாங்கப்பட்டுள்ளது அதற்கும் அதில் செட்டு போடுவதற்கும் சேர்த்து சுமார் பதினைந்து லட்சம் செலவாகியுள்ளது அதில் ஒன்பது லட்சம் கடனாக கொடுக்க வேண்டியதுள்ளது.கடன் காரர்கள் கடுமையான நெருக்கடி கொடுக்கிறார்கள்.இதுவரை எழுபது ஆயிரம் கொடுக்கப்பட்டுள்ளது சகோதரர்களே இதற்காக உதவி செய்யுங்கள்என்று ஒப்பாரிவைத்துவிட்டு கோடைகால பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டதில் முப்பது ஆயிரம் செலவானது என்றும்,மாதம் பதினைந்தாயிரம் ஊதிய செலவுகள் இருக்கிறது அதற்கு ஒரு சகோதரர் ஏற்பாடு செய்கிறேன் என்று சொன்னார் அவர் யாரென்று தெரியவில்லை இந்த பதிவின் மூலம் பார்க்கும் அந்த சகோதரர் தகவல் தரவும் என்று பேசியுள்ளார்.

         நமக்கு சில சந்தேகங்கள்.

      சைபுல்லாஹ் ஹாஜா என்பவருடன் ஒன்றாக இருக்கும்போது மக்காநகரில் ஒரு பள்ளிவாசல் கட்டிக்கொடுக்கப்பட்டதே அந்த பள்ளியின் நிலையோ ததஜாவினரால் பாழாக்கப்பட்டது.அது மிகப்பெரிய குற்றங்கள்  நடக்கும் கூடமாக இருப்பதை கடையநல்லூர் மக்கள் நன்றாக தெரிந்திருக்கிறார்கள்.இந்த பள்ளியை பாழாக்கிவிட்டு வேறொரு இடத்தை வாங்கியிருக்கிறார்கள்.அநியாயமாக இந்த செயலை செய்துவிட்டு இப்போது கடன் இருக்கிறது என்று மக்களிடம் கேட்டால் இறைவன்தான் ஏற்றுக்கொள்வானா?என்ன கொள்கையப்பா இது! அல்லாஹ் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்ற அச்சம் கூட இல்லையா? ஏற்கனவே கட்டப்பட்ட அந்தப் பள்ளியின் நிலையை அட்டாச் பைலில் பார்க்கவும்.

     ஒன்பது லட்சம் கடன் உள்ளது எழுபது ஆயிரம் கொடுக்கப்பட்டுள்ளது என்று சொல்லும் அவர் கோடைகால பயிற்சிக்கு முப்பது ஆயிரம் செலவு செய்தது ஏன்?இந்த முப்பது ஆயிரம் ரூபாயைக் கொடுத்து கடனுக்கான தொகையை குறைக்கலாமே!இந்த முப்பது ஆயிரம் பள்ளிவாசலுக்காக வசூல் செய்யப்பட்டது எதற்காக வசூல் செய்யப்பட்டதோ அதற்காகத்தான் செலவு செய்யவேண்டும் என்று அவரே பதிவு செய்திருக்கிறார்.அதற்கு செலவு செய்யாமல் வேறொன்றுக்கு செலவு செய்தது எந்த வகையில் நியாயம்?பாவம் இவர் என்ன செய்வார் இவரின் தலைமையே பள்ளிக்கென்று வசூல் செய்துவிட்டு தன்னுடைய சொத்தாக பத்திரம் போடுபவர்கள்தானே.   கோடைகால பயிற்சி வகுப்பிற்காக நபர் ஒன்றுக்கு இருநூறு ரூபாய் வாங்கினீர்களே அதன் நிலை என்ன? எத்தனை மாணவர்கள் கோடைகால பயிற்சி வகுப்பில் படித்தார்கள்? இதற்காக முப்பது ஆயிரம் எப்படி செலவானது?கடன் வாங்கினால் பதினைந்து நாட்களுக்குள் கொடுக்கவேண்டும் அப்படி இருந்தால்தான் கடனே வாங்கவேண்டும் என்ற உங்களின் தலைமை உத்தரவு உங்களுக்குப் பொருந்தாதா? ஏற்கனவே கட்டப்பட்டிருக்கும் பள்ளிக்கு உயிர் கொடுத்தால் இந்த சிரமம் இருக்காதல்லவா? அந்த பள்ளியை புறக்கணித்ததால் அல்லாஹ்வே உங்களுக்கு கொடுத்த தண்டனையாக இருக்கலாமல்லவா? கட்டப்பட்ட பள்ளியை புறக்கணித்ததின் நோக்கம் என்ன? இந்த கேள்விகளெல்லாம் உங்கள் சகாக்கள் உங்களிடம் கேட்கமாட்டார்கள் என்ற எண்ணத்தில் இந்த தவறுகளை நடத்துகிறீர்களா? மாதா மாதம் பதினைந்து ஆயிரம் ருபாய் செலவாகிறது இதற்காக ஒரு சகோதரர் தருகிறேன் என்று சொன்னார் அவர் யாரென்று தெரியவில்லை இந்த வீடியோவை பார்த்தாரானால் தொடர்புகொள்ளவும் என்று ஒருபொருப்பில் உள்ளவர் சொல்வதற்கு வெட்கப்படவேண்டும்.தன்னை சந்தித்த நபரிடம் நீங்கள் யார்? செல் நம்பர் இருந்தால் கொடுங்கள் என்று எல்லாமே பதிவேட்டில் இருக்கவேண்டாமா? இதை ஒரு நிர்வாகி இப்படி பேசலாமா?   நிர்வாகமே இப்படி இருந்தால் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை சகோதரர்களே புரிந்துகொள்ளுங்கள். அல்லாஹ்வே போதுமானவன்.

                        இப்படிக்கு
                காதிர் கனி எம் ஐ எஸ் சி                                       

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு