ஆம்பூரில் வாகனங்களுக்கு தீ வைத்து மக்கள் ஆர்ப்பாட்டம்

துாதரே அல்லாஹ் உமக்குக் காட்டி தரும் அடிப்படையில் மக்கள் மத்தியில் நீர் தீர்ப்பு வழங்குவதற்காக உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை உமக்கு நாம் அருளினோம். மோசடி செய்வோருக்கு வாதிடுபவராக நீர் ஆகி விடாதீர்.
                                                                                                             அல்குர்ஆன் 4:105
கலவரம் ஓய்ந்து விட்டது. ஒரு ஆடியோ வாட்ஸப்பில் வலம் வருகிறது. அது பழைய செய்தி. அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள். அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக.

ஆம்பூர் கலவரத்திற்க்கு காவல் துறையின் மெத்தன போக்கே காரணம்- ஆம்பூர் MLA அஸ்லம் பாஷா குற்றச்சாட்டு
★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
மக்கள் போரட்டத்திற்க்கு தயாராகி
வருவது முன்கூட்டியே
உளவுத்துறை அறிந்தும் காவல்துறை
பாதுகாப்பு அளிக்க தவறிவிட்டது.
முற்றுகை நேரம் அறிவிக்கப்பட்டும்
சொற்ப காவலர்களே அங்கு
இருந்துள்ளனர்.
இக்கலவரம் இஸ்லாமியர்களை
சமதானத்திறகு உட்படுத்தவே உளவு
மற்றும் காவல்துறையால் திட்டமிட்டு
ஏவப்பட்டுள்ளது.
இதற்க்கு முன்பு இதே ஆய்வாளரால்
முஸ்லிம் இளைஞன் படுகொலை
செய்யப்பட்டதற்க்கு நடவடிக்கையின்றி
மூடி மறைக்கப்பட்டுள்ளது.
தற்போது அமைக்கப்பட்ட நீதி
விசாரணையும் ஆய்வாளரை
காப்பற்றவே காவல்துறை செய்யும் சதி
திட்டம்.
காவல்துறையின் மேல் ஆம்பூர் MLA
அஸ்லாம் பாஷா சாரமாரிக்
குற்றசாட்டு கூறினார்.
இதற்கு
வட மண்டல ஜ.ஜி குற்றசாட்டுக்கு பதில்
தர மறுப்பு.
-- புதிய தலைமுறை செய்தி

ஆம்பூரில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நபர் மரணமடந்ததையொட்டி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



விசாரணைக்கு அழைத்துச் சென்ற இளைஞர் உயிரிழப்பு: உறவினர்களால் காவல் நிலையம் முற்றுகை
விசாரணைக்கு சென்றவர் உயிரிழப்பு: கல்வீச்சில் எஸ்.பி., போலீசார் காயம்: ஆம்பூரில் பதட்டம்
ஷமீல் அகமது மீது புகார்

வேலூர் மாவட்டம் ஆம்பூர் காதர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஷமீல் அகமது. இவர் தனியார் காலனி தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் பள்ளிகொண்டா பகுதியைச் சேர்ந்த பழனி என்பவர் தனது மனைவி பவித்ராவுடன் ஷமீலுக்கு தொடர்பு உள்ளதாக பள்ளிகொண்டா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

காவல் ஆய்வாளர் மார்டின் பிரேம்ராஜ்

அதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் மார்டின் பிரேம்ராஜ் கடந்த 15ஆம் தேதியன்று ஷகிலை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். விசாரணையின் போது அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஷகில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று மாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதில் ஆத்திரமடைந்த ஆம்பூர் பகுதி இஸ்லாமியர்கள் ஆம்பூர் காவல்துறை நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இஸ்லாமிய மக்கள் ஆர்ப்பாட்டம்

500க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தை பலன் அளிக்காததால் தடியடியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேருந்துகளின் மீது கற்களை வீசி தாக்கியதில் 20க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் வாகனங்கள் சேதமடைந்தன. மேலும் 2 கார்கள் மற்றும் ஒரு மின் பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டன.

காவல்துறையினர் மீது தாக்குதல்

இந்த போராட்டத்தை தடுக்க முயன்ற காவல்துறையினர் மீது இஸ்லாமியர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். காயமடைந்த 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் நந்தகோபால் மற்றும் காவல்துறை ஐ.ஜி.மஞ்சுநாதா ஆகியோர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். அதிகாலையிலும் பதற்றம் நிலவுவதால் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். 

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு