2:42. உண்மையா? - சத்தியமா? - மெய்யா?-வாய்மையா?

சத்தியம் என்ற சொல்லில் அழுத்தம் இருக்கிறது உண்மை இருக்கிறதா?

சத்தியம் என்பது தமிழ் சொல்லா?

சத்தியம் செய்வதற்கு தமிழில் வார்த்தை இல்லையா?

சத்தியம் செய்பவன் உண்மைதான் சொல்கிறான் என்பதற்கு உறுதி உண்டா?


பொய் சத்தியம் வீணான சத்தியம் என்கிறோம். பொய் உண்மை, பொய்யான உண்மை, வீணான உண்மை என்றெல்லாம் சொல்ல முடியுமா?
https://mdfazlulilahi.blogspot.com/2020/06/242.html



அரபு மொழியில் உண்மை என்பதற்கு பயன்படுத்தப்படும் சொற்கள் எவை?
2:42.ல் உள்ள “ஹக்” என்பதற்கு உண்மை என்று தமிழாக்கம் தந்தவர்கள். 17:81. ல் உள்ள “ஹக்” என்பதற்கு சத்தியம் என்று தமிழாக்கம் தந்தது சரியா? 

இந்த வசனத்தில் உள்ள “வலா”  என்பதற்கு  நேரடி பொருள். இல்லை - அல்லது - வேண்டாம் என்று வரும். 

அரபு நாட்டில் வேலைக்குப் போன இடத்தில் அரபு மொழிப் பேச பழகியவர்களிடம் அல்லது அரைகுறையாக படித்தவர்களிடம் அடுத்துள்ள வார்த்தைக்
கு  மொழி பெயர்க்கச் சொன்னால். 

தல்பிஸுவ்- உடை அணிந்து என்றும் வலா  தல்பிஸுவ் - (உடை) அணிய வேண்டாம் என்றும்தான் மொழி பெயர்ப்பார்கள். 

இது போன்ற வசனத்திற்கு இப்படியான பழக்க பாஷை தெரிந்தவர்கள். அரைகுறைாயகப் படித்தவர்கள். இலக்கணம் தெரியாதவர்கள் மொழி பெயர்த்தால் என்ன ஆகும்?



முழுமையான விபரங்களை JPG பைல் ஆதாரங்களுடன் பார்க்க லிங்கை கிளிக் செய்து பாருங்கள்.

இலக்கணப்படி மொழி பெயர்க்கிறோம் என்ற பெயரால் இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைக்கு விரோதமாகவும் போய் விடக் கூடாது. குர்ஆனுக்கு முரணாக இலக்கணம் அமைந்தால் அப்பொழுது இலக்கணத்தை துாக்கி வீச வேண்டியதுதான்.


பிஸ, ஸ, யல்பஸு, யல்பிஸு, லுப்ஸன், லிபாஸன், லப்ஸன். இவை அரபு  மொழி எழுத்து உருவில் - வடிவமைப்பில் لبس ஒன்றுபோல் தெரியும். 
பிஸ - அணிந்தான். 
யல்பஸு- அணிவான். 
லுப்ஸன் - அணிதல். 
லிபாஸன் - அணிதல்-ஆடை என்று பொருள் வரும். அந்த அர்த்தத்தில் 18:31 ல்.   

 وَّ يَلْبَسُوْنَ- வ யல்பஸுவ்ன 

என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது.


தங்கக் காப்புகள் அவர்களுக்கு அணிவிக்கப்படும். ஸுந்துஸ், இஸ்தப்ரக் எனும் பச்சைப் பட்டாடைகளை அவர்கள் அணிவார்கள். 18:31. 

லப்ஸன் என்பது சந்தேகம் - குழப்பம் என்ற பொருளிலும் வரும். இந்த அடிப்படையில் 6:9. ல்
 وَّلَـلَبَسْنَا- வலலபஸ்னா
 مَّا يَلْبِسُوْنَ‏மா யல்பஸுவ்ன
என்ற வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன.

எதில் குழம்பிப் போனார்களோ அதே குழப்பத்தை (சந்தேகத்தை) (அப்போது மீண்டும்) ஏற்படுத்தியிருப்போம். 6:9. 

ஸ கலந்தான் 
யல்பிஸு - கலப்பான்
லப்ஸன்- கலக்குதல்
என்று பொருள் வரும். அந்த அடிப்படையில் 2:42. ல் உள்ள     வலா  தல்பிஸுவ் க்கு  நீங்கள் கலக்காதீர்கள் என்று சரியான முறையில் மொழி பெயர்த்துள்ளார்கள்.

அடுத்து அல் ஃஹஃக்க என்ற வார்த்தை 2 முறை  உள்ளது. இதற்கு தமிழில்  உண்மை - வாய்மை-  மெய்(யானது) என்பதே  நேரடி பொருள். 

சத்தியம் என்றும் தமிழாக்கம் தருகிறார்கள். மெய் என்பது தமிழகத்தில் பழைய தமிழ். உண்மை என்பது இன்றும் நடைமுறையில் உள்ள தமிழ். 

தலைநகரிலும் மற்ற மாநிலங்களிலும் நாடுகளிலும் உள்ளவர்கள் இன்றும் மெய்யாலுமா என்ற பழைய வார்த்தையை பயன்படுத்தக் கூடியவர்களாக இருக்கிறார்கள். வாய்மை தமிழக அரசு சின்னத்தில் மட்டுமே உள்ளதாக ஆகி விட்டது. 

அதிரையில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்ட இலங்கை மவுலவி ஒருவர் 17:81. க்கு "உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழிவதாகவே உள்ளது'' என்ற மொழி பெயர்ப்பு தப்பு. உண்மை என்ற வார்த்தை அதில் எங்கே இருக்கிறது?

“சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. என்பதுதான் சரி என்று வாதம் வைத்தார். அரபு கல்லுாரியில் படிக்காத நானே அவரது வாதத்தைப் பார்த்து வருந்தினேன். 

மொழிப் பெயர்ப்பாளர்கள் என்பவர்கள் இரண்டு மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் முடிந்தவரை மூல மொழிக்கு ஈடான மொழி பெயர்ப்பை அந்த அந்த மொழிகளில் தர முடியும். 


சத்தியம் என்பது சமஸ்கிருதத்திலும் மற்ற வட மொழிகளிலும் உள்ள சொல். ஒரு காலத்தில்  பிரமாணம் என்றார்கள். அதுவும் சமஸ்கிருதம் தான். கேட் வாசல் என்கிற மாதிரி சத்திய பிரமாணம் என்றும் சொன்னார்கள்.   

வாய்மை - உண்மை - மெய் என்பவையே தமிழ் சொல். சத்தியம் என்பதற்கு உண்மை என்று பொருள் கொள்ளும் வழக்கம் மக்களிடமும். அகராதி வியாபார புத்தகங்களிலும் தான் இருக்கிறது. அது தமிழ் சொல்லே கிடையாது.

மக்களிடம் உள்ள அந்த சத்தியம் என்ற சொல்தான் அறுதி இட்டு உறுதி கூறவும் அதாவது சத்தியம் செய்யவும் பயன்படுகின்றது. தமிழில் சத்தியம் செய்வதற்குரிய வார்த்தையை சமஸ்கிருத ஊடுறுவலால் தமிழ் அறிஞர்கள் எனப்படுபவர்களும் மறந்து விட்டார்கள். தமிழில் சத்தியம் செய்வதற்குரிய வார்த்தை எது என்று கேட்டுப் பாருங்கள் புரிவீர்கள். 

“ஆணை” என்பது தான் சத்தியம் செய்வதற்குரிய தமிழ் வார்த்தை என்றால் உடனே ஏற்க மாட்டார்கள். 
இறைவன் மேல் ஆணை 
தாய் மேல் ஆணை, தமிழ் மேல் ஆணை போன்ற பாடல்களைச் சொன்னால்தான் ஓ என்று ஏற்பார்கள்.

ஆணை இரண்டு பொருள் தரக் கூடியது. இறைவனின் ஆணை என்றால் இறைவனின் கட்டளை என்று பொருள். இறைவன் மேல் ஆணை என்றால் இறைவன் மீது சத்தியம் என்று பொருள். இங்கேயும் சத்தியம் என்று  சொல்லித்தான் புரிய வைக்க வேண்டி உள்ளது.

உண்மை என்ற வார்த்தையை விட சத்தியம் என்ற சொல்லில் அழுத்தம் இருக்கிறது.  அதனால் அதை பயன்படுத்துகிறார்கள். ஆனால் அதில்  உண்மை இல்லை. நன்றாக கவனிக்க வேண்டும் அழுத்தம் இருக்கிறது. உண்மை இல்லை. 

அரபு மொழியில் உண்மை என்பதற்கு பயன்படுத்தப்படும் சொற்கள் வேறு.  ஆணை (சத்தியம்) என்பதற்கு பயன்படுத்தப்படும் சொற்கள் பல உள்ளன. அவை வேறு வேறு வார்த்தைகளாக உள்ளன..


