மிகப்பெரிய அபாண்டம்!!! pls forward

from Abdullah Muqrin
date Dec 24, 2007 10:09 AM
subject மிகப்பெரிய அபாண்டம்!!! pls forward
mailed-by gmail.com

மிகப்பெரிய அபாண்டம்!!!

உமர் (ரழி) அவர்களுக்கு முன்னால் வயது முதிர்ந்த பாதிரி ஒருவர் தோன்றுகின்றார். அவரது நல்ல செயல்கள் உமர் (ரழி) அவர்களுக்கு முன் புகழப்படுகின்றது. உமர் (ரழி) அவர்கள் உடனே திருக்குர்ஆனின் 88 ஆம் அத்தியாயத்தின் வசனங்களை அவருக்கு முன் ஓதிக்காட்டுகின்றார்கள்.

அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும். (88:2) அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும். (88:3) கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை புகும். (88:4) கொதிக்கும் ஊற்றிலிருந்து, ( அவர்களுக்கு) நீர் புகட்டப்படும். (88:5) அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை. (88:6) அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது, அன்றியும் பசியையும் தணிக்காது. (88:7)

இறை விசுவாசத்தின் உன்னதமான நிலையில் உமர் (ரழி) போன்ற ஸஹாபாக்கள் இருந்தனர்.

ஆனால் இன்று சில முஸ்லிம்களின் நிலையை எண்ணும்போது அன்று உமர் (ரழி) அவர்கள் எந்த பாதிரியைப் பற்றி அந்த வசனங்களை மேற்கோள் காட்டினார்களோ அதற்குப் பொருந்திப்போகும் நிலையில் அவர்கள் ஆகிவிட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது. சுப்ஹானல்லாஹ்!!! அல்லாஹ்வுக்கு ஒரு மகன் இருக்கின்றான் என்ற கிறித்தவர்களின் அபாண்டமான சொல்லுக்கு வாழ்த்து தெரிவிக்கும் முஸ்லிம்கள்!!! கிறித்தவர்களின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை இன்று முஸ்லிம்களே முன்னின்று நடத்தும் அவலம்! அல்லாஹ் காப்பாற்ற வேண்டும். எந்த ஒரு சொல்லை அவர்கள் கூறியதால் வானம் இடிந்து மலைகள் வெடித்துச் சிதறுண்டு பூமி நொறுங்கித் தவிடுபொடியாகும் அளவுக்கு மிகப் பெரிய அபாண்டம் என்று அல்லாஹ் கூறுகின்றானோ அத்தகைய சொல்லுக்குத் தூபம் போட்டு வரவேற்கும் முஸ்லிம்கள்!!! அவர்கள் நமக்கு பெருநாள் வாழ்த்து கூறுகின்றார்கள் அவர்களுக்கு நாம் வாழ்த்துக் கூறாமல் இருந்தால் அவர்கள் மனவேதனைப்படுவார்களே! என்பது பெயர்தாங்கியின் பதில். அடப்பாவி! கிறித்தவ நண்பனை திருப்திப்படுத்தி இறைவனின் கோபத்தை நீ சம்பாதித்துக் கொள்கின்றாயா ? உனக்கு உண்மையிலேயே அந்தக் கிறித்தவ நண்பனின் மீது அக்கறை இருந்தால் இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவனுக்கு இஸ்லாத்தை எத்திவைத்திருக்கலாம் அல்லவா ? '' அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்து தானும் நல்லமல்கள் செய்து கொண்டு நான் முஸ்லிம்களில் ஒருவன் என்று கூறுபவனைவிட நல்ல சொல்லைக் கூறக்கூடியவன் யார்?'' (41:33) என்று அல்லாஹ் கேட்கின்றானே ? இத்தகைய நல்லவர்களில் ஒருவனாக நீ ஆயிருக்கக் கூடாதா ? நான் முஸ்லிம் என்று கூறுவதில் உனக்கு வெட்கமா ?

முஸ்லிம்களே கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் என்பது வெறும் ஒரு கொண்டாட்டம் என்று நினைத்து விடாதீர்கள். இறைவனின் கோபத்தைப் பெற்றுத் தரும் கொண்டாட்டம் அது. அல்லாஹ்வின் மகன் என்று அவர்கள் கற்பனை செய்யும் இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாள். கிறிஸ்துமஸிற்கு வாழ்த்து கூறப்போகும் முஸ்லிமே! அல்லாஹ்வுக்கு மகன் உண்டு என்று நீ நம்புகின்றாயா ? 2004 ஆம் ஆண்டு சுனாமி என்ற பெயரில் ஆழிப் பேரலையாய் இறைவனின் கோபம் பொங்கியெழுந்ததே அது கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் கோலாகலங்கள் முடிந்த மறு தினம்! ஆம் டிசம்பர் 26. எந்த வழிகெட்டவர்களுடைய வழியில் இறைவா என்னைச் சேர்த்துவிடாதே என்று நீ ஒவ்வொரு தினமும் துஆ செய்கின்றாயோ அந்த வழிகேட்டில் நீ விழப்போகின்றாயா ?

ஏழுவானங்களுக்கு அப்பாலிருந்து உனக்கு வந்திறங்கியிருக்கின்றதே அந்தக் குர்ஆன் அருளப்பட்டதன் நோக்கம் என்ன என்பதை நீ அறிவாயா? உன்னைப் படைத்த இறைவனே கூறுகின்றான் கேள்.

தன் அடியார் மீது எந்தக் கோணலும் இல்லாத இந்த வேதத்தை இறக்கிவைத்தானே அந்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்! அது உறுதியானது! அவனிடமிருந்துள்ள கடினமான வேதனையைக் குறித்து எச்சரிக்கின்றது. மேலும் நற்கருமங்கள் செய்யும் விசுவாசிகளுக்கு நற்கூலி உண்டு என்று நற்செய்தி கூறுவதற்காகவும் (இது அருளப்பட்டுள்ளது) அதில் அவர்கள் நிலைத்திருப்பார்கள். மேலும் அல்லாஹ் தனக்கு ஒரு மகனை எடுத்துக் கொண்டான் என்று கூறியவர்களை எச்சரிப்பதற்காகவும் (இவ்வேதம் அருளப்பட்டுள்ளது) அவர்களுக்கு இதுபற்றிய எந்த ஞானமும் இல்லை , அவர்களுடைய மூதாதைகளுக்கும் (இல்லை) அவர்களுடைய வாயிலிருந்து புறப்படும் வார்த்தை மிகவும் பெரிய (அபாண்டமான)தாகும் (அத்தியாயம் 18 அல்கஹ்ஃப் 1 முதல் 5 வரை)

நபிகள் நாயகத்துக்கே பிறந்த நாள் கொண்டாடுவது பித்அத் என்று கூறும் முஸ்லிமே! கிறித்தவர்கள் கூறும் இயேசுகிறிஸ்துவுக்குக் கொண்டாடப்படும் பிறந்த நாளுக்கு நீ வாழ்த்துக் கூறுகின்றாயே! உனக்கு வெட்கமாக இல்லையா ? நயவஞ்சகம் உன்னை ஆட்கொண்டுவிட்டதா ? எச்சரிக்கை! நயவஞ்சகர்களின் இருப்பிடம் நரகத்தின் மிகவும் கீழான அடித்தட்டு!

பிதா சுதன் பரிசுத்த ஆவி என்று குழப்பங்கள் நிறைந்த கடவுட் கொள்கையில் உழன்று கொண்டிருக்கும் கிறிஸ்தவ நண்பர்களே! தெளிவான ஏகத்துவக் கொள்கையின் பால் நீங்கள் வாருங்கள். அதுவே இஸ்லாம் கூறும் இறைக் கொள்கை. நூஹ § (நோவா) முதல் முஹம்மது (ஸல்) வரை இறைத் துதர்கள் பிரகடனப்படுத்திய ஏகத்துவம். இறைத் தூதர் ஈஸா (இயேசு) அலைஹிஸ்ஸலாம் கூறிய இறைக் கொள்கை. இயேசு கடவுள் என்றால் தனக்கு துன்பம் ஏற்பட்டபோது பிதாவே என்றழைத்துப் பிரார்த்தித்தார் என்று பைபிள் கூறுகின்றதே! கடவுளே கடவுளிடம் பிரார்த்தித்தாரா ? பரிசுத்த ஆவிக்கும் இயேசுவுக்குமிடையயே உரையாடல் நடந்திருக்கின்றதே! கடவுளே கடவுளிடம் உரையாடினாரா ? கடவுளை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை என்று பைபிள் கூறுகின்றதே ? மக்கள் முன் நடமாடிய இயேசு கடவுளா ? மூன்றில் ஒன்று என்றும் 1ஜ் 1ஜ் 1 = 1 என்றெல்லாம் குழப்பும் உங்களின் பைபிள் கூறும் கடவுள் 1+1+1 மூன்று அல்லவா ? ஆனால் திருக்குர்ஆன் கூறும் கடவுள் கொள்கையில் ஏதேனும் குழப்பத்தையோ முரண்பாட்டையோ உங்களால் காண இயலுமா ? தெளிந்த நீரோடையினும் தெளிவு அன்றோ அது ? பாலினும் வெண்மையன்றோ அது ? திருக்குர்ஆன் பிரகடனப்படுத்தும் இறைவனின் தன்மைகள் இதோ

تَبَارَكَ الَّذِي نَزَّلَ الْفُرْقَانَ عَلَى عَبْدِهِ لِيَكُونَ لِلْعَالَمِينَ نَذِيرًا

உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன். (25:1)

الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلَمْ يَتَّخِذْ وَلَدًا وَلَمْ يَكُن لَّهُ شَرِيكٌ فِي الْمُلْكِ وَخَلَقَ كُلَّ شَيْءٍ فَقَدَّرَهُ تَقْدِيرًا

( அந்த நாயன்) எத்தகையவன் என்றால் வானங்கள், பூமி (ஆகியவற்றின்) ஆட்சி அவனுக்கே உரியது அவன் (தனக்கென) ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை அவனுடைய ஆட்சியில் அவனுக்கு கூட்டாளி எவருமில்லை அவனே எல்லாப் பொருட்களையும் படைத்து, அவற்றை அதனதன் அளவுப் படி அமைத்தான். (25:2)

وَقُلِ الْحَمْدُ لِلّهِ الَّذِي لَمْ يَتَّخِذْ وَلَدًا وَلَم يَكُن لَّهُ شَرِيكٌ فِي الْمُلْكِ وَلَمْ يَكُن لَّهُ وَلِيٌّ مِّنَ الذُّلَّ وَكَبِّرْهُ تَكْبِيرًا

" அன்றியும், ( தனக்குச்) சந்ததியை எடுத்துக் கொள்ளாதவனும், ( தன்) ஆட்சியில் தனக்குக் கூட்டாளி எவரும் இல்லாதவனும், எந்தவித பலஹீனத்தை கொண்டும் எந்த உதவியாளனும் (தேவை) இல்லாமலும் இருக்கிறானே அந்த நாயனுக்கே புகழ் அமைத்தும்" என்று (நபியே!) நீர் கூறுவீராக இன்னும் (அவனை) எப்பொழுதும் பெருமைப் படுத்த வேண்டிய முறையில் பெருமைப் படுத்துவீராக. (17:111)

لَوْ أَرَادَ اللَّهُ أَنْ يَتَّخِذَ وَلَدًا لَّاصْطَفَى مِمَّا يَخْلُقُ مَا يَشَاء سُبْحَانَهُ هُوَ اللَّهُ الْوَاحِدُ الْقَهَّارُ

அல்லாஹ் (தனக்கு) ஒரு பிள்ளையை எடுத்துக் கொள்ள நாடியிருந்தால், அவன் படைத்துள்ளவர்களிலிருந்து தான் விரும்பிவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பான்; ( எனினும் இத்தகையவற்றிலிருந்து) அவன் பரிசுத்தமானவன். அவனே (யாவரையும்) அடக்கியாளும் வல்லமை மிக்கவனாகிய ஏகனான அல்லாஹ். (39:4)

بَدِيعُ السَّمَاوَاتِ وَالأَرْضِ أَنَّى يَكُونُ لَهُ وَلَدٌ وَلَمْ تَكُن لَّهُ صَاحِبَةٌ وَخَلَقَ كُلَّ شَيْءٍ وهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ

அவன் வானங்களையும் , பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி, எவரும் இல்லாதிருக்க, அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (6:101)

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ

( நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. (112:1)

اللَّهُ الصَّمَدُ

அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். (112:2)

لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ

அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. (112:3)

وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ

அன்றியும் , அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (112:4)

அல்லாஹ்வுக்கு ஒரு மகன் உண்டு என்பது மிகவும் அபாண்டமான கூற்று ஆகும். மிகப்பெரிய பொய் ஆகும். அவ்வாறு இருந்திருந்தால் அவன் நமக்கு அதைப்பற்றி கூறியிருப்பான். இன்னும் அல்லாஹ் தன் நபியிடம் கூறுவதைப் பாருங்கள்

قُلْ إِن كَانَ لِلرَّحْمَنِ وَلَدٌ فَأَنَا أَوَّلُ الْعَابِدِينَ

( நபியே!) நீர் கூறும்; " அர் ரஹ்மானுக்கு ஒரு சந்ததி இருந்திருக்குமானால், ( அதை) வணங்குவோரில் நானே முதன்மையானவனாக இருந்திருப்பேன்!" (43:81)

அன்புச் சகோதரர்களே! சிந்தியுங்கள். கொழுந்துவிட்டெரியும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் நிராகரித்தால் நஷ்டம் உங்களுக்கே. இதைப் படிக்கும் முஸ்லிம்கள் தங்கள் சகமுஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இந்தச் செய்தியை எத்திவையுங்கள். அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக.

யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்;. அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் ( பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான். (4:56)

( அவர்களில்) எவர்கள் ஈமான் கொண்டு, நன்மையான காரியங்களைச் செய்கின்றார்களோ அவர்களை சுவனபதிகளில் புகுத்துவோம், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்;. அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பர்; அங்கு அவர்களுக்குப் பரிசுத்தமான துணைவியர் உண்டு. அவர்களை அடர்ந்த நிழலிலும் நுழையச் செய்வோம். (4:57)

( நபியே!) நீர் சொல்வீராக: " காஃபிர்களே! (109:1) நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன். (109:2) இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர். (109:3) அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன். (109:4) மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர். (109:5) உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்." (109:6)



அன்புடன்

முக்ரின்

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.