ஜமாஅத்தே இஸ்லாமியால் நடத்தப்படும் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா.
from Abdullah Muqrin
date Dec 24, 2007 11:38 AM
subject ஜமாஅத்தே இஸ்லாமியால் நடத்தப்படும் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா
mailed-by gmail.com
அன்பானவர்களே! அஸ்ஸலாமுஅலைக்கும்.
இஸ்லாமியப் பேரியக்கம் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் ஜமாஅத்தே இஸ்லாமியர் தாங்களின் நிர்வாகத்தின் கீழ் கேரளாவில் இயங்கும் ஒரு கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடியுள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த நிகழ்ச்சியில் ''கிராஅத்'' ஓதியதாகும். ஆம் அல்லாஹ்வின் மகனுக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் கிராஅத்துடன் நடந்துள்ளது. ஒரு தனிமனிதன் இத்தவறைச் செய்திருந்தால் கூட நாம் உபதேசிக்கலாம். தங்களை சமூகத்தின் வழிகாட்டிகள் என்று காட்டிக்கொள்ளும் இந்த இயக்கப் பேர்வழிகளின் இந்த தரம் தாழ்ந்த நிலையை மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்து அல்லாஹ்வின் எதிரிகளான இவர்களை அடையாளம் காட்டவேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு. இதற்கு முன்னரும் இந்துக்களின் பண்டிகைகளான ஓணம் என்னும் பண்டிகைக்கு விருந்து நடத்திய சமரசப் பேர்வழிகள் இவர்கள். கேரளாவில் இவர்களாலேயே நடத்தப்படும் மாத்யமம் என்ற பத்திரிகையில் இவர்கள் நடத்திய கிறிஸ்துமஸ் விழா பற்றிய செய்தி இத்துடன் அட்டாச் செய்யப்பட்டுள்ளது. டவுண்லோட் செய்து பார்வையிடவும். செய்தியின் தமிழாக்கம்
"அன்ஸார் விமன்ஸ் அன்ட் கம்ப்யூட்டர் கல்லூரி நடத்திய கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சி கல்லூரியின் ஆங்கிலத்துறை முதல்வர் டா. திரீஸா டொமினிக் தலைமயில் நடைபெற்றது. டா. ஆப்ரகாம் ஜோஷி கிறிஸ்துமஸ் உரையாற்றினார். அட்வக்கேட் பி.கே. நஸீமா, செயர்பெர்சன் ஷெஹீபா ஸபக்கா (இருவரும் முஸ்லிம்கள்) ஆகியோர் உரையாற்றினர். ஷெர்மி கிராஅத் ஓதினார். டாக்டர் பி.கே சுலைகா (முஸ்லிம்) வரவேற்புரையும் நடாஷா நன்றியுரையும் ஆற்றினர்."
கிறிஸ்துமசிற்கு கிராஅத் ஓதிய பாவிகளே! பின்வரும் வசனமும் அதே திருக்குர்ஆனில்தானே உள்ளது? உங்கள் அறிவு எங்கே போயிற்று?
இன்னும், "அர்ரஹ்மான் (தனக்கென) ஒரு குமாரனை எடுத்துக் கொண்டுள்ளான்" என்று அவர்கள் கூறுகிறார்கள். (19:88)
"நிச்சயமாக நீங்கள் அபாண்டமான (ஒரு கூற்றைக்) கொண்டு வந்திருக்கிறீர்கள். (19:89)
இவர்களின் இந்தக் கூற்றினால் வானங்கள் வெடித்து பூமி பிளந்து மலைகள் சிதறுண்டு விடும் போதிலும். (19:90)
அவர்கள் அர்ரஹ்மானுக்கு ஒரு குமாரன் உண்டென்று தாவாச்செய்வதினால்- (19:91)
ஒரு குமாரனை எடுத்துக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையில்லாதது. (19:92)
ஏனென்றால் வானங்களிலும், பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அர்ரஹ்மானிடம் அடிமையாய் வருபவரேயன்றி வேறில்லை. (19:93)
இப்படிக்கு
இறைபணியில் இறுதிமூச்சு இருக்கும் வரை
முக்ரின்
Comments