பாராளுமன்றத்தையும் சட்டமன்றத்ததையும் மு.லீக் எம்.பியும், எம்.எல்.ஏ.க்களும் ஸ்தம்பிக்கச் செய்வார்களா?

பாபரி மஸ்ஜிதை இடித்தவர்களின் இல்லங்களை இடிக்கும் போராட்டம் செய்வோம் என அறிவித்திருக்க வேண்டும்.
iuml kuwait பொறுப்பாளர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. உங்கள் மெயில்கள் வந்தவண்ணம் உள்ளன. 30.11.007 அன்று பாபர் மசூதி நினைவு சிறப்பு கருத்தரங்கம் நடத்தப்பட்டது. சாய்க்கப்பட்ட பாபர் மசூதியும், சமுதாய அரசியலும் என்ற தலைப்பில் பேசப்பட்டது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இதுவரை செய்த சாதனைகள், இனி செய்ய வேண்டிய பணிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வரலாற்றுச் சுவடுகள், கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (ரஹ்) அவர்களின் வாழ்க்கைப் பக்கங்கள், தற்போதைய முஸ்லிம் போலி அரசியல்வாதிகளின் ஏமாற்று வித்தைகள் .. (இது மாதிரி பல தலைப்புகளில் பேசப்பட்டன.)

குஜராத் முஸ்லிம் இனப்படுகொலைக்குக் காரணமான குற்றவாளிகளின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தியாவின் மாண்புமிகு குடியரசு தலைவர், மாண்புமிகு பிரதமர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு அனுப்ப வேண்டிய அவசர கோரிக்கை மனுக்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களிடம் விநியோகிக்கப்பட்டன.

இது மாதிரி செய்திகளெல்லாம் மெயிலில் குறிப்பிட்டிருந்தீர்கள். அல்ஹம்துலில்லாஹ். மீட்க முடியாதவை உயிர்கள் மட்டுமே. அதனால் அரசியல்வாதிகள் அவற்றுக்கு அதாவது இறந்து விட்டவர்களுக்கு நினைவு நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். நினைவு தினங்களை கொண்டாடுவார்கள். இடங்கள் மீட்க முடியாதவை அல்ல. கட்டிடங்கள் மீண்டும் எழுப்ப முடியாதவையும் அல்ல. எனவே பாபர் மசூதி நினைவு தினம் என்பது நியாயமா? பாபர் மசூதியை மீட்பது எப்படி? என்ற கருத்தரங்கம் நடத்தி இருக்க வேண்டும்.

1992இல் டிசம்பர் அன்று பிரதமர் அளித்த வாக்குறுதிப்படி பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில் உடனே மத்திய அரசு கட்டித் தர வேண்டும். இல்லையேல் பாபரி மஸ்ஜிதை இடித்தவர்களின் இல்லங்களை இடிக்கும் போராட்டம் செய்வோம் என அறிவித்திருக்க வேண்டும். அதற்குரிய ஆய்வு கருத்தரங்கம் நடத்தி இருக்க வேண்டும். பாபர் மசூதி நினைவு என நிகழ்ச்சி நடத்தியது விமர்சிக்கப்பட வேண்டிய ஒன்றுதான். இருந்தாலும் குவைத்திலாவது இ.யூ.மு. லீக் என்ற பெயரில் இந்த அளவாவது செயல்பாடுகள் நடக்கிறதே என்று சந்தோசப்படுகிறோம்.

ஆறு கோரிக்கைகளை வலியுறுத்தி வினியோகிக்கப்பட்ட அவசர கோரிக்கை மனுக்களை மு.லீக் எம்.பி.க்களுக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கும் அனுப்பி பாராளுமன்றங்களிலும் சட்டமன்றங்களிலும் வலியுறுத்தி பேசச் சொல்ல வேண்டும். கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 6 மாதிரி இல்லாமல் இந்த 2007 டிசம்பர் 6இல் பாராளுமன்றத்தில் பாபரி மஸ்ஜிதுக்காக குரல் கொடுத்து தர்ணா செய்ய வேண்டும். இப்படி பலர் காதர் மைதீன் எம்.பிக்கு போன் செய்துள்ளனர். வாய்ப்பு இல்லை முடியாது என மறுத்து இருக்கிறார்.

iuml kuwait பொறுப்பாளர்கள் போன் செய்தால் வேலூர் பாராளுமன்ற உறுப்பினரும் மு.லீக் தலைவருமான காதர் மைதீன் 2007 டிசம்பர் 6இல் பாராளுமன்றத்தில் பாபரி மஸ்ஜிதுக்காக குரல் கொடுத்து தர்ணா செய்வார் என எதிர் பார்க்கிறோம். எனவே iuml kuwait பொறுப்பாளர்கள் காதர் மைதீன் அவர்களுக்கு போன் செய்யுமாறு வேண்டுகிறோம்.

வரக் கூடிய தமிழக சட்டமன்ற கூட்டத்தில் பாபரி மஸ்ஜிதுக்காக மு.லீக் எம்.எல்.ஏ.க்கள் குரல் கொடுக்க வேண்டும். உடனடியாக பாபரி மஸ்ஜிதை கட்ட வேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர முயற்சிக்குமாறு தமிழக மு.லீக் எம்.எல்.ஏ.க்களை iuml kuwait பொறுப்பாளர்கள் வலியுறுத்த வேண்டும். அதன் பிறகாவது மு.லீக் எம்.பியும், எம்.எல்.ஏ.க்களும் பாபரி மஸ்ஜிதுக்காக பாராளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் குரல் கொடுப்பார்களா? பாபரி மஸ்ஜிதுக்காக பாராளுமன்றத்தையும் சட்டமன்றத்தையும் மு.லீக் எம்.பியும், எம்.எல்.ஏ.க்களும் ஸ்தம்பிக்கச் செய்வார்களா? என்று பார்ப்போம். வஸ்ஸலாம்.

1992 டிசம்பர் 6 பாபரி மஸ்ஜித் இடிப்பு தின சிந்தனை. 5.12.06
http://fazlulilahi.blogspot.com/2006/12/1992-6_05.html

2006 டிசம்பர் 6 இல் திசை திரும்பிய பாராளுமன்றம். 7.12.06
http://fazlulilahi.blogspot.com/2006/12/2006-6.html

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.