தேர்தலுக்காக கொடிதூக்கத்தான் போகிறார்கள் அதற்கான ஒத்திகைதான்.

       பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

           அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.....

           மேலப்பாளையத்தில் நடந்தது என்ன?

   சகோதரர் ஷம்சுல்லுஹாவும்,லுஹாவுடைய  மகன் உஸாமாவும் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்கள்.வண்டியை உஸாமாதான் ஓட்டிவந்தார்.மேலப்பாளையம் ரவுண்டானாவில் வரும்போது லோடு ஆட்டோ லுஹாவின் வண்டியில் இடித்துவிட்டது லுஹா கீழே விழுந்துவிட்டார்.இந்த நிலையை அறிந்த லோடு ஆட்டோ ஓட்டுனர் முருகன் கீழே விழுந்துகிடந்த லுஹாவை தூக்கிக்கொண்டு அருகிலுள்ள ஜெயக்குமார் மருத்துவமனையில் சேர்த்து தனது மனிதாபிமானத்தைக் காட்டியுள்ளார்.இந்த ஓட்டுனர் குமார் என்பவர் லுஹாவுக்கு மிகவும் தெரிந்தவர்.லுஹாவுக்கு அருகில் இருந்த ஓட்டுனர் தன்னுடைய வண்டி ரோட்டில் இடையூறாக இருப்பதால் வண்டியை ஓரங்கட்டிவிட்டு வருவோம் என்று மருத்துவமனையின் வெளியில் வந்துள்ளார்.இவரைப் பார்த்த உஸாமா இவன்தான் என்னுடைய வண்டியில் மோதினார் என்று அங்கு கூடியிருந்தவர்களிடம் சொல்ல இஸ்லாம் ஓர் இனியமார்க்கத்தின் சொந்தங்களான ததஜா கூட்டம் அந்த மாற்றுமத சகோதரர் முருகனை அடித்து துவம்சம் செய்து தன்னுடைய மனிதாபிமானத்தைக் காட்டியுள்ளது.

     அடித்ததில் காயம்பட்ட அந்த மாற்றுமத சகோதரர் குறிப்பிட்ட நபர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க இதுவிசயம் தெரிந்து ஏற்கனவே அங்குவந்த ஏ.சி.மாதவன்நாயர் உள்பட காவலர்கள் சூழ குற்றவாளிகள் பதுங்கியிருக்கும் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலின் அலுவலகத்திற்கு செல்லும்போது வாயிலின் கேட்டை இழுத்துப்  பூட்டிவிட்டார்கள்.வெளியிலிருந்த காவல்துறை எவ்வளவோ கேட்டுப்பார்த்தும் திறக்காததால் சத்தம் போட்டுள்ளார்கள்.அலுவலகத்தின் உள்ளே இருக்கும் ததஜாவினர் காவல்துறையைப் பார்த்து வருடம் தோறும் நாங்கள் பலலட்சத்திற்கு பிரியாணி ஆக்கிப்போட்டு உங்களுக்குத் தந்தோமே தின்னீர்களே அதற்கு இதுதான் நன்றிக்கடனா என்று நாகூசும் வார்த்தைகளால் அர்ச்சனை செய்துள்ளார்கள்.கதவை திறக்க மறுத்ததின் காரணமாக செய்யது அலி என்றோ முஹையதீன் என்றோ தெரியவில்லை காவல்துறை அவரின் மண்டையில் அடிக்க கதவு திறக்கப்பட்டது திறந்ததும் ததஜாவினர் செருப்புக் காலோடு பள்ளிக்குள் ஓடி ஒளிந்துகொண்டார்கள்.காவல்துறை அலுவலகத்திற்குள் நுழைந்து உஸாமா உள்பட குற்றவாளிகளை வெளியே இழுத்துவந்து கடுமையாக தாக்கி கைது செய்தார்கள். ஆக காவல்துறை பூட்ஸ் காலோடு போனது பள்ளிக்குள் இல்லை அந்த பள்ளியின் ஆபீசுக்குள்தான் சென்றார்கள்.பள்ளிக்குள் செருப்புக்காலோடு சென்றது ததஜா சகோதரர்கள்தான்.மேற்படி ததஜாவினர் போலீஸை அடித்ததாகவோ,போலீஸ் என்னை அடித்துவிட்டார்கள் என்று உயர் அதிகாரியிடம் தகவல் சொன்னதாகவோ வந்த செய்திகள் உறுதியற்றவை இதுதான் நடந்தது இதற்காக ததஜாவினர் காவிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறான் என்று என்னை சொன்னாலும் சொல்லுவார்கள்.உண்மையை தெரிவிக்கின்றேன்.என்று சம்பவம் நடந்த அன்று நேரடியாக பார்த்த மேலப்பாளையம் சகோதரர் எனக்கு அனுப்பிய செய்தியைத்தான் பதிவு செய்கிறேன்.

