ஆலிம்கள் பேச்சில் நியாயம் இருக்கிறதா? மனிதனை மயக்கும் சூனியம் இருக்கிறதா?
உண்மையைச் சொன்னவர்கள் பக்கம் கெட்டவர்களா? பொய் சொன்னவர்கள் பக்கம் நல்லவர்களா?
விவாத அறிவு என்றால் என்ன? உண்மையை எந்த அளவுக்கு அடித்து பேச முடியுமோ அந்த அளவை
விட அதிகமாக பொய்யை அடித்துப் பேசுவது. அப்படிப் பேசி அந்தப் பொய்யை உண்மை மாதிரி காட்டுவது. இதுதான் விவாத அறிவு. ஒருவருக்கு நிறைய விவாத அறிவு இருக்கிறது என்றால் அவரை பட்டி (விவாத) மன்றங்களில் அதிகமாகக் காணலாம். ஒரு பட்டி மன்றத்தில் ஒரு தலைப்புக்கு ஆதரவாகப் பேசி
கை தட்டல் பெறுவார். அவரே இன்னொரு பட்டி மன்றத்தில் அதே தலைப்புக்கு எதிராகப் பேசி
கை தட்டல் பெறுவார். ஆக பேச்சில் நியாயம் இருக்காது. மனிதனை மயக்கும் சூனியம் இருக்கும்.
வரலாற்றில் ஒரு சம்பவம், நபி(ஸல்) அவர்களிடம் சாக்குப்
போக்குச் சொல்லி பொய் சொன்னார்கள் மன்னிப்பு கிடைத்தது. சத்தியம் செய்து பொய் சொன்னவர்களுக்கு எல்லாம் நபி(ஸல்) அவர்கள்
மன்னிப்பு அளித்தார்கள். அப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை எண்பதுக்கும் மேல்
இருந்தது.
அந்த மனிதர்கள் வெளிப்படையாய் எடுத்து வைத்த பொய்யான வாதங்களை நபி(ஸல் அவர்கள் ஏற்றுக்
கொண்டார்கள். பொய் சொன்ன அவர்களின்
பாவமன்னிப்புக்காக நபி(ஸல்) பிரார்த்தனையும்
செய்தார்கள். பொய் சொன்னவர்களுக்கு மக்களின் மத்தியில் அவர்களின் கவுரமும் நிலைத்து நின்றது.
அதில் உண்மையைச் சொன்னவர்களில் கஅப்
இப்னு மாலிக்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் சொன்னார்கள்.
அல்லாஹ் எனக்கு நிறைய விவாத அறிவை கொடுத்திருக்கிறான். இருந்தாலும் உண்மையையே சொல்கிறேன் என. உண்மையைச் சொன்னார்கள். உண்மையைச் சொன்ன கஅப்(ரலி) அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள்.
பொய் சொன்னவர்களுக்கு மன்னிப்பு அளித்த நபி(ஸல்) அவர்கள் உண்மையைச் சொன்ன கஅப் இப்னு மாலிக்(ரலி)
போன்றவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து தீர்ப்பு வரும்வரை ஒதுக்கி வைத்து
விட்டார்கள்.
50 நாட்கள் சோதிக்கப்பட்டார்கள். இந்த சோதனையான 50
நாட்களிலும் உண்மை பேசியவர்களை விட்டும்
நல்லவர்கள் ஒதுங்கி விட்டார்கள். கெட்டவர்கள் நெருங்கி வந்தார்கள்.
உண்மையைச் சொன்னவர்கள் பக்கம் நல்லவர்கள் இருந்திருக்க
வேண்டும். பொய் சொன்னவர்கள் பக்கம் கெட்டவர்கள் இருந்திருக்க வேண்டும். இந்த
வரலாற்றில் என்ன நடந்தது? தலை கீழ் மாற்றம்.
உண்மையைச் சொன்னவர்கள் பக்கம் கெட்டவர்கள் நெருங்கினார்கள்.
எந்த சம்பவத்தால் நெருங்கினார்கள்? உண்மையைச் சொன்ன சம்பவத்தால் கெட்டவர்கள்
நெருங்கினார்கள். நல்லவர்கள் ஒதுங்கினார்கள்.
பொய் சொன்னவர்கள் நபி(ஸல்) அவர்களுடனும் நல்லவர்களுடனும் இருந்தார்கள். எப்படிப்பட்ட சோதனை உண்மையைச்
சொன்னவர்கள் மனம் எப்படி இருந்திருக்கும்?
உண்மையைச்
சொன்னவர்களை மன்னித்து 50 நாள் கழித்து 9:118. ஆயத்தை அருளிய அல்லாஹ் அடுத்த ஆயத்தில் முஃமின்களுக்கு
இட்ட கட்டளை என்ன?
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! என்பதே அல்லாஹ்வை பயந்தவர்கள் சொல்லிலும் செயலிலும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அடுத்து இட்ட கட்டளை என்ன?
உண்மையாளர்களுடன் இருங்கள். வாய்மையாளர்களுக்குத் துணையாக இருங்கள்! என்பதுதான்.
இதை எழுதியுள்ள நாம் ஆலிம் அல்ல. இந்த வரலாற்றை நமக்குச் சொன்னவர்கள் ஆலிம்கள் தான் . அந்த ஆலிம்கள் சொல்லித்தான் இந்த வரலாறுகளை அறிந்துள்ளோம். அந்த ஆலிம்கள் 9:119 வசத்தில் உள்ள கட்டளைப்படி உண்மையாளர்களுடன் இருக்கவில்லை. வாய்மையாளர்களுக்குத் துணையாக இருக்கவில்லை என்பதுதான் வருத்தத்துக்குரியதாக உள்ளது.
இந்த ஆலிம்கள் பேச்சில் நியாயத்தை நிலை நாட்ட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா? மனிதனை மயக்கும் சூனியம் இருக்கிறதா? புரிந்து கொள்ளுங்கள்.
இந்த வரலாற்றை விரிவாக அறிய புகாரி 4418, 4676, 4677, 6690 ஹதீஸ்களை பாருங்கள்.
Comments