2:47 அரபிகள் சொல்லும் Fபழ்ழல் இதுவா? வேறா?


இந்த வசனத்தில் இரண்டு இடத்தில் عَلَى -அலா  என்ற இடை(துணை)ச் சொல் இடம் பெற்றுள்ளது. இது தனியாக பொருள் தராது. அடுத்து வரும் சொற்களை வைத்தே  மீது - மேல் - மேலே  - க்கு விட என பொருள் தரும். 


இதில் இடம் பெற்றுள்ள முதல் அலாவுக்கு மீது - க்கு ஆகிய இடை(துணை)ச் சொற்களை பயன்படுத்தி உங்களுக்கு - உங்கள் மீது என பொருத்தமாக மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள்.

இரண்டாவது இடம் பெற்றுள்ள  அலாவில் விட என்ற இடை(துணை)ச் சொல்லை பயன்படுத்தி அகிலத்தாரை விட,  உலக   மக்கள்  அனைவரையும் விட என பொருத்தமாக மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள். 

https://mdfazlulilahi.blogspot.com/2020/06/247-f.html



விட என்ற இடத்தில் க்கு, மீது என்றோ. 

க்கு, மீது என்று இணைக்க வேண்டிய இடத்தில் விட என்றோ இணைத்தால் என்ன ஆகும்?  இது போன்றவற்றை கவனத்தில் கொண்டு சிந்தித்து ஆய்வுவுடன் மொழி பெயர்ப்பு செய்ய வேண்டும். 


இதில் “உர்குரூ” என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. இதற்கு 2:198. 2:200. 2:203. போன்ற வசனங்களில் திக்ரு(தியானம்)செய்யுங்கள்; - நினையுங்கள் - நினைவு கூருங்கள் என்பவை பொருத்தமான வார்த்தைகள். 

2:47.ல் இடம் பெற்றுள்ள “உர்குரூ” வுக்கு  எண்ணிப்பாருங்கள்! - நினைத்துப் பாருங்கள் - நினைவு கூருங்கள் - நினைவில் கொள்ளுங்கள் என்று மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள். இவற்றில் எது பொருத்தமானது என்பதை சிந்தித்து - ஆய்ந்து படியுங்கள்.


அடுத்து இதில் இடம் பெற்றுள்ள பிரபல்யமான வார்த்தை. சர்ச்சையாகி வாதப் பிரதிவாதங்கள் நடந்த வார்த்தை. “இன்ன“ “அன்ன“ என்பதிலிருந்து உள்ள அன்னீ  என்ற தஃகீத் வார்த்தை. இதற்கு பெரும்பாலானவர்கள் நிச்சயமாக என்று தமிழாக்கம் தந்து இருந்தார்கள். நிச்சயமாக என்று மொழி பெயர்க்காதவர் யூத கைக் கூலி என்று விமர்சிக்கப்பட்டார்.  அது 2020 பிப்வரி 5 தேதிய நமது பிளாக்கரில் உள்ளது
https://mdfazlulilahi.blogspot.com/2020/02/blog-post.html

இன்ன“ “அன்ன“  என்பது இடை(துணை)ச் சொல். இடைச் சொற்களுக்கு அது போன்ற இடைச் சொல்லாகத் தான் பொருள் செய்ய வேண்டும். 

விட - மீது போன்ற  இடைச் சொல் என்றால் அதை தனியாகக் கூறினால் அர்த்தம் இருக்காது. இன்னொரு சொல்லுடன் சேர்த்தால் தான் அர்த்தம் தரும்.  அதை  இதில்  இடம்  பெற்றுள்ள அலா  என்ற  இடைச் சொல் மூலமும் அறிந்தோம்.  அது மாதிரிதான்  “இன்ன” “அன்ன“  போன்ற தஃகீத் சொற்கள். 

இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள அன்னீ  என்ற தஃகீத் சொல்லுக்கு 

1.ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி

2.ஜான் டிரஸ்ட்,

3.ஸலாமத்,

4.றஹ்மத்,

5.IFT,  

6.தாருஸ்ஸலாம்-  ரியாத், 

7.K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, 

8.அதிரை ஜமீல், 
ஆகியோர்  நிச்சயமாக என்று மொழி பெயர்ப்பு செய்யவில்லை. இது போல்தான் பஷாரத், திரீயெம், தாருல் ஹுதா. அல்-மதீனா அல்-முனவ்வரா, மலிவு உட்பட எல்லா பதிப்புகளும் பல இடங்களில் மொழி பெயர்ப்பு செய்யவில்லை என்பதை ஆதாரத்துடன்  வெளியிட்டு இருக்கிறோம். கிளிக் செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.  https://mdfazlulilahi.blogspot.com/2020/02/blog-post.html

மேலும்  இந்த வசனத்தில் Fபழ்ழல் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. இது அரபிகள் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை போல் உள்ளது.  அரபிகள் சொல்லும் வார்த்தையின் சரியான  (அசல் -ஒரிஜினல்) சொல் தFபழ்ழல் என்பது தான். எளிதாக இருப்பதற்காக முதல் எழுத்தையும் கடைசி எழுத்தையும் நீக்கி (போக்கி) விட்டு பேசுவது படிப்பது அரபு மொழி வழக்கில் இருக்கின்றது.

இந்த வசனத்தில் உள்ள Fபழ்ழல் என்பதும் Fபழ்ழல் என்பதும் ஒரே வேர்ச் சொல்லில் இருந்து வந்தது தான். இதில் உள்ள  ض “ழாத்”தை அரபிகளல்லாத நாம் உச்சரிப்பதற்கும் அரபிகள் உச்சரிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அரபிகள் சொல்லும் போது ரொம்ப மெல்லியதாக த வும் சேர்ந்து (கலந்து) வரும். Fபத்தல் என்பது போல் இருக்கும்.