          கைது நடவடிக்கைக்குப் பிறகு நிலைமை மோசமாகவே D .C  இது விசயமாக பேசுவதற்கு மேலப்பாளையம் வந்திருந்த போது  பேசுவதற்கு ததஜாவிலிருந்து யாரும் வராத போது நெல்லை மாவட்ட தமுமுக செயலாளர் அப்பாஸ் ஹில்மி,மேலப்பாளையம் நகர பொருளாளர் ஹசன் ஆகியோர் நிலைமையை அறிந்து அவர்களாகவே காவல் நிலையத்திற்கு போய் கைது செய்தவர்களை விடுவிக்க கோரி பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள்.பலமணி நேரம் பேச்சுவார்த்தைக்குப் பிறகு காவல்துறை ததஜ நிர்வாகிகளை வரச் சொல்லுங்கள் என்று தமுமுக பொறுப்பாளர்களிடம் சொல்ல அவர்கள் வெளியே வந்து ததஜ மாநில செயலாளர் யூசுப்அலி,முன்னாள் நெல்லை மாவட்ட தலைவர் கல்போட்டான் செய்யதுஅலி ஆகியோரை அணுகி பேசியிருக்கிறார்கள்.இந்த இருவரும் அப்பாஸ் ஹில்மியிடம் நீங்களும் வாருங்கள் என்று கேட்டிருக்கிறார்கள் அவர்கள் நீங்கள் போங்கள் பிரச்சனை இல்லை பேசி அவர்களை வெளியே கொண்டுவாருங்கள் என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்கள்.இரவு பனிரெண்டு மணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்தி காலை மூன்று மணிக்கு விடுதலை செய்திருக்கிறார்கள்.இந்த விபரங்களை மேலப்பாளையம் சகோதரர் எனக்கு அனுப்பியுள்ளார்.

                       ததஜாவினருக்கு சில கேள்விகள்.

1.ஒரு சாதாரண பிரச்சினையை பெரிதாக்கி பல பொய்களை புனைந்து மக்களிடம் எதைச் சொன்னால் எடுபடுமோ அதைச் சொல்லி இதற்காக  இரு நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியது சரியா? திருநெல்வேலியில் ஆர்ப்பாட்டம் நடத்தலாமே என்று லுஹாவிடம் கேட்டதற்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது என்று மக்களிடம் சொல்லியிருக்கிறார்.அடுத்தநாள் தமுமுக பர்மா முஸ்லிம்களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தியதைக்கண்டுதான் லுஹா பொய்  சொல்லிவிட்டார் என்பதை மக்கள் தெரிந்துகொண்டார்கள். 

 2.அடிபட்டவரை கொண்டுபோய் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தது என்ற மாற்றுமத சகோதரரிடம் இருக்கும் நல்ல பண்பு மாற்றுமத சகோதரர்களை அழைத்து இஸ்லாம் ஓர் இனியமார்க்கம் நடத்தும் உங்களிடம் அந்த மனிதாபிமானம் இல்லையே ஏன்?

 3.காவல்துறைக்கு பிரியாணி ஆக்கிக்கொடுத்ததாக சொல்கிறீர்களே இதுநாள் வரையிலும் நீங்கள் செய்யும் தவறுகளுக்கு காவல்துறைக்கு லஞ்சமாக கொடுத்தீர்களா? உங்களின் தவறுகளை தட்டிக்கேட்கும்போதுதான் அதை சொல்லிக்காட்டியுள்ளீர்கள்.

 4. காவல்துறை பூட்ஸ் கால்களோடு பள்ளிக்குள் நுழைந்தார்களா? காவல்துறை விரட்டியபோது ததஜாவினர் செருப்புக்கால்களோடு பள்ளிக்கு உள்ளேஓடினார்களா?பள்ளிக்குள் பூட்ஸ்,செருப்புக்கால்களோடு ஓடுவதற்கு காரணமானவர்கள் யார்? பள்ளிக்குள்ளே யார் இப்படி செய்தாலும்  தவறு தவறுதான்.

 5. சைபுல்லாஹ் ஹாஜா@கோஷ்டிகள் உங்களோடு இருக்கும்போது கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக்கில் பிரச்சனை ஏற்பட்டபோது சுமார் ஐந்து மாத காலமாக காவல்துறை உள்ளே இருந்து ஒரு காவல் நிலையமாதிரி ஆக்கினார்களே! அப்போது எங்கே போனது இந்த மாவட்டம்,மாநிலம்? அது உங்களுக்கு பள்ளிவாசலாகத் தெரியவில்லையே செத்த பாம்பாகத்தானே தெரிந்தது. உங்களுக்கு வந்தால் எல்லோரும் வாருங்கள் வாருங்கள் என்று  கூக்குரலிடுகிறீர்கள்.நீங்கள் பள்ளிவாசல்களாக மதிப்பது எதை? உங்களுக்கு வந்தால் ரெத்தம் மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்டினியா?

 6. தொழுதுகொண்டிருக்கும்போது காவல்துறை அத்துமீறி பள்ளிக்குள் நுழைந்ததாக சொல்லுகிறீர்கள் சம்பவம் நடந்த அந்த நேரத்தில் என்ன தொழுகை நடந்தது அல்லாஹ்வுக்குப் பயந்து பதிவிடுகிறீர்களா?

 7. குற்றவாளிகளை தேடிப்போகும்போது அந்த குற்றவாளிகள் ஏன் பள்ளிக்குள் அடைக்கலம் புகுந்தார்கள்?குற்றவாளிகள் இருக்கும் இடத்தைத்தான் காவல்துறை தேடிவரும்.காவல்துறை பள்ளிக்குள் நுழைந்ததற்கு  முக்கிய காரணமே ததஜாதான் என்று சொல்லலாம்.தவறை நீங்களே செய்துவிட்டு அடுத்தவர்கள்மீது பழியைப் போடுவதேன்?
8. பேசி முடித்து தீர்க்கவேண்டிய விஷயத்தை ஊதி பெரிதாக்கி இரண்டு பெரும் நகரங்களில் ஆர்ப்பாட்டம் என்று மக்களைக் கூட்டி பல லட்சக்கணக்கில் செலவு செய்தீர்களே,இதனால் என்ன பலனை அடைந்தீர்கள்.அந்த செலவுகளெல்லாம் யார் கொடுத்த பணம் ஒவ்வொரு ஊரின் ஜமாஅத் செலவுகளென்றால் இது வீணான செலவு இல்லையா? அல்லாஹ் இதற்கு கேள்வி கேட்கமாட்டானா? இல்லை அதற்கும் குர்ஆன்,ஹதீஸை எடுத்துப்போடுவீர்களா?

