பாதிக்கப்படவனின் பிரார்த்தனைக்கு அஞ்சிக் கொள்வோம்
குலில் ஹக்க வ லவ் கான முர்ரா
உண்மை அது கசப்பாக இருந்தாலும் சொல்லி விடுங்கள்.இது நபி மொழி
உண்மை அது கசப்பாக இருந்தாலும் சொல்லி விடுங்கள்.இது நபி மொழி
https://www.facebook.com/mohamed.khan.568847/posts/860742124016651:9
மேலப்பாளையத்திலுள்ள போலீ தவ்ஹீதிகளின் தலைவர் லுஹா தனது மகனுடன் பைக்கில் சென்று கொண்டிருந்த போது தலித சமுதாயத்தைச் சேர்ந்த கருப்பன் துறை யைச் சேர்ந்த முருகன் ஓட்டி வந்த குட்டியானை - அபே - வண்டி மேலப்பாளையம் சந்தை ஜங்ஷனில் வைத்து அவர் மீது மோதியதில் அவர் கீழே விழுந்தார். தலித் சகோதரர் வண்டியை நிறுத்தி பல தடவை மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அவரை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று தேவையான செலவையும் தானே செய்திருக்கிறார்.
காயம் பட்டவர் வீடு திரும்பிய பின் கூட்டம் கூடிவிட்ட நிலையில் லுஹாவின் மகனும் மற்றவர்களும் அந்த தலித்தை தேடிச் சென்று சரமாரியாக அடித்திருக்கின்றனர். அவரது ஸ்டாண்டில் இருந்தவர்கள் சேர்ந்து லுஹாவின் மகன் உள்ளிட்ட தாக்குதலில் ஈடுபட்ட மூவர் மீது புகார் அளித்துள்ளனர். மூவரையும் விசாரனைக்கு அழைத்து வருமாறு காவல் நிலையத்திலிருந்து செய்தி அனுப்பியுள்ளனர். உடனே ததஜவினர் மூவரையும் தமது கட்டுப்பாட்டிலுள்ள கட்டிடத்திற்குள் ஒளிந்த்து வைத்துள்ளனர், அங்கு வந்த போலீஸ் படை மூவரையும் விசாரனைக்கு அழைத்துள்ளது.
காவல் துணை ஆய்வாளர் ஷேக் அப்துல் காதிர் “ அவர் தான் வண்டியை நிறுத்தி, ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போய் செலவும் பண்ணிட்டாருல்ல பிறகு ஏன் போய் அடிச்சீங்க கேஸ் பதிவாயிருக்கு வந்திருங்க…” என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் நாங்க தர்ர பிரியாணியை சாப்பிட்டு எங்களுக்கு எதிராகவே பேசறயே என்று துணை ஆய்வாளைரை ஏசியிருக்கிறார். அவரது சட்டைய பிடிக்க ஒருவர் முயன்றிருக்கிறார்கள். மற்ற சிலர் போலீஸ் நாய்களே என்று கோஷமிட்டதாகவும் தகவல் காவல் துறை தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்திருக்கிறது. இது என்ன கட்டிடம் என்று போலீஸ் விசாரிக்க இது கம்ப்யூட்டர் செண்டர் என பக்கத்திலிருப்பவர்கள் கூறியிருக்கிறார்கள். உள்ளே நுழைந்த காவல்துறையினர் மூவரையும் இழுத்துச் சென்றிருக்கிறார்கள். இதையே காவல் துறை புனித பள்ளிவாசலுக்குள் பூட்ஸ்காலுடன் சென்றதாக இப்போது பிரச்சாரம் செய்கிறார்கள்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் எப்போது பள்ளிவாசலுக்குள் ஒளிந்து கொண்டாலும் என்ன நடக்குமோ அது தான் இப்போதும் நடந்திருக்கிறது.
இந்த விவகாரத்தில் நியாயமின்றி தலித இளைஞனை கடுமையாக தாக்கியவர்கள் நல்லவர்களா? முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட நிலையில் தமது கட்டிடத்திற்குள் ஒளிந்து கொண்டு பள்ளிவாசல் என்ற போர்வையில் தப்பித்துக் கொள்பவர்கள் உத்தமர்களா?
காவல் துறை உள்ளே நுழைந்ததையே கண்டிக்கிறவர்கள் காவல் துறை உள்ளே நுழைகிற அளவுக்கு நடந்தது என்ன என்பதை வெளியிட்டார்களா?
முதலில் இதற்கான காரணத்தை ஆராயந்து ஒரு சுமூக சூழ்நிலைக்கு ஒத்துழைக்க வேண்டிய இஸ்லாமிய பெயர் சூடிய அமைப்புக்கள் ஒரு தரப்பாக முடிவெடுத்து போலி தவ்ஹீத் அமைப்புக்கு ஆதரவாக – காவல்துறைக்கு எதிராக களத்தில் இறங்கி இருப்பது சற்றும் நியாயமற்றது,
எஸ் டி பி ஐ உள்ளிட்ட அமைப்ப்புக்கள் ஒன்று கூடி களத்தில் இறங்கியிருப்பதை “ எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதை நிரூபித்து விட்டன் என்றார் மேலப்பாளையத்தைச் சேர்ந்த ஒரு மூத்த ஆலிம்.
புனித பள்ளிவாசலுக்குள் பூட்ஸ்கால்களுடன் போலீஸ் நுழைந்து விட்டதாக கதறும் ததஜவினர் ஒருபோதாவது பள்ளிவாசல்களை புனிதமாக கருதியிருக்கிறார்களா என்ற கேள்வியை சமுதாயம் இப்போதாதாவது கேட்க வேண்டாமா?
சமீபத்தில் மேலப்பாளையத்தில் அனைத்து முஸ்லிம்களும் ஒன்று திரண்டு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தாங்கள் கலந்து கொள்ள முடியாது என ததஜவினர் ஒதுங்கிக் கொண்டதை மேலப்ப்பாளையத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புக்கள் மறந்ததென்ன? முஸ்லிம்களில் தாம் ஒரு குழு அல்ல என அவர்களே பிரகடணப்படுத்திக் கொண்டதாகத் தானே பொருள்.
இப்போது ததஜவின் கட்டிடத்தை பள்ளிவாசல் என்றும் – காவல்துறையின் நடவடிக்கையை அத்துமீறல் என்று முஸ்லிம் பெயர் சூடிய அமைப்புக்கள் வர்ணிப்பது நியாயமற்ற முரண்பாடு அல்லவா?
முஸ்லிம் சமூகம நீதி நடைமுறையை கடைபிடிக்கத் தவறுகளுக்கு துணை போனதாக வரலாறு கிடையாது. இப்போது மேலப்பாளையத்திலும் அப்படி ஒரு வரலாறு ஏற்பட்டு விடக் கூடாது. அது ஆபத்தான பின் விளைவுகளை ஏற்படுத்தி விடும்.
ததஜ் அமைப்பு இப்போதைய ஆளும் கட்சியுடன் நெருக்கமாக இருப்பதாலும். அவர்களது அமைப்பு பிரமுகர்கள் எங்களுக்கு ஓபிஎஸ் நெருக்கம் என்று சொல்லிக் கொள்வதையும் கண்டு ஒரு வகை மறைமுக அச்சத்திற்கு ஆட்பட்டு எஸ்டிபிஐ உள்ளிட்ட அமைப்புக்கள் ததஜாவுக்கு சார்பாக இப்போது களத்தில் இறங்கியிருக்கலாம்.
ஆனால் முஸ்லிம் சமூகமும் ஜமாத் அமைப்புக்களும் ஒரு போதும் சமூக விரோதிகளை கண்டு பயப்படாது, அவர்களுக்கு சார்பாக பேசாது. இப்போதும் மேலப்பாளையத்தில் உள்ள ஜமாத்துக்கள் இதற்கு ஆதாரவு தெரிவிக்காத்தது சற்றே ஆறுதல் அளிக்கிற விசயம்
அங்குள்ள ஆலிம்கள் என்ன செய்கிறார்கள் என்பது தான் கேள்விக்குரிய சமாச்சாரம்?
மேடை போடுவதில் மட்டும் தான் ததஜவுக்கு எங்களால் எதிர்ப்புத் தெரிவிக்க முடியும் என –
அவர்களது சமூக விரோத செயல்களால் – சமூகத்தில் பாதிப்புக்கள் ஏற்படும் என்றால் அதற்காகவெல்லாம் எங்களால் யோசிக்க முடியாது என்று சொல்லிவிடுவார்கள் எனில்? அல்லது நமக்கு எதற்கு வம்பு, அதை வேலையில்லாத சிலர் பார்த்துக் கொள்வார்க என காரியமாக சிந்திப்பார்கள் எனில் எதிர்கால தலைமுறையின் வரலாறு கவலைக்குரியது தான்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நேற்று(01.06.2015) மாலை நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த டிஎன்டிஜேயின் மாநில மேலாண்மைக்குழு தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் மீது வேகமாக வந்த லோடு ஆட்டோ ஒன்று மோதியது. அதில் ஷம்சுல்லுஹா அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக சம்பவம் நடந்த இடத்தில் கூட்டம் கூடி விட்டது. இதைக் கேள்விப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த மேலப்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஷேக் நிதானமாக நடந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்கு பதிலாக எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதைப் போல கடும் சொற்களில் கூடியிருந்த மக்களைக் காய்ச்சியெடுத்தார்.
அவரது வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மண்டை உடைந்து இரத்தம் வந்துகொண்டிருக்கிறது கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் பேசுகிறீர்களே என்று கேட்டதற்கு என்னையை எதிர்த்துப் பேசுகிறீர்களா உங்களை என்ன செய்கிறேன் பாருங்கள் என்று கூறிவிட்டு தன்னை தவ்ஹீத் ஜமாஅத் மக்கள் அடித்துவிட்டதாக பொய்யான தகவலை மேலதிகாரிகளுக்கு கொடுத்து தன்னைக் காப்பாற்ற வருமாறு நீலிக்கண்ணீர் வடித்துள்ளார்.
செய்தியைக் கேட்டு AC மதன் நாயர் தலைமையில் மேலப்பாளையம் வந்த போலீஸ் படை எவ்வித விசாரணையும் தேவையும் இன்றி மஸ்ஜிதுல் ரஹ்மான் பள்ளிவாசலுக்குள் நுழைந்து அதிலும் அதன் புனிதத்தைக் கெடுத்து இழிவுபடுத்தும் விதமாக பூட்ஸ் கால்களோடு காட்டுமிராண்டித் தனமாக நுழைந்து பள்ளியில் தொழுகைக்காக வந்திருந்த பொதுமக்கள் மீது கண்மூடித் தனமான தாக்குதலில் ஈடுபட்டனர். அங்கிருந்த நமது நிர்வாகிகள் சிலரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
செய்தியை கேட்டு கொதித்தெழுந்த முஸ்லிம்கள் இறையில்லம் இழிவுபடுத்தப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இரவென்றும் பாராமல் பெண்களும் பள்ளிக்கு முன்னால் திரண்டனர்.
அத்துமீறிய காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அநியாயமாக கைது செய்யப்பட்ட எங்கள் மக்கள் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோஷத்தோடு குழுமினர்.
எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாத வரை இங்கிருந்து நகரமாட்டோம் என சூளுரைத்து நின்றனர்.
உணர்ச்சிக் கொந்தளிப்பின் உச்சியில் இருக்கும் மக்களைப் பார்த்த காவல்துறையினருக்கு நமது கோரிக்கையை ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை உருவானது.
எனவே கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக காவல்துறை விடுதலை செய்தது.
மேலும் ஒருவாரத்திற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதாக உயரதிகாரிகள் வாக்குறுதியளித்தனர்.
இதை இப்போது ஏற்றுக்கொண்டாலும் அதிகாரிகள் கூறியதைப் போல ஒருவார காலத்திற்குள் உரிய நடவடிக்கை இல்லையென்றால் தமிழகம் தாங்காத அளவிற்கு போராட்டம் வெடிக்கும் என்று ஜமாஅத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இறைவனின் ஆலயத்தை இழிவுபடுத்தியவர்களை எதிர்கொள்ள எந்த விலைகளையும் கொடுக்க நாங்கள் தயங்கமாட்டோம்.
அரசுக்கு பெரிய ஆபத்தில்லாத வகையில் இதுவரை நாங்கள் நடத்தி வந்த போராட்ட வழிமுறைகளையும் அல்லாஹ்வின் ஆலயத்திற்காக மாற்றியமைப்போம் என்று ஜமாஅத் அறிவித்துள்ளது.
இவண்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்
Comments