நெல்லை த.மு.மு.க. டிசம்பர் 6 நீதி மன்ற முற்றுகை.

த.மு.மு.க.வுக்கு வேன் போகக் கூடாது போனால் வழக்கு போடப்படும்.

பாபரி மஸ்ஜிதை இடித்தவர்கள் மீதான வழக்கு கட்டுகள் மீது நீதிபதிகள் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதைக் கண்டித்தும் வழக்குகளை துரிதப்படுத்தக் கோரியும் த.மு.மு.க. சார்பில் நீதி மன்றம் முன் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. நெல்லையில் த.மு.மு.க.வுக்கு கூட்டம் சேர விடக் கூடாது என்பதில் போலீஸ் முக்கிய பங்கு ஆற்றி உள்ளது. குறிப்பாக தென்காசி விஷயத்தில் முஸ்லிம்களின் கண்டனத்துக்கு உள்ளான ஆர்.எஸ்.எஸ். ஏஜெண்டு என்றழைக்கப்படும் டி.எஸ்.பி. மயில்வாணன் பெரும் பங்காற்றியுள்ளார். காரணம் தென்காசி விஷயத்தில் த.மு.மு.க. மட்டுமே முஸ்லிம்களுக்காக போராட்டம் நடத்தியது.

தென்காசி கலவர விஷயத்தில் போலீஸுக்கு ஒத்து ஊதி ஆர்.எஸ்.எஸ். ஏஜெண்டாக செயல்பட்டது த.த.ஜ. எனவே த.த.ஜ. துணைத் தலைவர் ஸைபுல்லாஹ் ஹாஜா தலைமையில் வந்த ஆர்.எஸ்.எஸ். (த.த.ஜ) வாகனங்கள் விரைவாக நெல்லை வந்து சேர முன் பின் பாதுகாப்பு அளித்து நெல்லை பேட்டை வரை வந்து விட்டுச் சென்றுள்ளார் ஆர்.எஸ்.எஸ். ஏஜெண்டு என்றழைக்கப்படும் தென்காசி டி.எஸ்.பி. மயில்வாணன்.

அதே நேரம் த.மு.மு.க.வுக்கு வேன் போகக் கூடாது போனால் வழக்கு போடப்படும் என மிரட்டியுள்ளார். டிசம்பர் 6 அன்று உணர்வுள்ள முஸ்லிம்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டும் விதமாக பணிக்கு செல்ல மாட்டார்கள். அது போல் ஆட்டோ ஓட்டுனர்கள் ஆட்டோ ஓட்ட மாட்டார்கள். தென்காசியில் உள்ள முஸ்லிம் ஆட்டோ ஓட்டுனர்களை நிர்ப்பந்தப்படுத்தி டிசம்பர் 6 அன்று ஆட்டோ ஓட்ட வேண்டும் என்று தென்காசி டி.எஸ்.பி. மயில்வாணன் மிரட்டியுள்ளார்.

த.மு.மு.க.வின் நீதி மன்ற முற்றுகை போராட்டத்துக்கு வந்த வேன்களை மறித்து தேவையற்ற கேள்விகளைக் கேட்டு கால தாமதம் செய்துள்ளார். டி.எஸ்.பி. மயில்வாணன் போன்ற போலீஸ் அதிகாரிகளின் கெடுபிடிகளையும் மிரட்டல்களையும் மீறி சிறை செல்ல தயாராக வந்த மக்கள் வெள்ளம் பாரீர்.



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு