நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? என்ற வசனத்தின் உண்மை விளக்கம் என்ன?


அரங்கத்தில் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் மாநாடு. அந்தரங்கத்தில் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் அவர்களை இழிவுபடுத்துவதையே தொழிலாகக் கொண்ட  கல்யாணராமனிடம்  கள்ளத் தொடர்புகள்.  காட்டிக் கொடுத்தல்கள்.. காட்டிக் கொடுத்தது யார்? நீ தான் என்று ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு கூறி உள்ளார்கள். யாராக இருந்தாலும் அவர்கள் ததஜ என்ற அமைப்பிலிருந்துதான் ததஜ என்ற அமைப்பில் இருந்தபொழுதுதான் செய்துள்ளார்கள். அந்தக் கேடுகெட்டவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் நிச்சயம் இறங்கும். நாமும் கேடுகெட்ட கூட்டத்தினருக்கு எதிராகத் துஆச் செய்வோம்.  
https://mdfazlulilahi.blogspot.com/2019/02/blog-post_12.html கல்யாணராமனிடம் மதுரை செய்யது இபுறாஹீம் கள்ளத் தொடர்பு வைத்திருந்தார். காட்டிக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டை ஒட்டி. 61:2 வசனத்தை   ஆதாரமாகக்  காட்டி தஃவா செய்ய செய்யது இபுறாஹீம் தகுதியற்றவர் என்று சிலர் எழுதி உள்ளார்கள். 

அரபு இலக்கணப்படி பேசத் தெரியாத எம்மைப் போன்றவர்கள் இந்த வசனத்தில் மேலோட்டமாகத் தெரியும் அர்த்தத்தைக் கூறலாம். அரபு இலக்கணப்படி பேசவும் எழுதவும் தெரிந்த அறிஞர்கள் குழுக்களும் மேலோட்டமாகத் தெரியும் இதே அர்த்தத்தையே விளக்கமாகக் கூறுவது சரியா?

அறிஞர்கள் குழுக்கள் என்று பன்மையில் எழுதி உள்ளதை அறிஞர்கள் குழு என்று ஒருமையில் படித்து ஒரு இயக்கத்தின் கூ முட்டை ஆலிம்(?)களான அவுச்ச முட்டை ஆலிம்(?)கள் பற்றி எழுதியதாக எண்ணி விடாதீர்கள். அவர்கள் நீங்கள் ஆலிம் படிப்பு படித்தது எதற்காக என்று சுன்னத் ஜமாஅத் ஆலிம்களை பார்த்துதான் கேட்பார்கள். இந்தக் கேள்வி நீங்கள் ஆலிம் படிப்பு படித்தது எதற்காக என்று எழுதியவர்களுக்கே பொருந்தும். 

யானை கொடி ஊர்வலமும் கொடிய நரகமும் என்ற கட்டுரையை ஒருவர் நமக்கு அனுப்பி இருந்தார். தலைப்பு லுஹா ஸ்டையில் உள்ளது என்றதும் அப்ப நான் யாருக்கும் அனுப்ப மாட்டேன் என்று இருந்து விட்டார். எனவே இது சம்பந்தமாக உள்ள கருத்துக்களையும் உண்மை விளக்கம்  என்ன? என்பதையும் பார்ப்போம்.

(1) 61:2  வசனப்படி குர்ஆன் ஹதீஸ்களை ஓரளவு தெரிந்துள்ளவர்கள் அவற்றை தமது நடைமுறையில் செயல்படுத்த வேண்டும். அப்படி செயல்படுத்தாதவர்கள் அவர்களுக்குத் தெரிந்த அந்த குர்ஆன் ஹதீஸ்களை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறி இஸ்லாமிய பிரச்சாரப் பணி செய்யக் கூடாது.


(2) தான் செய்யாமல் இருந்து கொண்டு மக்களுக்குச் சொல்வது மார்க்கத்தில் மிகவும் கண்டிக்கப்பட்ட  செயல். ஆகவே தொழாதவர் பிறரை தொழும்படி ஏவக் கூடாது. பீடி, சிகரட், குடி போன்ற கெட்ட பழக்கம் உடையவர் அதன் தீமைகளை எடுத்துச் சொல்லி அதை விட்டும் தடுக்கும் பிரச்சாரத்தை செய்யவே கூடாது  என்று பெரும்பாலானவர்கள் சொல்கிறார்கள்.

யாராக இருந்தாலும் அவர்களிடம் சில தவறான சிறிய பெரிய தீமையான கெட்ட செயல்கள் இருக்கத்தானே செய்யும்.து போல் யாராக இருந்தாலும் அவர்களிடம் நல்ல செயல்கள் இல்லாமல் இருக்காதே? 
ஒருவர் சில தவறுகளைச் செய்கிறார் என்பதற்காக மற்றவர்களுக்கு தஃவா செய்யும் தகுதியை இழக்கிறார் என்றால் உலகில் யாரும் எக்காலத்திலும் பிரச்சாரம் செய்ய முடியாதே? இப்படிக் கேட்டால் அதற்கு சிலர் தரும் பதில் என்ன?
ஒருவர் எந்த பாவத்தை செய்கிறாரோ ந்த பாவத்தைப் பற்றி மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் தகுதிதான் அவருக்கு இல்லையே தவிர. தானே கடைப்பிடித்து வரும் நல்ல அமல்களை எடுத்துச் சொல்ல அவருக்கு தகுதி உள்ளது என்கிறார்கள்.
இப்படிப் பார்த்தால் ஜகாத் மற்றும் தர்மங்கள் வாங்கும் நிலையில்  உள்ளவர்கள் அதை செய்யும்படி ஏவ முடியாது. 

ஜகாத் மற்றும் தர்மங்கள் வழங்கிடும் வசதி உள்ளவர்கள் தான் அந்த அமலை ஏவ முடியும் என்ற நிலை வரும். ஆகவே மார்க்கத்தை அறிந்துள்ளவர் அவற்றை தனது நடைமுறையில் செயல்படுத்த முடியவி்ல்லை அல்லது  செயல்படுத்தவில்லை, என்றாலும். அவர் அடுத்தவருக்கு எத்தி வைக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர்.

அப்படியானால் நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? என்ற வசனத்தின் உண்மை நிலை என்ன? இப்படியான ஏதாவது ஒரு குர்ஆன் வசனத்திற்கு விளக்கம் கேட்டால். நமக்கேன் வம்பு என நழுவும் பெரும்பாலான நல்ல(?) நழுவல் ஆலிம்களிடம் இருந்து வரும் பதில் என்ன? தெரியுமா?

ஸபப் நுஸுல் பார்க்கனும் என்பதுதான். (ஸபப்காரணம். நுஸுல்- இறக்கி) அதாவது இறக்கி அருளப்பட்ட காரணங்களைப் பார்த்துதான்  விளக்கம் சொல்ல முடியும் என்பார்கள். சரியான பதில் தான். அதே மாதிரிதான் இந்த ஆயத்துக்கும் இறக்கி அருளப்பட்ட காரணங்களை அறிந்து  விளக்கம் சொல்வதே சரியானதாகும்.

மனிதர்கள் தம்மை உண்மையாளராக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றுதான் எல்லாரும் விரும்புகிறார்கள். அதனால் மனிதர்களிடம் உண்மையாளராகக் காட்ட கடுமையாக முயற்சி செய்கிறார்கள். இப்பொழுது ததஜவில் இருந்தவர்கள் இருப்பவர்கள் செய்வது போல. அதில் வெற்றியும் பெறுகிறார்கள்

ஆனால் அல்லாஹ்விடம் யாரும் தம்மை  உண்மையாளராகக் காட்டி வெற்றி பெற முடியாது. அல்லாஹ்விடம் உண்மையாளராக நடந்து  கொண்டால்தான் வெற்றி பெற முடியும்.

நடந்து விட்ட விஷயங்களில் ஏற்பட்டு விட்ட தப்புத் தவறுகளை ஒப்புக் கொள்வது என்பது மட்டும்தான் உண்மையாளர்களின் அடையாளமாக மனிதர்கள் கருதுகிறார்கள்

நடக்கப் போகிற விஷயங்களில் அளிக்கும் வாக்குறுதிகளிலும் உண்மையாளராக இருக்க வேண்டும் என்பதுதான் அல்லாஹ்வின் சட்டமாகும்.

நான் ஜிஹாதில் ஈடுபடுவேன் என்று இன்றைய மனிதர்கள் குறிப்பாக இளைஞர்கள் வாக்குறுதி அளிக்கலாம். காரணம் அதன் விளைவுகளைத் தெரியாமல் அது என்ன மாதிரியான சோதனைகளைத் தரும் என்று அறியாமல் புரியாமல் அளிக்கும் வாக்குறுதிதான் இவை.

ஸஹாபாக்கள் வாக்குறுதி அளித்தார்கள். எப்படி? மார்க்க விஷயத்தில் என்ன மாதிரியான சோதனைகள் வரும் என்று அறிந்து புரிந்துதான் வாக்குறுதி அளித்தார்கள். யாரிடம் வாக்களித்தார்கள்

அல்லாஹ்விடம் வாக்களித்தார்கள். அதில் பெரும்பாலானவர்கள் உண்மையாளர்களாக இருந்தார்கள். வாக்குறுதியை நிறைவேற்ற தயாராக ஆனார்கள். சிலர் உண்மையாளர்களாக இருக்கவில்லை. வாக்குறுதியை நிறைவேற்ற தயாராக ஆகவில்லை. யாரெல்லாம் உண்மையாளர்களாக இருக்கவில்லையோ அவர்களை நோக்கி இறக்கப்பட்ட வசனம்தான்.

 لِمَ تَقُوْلُوْنَ مَا لَا تَفْعَلُوْنَ‏ 

நீங்கள் செய்யாததை (செய்ய இயலாததை) ஏன் சொல்கிறீர்கள்? என்று.

இந்த வசனம் எதற்கு அருளப்பட்டது? எதைச் செய்வதாகச் சொல்லி விட்டு நபித் தோழர்கள் செய்யாமல் இருந்தார்கள்?

யா அல்லாஹ் எங்களுக்கு ஜிஹாதை கடமையாக ஆக்கு என்று நிறைய நபித் தோழர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஜிஹாதை கடமையாக ஆக்கியதும் என்ன சொன்னார்கள்.

رَبَّنَا لِمَ كَتَبْتَ عَلَيْنَا الْقِتَالَ

எங்கள் இறைவா! எங்களுக்கு போர் (யுத்தம்) செய்வதை ஏன் கடமையாக (விதியாக- சட்டமாக) ஆக்கினாய்?



لَوْلَاۤ اَخَّرْتَنَاۤ اِلٰٓى اَجَلٍ قَرِيْبٍ‌

சிறிது காலம் எங்களுக்கு அவகாசம் தந்திருக்கக் கூடாதாதாமதப்படுத்தி  பிற்படுத்தி  தவணை தந்து) இருக்கக் கூடாதா? என்று கேட்டார்கள்.

குர்ஆனின் ஒரு வசனத்திற்கு இன்னொரு வசனம் விளக்கமாகும் என்ற அடிப்படையில் இந்த 61:2 வசனத்திற்கு 4:77 தான் விளக்கமாகும்  என்பதை  ஆதாரத்துடன் தந்து விட்டோம்.   

இதன் பிறகும், நீங்கள் செய்யாததை (செய்ய இயலாததை) ஏன் சொல்கிறீர்கள்? என்ற வசனத்திற்கு மேலோட்டமாகத் தெரியும்  அர்த்தத்தையே விளக்கமாகக் கூறுவார்கள் என்றால், அவர்கள்   குர்ஆனின்   வசனத்திற்கு  இன்னொரு வசனம் கூறிய  விளக்கத்தை நிராகரிப்பவர்களே! அதாவது அல்லாஹ்வின் விளக்கத்தை நிராகரிப்பவர்களே!

இது 2004லேயே நாம் எழுதியதை தழுவியதுதான். கடந்த ஆண்டும் 2004ல் எழுதியதை மீள் பதிவு செய்து இருந்தோம். 



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.