கார்களை எரித்த காஜா மைதீன் ஹஜரத்?

கார்களை இன்னவர் தான் எரித்தார் என்பதற்கு பலமான ஆதாரம் என்று  வெளியான ஆடியோவின்  கதி என்ன? 

இதனால் என்ன பயன் என்று கேட்பவர்களுக்கு இந்தக் கதி ஏற்பட்டால் என்ன செய்வார்கள்? அவர்களும் இந்த மாதிரி பாதிப்புகள் அடையக் கூடாது என்பதற்கான முன் எச்சரிக்கைப் பதிவுகளே நம்முடையது.
https://mdfazlulilahi.blogspot.com/2020/06/blog-post.html 

--------------------------------
ஜ.உ.சாவின் தமிழ்நாடு தலைவராக இருப்பவர் காஜா முஈனுத்தீன் பாகவி. அவருக்கும் நமக்கும்  கொள்கை ரீதியாக மாற்றுக் கருத்துக்கள்  உண்டு. அவரது கருத்துக்களுக்கு எதிராக மேடைகளில் பேசி இருக்கிறோம்.

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே!

புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே.

இப்படியெல்லாம் அவரது பேச்சுக்களை கண்டித்து போஸ்ட்டர்கள் ஒட்டி எதிர்ப்புகளைக் காட்டி இருக்கிறேன். 

கருத்தை கருத்தால்  தான் மோதுவேன்.  எல்லை மீறினால் அல்லாஹ்விடம் கையை துாக்குவேனே தவிர  ஆயுதத்தை  துாக்க மாட்டேன்.

2016ல்  மேலப்பாளையம் வாய்க்கால் பாலம் அருகில் உள்ள பெண்கள்  ஸ்கூலில்.    ரமழானை முன்னிட்டு PAK (காஜா முஈனுத்தீன் பாகவி) அவர்களின் பெண்கள் பயான் ஏற்பாடு செய்து இருந்தார்கள். ஸ்கூலுக்கு கடிதம் மற்றும் போன்கள் மூலம் பலவித மிரட்டல்கள்  வந்துள்ளதாக தாளாளர்  முஜீப்  அவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்த இடத்தில் என்னிடம் சொன்னார்.

அப்பொழுது டி.ஜி.பி அலுவலக டூட்டியில் இருந்த எனக்குத் தெரிந்த உயர் அதிகாரிக்கு தொடர்பு கொண்டு சொன்னேன். காவல்துறை உடனடி நடவடிக்கை   எடுத்தது.  தக்க பாதுகாப்பு அளித்தது. மிரட்டல் பேர்வழிகளை சந்திக்க  ஏ.ஸி. மாதவன் நாயர் அலர்ட் செய்யப்ட்டார்.  அவர்தான் அந்த மிரட்டல் பேர்வழிகளுக்குப்  ஏற்கனவே பாடம் படித்துக் கொடுத்தவர்.

அதன் பிறகு  முஸ்லிம் ஹையர் செகண்ட்ரி ஸ்கூலில்  பெண்களுக்கான பயான் ஏற்பாடு செய்து  இருந்தார்கள். அங்கேயும், ஏ.ஸி. மாதவன் நாயர்  மகிமையைக் கண்டவர்கள் பிரச்சனை செய்யப் போவதாகச் சொன்னார்கள். உடனே வேண்டிய ஏற்பாடுகள் செய்தோம். பெண் போலீஸ்கள் புர்கா அணிந்தவர்களாக பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்பட்டார்கள். 

ரிசர்வ் போலீஸில்  மிகவும் இளைஞர்களாக  தேர்வு செய்யப்பட்டு. ஆள் உயரக் கம்புடன் வேன்கள் வந்தன. ஸ்கூலுக்கு வெளியில் போலிஸ் குவிக்கப்பட்டது.  இதில் நானும்  காவல்துறை சார்பான எனது  நண்பரும் மட்டுமே ஈடுபட்டோம்.  தவிர எந்த இயக்கத்தவரையும்  ஈடுபடுத்தவில்லை. நாம் செய்த இந்த பாதுகாப்பு  ஏற்பாட்டை விளம்பர விரும்பிகள் தாங்கள் செய்ததாக காட்டிக் கொண்டார்கள்.

ஏ.ஸி. மாதவன் நாயர் அவர்களிடம் இது விஷயமாக நான் போனிலோ நேரிலோ  பேசியது இல்லை.  யாரை வைத்துப் பேசினால் நன்றாக இருக்குமோ  அவர்களை வைத்துப் பேசினேன்.


மிரட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை  எடுக்க காவல்துறை தயாராக இருந்தது.  சம்பந்தப்பட்ட சுன்னத் ஜமாஅத்தினர். அவர்களுக்கே உரிய  ஆறப் போட்டு பின் வாங்களால் நமது முயற்சி பயனற்றுப் போனது.

PAKக்கும் நமக்கும் கருத்து வேறுபாடுகள் ஆயிரம் இருந்தாலும். நியாயத்தின் அடிப்படையில் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தோம்.

மேலப்பாளையம்  சுன்னத் ஜமாஅத் பெண்கள் கல்லுாரியில் நடந்தவை சம்பந்தமாக பல சுன்னத் ஜமாஅத் பிரமுகர்களும் மவுலவிகளும்  என்னை தொடர்பு கொண்டு நீங்கள் ஈடபட வேண்டும் என்றார்கள். காஜா மைதீன் ஹஜரத்திடம் பேசுங்கள் அவருக்கு எல்லாம் தெரியும் என்றார்கள். சுன்னத் ஜமாஅத் மவுலவிகளான நீங்கள் பேச வேண்டியதுதானே என்றேன்.

பல காரணங்கள் கூறி சுன்னத் ஜமாஅத் மவுலவிகள் என்னை வற்புறுத்தியதால்  PAKக்கு போன் போட்டு பேசினேன். இதைக் கேட்டு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்னிடம் பேசிய ஆடியோவை வெளியிடுவீர்கள்  என்று  இளக்காரமாக (இழிவு படுத்தி)ப் பேசினார்.

ஆடியோவை பொது வெளியில் பரப்பவில்லை. PAKவிடம் கேளுங்கள் என்று  என்னை வற்புறுத்தி சுன்னத் ஜமாஅத் மவுலவிகள் மற்றும் பிரமுகர்களுக்கு மட்டும் அனுப்பினேன்.

அதன் பிறகு  சுன்னத் ஜமாஅத்துக்கும் ததஜவுக்கும் ஜனாஸா சண்டை நடந்தது.  ததஜ மாவட்ட தலைவராக இருந்த சுபேர் என்ற கார் வியாபாரியின் மூன்று கார்கள் எரிந்தது. சுன்னத் ஜமாஅத் மவுலவிகளான P.A.காஜா முஈனுத்தீன் பாகவி, (கதீப் பஸ்லுல்லாஹ் லெப்பை மகனார்) டாக்டர், அப்ஸலுல் உலமா ஜலீல் அஹ்மது உஸ்மானீ  உட்பட சுன்னத் ஜமாஅத்தினர் மீது  கார்கள் எரிப்பு வழக்கு போட வைத்தார்கள். 

எதிர் கொள்கை உடையவர்கள் நன்றாக மாட்டிக் கொண்டு முழிக்கட்டும் என்றுதான் மற்றவர்கள் இருப்பார்கள். நாம் அப்படி இருக்கவில்லை. என்ன செய்தோம்? பிறகு பார்ப்போம்.


இந்த நிலையில் ததஜ சுபேரின் மூன்று கார்களை ததஜவினரே எரித்துக் கொண்டார்கள் என்றார்கள். அதற்கான சந்தர்ப்ப(வாத) சாட்சியங்கள் ததஜவினரே எரித்தார்கள் என்று உறுதிபடுத்தியது. 



ஆடிாயோ ஆதார மன்னன் கம்பம் ஜபருல்லாவும் சி.சி.டி.வி கேமராவை ஆப் பண்ணி விட்டு ததஜ மாவட்ட தலைவர் சுபேர் தான் தனது கார்களுக்கு தானே தீ வைத்துக் கொண்டார். 
.

இதோ சுபேரிடமே பேசிய பலமான ஆடியோ ஆதாரம் என்றார். கம்பம் ஜபருல்லாவின் போலியான ஆதாரத்தை உண்மை என்று நாமும் நம்பினோம்கம்பத்தின்  ஆடியோவை ஆதாரம் என்று நாமும் பரப்பினோம்.

