பார்வை இல்லாதவர்களுக்கான தனி மத்ரஸா மதுரையில் துவக்கப்பட்டது

தமிழ்நாட்டில் முதன்முறையாக முஸ்லிம் பார்வையில்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு தனி மத்ரஸா மதுரையில் துவக்கப்பட்டது. (அல்ஹம்துலில்லாஹ்)
*********************************************************************************

தமிழ்நாட்டில் முஸ்லிம்  ஊனமுற்றவர்களுக்கான 
எந்த ஒரு  நல்வாழ்வு இல்லமும்  இல்லையேன்பது மிகவும் வருத்தத்திற்குரியது 

தமிழகம் முழுவதும் முஸ்லிம் பார்வையற்றவர்களுக்காக கல்வி நிறுவனங்களோ, ஆதரவு இல்லங்களோ, நமது சமூகத்தில் இல்லை. இதன் காரணமாக முஸ்லிம் பார்வையற்றவர்கள் பிற மதத்தினர் நடத்தும் கல்வி நிறுவனங்களிலும், ஆதரவு இல்லங்களிலும் தங்கி கல்வி பயிலும் காலங்களில் அவர்கள் மூலமாக பெற்ற உதவிகளினால் ஈர்ககப்பட்டு இஸ்லாத்தை விட்டு வெளியேறி கொண்டிருக்கின்றனர். (இன்னாலில்லாஹி வாஇன்னா இலைஹி ராஜிவூன்).

முஸ்லிம் பார்வையற்றவர்களின் இந்த கவலையான நிலை மாறவும், அவர்களின் இம்மை மறுமை வாழ்க்கை வெற்றிக்காகவும் அல்லாஹ்வின் உதவியால் தமிழ்நாட்டில் முதன்முறையாக முஸ்லிம் பார்வையில்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு தனி மத்ரஸா மதுரையில் துவக்கப்பட்டது. (அல்ஹம்துலில்லாஹ்)

இந்த மத்ரஸாவில் குர்ஆன் மனனம் செய்தல், மார்க்க சட்ட திட்டங்கள் மற்றும் சுன்னத்தான வழிமுறைகள் கற்றுத்தரப்படுகிறது. மேலும் பார்வையற்றோருக்கான புள்ளி எழுத்துக்கள் மூலம் (பிரைலியின் மூலம்) தமிழ், ஆங்கிலம் , அரபி மொழிகள் கற்று தரப்படுகின்றது மற்றும் TNPSC இதர அரசு பணிக்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது. மேலும் அரசின் சலுகைகள் மற்றும் சுயதொழில் சம்பந்தமாக ஆலோசனைகள் வழங்கக்கூடிய ஆலோசனை மையமும் இயங்கி வருகிறது. இன்னும் சிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சியளிக்கப்படுகிறது.

இங்கு பார்வையற்ற மாணவர்களுக்கு உணவு தங்குமிடம் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த மதரஸாவிற்கென்று நிரந்தர வருமானமோ சொந்த இடமோ கிடையாது. முழுமையாக அல்லாஹ்வின் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் நடந்து வருகிறது.

இத்தகவலை காணும் நல் உள்ளங்கள் நேரில் வந்து மதரஸாவை பார்வையிட்டு தங்களால் இயன்ற உதவிகளை வழங்குவீர்களேயானால் பார்வையற்ற மாணவர்களின் வாழ்வில் ஈருலக ஒளி காட்டிய நன்மை தங்களுக்கு கிடைக்கும். இன்னும் மதரஸாவிற்கு உதவி செய்யும் நல்லுள்ளங்களுக்காக பார்வையற்ற மாணவர்கள் அனுதினமும் துஆ செய்கிறார்கள்.

குறிப்பு: தங்கள் பகுதியில் முஸ்லிம் கண் தெரியாதவர்கள் வசித்தால் அத்தகவலை தெரிவிக்கவும். மேலும் உங்கள் தொடர்புகளிலுள்ள முஸ்லிம்கள் அனைவருக்கும் இத்தகவலை பகிரவும்.

முகவரி:
ஜாமிஆ இஹ்ஷானுல் உம்யான் பார்வையற்றோர் மதரஸா,
64/28, கண்ணதாசன் மெயின் தெரு,
S.S காலனி,
மதுரை-10.
செல்: +918973854134, +919942113079.
மெயில்: jamiaehsaanulumyan@gmail.com

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "யார் ஒரு பார்வையற்றவருக்காக 40 அடிவரை வழிகாட்டுவாரோ அவருக்கு சுவர்க்கம் வாஜிபாகிவிடும். மற்றொரு ரிவாயத்தில் அவருடைய முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுகிறது".

இச் செய்தியை பகிருங்கள்.
தங்களால் இயன்ற உதவிகளை வழங்குவீர்

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.