மஸ்ஜிதுர்றஹ்மானை பாழ் படுத்தும் வண்ணம் யார் நடந்து கொண்டார்களோ அவர்களை யா அல்லாஹ் நீ நாசமாக்குவாயாக!
1.6.15
அன்று மாலை மேலப்பாளையம் ஜெயக்குமார் ஆஸ்பத்திரி அருகில் முருகேசன் என்பவர் குட்டி யானை அல்லது தொட்டி ஆட்டோ எனும் வாகனத்தை ஓட்டிச் சென்றார். அப்பொழுது முறையற்று இடது புறமாக நுழைந்த இருவருடன் வந்த இரு சக்கர வாகனம் ஒன்று முருகேசன் வாகனத்தின் மீது முட்டி மோதி கீழே விழுந்தது.
உடனே வாகனத்தை நிறுத்தி இறங்கிய முருகேசன் காயம்பட்டவரை துாக்கி இருக்கிறார். அவர் லுஹா என்று முருகேசனுக்கு தெரிந்தது. முருகேசனையும் ஏற்கனவே லுஹாவுக்கும் தெரியும். முருகேசன் மேலப்பாளையம் முஸ்லிம்களிடம் வேலை செய்து இருப்பவர். குறிப்பாக ஆரா என்ற ஜவுளிக்கடல் ஓனரிடமும் வேலை செய்தவர். தண்ணி அடித்திருக்கவில்லை.
காயம்பட்டவர் லுஹா என்று தெரிந்த முருகேசன் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஜெயக்குமார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் இருக்கிறார். மேலப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் வந்துள்ளது. தவ்ஹீது இயக்கத்தைச் சார்ந்தவர் ஆக்ஸிடண்ட் ஆகிவிட்டார் என்று மட்டும் சொல்லி போனை வைத்து விட்டார்கள்.
மேலப்பாளையம் போலீஸ் கண்ரோலுக்கு தகவல் சொல்ல ஒயர்லெஸ்ஸில் செய்தி ஒலிபரப்பானது. மேலப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் தேவையான போலீஸ் இல்லை. அப்பொழுது ஏ.ஸி. மாதவன் நாயர் நான்குநேரியில் இருந்துள்ளார். பாளையங்கோட்டைக்கு தகவல் சொல்லி மேலப்பாளையம் வரச் செய்துள்ளார்.
மேலப்பாளையம் வந்த அதிகாரிகள் கொடுத்த தகவலை ஏற்று நான்குநேரியில் இருந்து ஏ.ஸி. மாதவன் நாயர் வந்துள்ளார். வரும் வழியில் டக்கம்மாள்புரத்தில் நின்ற 2 போலீஸ் வேன்களையும் உடன் அழைத்து வந்துள்ளார்.
ஜெயக்குமார் ஆஸ்பத்திரியில் லுஹாவுடன் நின்ற முருகேசன் வண்டி ரோட்டில் நிற்கிறதே ஓரமாக விட்டு விட்டு வருவோம் என்று வெளியில் வந்து இருக்கிறார். அங்கே த.த.ஜ. நிர்வாகிகள் கூடி நின்று இருக்கிறார்கள். எப்படி கூடி இருப்பார்கள் சிந்தித்து கொள்ளுங்கள்.
முருகேசனைக் கண்டதும் லுஹா மகன் உஸாமா இவன்தான் டிரைவர் என காட்டி இருக்கிறார். அங்கே கூடி நின்ற த.த.ஜ. நிர்வாகிகள் கண்டபடி டிரைவர் முருகேசனை அடித்து இருக்கிறார்கள். அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் சரமாரி அடி வாங்கும் முருகேசனை த.த.ஜ. நிர்வாகிகளிடமிருந்து காப்பாற்றும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
என்னை காப்பாற்றும் வேலையை போலீஸார் செய்திருக்கா விட்டால் நான் கொல்லப்பட்டிருப்பேன்.
இந்து முஸ்லிம் கலவரம் ஆகி விடுமோ என்று பயந்தேன். எனது தப்பு இல்லை குறுக்கே
வந்து விழுந்தது அவர்கள்தான். அப்படி இருக்க என்னை ஏன் அடித்தார்கள் என்று
கேட்டுள்ளார் முருகேசன்.
முருகேசனை அடித்த த.த.ஜ. நிர்வாகிகளிடமிருந்து காப்பாற்றும் பணியை போலீஸார் ஈடுபட்டிருக்கா
விட்டால் அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள இந்து டிரைவர்கள் வந்து
இருப்பார்கள். இந்து முஸ்லிம் கலவரமாக மாறி இருக்கும். இந்து முஸ்லிம் கலவரம்
வராமல் காப்பாற்றியது காவல் துறை செய்த பெரிய சேவை என்றும் சம்ப இடத்தின் அருகில்
உள்ளவர்கள் கூறினார்கள்.
”பத்தாயிரம் ரூபாய் கொடு உன்னை இந்த வழக்கிலிருந்து விடுவித்து
விடுகிறேன்” என்றார் சப்-இன்ஸ்பெக்டர் காசிப்பாண்டியன் மவ்லவி ஷம்சுல்லுஹா சிறைப் பேட்டி.
இவ்வாறு 1997 செப்டம்பர் மாத உணர்வு இதழில் முதல் பக்கச் செய்தியாக வந்தது. அதைத்தான் ஆரம்பத்தில் பார்க்கிறீர்கள்.
உணர்வு
எடிட்டர் யார்? இறைநேசன். ஆசிரியர் இறைநேசன். யார்? பி.ஜே. ஆக பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களை ஆசிரியராகவும் பப்ளிஷராகவும் கொண்டு
வெளியான உணர்வில் வந்த இந்த செய்தி பொய்யானது.. சப்-இன்ஸ்பெக்டர் காசிப்பாண்டியன் ”பத்தாயிரம்
ரூபாய் கொடு உன்னை இந்த வழக்கிலிருந்து விடுவித்து விடுகிறேன்” என்றார் என்பதை அல்லாஹ்வின்
மீது ஆணையிட்டு மறுக்கிறேன்.
முதலில் இதை உண்மை என்று நம்பி பரப்பியவர்களில் நானும் ஒருவன். இது இட்டுக்கட்டி எழுதப்பட்ட செய்தி என்ற உண்மையை லுஹாவுக்கும் பி.ஜே.க்கும் பிரச்சனை ஏற்பட்ட 2002 மார்ச்சில்தான் லுஹா என்னிடம் ஒப்புக் கொண்டார்.
முதலில் இதை உண்மை என்று நம்பி பரப்பியவர்களில் நானும் ஒருவன். இது இட்டுக்கட்டி எழுதப்பட்ட செய்தி என்ற உண்மையை லுஹாவுக்கும் பி.ஜே.க்கும் பிரச்சனை ஏற்பட்ட 2002 மார்ச்சில்தான் லுஹா என்னிடம் ஒப்புக் கொண்டார்.
மைக் மாவீரர்களை என்றைக்குமே கடுமையாக
விமர்சிப்பவன் நான். கூட்டத்தைக் கண்டதும் வீரம் பேசுவதும் பிரச்சனை வந்ததும்
ஓடி ஒளிவதும்தான் மைக் மாவீரர்கள் வரலாறு. மைக் மாவீரர்களால்தான் நாட்டில் பல இந்து முஸ்லிம் கலவரங்கள் நடந்துள்ளன.
16.12.1997 அன்று லுஹாவுக்கு எழுதிய கடிதத்தின்
5 ஆவது பக்கத்தி்ல் அவரது வீர உரையை நினைவுபடுத்தி உள்ளேன். அந்த கடிதம் எழுதும்போது
இன்ஸ்பெக்டர் காசிப்பாண்டியன் ”பத்தாயிரம் ரூபாய் கொடு உன்னை இந்த வழக்கிலிருந்து விடுவித்து
விடுகிறேன்” என்றார் என்பதை நம்பி இருந்தேன்.
என்னால் மைக் மாவீரர் என விமர்சிக்கப்பட்டவர்களில் ஒருவர் தனது
97ஆவது வயதில் 1.6.2015 அன்று இறந்து விட்டார். 1947 இந்தியா சுதந்திரம் அடைந்த தினத்தன்று.