ஒருவர் வந்தால்  வாருங்கள் என வரவேற்கவும் தFபழ்ழல் (தFபத்தல்) என்பார்கள். 

வந்தவர் ஏதாவது சொல்ல வந்தால் தFபழ்ழல் என்பார்கள். 

வந்தவரை உட்கார சொல்லவும் தFபழ்ழல்  என்பார்கள். 

சாப்பிடும் போது போனால் சாப்பிட வாருங்கள் என்பதற்கும் தFபழ்ழல் என்பார்கள். 

பேப்பரை கொடுத்து எழுதச் சொல்லும் போதும்Fபழ்ழல் என்பார்கள். 

வார்த்தை ஒன்றுதான் விரும்புகிறேன். மேன்மைப்படுத்தினேன், சிறப்பித்தேன், கண்ணியப்படுத்தினேன், வரவேற்கிறேன், சாப்பிடுங்கள், எழுதுங்கள் என்று இடத்திற்கு தக்கவாறு பொருள் தரும். இது போன்றவற்றை புரிந்து கொண்டு குர்ஆன் தமிழாக்கங்களை படிக்க வேண்டும


இனி வார்த்தைக்கு வார்த்தை

يَا بَنِي - யா பனீ
மக்களே! - சந்ததிகளே - சந்ததியினரே - வழித் தோன்றல்களே 

إِسْرَائِيلَ இஸ்ராஃயீல 
இஸ்ராயீலின் 

اذْكُرُواஉர்குரூ
எண்ணிப்பாருங்கள்! - நினைத்துப் பாருங்கள்- நினைவு கூருங்கள் - நினைவில் கொள்ளுங்கள்
نِعْمَتِ நிஃமதி 
அருட்கொடை - அருள்

يَ  
என்னுடைய - என் 

الَّتِي -அல்லதீ 
அப்படிபட்ட -  எது - எப்படிப்பட்ட
أَنْعَمْتُ அன் ஃஅம்து 
நான் அளித்தேன் - வழங்கினேன் - அருள் புரிந்தேன்

عَلَى- அலா 
 மீது - மேல் - மேலே  - க்கு விட


كُمْ -கும் 
உங்கள்


عَلَيْكُمْ ஃஅலைக்கும்  

உங்களுக்கு - உங்கள் மீது 

 وَاَنِّىْ அன்னீ 
நான்

فَضَّلْتُ Fபழ்ழல்து 
மேன்மைப்படுத்தினேன் - சிறப்பித்தேன்- கண்ணியப்படுத்தினேன்

كُمْ -கும் 
உங்களை

عَلَى-அலா 
விட - மீது - மேல் - க்கு

الْعَالَمِينَ- அல்ஃஆலமீ(ன)ன்
உலக மக்கள் - உலகத்தார் - உலகோர் - உலக மாந்தர் - அகிலத்தார்


   يٰبَنِىْٓ اِسْرَآءِيْلَ اذْكُرُوْا نِعْمَتِىَ الَّتِىْٓ اَنْعَمْتُ عَلَيْكُمْ وَاَنِّىْ فَضَّلْتُكُمْ عَلَى الْعٰلَمِيْنَ


யா பனீ  இஸ்ராஃயீல உர்குரூ நிஃமதி யல்லதீ அன் ஃஅம்து  ஃஅலைக்கும்  அன்னீ  Fபழ்ழல்துகும் அலல்ஃஆலமீ()ன் 


இஸ்ராயீல் மக்களே! நான் உங்களுக்கு அளித்திருந்த என்னுடைய அருட்கொடையையும் உலக மாந்தர் யாவரையும்விட உங்களை நான் சிறப்பித்திருந்தேன் என்பதையும் நினைத்துப் பாருங்கள். -(அதிரை ஜமீல்)

இஸ்ராயீலின் மக்களே! உங்களுக்கு நான் வழங்கியிருந்த அருட்கொடையையும், உலக மக்கள் அனைவரையும் விட உங்களை நான் மேன்மைப்படுத்தியிருந்ததையும் எண்ணிப் பாருங்கள்!16 - (P. ஜைனுல் ஆபிதீன் உலவி, தொண்டி)

இஸ்ராயீலின் மக்களே! (முன்னர்) நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட் கொடையையும், உலகோர் யாவரையும் விட உங்களை மேன்மைப்படுத்தினேன் என்பதையும் நினைவு கூறுங்கள். -(K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, கடையநல்லுார், - டாக்டர். முஹம்மது ஜான்)

இஸ்ராயீலின் சந்ததிகளே! (முற்காலத்தில்) நான் உங்களுக்களித்திருந்த என்னுடைய அருட்கொடையையும் உலகத்தார் அனைவரையும்விட உங்களை நான் மேன்மைப்படுத்தி வைத்திருந்ததையும் நினைத்துப் பாருங்கள். ( ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்

இஸ்ராயீலின் வழித்தோன்றல்களே! நான் உங்களுக்கு வழங்கியிருந்த என் அருட்கொடையையும் உங்களை நான் உலகத்தோர் அனைவரிலும் மேன்மையாக்கி வைத்திருந்ததையும் நினைவுகூருங்கள். - இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT)
இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்களித்திருந்த என்னுடைய அருட்கொடையையும், அகிலத்தாரைவிட உங்களை நிச்சயமாக நான் மேன்மையாக்கி வைத்திருந்ததையும் நினைவு கூறுங்கள். -(அல்-மதீனா அல்-முனவ்வரா)





Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.