வாக்குறுதி அளித்த பி.ஜே. உதவினாரா? கை விட்டாரா?- ராஜா உசேனின் பதில்

ராஜா உசேன் என்பவருடை மேட்டரை உங்களுக்கு உடைத்து சொல்லட்டுமா? -பி.ஜே .   
           
சமுதாயத்துக்கே துரோகம் செய்யச் சொன்ன சமுதாய துரோகி.
இரட்டை நாக்குடையவர்களின் தந்தை யார்?

இப்படியே எழுதிக்கொண்டு மட்டும்தான் உன்னால் முடியும் நீ என்னதான் கூவினாலும் வறலாறுகளை திரித்து சொன்னாலும் அதனை ஏற்று கொள்ள் மக்கள் ஒன்று மடையர்கள் அல்ல மடையனே. என்று ததஜவைச்சார்ந்தவர் நமது முந்தைய பதிவுக்கு வாட்ஸப்பில் விமர்சனம் எழுதியுள்ளார். (மடையர்களுக்கு பிறரைப் பார்த்தால் மடையராகத்தானே தெரியும்)

அதற்கு அல்லாஹ்வின் மீது ஆணையாக எங்கள் தலைவர் பி.ஜே.விபச்சாரம் செய்யவில்லை என்று தான் உங்களால் சொல்ல முடியவில்லை. அல்லாஹ் மீது ஆணையாக பிஜே சொன்ன மாதிரி பஸ்சில் கல் எரிந்ததற்கு தான் தடாவில் போட்டார்கள் என்று சொல். மறுமை நாளில் நரகினுல் பொய்யன்கள் தள்ளப்படும் பொழுது கூவியதன் அருமை எழுதியதன் நன்மை தெரியும் வமா அலைனா இல்லல் பலாஃக்

இந்த குண்டு வெடிப்பு பிரச்சனைகளை பாட்சா பட வெள்ளி விழா வில் ரஜினி பேச அதனால் ஆர்.எம். வீரப்பன் மந்திரி பதவியை இழந்தார் இது பகிரங்க வரலாறு இதை மறைப்பவன்தான் மகாப் பொய்யன்

பி.ஜே உணர்வு இதழில் எழுதிய ஆதாரமும் வெளியிட்டப்பட்டுள்ளது நீங்கள் எதை பொய்யாக ஆக்கினாலும் உணர்வு இதழில் உள்ள படி பி.ஜே  தான் பொய்யராக ஆகிறார்

தர்ஜூமா செய்யும் வரை தீவிர வாதத்தில் இருந்தேன் என்று எழுதியவனிடம் கேட்டு விட்டு எழுதப்பா என்றெல்லாம் பதில் கொடுக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் கீழே உள்ள தலைப்பிலான வரலாற்றையும் மேலே உள்ள கேள்விகளுக்கான பதிலையும் படியுங்கள். 



பி.ஜே.யை விட வலுவான அரசியல் கட்சியினரோ, ஆளுங் கட்சியினரோ, வக்கீல்களோ நாட்டில் இல்லையா?



 பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.         
          
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. இரண்டு நாக்குடன் பேசும் தைரியம் திடீர் கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே சாத்தியம் என்பதை சைட்டில் பார்த்தோம்.

இதைப் பார்த்ததும் இரட்டை நாக்குடையவர்களின் தந்தையின் ஞாபகம் வந்தது. எனவே இந்த தலைப்பில் இரட்டை நாக்குடையவர்கள் தந்தை பி.ஜே.யின் இரட்டை நாக்குத் தன்மையை அடையாளம் காட்ட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. 

இதில் ஜவாஹிருல்லாஹ் அவர்களைப் பற்றி இரட்டை நாக்குடையவர்களின் தந்தை பி.ஜே. அபுதாபியில் கூறும்போது அவரது மதிப்பை குறைக்கும் நோக்குடன் 1995 ஆகஸ்டுக்குப் பிறகு பொதுப்பணிக்கு வந்தவர்தான் ஜவாஹிருல்லாஹ் என்றார். 

அதற்குப் பிறகு 5-5-2005 அன்று கோவை குண்டு வெடிப்பு வழக்கில் போலீஸ் தரப்பு சாட்சியாகச் கோர்ட்டுக்குச் சென்றார் பி.ஜே. அங்கு அபுதாபியில் கூறியதற்கு  முரணாகவும் ஜவாஹிருல்லாஹ்வுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்குடனும் 1995க்கு முன்பாகவே ஜவாஹிருல்லாஹ் தன்னுடன் இருப்பதாக கூறியுள்ளார். இது  போன்ற சந்தர்ப்பவாதங்களை சுட்டிக் காட்டி ஜவாஹிருல்லாஹ் விஷயத்தில் பி.ஜே.யின் இரட்டை நாக்கு தன்மைகள் பற்றி எழுத இருந்தோம். 

இரட்டை நாக்குத் தன்மையை சுட்டிக் காட்ட உள்ளோம்.

த.மு.மு.க.வுக்கும் பி.ஜே.க்கும் உள்ள பிரச்சனையில் த.மு.மு.க. பக்கம் த.மு.மு.க. தலைமையினரிடம்  நியாயம் உள்ளதை சுட்டிக் எழுதி வருகிறோம். இதை ஜீரணிக்க முடியாத அநியாயவாதிகள் நாம் ஒரு தரப்பாக எழுதி வருவதாக சித்தரிக்கிறார்கள். 

எனவே ஜவாஹிருல்லாஹ் விஷயத்தில் பி.ஜே.யின் இரட்டை நாக்குத் தன்மையை எழுதுவதை தவிர்த்து ராஜா உசேன் விஷயத்தில் பி.ஜே.யின் இரட்டை நாக்குத் தன்மையை சுட்டிக் காட்ட உள்ளோம். 

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் போலீஸ் தரப்பு சாட்சியாக உள்ள பி.ஜே. 24-03-1999 அன்று போலீஸில் வாக்கு மூலம் கொடுத்தார். பி.ஜே. வாக்கு மூலத்தின் 43வது பக்கத்தில், வழக்கு பைலின் 3347வது பக்கத்தில் பி.ஜே. சொல்லி உள்ளதைப் பாருங்கள். 

மற்றவர்களை சரணடையச் செய்திருப்பேன்.

நான் மேலப்பாளையம் மீட்டிங்கில் இருந்தபோது ராஜா உசேன் என்னை சந்திக்க தகவல் சொன்ன போது வரச் சொல்லி அவனை நீதி மன்றத்தில் சரணடைய ஏற்பாடு செய்கிறேன் என்று கூறினேன். 

அவனை வரச் சொல்லி ரூபாய் 500 தந்து விட்டு வந்தேன். நான் சென்னையில் போலீஸ் உயர் அதிகாரியை சந்தித்து விபரத்தை சொல்லி காரில் கூட்டிப் போய் அவனை போலீசாரிடம் ஒப்படைத்தேன். 

ஆனால் போலீஸார் அவனை பாய்ந்து பிடித்து விட்டதாக பதிவு செய்துவிட்டார்கள். அவன் போலீசாரிடம் சரணடைந்ததாகக் காட்டி இருந்தால் மற்றவர்களை சரணடையச் செய்திருப்பேன். 

நான்தான் அவனைப் பிடித்துக் கொடுத்து விட்டதாக தற்போது அவனும் நினைத்துக் கொண்டிருக்கிறான். பாஷா  ஜெயிலில் இருக்கும் அவனையும் தன் கைக்குள் போட்டுக் கொண்டுள்ளார். ராஜா உசேன் குடும்பத்திற்கு தற்போதும் உதவி செய்து கொண்டிருக்கிறேன். என்று பி.ஜே. கூறியதாக அதில் உள்ளது. 

ராஜா உசேனுக்கும் பி.ஜே.க்கும் அந்தரங்க தொடர்பு

பி.ஜே.யின் இந்த வாக்கு மூலம் 5-5-1999 அன்று கோவை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் இது பற்றி செய்தி தமிழகத்தில் வேகமாக பரவி மக்களிடையே பல கேள்விகளை உருவாக்கி விட்டது. 

தலை மறைவாக இருந்த ராஜா உசேன் கோர்ட்டில் சரணடைய பி.ஜே.யைப் போய் ஏன் பார்க்க வேண்டும்? அவரது அண்ணன் சீனி நயினா முஹம்மது இல்லையா? 

போலீஸால் தேடப்படும் ராஜா உசேனுக்கு பி.ஜே. ஏன் 500 ரூபாய் கொடுக்க வேண்டும்? 

போலீஸாரால் தேடப்படுபவர், அதுவும் பிரபலப்படுத்தப்பட்ட கொலை வழக்கில் தேடப்படுபவர்,  அதுவும் தடா வழக்கில் தேடப்பபடுபவர். ஆளும் கட்சியினராக இருந்தால் கூட இப்படி தேடப்படுபவர்களைக் கண்டால் கிட்டே வராதே என்று பயந்தல்லவா ஓடுவார்கள். 

தலை மறைவாக இருந்த ராஜா உசேனுக்கும் பி.ஜே.க்கும் அந்தரங்க தொடர்பு இல்லாமலா? சரண் அடைய ஏற்பாடு செய்தார். 

போலீசாரிடம் சரணடைந்ததாகக் காட்டி இருந்தால் மற்றவர்களை சரணடையச் செய்திருப்பேன் என்று வேறு கூறி இருக்கிறார். எனவே போலீஸாரால் தேடப்படுபவர்களான தலை மறைவாக இருப்பவர்களுக்கும் பி.ஜே.க்கும் அந்தரங்க தொடர்பு இல்லாமலா இப்படிச் சொல்வார்?  இப்படி பல கேள்விகளை உருவாக்கி பி.ஜே.க்கு சங்கடத்தை ஏற்படுத்தி விட்டது.

விடியல் வெள்ளியின் சுய ரூபம் என்ற தலைப்பில் வெளியிட்டார்.

அதனால் பி.ஜே. போலீஸில் தான் கொடுத்த வாக்கு மூலத்தை பொய்ப்படுத்த முயன்றார். எனவே அது போலீஸார் தாங்களாக எழுதிக் கொண்டது என்று வாதித்தார். 

8-10-2000 அன்று மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் இதையே முக்கியப்படுத்தி பேசினார். போலீஸில் பி.ஜே. கொடுத்துள்ளதாக வந்துள்ள வாக்கு மூலத்தை வாத ரீதியாக எப்படியெல்லாம் பொய்ப்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் பொய்ப்படுத்தினார். 

கெட்டிக்காரனின் பொய்யும் புளுகும் எட்டு நாளில் என்பது போல், பி.ஜே.யின் இந்த பொய்யும் புளுகும் அவராலேயே அடையாளம் காட்டப்பட்டது. 

2001ல் நோதாஜி நகர் பள்ளியில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தினார். அந்த நிகழ்ச்சியின் கேசட்களை விடியல் வெள்ளியின் சுய ரூபம் என்ற தலைப்பில் வெளியிட்டார். 

அதன் வீடியோவில் 1மணி 30வது நிமிடத்திலும்;, சி.டி. பாகம் 2ல் 24வது நிமிடத்திலும் பி.ஜே. காட்டிக் கொடுத்தது சம்பந்தமான கேள்வி வருகிறது. குறிப்பாக ராஜா உசேன் சம்பந்தமான கேள்விக்கு பதில் சொல்கிறார் அதில் பி.ஜே. கூறியுள்ள பதிலைப் பாருங்கள்.

மேலப்பாளையம் மீட்டிங் நடக்கும்போது என்னை பார்க்கனும் என்று வந்தார்.

ராஜா உசேன் என்பவருடை மேட்டரை உங்களுக்கு உடைத்து சொல்கிறேன். ஒளிவு மறைவெல்லாம் கிடையாது. இப்பவும் சொல்கிறேன் பல பேர் தலை மறைவாக இருக்கிறார்கள். தலை மறைவாக இருக்கக் கூடியவர்களில் யாராவது வந்து எங்களுக்கு தலை மறைவாக இருக்க முடியவில்லை  எங்களை அடி உதை இல்லாமல் டிபார்ட்மெண்ட்டில் ஒப்படையுங்கள் என்று வந்தால் அதை நான் இன்றைக்கும் செய்வேன்  என்கிறார். 


தலை மறைவாக இருக்கக் கூடியவர்கள், போலீஸால் தேடப்படக் கூடியவர்கள் என்னை வந்து சந்திக்கலாம் என்று சொன்ன ஒரே மாவீரர் பி.ஜே.தான். இப்பொழுது  இவர் யார் என்று புரிந்து விட்டீர்களா? 

அது மாதிரி தலைமறைவாக இருக்கக் கூடிய ராஜா உசேன் என்பவர் வந்தார் என்னையும் பார்த்தார். (துபை ஜே.டி. மர்க்கஸ் எதிரில் மொபைல் கடை வைத்திருக்கும்) ஜின்னாஹ் என்பவரையும் பார்த்தார். மேலப்பாளையம் மீட்டிங் நடக்கும்போது என்னை பார்க்கனும் என்று வந்தார். நானும் சந்தித்தேன். சரண்டர் பண்ணனும் என்று சொன்னார். யோசனை பண்ணிவிட்டு வா என ஒண்ணரை மாதம் டயம் கொடுத்தேன். 

நான் காட்டியெல்லாம் கொடுக்க மாட்டேன்.

ஜின்னாஹ் என்பவரை சாட்சியாக வைத்துதான் இவ்வளவும் நடக்கிறது. நல்லா யோசனை பண்ணிட்டியா? நீதான் விரும்புகிறே, நான் காட்டியெல்லாம் கொடுக்க மாட்டேன். விரும்பினால் சரண்டர் பண்ணுகிறோம். இல்லையென்றால் எங்காவது போய்க் கொள்.

இதுவரை எங்கு இருந்தாயோ அங்கேயே (அதாவது பி.ஜே. பினாமியின் செங்கல் பேக்டரியிலேயே) இருந்து கொள் என்று சொல்லாமல் எங்காவது போய்க் கொள் என்று சொல்லி உள்ளார். இதிலிருந்து அது வரை அவர் பொறுப்பில்தான் இருந்துள்ளார் என்ற உண்மையும் வெளிப்பட்டுள்ளது.

நாம வந்து பிடித்து கொடுப்பதற்கு போலீஸ் ஆள் கிடையாது. போலீஸுக்கு ஆள் பிடித்து கொடுக்கிற வேலையை நாங்கள் செய்ய மாட்டோம். உனக்கு கஷ்டமாக இருக்கிறது என்று சொல்வதால் உன்னை சரண்டர் பண்ணுகிறோம் என்றோம்.

ஒண்ணரை மாதம் கழித்து வந்தார். என்னை கொண்டு போய் விட்டு விடுங்கள் என்றார். அவருக்கு டிரஸ்ஸு சட்iடெயல்லாம் எடுத்து கொடுத்து, அதிகாரிகளிடம் பேசி ஒப்படைத்தது உண்மை. அப்படி ஒப்படைத்ததன் காரணத்திற்காக வந்து இன்றைய தேதி வரைக்கும் அவரது குடும்பத்து செலவு, அவரது பிள்ளைகள் படிக்கிற செலவு, அவரது மனைவிக்கு செய்ய வேண்டிய ஹெல்புகள், அவரது வக்கீல் செலவுகள் இவை யாவையும் நாம சரண்டர் பண்ணியதால் செய்கிறோம்.


ராஜா உசேன் சரண்டராக பி.ஜே.யைப் போய் ஏன் பார்க்க வேண்டும்.

மேற்கண்டவாறு பி.ஜே.யின் பதில் உள்ளது. பி.ஜே.க்கும் தலை மறைவாக இருந்த  ராஜா உசேனுக்கும் அந்தரங்கமான எந்த தொடர்பும் இல்லை என்றால் சரண்டராக பி.ஜே.யைப் போய் ஏன் சந்திக்க வேண்டும்?

அதற்கு முன் எத்தனை பேரை பி.ஜே. போலீஸில் சரண்டர் செய்திருந்தார். யாரையுமே சரண்டர் செய்யவில்லை என்றால் ராஜா உசேன் மட்டும் சரண்டராக பி.ஜே.யைப் போய் ஏன் பார்க்க வேண்டும்?

பி.ஜே.யை விட வலுவான அரசியல் கட்சியினரோ, ஆளுங் கட்சியினரோ, வக்கீல்களோ நாட்டில் இல்லையா?

பி.ஜே.யின் வாதப்படி  ராஜா உசேன் தானாக சரண்டராக முன் வந்தது உண்மையா?

அது உண்மை என்றால், எதற்காக ராஜா உசேன் குடும்பச் செலவு, பிள்ளைகள் படிப்புச் செலவு, வக்கீல் செலவு என பி.ஜே. (சொன்ன தேதி வரை) செய்தார்?

இந்தக் கேள்விகளுக்குரிய பதில் ராஜா உசேன் வெளியிட்டுள்ள பிரசுரத்தில் உள்ளது. அதன் சுருக்கத்தை தருகிறோம்.

வாக்குறுதி அளித்த பி.ஜே. உதவவில்லை கை விரித்து விட்டார்.

ராஜா உசேனை சரணடையச் செய்யுங்கள் என்று பி.ஜே. உத்தரவிட்டார். பி.ஜே. மீது இருந்த பாசத்தினாலும் அவர் மீதிருந்த அளவுக்கதிகமான நம்பிக்கையினாலும் வாக்குறுதி தவற மாட்டார் என்ற நம்பிக்கையினாலும் நான் சரணடைய சம்மதித்தேன்.

3 மாதத்தில் வெளியில் எடுத்து விடுவோம் என்று பொய்யான வாக்குறுதியைக் கூறினார். தன்னை பாதுகாத்துக் கொள்ளவதற்காக பி.ஜே. என்னை கோர்ட்டில் ஆஜர் படுத்தாமல்  போலீஸில் ஒப்படைத்தார்.

8 வருடமாக என் மனைவி ஒவ்வொரு கோர்ட்டாக அலைந்து வருகிறார். இந்த நிலையில் உதவி செய்வதாக வாக்குறுதி அளித்த பி.ஜே. உதவவில்லை கை விரித்து விட்டார்.  நீங்கள் தந்தால் நான் வாங்கிக் கொள்வேன் என்றும் என் மனைவியிடம் கூறி விட்டார் என்று ராஜா உசேன் பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கிண்டல் பேசி வேதனை செய்துள்ளார் பி.ஜே.

ராஜா உசேன் வெளியிட்டுள்ள பிரசுரப்படி பி.ஜே. தன்னை காத்துக் கொள்வதற்காக பி.ஜே.தான் ராஜா உசேனை சரண் அடையச் சொல்லி உள்ளார். 

அதுவரை ராஜா உசேன் பி.ஜே.யின் கஸ்டடியில்தான் இருந்துள்ளார். கோர்ட்டில் சரண் அடையச் செய்வதாகக் கூறித்தான் ராஜா உசேனை ஏமாற்றி இருக்கிறார். 

பிறகு போலீஸில் ஒப்படைத்து தன்னை காத்து இருக்கிறார். ராஜகோபாலன் கொலை வழக்கிலிருந்து பாக்கர் விடுதலையான பின்னரும், பி.ஜே. பக்கம் வழக்கு திரும்பாது என்ற நம்பிக்கை ஏற்படுகின்றவரை வாக்களித்தபடி ராஜா உசேன் குடும்பத்துக்கு பி.ஜே. உதவி உள்ளார். 

இனி பி.ஜே. பக்கம் வழக்கு திரும்பாது என்பது உறுதியானதும் பி.ஜே. கை விரித்து விட்டார். ராஜா உசேன் மனைவி கொடுத்தால் வாங்கும் நிலையில் பி.ஜே. உள்ளதாகவும் கிண்டல் பேசி வேதனை செய்துள்ளார் பி.ஜே. என்றும் அறிய முடிகிறது.


பி.ஜே.யின் கூற்றுக்கும்  ராஜா உசேன் கூற்றுக்கும்  உள்ள முரண்பாடுகளைக் கூறி பி.ஜே.யை இரட்டை நாக்குடையவர்களின் தந்தை என்று கூறவில்லை. ராஜா உசேன் விஷயத்தில் பி.ஜே.யின் கூற்றை பொய்ப்படுத்தும் பி.ஜே.யின் கூற்றைக் கொண்டுதான் பி.ஜே.யை இரட்டை நாக்குடையவர்களின் தந்தை என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்.

குறுக்கு விசாரணையின் போது மறுத்து விட்டார்.

2001ல் நேதாஜி நகர் பள்ளியில் கூறியதைப் போல்தான் 1999ல் போலீஸாரிடம் கொடுத்த வாக்கு மூலத்திலும் கூறி இருந்தார்.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் போலீஸ் தரப்பு சாட்சியாக உள்ள பி.ஜே. 26-02-2004ல் சாட்சி சொல்ல வந்தார். அப்போது 1999ல் போலீஸாரிடம் அவர் கூறியதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வாக்கு மூலங்களை மறுக்கவில்லை. போலீஸ் தரப்பாக சாட்சி கூறி சென்று விட்டார்.

5,6-5-2005 ஆகிய தேதிகளில் நடந்த தொடர் குறுக்கு விசாரணையின் போது ராஜா உசேன் சம்பந்தமாக வீடியோ ஆதாரத்துடன் கூடியதை பி.ஜே. மறுத்து விட்டார்.

பி.ஜே. மறுத்துக் கூறியுள்ள விபரம் குறுக்கு விசாரணை பக்கம் 21, 22ல் உள்ளது. ஒவ்வொரு பக்கமும் பி.ஜே.யின் கையெழுத்தும் உள்ளது. அதில் உள்ளதை அப்படியே தருகிறோம்.

நான் சொல்லியதாக சொல்வது சரியல்ல.

மதுரை ராஜா உசேன் என்பவர் என்னை வந்து பார்க்கவில்லை. எந்த ராஜா உசேன் என்னும் நபரும் என்னை வந்து பார்க்கவில்லை. போலீஸ் விசாரணையில் ராஜா உசேன் என்பவர் என்னை சந்தித்ததன் பேரில் அவருக்கு ரூ500 அளித்து நீதி மன்றத்திற்கு சென்று சரண்டர் செய்ய ஏற்பாடு செய்கின்றேன் என்று சொன்னதாக சொல்வது சரியல்ல.

ஒரு நபரை நீதி மன்றத்தில் சரண்டர் செய்கின்றேன் என உறுதியளித்துவிட்டு, மாறாக அந்த நபரை போலீசார் வசம் சரண்டர் செய்வது அந்த நபருக்கு துரோகம் விளைவிப்பதாகும். 

எனக்கு சில போலீஸ் அதிகாரிகளை தெரியும். போலீஸ் உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, ராஜா உசேன் என்னும் நபரை நான் சரண்டர் செய்ய எந்த ஏற்பாடும் செய்யவில்லை. போலீஸ் விசாரணையின்போது, போலீஸ் அதிகாரிகளை சந்தித்து, ராஜா உசேனை கூட்டிக் கொண்டு போய் ஒப்படைத்தேன்யென்று நான் சொல்லியதாக சொல்வது சரியல்ல.


எத்தனை முரண்பாடுகள், எத்தனை நாக்குகள்.

1999ல் ராஜா உசேனை நான்தான் போலீஸில் சரண்டர் செய்தேன் என போலீஸில் கூறுகிறார்.

அதை மறுத்து பொய் என்று கூறி 2000ல் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.

2000ல் கூறியதை பொய்ப்படுத்தியும்  1999ல் போலீஸாரிடம் சொன்னதை உண்மைப் படுத்தி 2001ல் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.

2004ல் கோவை கோர்ட்டில் இதை மறுக்காமல் உண்மைப்படுத்திச் செல்கிறார்.

2005ல் குறுக்கு விசாரணையின் போது  எந்த ராஜா உசேன் என்னும் நபரும் என்னை வந்து பார்க்கவில்லை  என்று தடாலடியாக கூறி விடுகிறார்.

ராஜா உசேன் என்ற இந்த ஒருவர் விஷயத்தில் மட்டும் எத்தனை முரண்பாடுகள், எத்தனை நாக்குகள் பாருங்கள்.

வழக்கை நடத்துபவர்கள் போலீஸாரிடம் கூறியதை மட்டுமே ஆதாரமாக எடுத்துள்ளனர்.

ராஜா உசேனை நான்தான் சரண் அடையச் செய்தேன் என்று 2001ல் நேதாஜி நகர் பள்ளியில் பி.ஜே. பேசியுள்ள வீடியோ ஆதாரங்களை அவர்கள் பயன்படுத்தவில்லை. அது போன்ற வீடியோக்களை கோர்ட்டில் தாக்கல் செய்தால் பி.ஜே.யின் சுய ரூபத்தை கனம் கோர்ட்டார் புரிவார்கள். 



பி.ஜே. என்ன சொன்னார் என்பது விளங்கி விடும்.

ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ராஜா உசேன் சம்பந்தமான கேள்விக்கு அடுத்து கேட்கப்படும் கேள்வி ஏர்வாடி காசிமை காட்டிக் கொடுத்தது சம்பந்தமானதுதான்.

ஓவ்வொரு நிகழ்ச்சியிலும் ஏர்வாடி காசிம் சம்பந்தமாக பி.ஜே. என்ன சொன்னார் என்பதை எழுதினால் நீண்டு கொண்டே போகும் எனவே இறுதியில் கோவை கோர்ட்டில் நடந்த குறுக்கு விசாரணையில் ஏர்வாடி காசிம் சம்பந்தமாக கூறியுள்ளதைப் பார்ப்போம். 

அதைப் பார்த்தால் அதற்கு முன்பாக பி.ஜே. என்ன சொல்லி உள்ளார் என்பதும் விளங்கி விடும். எனவே குறுக்கு விசாரணை பக்கம் 22ல் பி.ஜே. கூறியுள்ளதை அப்படியே தருகிறோம்.

ராஜா உசேன் ஏர்வாடி காசிம் போன்ற நபர்களை.

ஏர்வாடி காசிம் எனக்கு அறிமுகமானவர் என்று நான் சொல்லவில்லை. ஏர்வாடி காசிம் சம்பந்தமாக எந்த ஒரு போலீஸ் அதிகாரியிடமிருந்தும் நான் எந்த தகவலும் பெறவில்லை. 

போலீஸ் விசாரணையில் ஏர்வாடி காசிமுக்கு சில கொலைகளில் தொடர்பு உள்ளதாக தெரிந்து கொண்டேன் என்று நான் சொல்லவில்லை. 

நசுருதீன் என்ற நபரை எனக்குத் தெரியும். போலீஸ் விசாரணையில் நசுருதீன் என்னை வந்து பார்த்ததாகவும், அவருடன் பேசும்போது ஏர்வாடி காசிமை எப்படியாவது ஏதாவது ஒரு வகையில் போலீஸாரிடம் பிடித்துக் கொடுத்து விடு என்று நான் கூறியதாகவும் சொல்வதும் சரியல்ல.

அதன்படி நசுருதீன் மூலமாக ஏர்வாடி காசிமை ஒரு நாள் தங்க வைத்து ஒரு ஆய்வாளர் மூலமாக தகவல் சொல்லி அந்த ஏர்வாடி காசிமை பிடித்துக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது என்று சொல்வதை மறுக்கின்றேன்.

போலீஸாருக்கும் எனக்கும் நிறைய தொடர்புகள் இருந்தது என்பதையும் அதன்பேரில் ராஜா உசேன் ஏர்வாடி காசிம் போன்ற நபர்களை நான்தான் போலீஸாரிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்துள்ளேன் என்பதையும் தற்போது அவைகளை பொய்யாக மறைக்கின்றேன் என்று சொல்வதையும் மறுக்கின்றேன். இவ்வாறு ஏர்வாடி காசிம் சம்பந்தமாக பி.ஜே. கூறியுள்ளார்.

எனவே பி.ஜே. யார் எப்படிப்பட்டவர் என்ற விளக்கத்துடன் இந்த இதழை நிறைவு செய்ய உள்ளோம்.

பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளது இறையச்சத்தின் வெளிப்பாடு.

28-09-2004 அன்று த.மு.மு.க. தலைமையகத்தை தாக்க பி.ஜே. செய்த சதி; செய்தார். அல்லாஹ்வின் அருளால் அது முறியடிக்கப்பட்டது. அதன் மூலம் பி.ஜே.யின் சுய ரூபத்தை அனுபவபூர்வமாக கண்ட  த.மு.மு.க.வின் கண்ணியத்திற்குரிய தலைவர் ஜவாஹிருல்லாஹ் ஒருஅறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதில், கடந்த காலங்களில் பி.ஜே. உடன் சேர்ந்து செயல்பட்டு அவர் சொல்வதையெல்லாம் உண்மை என்று நம்பி பல அப்பாவி சகோதரர்களுக்கு எதிராக செயல்படும் அவல நிலை எங்களுக்கு ஏற்பட்டதற்காக நாங்கள் வருந்துகிறோம்.

இதற்காக அளவற்ற அருளாளனான வல்ல அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேட்கிறோம். பி.ஜே.யுடன் இருந்த காலத்தில் எங்கள் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட சமுதாய மக்கள் அல்லாஹ்விற்காக எங்களை மன்னிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். என்று குறிப்பிட்டிருந்தார்.

இதைப் படித்த நாம், வலுவான ஒரு அமைப்பின் தலைவர் என்ற வரட்டு கவுரவம் பார்க்காமல் நடந்து விட்ட தவறுகளுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளது இறையச்சத்தின் வெளிப்பாடு என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தோம்.

ஜவாஹிருல்லாஹ்வின் இந்த அறிக்கைக்கு பி.ஜே. விளக்கம் எழுதியுள்ளார். த.மு.மு.க.வுக்கு சொந்தமான பி.ஜே. களவாடியுள்ள உணர்வு பத்திரிக்கையில் (மார்ச் 11-17,2005 பக்கம் 7ல்) அது உள்ளது. அதன் மூலம் பி.ஜே. யார் என்பதை பி.ஜே.யே அடையாளம் காட்டியுள்ளார். அதை அப்படியே தருகிறோம்.


காட்டி கொடுக்கும் வேலையை செய்து வந்தவர் பி.ஜே.

இதன் பொருள் என்ன இது காலம் வரை எங்கள் மூளையை அடகு வைத்து விட்டு பி.ஜைனுல் ஆபிதீன் என்ன சொன்னாலும் தலையாட்டி வந்தோம். சமுதாயத்துக்கே துரோகம் செய்து வந்தோம். என்பதைத் தவிர இதற்கு வேறு அர்த்தம் இல்லை. 

அதாவது இவர்கள் சுய சிந்தனையை அடகு வைத்து விட்டு ஒரு மனிதன் சொன்னதைத் தக்லீத் செய்துள்ளனர். அந்த மனிதன் மீது வெறுப்பு ஏற்படும் வரை அவன் செய்யச் சொன்ன எல்லா அக்கிரமத்தையும் செய்து வந்தனர். 

சமுதாயத்திற்கு துரோகம் செய்யச் சொன்னாலும் அதையும் செய்தனர். நல்லவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்தத் தனி மனிதன் சொன்னால் அதையும் செய்தனர். 

காட்டிக் கொடுக்கச் சொன்னால் காட்டிக் கொடுத்தனர். இவர்கள் செய்த அனைத்துமே இவர்களால் சிந்தித்து செய்ததல்ல. ஒரு மனிதனைக் கண் மூடிப் பின் பற்றியதால் தான் இவ்வாறு அவர்களால் செய்ய முடிந்தது. என்று எழுதியுள்ளார்.

காட்டிக் கொடுக்கச் சொன்னால் காட்டிக் கொடுத்தனர் என்ற வார்த்தையிலிருந்து காட்டி கொடுக்கும் வேலையை செய்து வந்தவர் பி.ஜே. என்ற உண்மையும் அவர் மூலமே வெளிப்பட்டுள்ளது. ஜவாஹிருல்லாஹ் அறிக்கையில் நம்பி செயல்பட்டோம் என்றுதான் கூறியுள்ளார்.

பி.ஜே.யின் அக்கிரமம் தலைவிரித்தாடியுள்ளது.

என்ன என்ன தவறுகளெல்லாம் பி.ஜே. செய்யச் சொன்னார் என்பதை பி.ஜே.தான் தனது விளக்கத்தில் எழுதிக் காட்டியுள்ளார். சமுதாயத்துக்கே துரோகம் செய்யச் சொன்னவர் பி.ஜே. நல்லவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்னவர் பி.ஜே. காட்டிக் கொடுக்கச் சொன்னவர் பி.ஜே .எல்லா அக்கிரமத்தையும் செய்யச் சொன்னவர் பி.ஜே. 

இவ்வாறான பி.ஜே.யின் அக்கிரமம் எந்த அளவுக்கு இருந்தது என்றால் பி.ஜே.யின் மீது வெறுப்பு ஏற்படும் அளவுக்கு பி.ஜே.யின் அக்கிரமம் தலைவிரித்தாடியுள்ளது. அந்த அளவுக்கு சமுதாய துரோகியாக பி.ஜே. இருந்துள்ளார்.

இதை நாம் சொல்லவில்லை, ஜவாஹிருல்லாஹ் சொல்லவில்லை. பி.ஜே.தான் அவர் அபகரித்த பத்திரிக்கையில் எழுதிக் காட்டியுள்ளார். 

பி.ஜே. யார் எப்படிப்பட்டவர் என்பதை அபுஅப்துல்லாஹ் முதல் ஹாமித் பக்ரி வரை எல்லாரும் அடையாளம் காட்டி விட்டார்கள்.

அதையெல்லாம் நம்ப மறுத்தவர்கள், மறுப்பவர்கள் பற்றி ஆச்சரியம் இல்லை. காட்டிக் கொடுத்து சமுதாயத்துக்கே துரோகம் செய்யச் சொன்ன சமுதாய துரோகி பி.ஜே. என பி.ஜே.யே தன்னைப் பற்றி அடையாளம் காட்டி விட்டார்.

இதன் பிறகும் பி.ஜே. பின்னால் உள்ளார்கள் என்றால், மற்றவர்கள் தலையில் அடித்த மாதிரி இடி இடித்த மாதிரி இவர்கள் தலையிலும் அடியோ, இடியோ விழுந்தால்தான் திருந்துவார்கள்.

ஆதாரமற்ற பத்வாவை ஏற்றுள்ளவர்கள்தான் கண்மூடித்தனமானவர்கள்.

ஜவாஹிருல்லாஹ் அறிக்கையில் பி.ஜே. சொல்வதையெல்லாம் உண்மை என்று நம்பி செயல்பட்டதாகத்தான் கூறியுள்ளார். அதுதான் அனுபவ ரீதியான உண்மை.

நம்பிக்கையுடன் செயல்பட்டவர்களை கண் மூடிப் பின் பற்றியவர்கள் போன்றும் இப்பொழுது பி.ஜே. பின்னால் கண் மூடித்தனமாக உள்ளவர்களை அறிவாளிகள் போன்றும் பி.ஜே. எழுதியுள்ளார்.

பி.ஜே.யின் இந்தக் கூற்று பொய் என்பதற்கு பி.ஜே.யின் டவுசர் கொள்கை ஒரு ஆதாரம். பாதியளவுக்கு தொடை தெரியும் அரைக் கால் டவுசர் அணிந்து தொழுதால் அதைக் குற்றம் என்று கூற மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை என்று பி.ஜே. வழங்கியுள்ள ஆதாரமற்ற பத்வாவை ஏற்றுள்ளவர்கள்தான் கண்மூடித்தனமானவர்கள்.

எனவே இப்பொழுது பி.ஜே. பின்னால் இருக்கும் டவுசர் பேர்வழிகள்தான் கண்மூடித்தனமாக பின் பற்றுபவர்கள் என்பது தெளிவு. வஸ்ஸலாம்.
                                     வெளியீடு: கா.அ.முஹம்மது பழுலுல் இலாஹி

இது  05-08-2005 அன்று  வெளியிடப்பட்டது. 
hவவி:ஃஃஅனகயணடரடடையாi.டிடழபளிழவ.உழஅஃ2005ஃ08ஃடிடழப-pழளவ_05.hவஅட அ

ததஜவினர் தங்களை வரலாறு தெரிந்த அறிவாளிகள் என்று எழுதியுள்ளதால்.  பி.ஜே. உணர்வு இதழில் எழுதியது, மற்றும் பி.ஜே.யின் வாக்கு மூலங்களையும் ராஜா உசேன் அவர்கள் சிறையில் இருந்தபொழுது வெளியிட்ட நோட்டீஸையும் ஆதாரமாகக் கொண்டு 12 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டதை உங்கள் முன் வைத்துள்ளோம்.


Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.