தாயகம் சென்றபோது காவல்துறை அதிகாரிகள் சிலரிடம் நேரிலும்  போனிலும் பேசும் வாய்ப்புகள் கிடைத்தது. அப்போது கார்களை எரித்தவர்கள் ததஜவினர் அல்ல மூன்று கார்களை எரித்தது ஜிகாத் குரூப் தான் என்றார்கள்.  

இந்த உண்மை தெரிந்ததும்.  வரட்டு கவுரவம் பார்க்கவில்லை. மூன்று கார்களை எரித்தவர்கள் ததஜவினர் இல்லை என்தை சொல்லவும் மன்னிப்பும் கேட்கவும் தயங்கவில்லை. 

இந்த உண்மையை கம்பம் ஜபருல்லா வீட்டுக்குப் போய் நேரில் சொல்லி விட்டு வந்தேன். அவர் உண்மையாளராக இருந்தால் கார்களை எரித்தவர்கள் ததஜவினர் இல்லை என்தை சொல்லி மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்

அவர் என்னைப் போல், ததஜவினர் இல்லை என்தை சொல்லவும் இல்லை  மன்னிப்பும் கேட்கவும் இல்லை. இதுதான் கொள்கைக்காக உள்ளவர்களுக்கும் காசுக்காக ஆடியோ வெளியிட்ட கூட்டத்துக்கும் உள்ள வித்தியாசம். 

இது போல் தான் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் பைக் எரிப்பு சம்பவம் நடந்தது.  சந்தர்ப்ப(வாத) சாட்சியங்கள் ததஜவினர்தான் பைக்குக்கு தீ வைத்தார்கள் என்று உறுதிபடுத்தியது. ததஜவை கடுமையாக விமர்சனம் செய்தோம். போலீஸில் கம்ளைண்ட் செய்யச் சொன்னோம்.  

பைக்குக்கு தீ வைத்தது ததஜவினர் இல்லை. பைக்கை எரித்தது ஜிகாத் குரூப் தான் என்று அறிந்தேன். உடனே  சம்பந்தப்பட்டவருக்கு போன் பண்ணி சொன்னேன் தீ வைத்தது ததஜவினர் இல்லை என்று. பதிவும் போட்டேன். 

ஊருக்கு போனதும் பொதுக் கூட்டம் போட்டேன். பைக்குக்கு தீ வைத்தது ததஜவினர் இல்லை. ஜிகாத் குரூப் தான் என்பதைக் கூறி பகிரங்கமாக பொதுக் கூட்ட மேடையில் மன்னிப்பும் கேட்டேன். ஜிகாத் குரூப்புக்கு அஞ்சவில்லை.

இது மாதிரிதான் அன்று பீ.ஜே.யை குற்றப்படுத்தி அசிங்கப்படுத்தி சொன்னவர்களின் பொய்யை நம்பி நான் எழுதியது எல்லாம் பலருக்கு இனிப்பாக இருந்தது. 

பொய்யை மெய் என்று நம்பி   நான்  எழுதியவை  எவர்களுக்கெல்லாம் அன்று இனிப்பாக  இருந்ததோ அவர்கள் அத்தனை பேருக்கும். இன்று பீ.ஜே. பற்றி நான் எழுதும் உண்மை கசப்பாகத்தான் இருக்கும். 

வேதம் சுமந்த கழுதைகளைக் காப்பாற்ற பீ.ஜே. வரம்பு மீறி என் மீது பெருந் தொகை நோட்டீஸ் போட்டார். அதனால் நானும் பதிலுக்கு வரம்பு மீறினேன். 

10-12-2004  வெள்ளி அன்று  துபை கிரசண்ட் ஸ்கூலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பி.ஜே.யின் வளைகுடா முதல்  கூட்டம் தடையானதுமறைந்த மன்னர் ஷேக் செய்யத் அவர்களுக்கு 40 முடியவில்லை எனவே ரத்தாகிவிட்டது. என்பது போன்ற பல தவறான தகவல்களை கிரசண்ட் ஸ்கூல் மூலம்  சொல்ல வைத்தது யார்? அதுதான்  உண்மை  என  நம்பிய  ததஜவினர்  பரப்பினார்கள்.  உடனே  நாம்  போட்ட பதில். 

யூசுப் இஸ்லாம் நிகழ்ச்சி 40க்குள்தான் நடந்தது. ஒண்ணரை லட்சம் மக்கள் கூடினார்கள் என்று மக்களால் கூறப்படும் அப்துஸ்ஸமது ஸமதானி கூட்டமும் 40க்குள்தான் நடந்தது.  பிலிம் சிட்டி நிகழ்ச்சி கூட இப்பொழுது (13-12-2004) நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படி இருக்க இஸ்லாமிய மாநாடு என்று அறிவிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியை மட்டும் எப்படி 40 ஐ காரணம் காட்டி ரத்து செய்தார்கள் என்று நோட்டீஸ்  போட்டு பீ.ஜே. தரப்பை பொய்ப்படுத்தியது  நாம்தான்.  இது ஒரு சேம்பிள்.

இதற்காக பல குழுக்களை அமைத்து செயல்பட வைத்தேன்.  ஒரு குழு பற்றி இன்னொரு குழுவினருக்குத் தெரியாமல் பார்த்துக் கொண்டேன். இதே பார்முலாப்பபடிதான் பல் வேறு குழுக்களை அமைத்து ஆடியோ விஷயத்தில் செயல்படுத்தினேன். எந்த மிரட்டலுக்குப் பணியாத பீ.ஜே.யை எப்படி வீழ்த்தினேன்?

என்னிடம் ரகசியமாக பணம் வாங்கிக் கொண்டு செயல்பட்டவர்கள் யார்? யார்? TNTJ தலைமையில் ஒரே மேடைக்கு வரட்டும். முகத்திரையை கிழிப்போம் இன்ஷாஅல்லாஹ்.  

கார்களை எரித்த காஜா மைதீன் ஹஜரத் என்ற பொய் வழக்கு விஷயத்திற்கு வருவோம். ஒருவர் மீதோ ஒரு சிறு கூட்டத்தின் மீதோ பொய் வழக்குப் போடப்பட்டால் ஏதாவது ஒரு இயக்கம் போய் பேசினால் காவல்துறை அதிகாரிகள் கேட்பார்கள்.

இரண்டு தரப்பிலும் வலுவான இயக்கங்கள் இருந்தால்  இரண்டு தரப்பு  இயக்கங்கள் பேச்சையும் கேட்க மாட்டார்கள். தங்கள்  தலைவலி நீங்க இரண்டு தரப்பிலும் 10  பேர் 20 பேர் என வழக்குப் போட்டு அலைய விட்டு விடுவார்கள்.  அதுதான் நடக்க இருந்தது கார் எரிப்பு வழக்கில்.

ஆகவே இயக்கங்களை அணுகாமல் உயர் அதிகாரிகளை  அணுக முடிவு செய்தேன்.  முகவை தமிழன் ரைசுத்தீன் அவர்கள் உயர் அதிகாரிகளை  அணுகும் அந்தப் பணியை செய்தார். இல்லை எனில் 107ம் போட்டு மாதமிருமுறை அலை விடப்பட்டு இருப்பார்கள். FIR படியான வழக்கில்  அனைவரும் ஜாமீன் எடுத்து  இருக்க வேண்டும்.

PAKவும் ஜலீல் உஸ்மானி போன்றவர்களும் கொள்கை அடிப்படையில்  எனக்கு நேர் எதிரிகள் தான். இருந்தாலும்  நியாயத்தின் அடிப்படையில் அப்பாவிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக நாமே முன் வந்து இதைச்  செய்தோம்.

அவ்வப்போது எது சத்தியம் (உண்மை) என்று தெரிகிறதோ அதில் என்றென்றும் நான்  இருக்க அல்லாஹ் அருள்புரிவானாக ஆமீன்.

சிறைவாசிகள் பிள்ளைகள் ஸ்கூல் பீஸ் கட்ட என என்னிடம் காசு வாங்கி விட்டு கொலை செய்ய பணம் கொடுத்ததாக மாட்டி விட்ட கள்ள ஜிகாதிகள் கூட்டத்தையும் அவர்களை ஆதரிப்பவர்களையும் அல்லாஹ் ஹலாக்காக்குவானாக ஆமீன். 

அது போல் காசுக்காக ஆடியோ வெளியிட்ட கூட்டத்தையும் அவர்களை ஆதரிப்பவர்களையும் யா அல்லாஹ்  கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன்.

  








Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.