1959ல் மொழி பெயர்க்கப்பட்ட தப்ஸீரின் ஒரு பக்கத்தை சேம்பிளுக்காக இதில் இணைத்துள்ளோம். நான் என்பதை அக்காலத்தில் யான் என்று எழுதி உள்ளார்கள் என்பதை இந்த பக்கத்திலிருந்து அறியலாம். அக்னி, நெருப்பு, தீ நரகம், நரக நெருப்பு என்று அவரவர் கால வழக்கப்படி மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள். 141 ஆயத்துகளில் உள்ள அந்த வித்தியாசமான மொழி பெயர்ப்புகளை புளு - நீல கலரில் ஹை லைட் செய்து பிளாக்கரில் இடம் பெறச் செய்துள்ளோம். குர்ஆன் இன்டக்ஸ் முன்பு அஃராப், அநியாம், அக்கிரமம், அநியாயம் என்ற தலைப்புகளில் 4 பாகம் வெளியிட்டுள்ளோம். இது 5வது பாகம் https://mdfazlulilahi.blogspot.com/2019/11/blog-post.html 1. ஒருவன் நெருப்பை - தீயை மூட்டுகிறான். அந்த நெருப்பு அவனைச் சுற்றியுள்ளதை வெளிச்சமாக்கியபோது அவர்களின் ஒளியைப் போக்கி , பார்க்க முடியாமல் இருள்களில் அவர்களை அல்லாஹ் விட்டு விட்டான். இவனது தன்மை போன்றே (வழிகேட்டை வாங்கிய) இவர்களது தன்மையும் உள்ளது. 2:1...
Comments