பாமனில் பஸ்லுல் இலாஹி இதில் என்ன செய்தி இருக்கிறது.
பாமனில் பஸ்லுல் இலாஹி இதில் என்ன செய்தி இருக்கிறது என்று பலர் கேட்டுள்ளனர். இந்த கேள்வி வர வேண்டும் என்பதற்காகவே வெறுமனே விட்டு வைத்து இருந்தோம். நாம் நிற்கும் இந்த பாலத்தில் பின்னால் பல வராலாறுகள் இருக்கிறது.
இது பிரபலமான பாமன் பாலம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். கால்வாயா? சமுத்திரமா? ஷீதுக் கால்வாயா? சேதுக் கால்வாயா? ஷீது சமுத்திரமா? சேது சமுத்திரமா? என்ற விவாதங்கள் நடந்தது ஒரு காலத்தில். அது அமைதியாக முடிந்து விட்டது. மன்னிக்கவும் ஷீது என்ற பெயர் அமுங்கி விட்டது. அமுக்கப்பட்டு விட்டது.
இப்பொழுது ராமர் பாலமா மணல் திட்டா என்ற விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஆதம் பாலம் என்றுதான் அதற்கு பெயராக இருந்தது. இப்பொழுது அதுவும் மறக்கடிக்கப்பட்டு விட்டது. எனவே இந்த வரலாறுகளை சொல்ல வரவில்லை.
நாம் நிற்கும் பிரபலமான இந்த பாமன் பாலத்தை கடக்கும்போது பள்ளிவாசலின் மினாராவைத்தான் முதன் முதலில் பார்க்க முடியும். இமயம் முதல் குமரி வரை என எந்தப் பகுதயிலிருந்து வாகனத்தில் ராமேஸ்வரம் வந்தாலும் இந்த பாமன் பாலத்தை கடந்துதான் போக வேண்டும். அப்படி இந்த பாமன் பாலத்தை கடந்து போகும்போது ராமேஸ்வரம் செல்லும் முன் பள்ளிவாசலின் இந்த மினாராவைத்தான் முதன் முதலில் பார்த்தாக வேண்டும்.
எனவே பல சமூக விரோதிகள் இந்த மினாராவை இடிப்பதற்காக பல சதி முயற்சிகள் செய்தனர். அல்லாஹ் அருளால் அனைத்து சதிச் செயல்களும் முறியடிக்கப்பட்டன. இதுதான் அந்த வரலாறு.
Comments