இந்த மைக் மாவீரர் ஆற்றிய உரையை கேட்டு மேலப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள பஞ்சாயத்து
(இன்று ஆஸ்பத்திரி) முன் கூடினார்கள்.
சுதந்திர கொடி ஏற்றக் கூடாது என களத்தில் நின்றவர்களில்
11பேர் சுடப்பட்டார்கள். சம்பவ இடத்திலேயே இருவர் இறந்தார்கள். மைக் மாவீரர் ஓடி ஒளிந்து
கொண்டார்.
அவர் இறந்த அன்றுதான் காவல்துறையே சட்டையை கழட்டி விட்டு வா
எங்கள் ஆட்களை அனுப்புகிறேன் என்ற வீர உரை மைக்கில் ஒலித்தது.
முருகேசனை அடித்தவர்கள் ஏன் பள்ளிக்குள் ஓடி ஒளிகிறார்கள். அவரவர்கள் வீட்டுக்கு போக வேண்டியதுதானே. அவரவர்கள் வீட்டுக்கு போயிருந்தால் நாங்கள் ஏன் பள்ளிவாசலுக்குள் போகிறோம். அவரவர்கள் வீட்டுக்கு போய் பிடித்து இருப்போம். இதுதான் காவல்துறை பதிலாக உள்ளது.
முருகேசனை அடித்தவர்கள் ஏன் பள்ளிக்குள் ஓடி ஒளிகிறார்கள். அவரவர்கள் வீட்டுக்கு போக வேண்டியதுதானே. அவரவர்கள் வீட்டுக்கு போயிருந்தால் நாங்கள் ஏன் பள்ளிவாசலுக்குள் போகிறோம். அவரவர்கள் வீட்டுக்கு போய் பிடித்து இருப்போம். இதுதான் காவல்துறை பதிலாக உள்ளது.
காலம் பொன் போன்றது என்பார்கள். காலத்தின் மீது சத்தியமாக என்கிறான்
அல்லாஹ். மக்களின் பணமும் பொருளும் காலமும் உண்மை வழியில் செலவு செய்யப்பட்டால் அல்லாஹ்விடம்
நன்மை கிடைக்கும். பொய்யை நிலை நாட்ட முயன்றால் மறுமையில் நஷ்டமே.
செருப்பு போட்டுக் கொண்டு தொழலாம் என்ற கொள்கை உடையவர்கள் பூட்ஸ்
கால் பெயரில் அனுதாபம் தேடுகிறார்கள். கஃபாவிலே பூட்ஸ் காலுடன் வலம் வந்த மன்னர்களின்
போட்டோக்களை சிலர் வெளியிட்டிருந்தனர். அந்த மன்னர்களுக்கு எதிராக போராடுவார்களா? என
சிலர் கேட்டிருந்தனர்.
பள்ளியை பாழ் படுத்தும் வண்ணம் எவன் பள்ளிக்குள் வெறும் காலுடன்
நுழைந்திருந்தாலும், அவனை அல்லாஹ் நாசாமாக்குவானாக!
பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் என்றென்றும் உண்டாகட்டுமாக. இதில் யார் வரம்பு மீறி உள்ளார்களோ அவர்களை யா அல்லாஹ் நீ நாசமாக்குவாயாக!
மஸ்ஜிதுர்றஹ்மானை பாழ் படுத்தும் வண்ணம் யார் நடந்து கொண்டார்களோ அவர்களை யா அல்லாஹ் நீ நாசமாக்குவாயாக!
அவர்கள் மீது உன் சாபத்தை இறக்குவாயாக! விரைவில் சரியான பாடம் புகட்டுவாயாக! என்று துஆச் செய்ய வேண்டுகிறோம்.
மஸ்ஜிதுர்றஹ்மானை பாழ் படுத்தும் வண்ணம் யார் நடந்து கொண்டார்களோ அவர்களை யா அல்லாஹ் நீ நாசமாக்குவாயாக!
அவர்கள் மீது உன் சாபத்தை இறக்குவாயாக! விரைவில் சரியான பாடம் புகட்டுவாயாக! என்று துஆச் செய்ய வேண்டுகிறோம்.
Comments