மொத்தத்தில் அவர்கள் அனைவரும் கொள்ளையர்கள்

மீன், இரால், நண்டு, கூனி, கருவாடு போன்ற கடல்சார் உணவு பொருள்கள்   இங்கு வைத்து சமைத்து உண்ணவோ சமைத்து கொண்டு வந்து உண்ணவோ அனுமதி கிடையாது என்ற கீழ் காணும் அறிவிப்பு எங்கு செய்யப்பட்டுள்ளது தெரியுமா?
 

தெரியாவிட்டால் அடுத்த போட்டோக்களை பாருங்கள். தெரியவில்லையா?

. ஆடு கள் அறுக்கிறார்கள். இப்பொழுது ஒரு சிலருக்கு புரியலாம். 
 இப்பொழுது இன்னும்  சிலருக்கு புரிந்திருக்கும்

இன்னும் தெரியவில்லையா அடுத்தடுத்த படங்களை பாருங்கள்.





ராமேஸ்வரம்  போகும் வழியில் உள்ள பாம்மன் பாலங்களை பார்த்த பின்னரும் தெரியாதவர்களுக்கு கீழ் காணும் படம் பதில் சொல்கிறது


பாம்பன் பஸ் பாலம் கட்டும் முன் 3 முறையும் பஸ் பாலம் கட்டிய பிறகு 5 முறையும் ராமேஸ்வரம் சென்றுள்ளோம். 1976இல் ஒரு முறையும் அதன் பிறகு இந்த முறையும்தான் இந்த தர்காவுக்கு சென்றுள்ளோம். 1976இல் பாழடைந்து இருந்த இந்த தர்கா உள்ளே  இப்பொழுது (13.6.15) பளிங்கு  கற்கள் போடப்பட்டள்ளது.

1976இல் சென்றபொழுது ஒடிந்த வாள் இருந்தது. இதுதான் காபில் ஹாபிலை வெட்டிய வால் என்றார்கள்.

முன்னாள் ஜனாதிபதி  அப்துல்கலாம் உடைய அண்ணனின் மருமகன் அங்கே இருந்து கைத்தடியை ஊன்றி நடந்தவராக தர்கா பற்றி விளக்குகிறார். இந்த தர்கா பற்றி குர்ஆனில் சொல்லப்பட்டு இருக்கிறது என்கிறார். ஆயத்துகளை  சொல்லத் தெரியவில்லை.

அல்குர்ஆன் 5; 27 ஆவது  வசனத்திலிருந்து ஆதமுடைய  இரு புதல்வர்கள் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது.

ஒருவர் கொலை செய்தவர். ஒருவர் கொலை செய்யப்பட்டவர். இருவருக்குமாக தர்கா. கொலை செய்தவருக்கும் ஸலாம் உண்டாகட்டும்  (அலை) என போர்டுகள் வைத்துள்ளார்கள்.

அதிகமாக கேரளாவிலிருந்துதான் இந்த தர்காவுக்கு  வருகிறார்கள். வருகின்றவர்கள் ஒரு ஆடு, இரண்டு ஆடு, ஐந்து ஆடு என அறுத்து தகுதிக்கு ஏற்ப கந்துாரி கொடுப்பார்கள். இன்று இரண்டு ஆடு கந்துாரி சாப்பிட்டு விட்டு போங்கள் என்றார்கள்.

எங்களை சுற்றிக் காட்டிய  அப்துல்கலாமின் இன்னொரு உறவினர் சீனி முஹம்மது தந்த தகவல்கள்.

இந்தியாவின் பல பாகங்களிலிருந்து 36 இரயில்கள் ராமேஸ்வரத்திற்கு என்று வருகின்றன. 5ரயில்கள் மட்டுமே ராமேஸ்வரம் வருகின்றன. மீதி அனைத்துமே மதுரையில் நிறுத்தப்பட்டு விடுகின்றன. காரணம்  ரயில்கள்  நிறுத்த  போதிய இடம் ராமேஸ்வரத்தில் இல்லை.

எனவே இதை விரிவாக்கம் செய்ய  டெல்லியிலிருந்து உத்தரவு வந்து ஹாபில் காபில் தர்காவை இடிக்க வந்தனர். உடனே அப்துல் கலாமுக்கு தெரிவித்தோம். அவர் தலையிட்டு ரயில் நிலைய விரிவாக்கத்தையே  நிறுத்தி விட்டார்.

வில்லுாண்டி என்ற இடத்திற்கு கூட்டி போனார். சீதை தண்ணீர் கேட்டதும் ராமர் வில்லை கீழே ஊன்ற அதிலிருந்து தண்ணீர் வந்தது. இன்றும் வருகிறது. இந்த கிணறு  பெண் கடல் பகுதியில் இருக்கிறது. இந்த பெண் கடலில் அலை அடிக்காது. அந்தப் பக்கம் உள்ளது ஆண் கடல் கடுமையாக அலை அடிக்கும்.
மேல் படம் வில்லுாண்டி கிணறுக்கு போகும் பாலம் கீழ் படம் கிணறு
இந்த பகுதியில் மீனவர்கள் இருக்கிறார்கள். கிறிஸ்தவர்களான அவர்களுக்கு இந்த இடங்களை நாங்கள்தான் கொடுத்தோம் என்றார். அப்துல் கலாம் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

ரோட்டை விரிவாக்கம் செய்ய இந்த கபுரை இடிக்க வேண்டும் என்றார்கள். அப்துல்கலாம் தலையிட்டு தடுத்து நிறுத்தி விட்டார். 

இந்த கபுருக்கு சிறிது துாரத்தில் பெரிய கோயில் இருக்கிறது.  அதைக் காட்டினார். அது எங்களுக்கு சொந்தமான இடம்தான். கோயில் கட்ட அந்த இடம் வேண்டும் என்றார்கள். எதற்கு வம்பு சண்டை என இடத்தை எழுதி கொடுத்து விட்டோம். 

அப்துல் கலாம் வருவதாக இருந்தால் அவரது அண்ணன் (தொப்பி)க்கு தகவல் கொடுப்பார். குடும்பத்தார் எல்லாரும் போவோம். ஒன்றாக இருந்து சாப்பிடுவோம். 

ஹெலிகாப்டரில் வந்து இறங்குவார். ஹெலிபேடிலிருந்து பாம்பன் பாலம் உட்பட வீடு வரை போலீஸ் பாதுகாப்பு இருக்கும்.

இங்கு  அதிகம் தங்க மாட்டார். அரசாங்கம் தங்க விடாது. அமெரிக்காவில் பணி செய்ய அவரை அழைப்பு வந்தது. என் தாய் நாட்டில்தான் பணி புரிவேன் என கூறி விட்டார். 

கீழக்கரையில் பெண் பேசி திருமணம் ஏற்பாடு நடந்தது. அப்பொழுது அமெரிக்கா அப்துல் கலாமை கொண்டு வந்தால் 150 கோடி டாலர் என அறிவித்தது. டைகர்கள் மூலம்  அவரை கடத்த ஏற்பாடு நடந்தது. 

அதனால் ராமேஸ்வரத்தில் வைத்து திருமணம் நடத்தக் கூடாது என்று இந்திய அரசு கூறியது. பாதுகாப்பை பலப்படுத்தியது. திருமணம் நின்று விட்டது என்றார். நாம் வறுமைதான் காரணம் என்று கேள்வி பட்டோமே என்றோம். இல்லை என்றார்.

ராமேஸ்வரத்தில் அதிகமான இடங்கள் முஸ்லிம்களுக்கு சொந்தமானவைதான்  முஸ்லிம்கள்தான் விட்டுக் கொடுத்தோம் என்றார்.

தனுஷ்கோடி புயலில் அழிந்தபோது எல்லாரும் காலி பண்ணி வெளியேறி விடுங்கள் என அமெரிக்க கூறியது. எல்லாரும் வெளியேறி விட்டார்கள். அப்பொழுது அப்துல் கலாம் வாலிபா். நாம் பிறந்த பூமியை விட்டு வெளியேறத் தேவை இல்லை. வாழ்ந்தால் இங்குதான் வாழனும். செத்தால் இங்கேயே சாவோம் என்றார் அப்துல் கலாம். அவர் சொல் கேட்டு எல்லாரும் இருந்து விட்டோம். 

அவர் ஜனாதிபதியாக ஆன போது இங்கிருந்து தனி ரயில் அனுப்பினார். குடும்பத்தோடு போய் நிகழ்ச்சியில் கலந்து விட்டு வந்தோம் என்றார். 

சீனி முஹம்மது தம்பி மதுரை வந்தீங்களா  என்று கேட்டார்.  இல்லை என்றேன். உங்களூர் பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்தவர்களை அடித்து உதைத்த போலீஸை கண்டித்து மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு போனோம்  என்றார். 

121ஆவது ஆம்லன்ஸ் அர்ப்பணிப்பு என வால்போஸ்ட்டர் பார்த்தேன் சனிக்கிழமை என உள்ளது தேதி இல்லையே என்றேன். அதற்கும் போனேன். கோவை செய்யது நல்ல பேசினார். எங்கள் தொகுதி எம்.எல்.ஏ. ஜகாவிருல்லாஹ் வந்திருந்தார். தொகுதிக்கு நல்ல செய்கிறார். நல்ல செயல்படுகிறார். அடுத்து நின்றால் அவருக்குத்தான் ஓட்டுப் போடுவோம் என்றார். 

இவர்கள் ரசிகர்கள் அல்ல நடுநிலைவாதிகள் என புரிந்து கொண்ட நான்.  யாராக இருந்தாலும்  குர்ஆனில் இருந்து  சொல்கிறார்களா ஏற்றுக் கொள்ளுங்கள். ஹதீஸ் நுாலில் இருந்து சொல்கிறார்களா பார்த்து ஏற்றுக் கொள்ளுங்கள். தனிப்பட்ட முறையில் மனிதர்கள் பற்றி குறை கூறுகிறார்களா ஒதுங்கி விடுங்கள். இல்லை செய்த நன்மைகளை இழந்து நரகம் போவீா்கள். 

நீங்கள் சொன்ன பள்ளி எங்களிடம் சம்பளம் பேசி வேலைக்கு சேர்ந்தவன். திட்டமிட்டு களவாடி குடும்பத்தோடு பிழைப்பு நடத்தி வரும் பள்ளி. 

பொய் செய்தி  போட்ட உணர்வு  த.மு.மு.க. விடம் இருந்து களவாடப்பட்ட வாரப் பத்திரிக்கை. 

அல்முபீன் என்று வந்த மாத இதழை ஏகத்துவம் என பெயர் மாற்றி களவாடினார்கள். 
த.மு.மு.கவுக்கு சொந்தமான முஸ்லிம் டிரஸ்ட்டையும் களவாடி விட்டார்கள். மொத்தத்தில்    அவர்கள்  அனைவரும்   கொள்ளையர்கள்  என்பதை  பதிவு செய்தேன். 

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.