உண்மைக்கு ஹக்  என்றும் ஸிதுஃக் என்றும்  சத்தியம் என்பதற்கு (அதாவது (ஆணை)  சத்தியம் செய்வதற்கு)    யஹ்லிFபு,   யமீன்,    கஸம்,  வல்லாஹ்  போன்ற தனித் தனி வார்த்தைகளும் உள்ளன. அப்படித்தான் அல்லாஹ் குர்ஆனிலும் சத்தியம் சம்பந்தமாக சொல்லிக் காட்டி உள்ளான். 

குர்ஆனில் சத்தியத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகளில் ஒன்று யஹ்லிFபூன 
 يَحْلِفُوْنَ
மக்களிடம் பிரபல்யமில்லாத  இந்த  வார்த்தை குர்ஆனில்  4:629:42 9:56. 9:62.  9:74. 9:95. 9:969:10758:1458:18 ஆகிய வசனங்களில் இடம் பெற்றுள்ளது.

அடிக்கடி பயான்களில் சொல்லப்பட்டாலும் மக்கள் மனதில் பதியாத, நினைவுக்கு வராத குர்ஆனில் சத்தியத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தை யமீன் (என்ற சொல்லின் பன்மை அய்மான்)  
اَيْمَانِکُمْ
இந்த  வார்த்தை 2:2242253:77. 5:53, 5:89,08. 6:1099:1216:3816:91,92,94 24:53.  35:4258:1663:2. 66:2. 68:39ஆகிய வசனங்களில் இடம் பெற்றுள்ளது.


அடுத்து பயன்படுத்தப்படும் பிரபல்யமான வார்த்தை  கஸம்  
اَقْسَمُوْا
 5:53.   6:109.   7:49.    14:44   16:38.  24:5330:5535:42, 51:456:75,76.  68:1769:38.  70:40. 75:1,2.  81:15.  84:1689:5.  90:1.


அரபு நாடுகளில் வேலை வாய்ப்பு கிடைத்த பின் பிரபல்யமாகி பயன்பாட்டில் உள்ள வார்த்தை வல்லாஹ் 

 وَاللّٰه

என்ற வார்த்தை 6:23  9:749:5621:57. 37:569:95.

இவ்வாறு சத்தியம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் இந்த மாதிரி சொற்கள் இன்னும் ஏராளமான ஆதாரங்கள் குர்ஆனிலிருந்து  தரலாம். நிறைய நம்பர்களாக இருந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு போரடிக்கும். அதனால் இது போதும்.

தன் தரப்பு வாதத்தை உறுதி செய்வதற்கு எதிரிகள் உட்பட எல்லோரும் அதை ஏற்றுக் கொள்ளச் செய்வதற்கு சத்தியம் செய்வார்கள். 

இப்படி சத்தியம் செய்பவர்கள் உண்மைதான் சொல்கிறார்கள் என்பதற்கு உறுதி கிடையாது. 

அதனால் தான் பொய் சத்தியம் என்று சர்வ சாதாரணமாக மக்களாலும் சொல்லப்படுகின்றது. குர்ஆனிலும் 
சத்தியத்தில் வீணானவை 2:225

பொய் சத்தியம்  58:14.  

அல்லாஹ் மீது உறுதியாகச் சத்தியம் செய்தவர்கள் 5:53. 6:109


அல்லாஹ்வின் மீது பொய் சத்தியம்  செய்தவர்கள் 9:56, 62, 74,95, 96, 107. 16:38. 24:53. 27:49 35:42. 58:18. 68:10
என்றெல்லாம் குர்ஆன் கூறுகிறது.

பொய் சத்தியம் என்று சொல்வது போல். பொய் உண்மை, பொய்யான உண்மை, வீணான உண்மை என்றெல்லாம் சொல்ல முடியுமா? சொன்னால் பொருந்துமா? 

ஆகவேதான் குர்ஆன் எனும் உண்மை வந்து விட்டது என்ற பொருள் தரும் அந்த (17:81) இடத்திலும் அது போன்ற 10:7621:18. 29:68. 34:49. 53:28. ஆகிய இடங்களிலும் காப்பி பேஸ்ட்டாளர்கள் சத்தியம் வந்தது என்கிறார்கள். அறிவில் சிறந்தவர்கள் ஆய்வில் சிறந்தவர்கள். ஹக் என்பதற்கு உண்மை என்று மட்டுமே மொழி பெயர்ப்பார்கள். குர்ஆனிலும் அதற்குத்தான் ஆதாரங்கள் உள்ளன. 

நான் ஆதாரமாகக் கூறி உள்ளவை ஏற்கனவே கூறியவை அனைத்தும் அல்லாஹ்வின் வார்த்தைகளிலிருந்து தான். நான் குர்ஆனிலிருந்து தரும் ஆதாரங்களுக்கு மாற்றமாக கருத்து சொல்பவர்கள். 

பெரியார்கள் நாதாக்கள் சொன்னார்கள் என்று தான் சொல்கிறார்களே தவிர. அல்லாஹ் சொன்னது ரசூல்(ஸல்) அவர்கள் சொன்னது என்று பதில் தருவதில்லை. 

தாருல் ஹுதா வெளியீட்டில் உள்ள தவறுகளை சுட்டிக் காட்டி தாருல் ஹுதாவுக்கே  எழுதினோம். அதற்கு பதில் சொல்லாமல் உமர் ஷரீப் காஸிமி கண்டபடி பேசி எழுத்துருவுடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.   

2:42 ல் 
ஹக் என்பதற்கு உண்மை என்று மொழி பெயர்த்தவர்கள் பல இடங்களில் ஹக் என்பதற்கு சத்தியம் என்று மொழி பெயர்த்துள்ளார்கள். குறிப்பாக 17:81. ல் இவ்வாறு மொழி பெயர்த்துள்ளார்கள். அந்த தவறுகளை இணைப்பில் உள்ள JPGல் காணலாம்.

ஃஹஃக்கீ - என்னுடையது. ஃஹஃக்கஃக்- உன்னுடையது என்று கூறும் வழக்கமும் அரபிகளிடம் உள்ளது. 

இனி 2:42 வார்த்தைக்கு வார்த்தை 


وَلَا تَلْبِسُوا - வலா  தல்பிஸுவ் 
 நீங்கள் கலக்காதீர்கள்

الْحَقَّ -  அல் ஃஹஃக்க 
உண்மை - சரியானது

بِالْبَاطِلِ பில்பாதிலி 
பொய் - தவறானது 

وَتَكْتُمُوا வதக்துமூ
மறைக்கிறீர்கள்

الْحَقَّ - அல் ஃஹஃக்க 
உண்மை - சரியானது

وَأَنتُمْ வஅன்தும் 
 நீங்கள்

تَعْلَمُونَ  தஃலமூ(ன)ன்
நீங்கள் அறிவீர்கள்

وَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنتُمْ تَعْلَمُونَ


வலா  தல்பிஸுவ் ல் ஃஹஃக்க பில்பாதிலி வதக்துமூல் ஃஹஃக்க வஅன்தும் தஃலமூ(ன)ன்

2:42 மொழிப் பெயர்ப்புகள் :


நீங்கள் உண்மையைப் பொய்யுடன் கலந்துக் குழப்பாதீர்கள்; அறிந்து கொண்டே உண்மையை மூடி மறைக்காதீர்கள் (அதிரை ஜமீல்)

அறிந்து கொண்டே சரியானதைத் தவறானதுடன் கலக்காதீர்கள்! உண்மையை மறைக்காதீர்கள்! (PJதொண்டி

நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். (K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, கடையநல்லுார்)


நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். ( டாக்டர். முஹம்மது ஜான்)
நீங்கள் உண்மையை அறிந்துகொண்டே அதனை மறைத்துப் பொய்யை உண்மையென புரட்டிவிட வேண்டாம். (அப்துல் ஹமீது பாகவி)
அசத்தியத்தைக் கொண்டு சத்தியத்தைக் குழப்பி விடாதீர்கள். அறிந்துகொண்டே சத்தியத்தை நீங்கள் மூடி மறைக்காதீர்கள். (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)

நீங்கள் உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை நீங்கள் நன்கறிந்துக் கொண்டே அதை மறைக்கவும் செய்யாதீர்கள். (அல்-மதீனா அல்-முனவ்வரா)

--------------------------------------------------
17:81. தமிழாக்கங்கள்
 (நபியே!) இன்னும், “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்” என்று கூறுவீராக. ( டாக்டர். முஹம்மது ஜான்)
அன்றி, "சத்தியம் வந்தது; அசத்தியம் மறைந்தது. நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்" என்றும் கூறுங்கள். (அப்துல் ஹமீது பாகவி)
மேலும், பிரகடனம் செய்வீராக: “சத்தியம் வந்துவிட்டது; அசத்தியம் அழிந்துவிட்டது. திண்ணமாக அசத்தியம் அழியக் கூடியதே!” (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)

அன்றியும், “சத்தியம் வந்து விட்டது, அசத்தியம் அழிந்துவிட்டது, நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்” என்றும் கூறுவீராக! (அல்-மதீனா அல்-முனவ்வரா)
"உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழிவதாகவே உள்ளது'' என்றும் கூறுவீராக! (PJதொண்டி)






Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.