9. மரணம் என்பது அல்லாஹ்வால் நிர்ணயிக்கப்பட்டது.ஒருவருக்கு மரணம் ஏற்பட்டால் அல்லாஹ் ஒரு காரணம் வைத்திருப்பான்.அதேப்போல் இந்த பேரணியில் கலந்து கொண்ட சகோதரர் ஒரு விபத்தில் மரணமடைந்தது பேரணிக்காக வந்ததுதான் காரணம்.(அவருக்கு அல்லாஹ் சுவனத்தைக் கொடுப்பதோடு அந்த குடும்பத்தாருக்கு அல்லாஹ் பொறுமையைக் கொடுக்கவேண்டும்.) இதற்காக எவ்வளவு லட்சங்கள்,கோடிகள் கொடுத்தாலும் அந்த உயிருக்கு ஈடாகுமா? காயம்பட்ட ஷம்சுல்லுஹாவுக்கே இந்த ஆர்பாட்டம் என்றால் ஒரு ஏழையின் உயிர் பறிபோனதற்கு என்ன செய்யப்போகிறீர்கள்?
           
10.இந்தவார உணர்வில்இது விசயமாக சகட்டுமேனிக்கு கற்பனையோடு எழுதியுள்ளீர்கள். அதிகமாக பொய் கலந்துள்ளது.அதைப்பற்றி எழுதுவதாக இருந்தால் இன்னும் விரிவாக எழுத வேண்டியது வரும்.உணர்வில் வரும் செய்திகள் பொய்தான் என்று பல வருடங்களுக்கு முன்னால் தெரிந்ததுதான்.ஒரு பெருநாள் தொழுகையில் சைபுல்லாஹ்வுக்குப் பின்னால் பல ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்கும்போது எழுபது நபர்கள் கூடினார்கள் என்று அப்பட்டமாகமிகப் பெரிய பொய்யை உணர்வில் வெளியிட்ட செய்தியை மறக்கமுடியாது.

      ஆக இந்த ஆர்ப்பாட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதே அல்லாமல் வேறென்ன இருக்கமுடியும்? சகோதரர்களே! தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று பைலாவை திருத்தியுள்ளார்கள்.மீண்டும் திருத்தப்படும் நாள் வெகுதூரமில்லை.  இனியும் இவர்களால் தாமதிக்க முடியாது தாமதிக்கவுமாட்டார்கள் தேர்தலுக்காக கொடிதூக்கத்தான் போகிறார்கள் அதற்கான ஒத்திகைதான் இந்த பேரணி வேறெந்த நன்னோக்கமும் இல்லை.இவர்கள் சொன்ன பொய்யை அடுத்தவர்களும் அப்படியே எற்றுக் கொள்ள வேண்டுமாம்.பள்ளிவாசலுக்குள் போலீஸ் போகவில்லை என்று உண்மையைச்  சொன்னால் நாங்கள் சொன்னதை சரி என்று சொல்லாமல் எதிராக பேசியதற்காக உண்மையைச் சொன்னவரை அசிங்க அசிங்கமாக விமர்சிப்பது இவர்களுக்கு சர்வ சாதரணமாகிவிட்டது.அல்லாஹ்வே இவர்களுக்குப் போதுமானவன்.    இவர்களின் இரட்டை வேடம் விரைவில் தெரியும். இன்ஷா அல்லாஹ்.முஸ்லிமா?இந்துவா?கிருஸ்தவரா?என்று பார்க்காமல் உண்மைக்கே முதலிடம் கொடுங்கள் அல்லாஹ் உதவி செய்வான்.

                               இப்படிக்கு
            காதிர் கனி எம் ஐ எஸ் சி  
from:kadirkani misc kadirkanimisc@gmail.com
to:Adiyar Nanban
bcc:fazlulilahi@gmail.com
date:Fri, Jun 12, 2015 at 9:14 PM
subject:மேலப்பாளையத்தில் நடந்தது என்ன?
mailed-by:gmail.com
signed-by:gmail.com

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு