மறைந்த மு.அ.செ. (M.A.S.) முஹம்மது அபூபக்கர் ஸாஹிப் நினைவலைகள்

இன்று 10.12.18 நள்ளிரவு யு.ஏ.இ. நேரம் 12 மணி அளவில் M.A.S. அவர்கள் இறந்து விட்ட செய்தி நமக்கு கிடைத்தது. அவரது அரசியல், சமுதாயம், கல்விப் பணிகளை அனைவரும் அறிவார்கள். அதைத்தான் எல்லாரும் நினைவலைகளில் எழுதி உள்ளார்கள். அன்னாரைப் பற்றிய நமது நினைவலைகள்.

1987 மே மாதம் 5 ஆம் தேதி மேலப்பாளையம் அல்லாமா இக்பால் பசார் திடலில் தவ்ஹீது பிரச்சாரக் கூட்டம் துபையிலிருந்தபடி கூலி இக்பால் மூலம் ஏற்பாடு செய்திருந்தோம். அந்தக் கூட்டத்தை நடத்த விடாமல் கலெக்டர், SP  என பெரிய பெரிய அதிகாரிகளை முகாமிடச் செய்து தடை செய்தவர்களில் முன்னணியானவர்களில் அன்று நகர் மன்ற தலைவராக இருந்த  மு..செ. (M.A.S.) முஹம்மது அபூபக்கர் ஸாஹிப் அவர்களும் ஒருவர்.



1988 டிசம்பரில் தவ்ஹீதுவாதிகளை பள்ளியில் தொழ விடக் கூடாது, இறந்தவர்களை அடக்கக் கூடாது போன்ற சட்டங்களை கொண்டு வர வலிமை உள்ளவர்கள் அனைத்து முஹல்லா கூட்டத்தைக் கூட்டினார்கள். மோத்தை சிபகதுல்லாஹ், தண்டன் சேக்மன்சூர் போன்ற அரசு ஊழியர்கள் தவ்ஹீது ஜமாஅத்தினர் என்ற ஒரே காரணத்துக்காக அத்தியடி தெருவில் அடிக்கப்பட்டார்கள்.


ரகசிய கூலிக் மாரடித்துக் கொண்டு, பள்ளி கட்டிடப் பணத்தில் சம்பளத்தை எடுத்துக் கொண்டு வெளியில் சேவை செய்வது போல் காட்டி கொள்ளும் வேஷதாரிகள் யாரும்  அன்றைய தவ்ஹீது ஜமாஅத்தில் இருக்கவில்லை. அப்படிப்பட்ட காலித், சிபகத், மன்சூர், மைதீன் பிள்ளை, நிஜாமுத்தீன், இக்பால் போன்றவர்களை அழைத்துக் கொண்டு சமுதாய பிரமுகர்களை சந்திக்கச் சென்றோம்.


சுன்னத் ஜமாஅத்தில் முன்னோடியாக இருந்த M.A.S. அபூபக்கர் ஸாஹிப் அவர்களை சந்திக்கச் செல்லும்போது காங்ரஸில் E.M. உமர் சாகிப் அணியிலிருந்த காலித் சாகிப் தவிர மற்றவர்கள் என்னுடன் வந்தார்கள். நாங்கள் என்ன சொல்கிறோம் என்பதை எடுத்துச் சொன்னோம். கண்ணியத்துடன் M.A.S. கேட்டார்கள்


சந்திப்பின் பயன், அனைத்து முஹல்லாக்களும் கூட்டுச் சேர்ந்து தவ்ஹீது ஜமாஅத்தை எதிர்க்க வேண்டும் என்ற திட்டம் வலு இழந்து. அந்தந்த முஹல்லாசிகள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆனது.


பிரச்சார கூட்டங்களுக்கு போலீஸ் அனுமதி தராததால் 1989 சட்டமன்ற தேர்தலில் ஜாக் சார்பில் வேட்பாளரை நிறுத்தி தேர்தல் பிரச்சாரம் என்ற பெயரால் மேலப்பாளையத்திலும் கோவையிலும் தவ்ஹீது பிரச்சாரம் செய்தோம். மறைந்த முஸ்தபா கமால் அவர்களை ஆதரித்து ஓட்டு கேட்பது போல் லாரியில் சென்று பல இடங்களில் நானும் கோவையில் தவ்ஹீது பேசினேன்.


உண்மை இவ்வாறிருக்க கோவையில் முஸ்தபா கமால் M.L.A ஆவதற்காக ஜாக் சார்பில் தேர்தலில் நின்றதாக 2000ல் வீடியோவாகப் பேசி பொய்களை பரப்பினார்கள். இப்பொழுது அந்தப் பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கி சிதறி சின்னாபின்னமாகி சீரழிந்து கிடக்கிறார்கள்.


அப்பொழுது 1989 ஜனவரி 18 அன்று மேலப்பாளையம் பசார் திடலில் பொங்கலுக்கான கரும்பு கடைகளுக்கு மத்தியில் கமாலுத்தீன் மதனி பேசுகிறார். அதை தடை செய்ய வேண்டும் என்று ஒரு கூட்டம் M.A.S. அபூபக்கர் ஸாஹிப் அவர்களைப் போய் சந்தித்தார்கள். இனி மேல் இந்த பிரச்சனைகளை இங்கே கொண்டு வராதீர்கள்.


அவர்கள் மூளையுடன் தேர்தல் பிரச்சாரம் என்ற பெயரில் கூட்டம் நடத்துகிறார்கள். அதை தடுக்கப் போனால்  தேர்தல் பிரச்சாரத்தை தடுத்தார்கள் என்ற வழக்கை சந்திக்க வேண்டி வரும் என கூறி M.A.S.  அனுப்பி விட்டார்கள்.


அந்தத் தேர்தலில் லத்தீப் அணி சார்பில் தி.மு.க. வேட்பாளர் குருநாதன் அவர்களுக்கு நாம் பணியாற்றினோம். காங்ரஸ் கூட்டணியில் மு.லீக் சார்பில் போட்டியிட்ட சாந்து காஜா மைதீன் Ex M.P அவர்களுக்கு M.A.S. அபூபக்கர் ஸாஹிப் பணியாற்றினார்கள்.


தவ்ஹீது ஜமாஅத் வேட்பாளரின் தலைமை ஏஜெண்ட் பாரம் தனக்கு வேண்டும் என்று M.A.S. கேட்டு விட்டார்கள். உடனே பூத் ஏஜெண்ட் உட்பட அனைத்து பாரங்களிலும் ஒட்டக சின்னத்தில் நின்ற தவ்ஹீது ஜமாஅத் மஞ்சி காதர் மைதீன் அவர்கள் கையெழுத்திட்டு கொடுக்கச் செய்தோம். தவ்ஹீது ஜமாஅத்தின் தலைமை ஏஜெண்ட்டாக M.A.S. அபூபக்கர் ஸாஹிப் இருந்ததை 02.07.2017ல் நடந்த எனது இல்லத் திருமணத்தில் நினைவு கூர்ந்தேன்.

அந்தத் தேர்தலில் ஒட்டகச் சின்னத்தில் யாரும் ஓட்டு போடாதீர்கள். தவ்ஹீது பிரச்சாரம் செய்யவே இந்த ஏற்பாடு என்றோம் அப்படி இருந்தும் 88 ஓட்டுக்கள் ஒட்டகச் சின்னத்தில் விழுந்தன.


1994ல் அன்றைய MLA தர்மலிங்கம் அவர்களை எங்கள் இல்லத்திற்கு அழைத்து தவ்ஹீது ஜமாஅத் சார்பில் கோரிக்கைகள் வைத்தபொழுது M.A.S. அபூபக்கர் ஸாஹிப் அவர்களையும் அழைத்திருந்தோம்  அவர்களும் வந்திருந்தார்கள். சுன்னத் ஜமாஅத்தின் முன்னோடியாக இருந்தாலும் அவர்கள் நம்முடன் நன்றாக பழகினார்கள். எனது இல்லத்தில் நடந்த பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்கள்.


எனது மகனார் முஃமின் பில்லாஹ் திருமணத்தில் M.A.S. அபூபக்கர் ஸாஹிப் அவர்களும் அவரது மகனார் M.A.S. அப்துல் காதர் அவர்களும் கலந்து கொண்ட போட்டோதான் மேலே உள்ளது. 

https://www.youtube.com/watch?v=YUdBEdwLNXk


1986 ஜனவரியில் நடந்த நகராட்சி தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. கூட்ணியில் காங்ரஸ் சார்பில் மேலப்பாளையம் நகராட்சியின் கடைசி சேர்மனாக ஆனார் M.A.S. அதன் பிறகு நெல்லை மாநகராட்சியானது.


1986ல் சேர்மனாக ஆனதும் தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி V.S.T வக்ஃபு அலல் அவ்லாதில் இருந்த வாரச் சந்தையை மேலப்பாளையம் நகராட்சிக்குரியதாக ஆக்கினார். 

M.A.S. காங்ரஸில் இருந்தபொழுது கலாம் ரசூல் தி.மு.க.வில் இருந்தார். M.A.S. ஸ்தாபன காங்ரஸாக ஆனதும் கலாம் ரசூல் இந்திரா காங்ரஸாக ஆனார். M.A.S. இந்திரா காங்ரஸாக ஆனதும் கலாம் ரசூல் மீண்டும் தி.மு.க.வில் இணைந்து இன்றும் தி.மு.க.வில் உள்ளார்கள். 

M.A.S. அபூபக்கர் ஸாஹிப் அவர்கள் தமிழ்நாடு காங்ரஸ் கமிட்டியின் மாநில துணைத் தலைவராகவும் இருந்துள்ளார்கள். 

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு