‪வன்முறைகள்_தீர்வுகளைத்_தராது‬! எம். தமிமுன் அன்சாரியின் பொறுப்பான அறிக்கை


‪#‎வன்முறைகள்_தீர்வுகளைத்_தராது‬ஆம்பூரில் மமக சட்டமன்ற குழு தலைவரும், ராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினர் , பேராசிரியர் Dr M.H.ஜவாஹிருல்லா ஆய்வு  உடன்
ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா, மமக மாநில அமைப்பு செயலாளர். 
நாசர்  உமரி. ம.ம.க மாவட்ட செயலாளர் அப்துல் ஷூகூர்.  த.மு.மு.க மாவட்ட செயலாளர்  VR.நசீர் ஆஹமத். ஆகியோர் உடன் இருந்தனர்.
ஆம்பூரில் அப்பாவி இளைஞர் ஷமீல், மார்ட்டின் என்ற காவல்துறை அதிகாரியால் அநியாயமான முறையில் தாக்கப்பட்டு மரணம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது கவலையளிக்கிறது.

இவை அனைத்திற்கும் காவல்துறை தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும். அவர்களது வரம்பு மீறலாலும், கவனக் குறைவாலும் ஆம்பூரின் அமைதி கெட்டிருக்கிறது.


பொதுமக்களின் கோபத்தைப் பயன்படுத்தி சமூக விரோதிகள் வன்முறையில் ஈடுபட்டதை ஏற்கவே முடியாது. பேருந்துகளை உடைத்தது, ஆம்புலன்ஸை சேதப்படுத்தியது, பொதுச் சொத்துக்களைத் தாக்கியது உள்ளிட்ட அனைத்தும் கண்டிக்கத்தக்கது.


இந்த வன்முறைகளை, ‘தானாகத் திரண்ட மக்களின் எழுச்சி’ என சிலர் சமூக இணையதளங்களில் கருத்து தெரிவிப்பது நியாயமற்றது.


எனது மகள் பாத்திமாவே திருடினாலும் அவரது கையை வெட்டுவேன் என நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பிரகடனம் செய்துள்ளார்கள். எனவே தவறு யார் செய்தாலும் அதைக் கண்டிப்பதுதான் நீதியாகும்.


சிலசமயம் தனி நபர்கள் செய்யும் வன்முறைகள் அவர்கள் சார்ந்த சமூகத்தையே பாதிப்புக்குள்ளாக்கி விடும் என்பதை மறந்துவிடக் கூடாது.


கடந்தாண்டு எஸ்.பி.பட்டினத்தில் காவல் நிலைய மரணம் நடைபெற்ற போது, ஜனநாயக வழியில் போராடியதால் தான் உரிய நீதியைப் பெற முடிந்தது என்பதை மறந்துவிடக் கூடாது.


பதட்டமான அந்த இரவில் ஆம்பூரின் மமக சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா தலைமையில் ஒரு குழு நிதானமாக செயல்பட்டு, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்கள். இல்லையெனில் நிலைமை விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தி இருக்கும்.


தற்போது நிலைமையை நேரில் கண்டறியவும் அடுத்தக்கட்ட நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தவும் மமகவின் சட்டமன்ற குழுத் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள் ஆம்பூர் சென்றுள்ளார்.


தமுமுக தலையிட்டதன் காரணமாக அன்று இரவு நடைபெற்ற சரமாரியான கைதுகள் நிறுத்தப்பட்டு 150க்கும் மேற்பட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். மேலும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்களில் அப்பாவிகளை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


தற்போது ஆம்பூர் அமைதியாக உள்ளது. இச்சூழலில் பதட்டமான செய்திகளைப் பரப்பும் வேலைகளை யாரும் செய்ய வேண்டாம். காவல்துறையை வரம்பு மீறி தரக்குறைவாக விமர்சித்தும் எழுத வேண்டாம்.


நேர்மையான முறையில், ஜனநாயக வழியில் பிரச்சனைகளை எதிர்கொள்வது தான் அனைவருக்கும் நல்லது. இது புனிதமிக்க ரமலான் மாதம். நமது உயரிய பண்புகள் மூலம் முன்னுதாரணமாகத் திகழவேண்டும் என்பதை நினைவில் கொள்வோம்.

எம். தமிமுன் அன்சாரி
பொதுச் செயலாளர்
மனிதநேய மக்கள் கட்சி
29.06.2015 
நன்றி
https://www.facebook.com/profile.php?id=100010066050893
குற்றவாளிகள் என்று தெரிந்த பின் அவர்களுக்காக வாதாடக் கூடாது என்பது  அல்லாஹ்வின் கட்டளையாகும்.

(துாதரே) அல்லாஹ் உமக்குக் காட்டி தரும் அடிப்படையில் மக்கள் மத்தியில் நீர் தீர்ப்பு வழங்குவதற்காக உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை உமக்கு நாம் அருளினோம். மோசடி செய்வோருக்கு வாதிடுபவராக நீர் ஆகி விடாதீர்.
                                                                                                             அல்குர்ஆன் 4:105

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.