கூட்டணியா கொள்கையா? முஸ்லிம்களுக்கு எது முதன்மையானது. முக்கியமானது?


சிலை திறப்பு, படத் திறப்பு நிகழ்ச்சிகளில் கொள்கை மிக முக்கியமானதா சாதாரணமானதா? சமூகப் பணிகள் செய்ய வேண்டும் என்பதற்காக அடிப்படை கொள்கையில் சமரசம் செய்து கொள்ளலாமா? எல்லார் ஆதரவுகளையும் பெற்றால்தான் நாம் நினைத்ததை சாதிக்க முடியும். அதற்காக மக்களை வென்றெடுக்க வேண்டும், மக்களை நமக்கு ஆதரவாக திரட்ட வேண்டும். எல்லா அமைப்பினரின் ஆதரவுகளையும் பெற வேண்டும் என்பதற்காக கொள்கையை விட்டு விட்டலாமா? அவர்களது கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா? முஸ்லிம்களுக்கு எது முதன்மையானது. கொள்கையா? கூட்டணியா?

https://mdfazlulilahi.blogspot.com/2018/12/blog-post_22.html

அல்லாஹ்வின் துாதர் முஹம்மது(ஸல்) அவர்கள் நாலாபுறமும் கடுமையான எதிர்ப்புகள் சூழ்ந்திருந்த நிலையில்தான் மதீனா சென்றடைந்தார்கள். அப்பொழுது மதீனாவில் இருந்த அடிப்படை கொள்கையில் எதிரியான யூதர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். நம்ம அரசியல்வாதிகளுக்கு புரியும்படி சொல்வதென்றால் நபி(ஸல்) அவர்கள் கொள்கை எதிரியான யூதர்களுடன் கூட்டணி அமைத்துக் கொண்டார்கள் எப்படி?


உங்களுக்கு ஏதாவது ஆபத்து வந்தால் உங்களுக்கு நாங்கள் பாதுகாப்பாக இருப்போம். எங்களுக்கு ஏதாவது ஆபத்து வந்தால் நீங்கள் எங்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்களாக துணைவர்களாக இருந்து கொள்வோம் என்று ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்

நீங்கள் நிற்கும் தொகுதியில் உங்கள் வெற்றிக்கு நாங்கள் பாடுபடுவோம். நாங்கள் நிற்கும் தொகுதியில் எங்கள் வெற்றிக்கு நீங்கள் பாடுபடுவேண்டும் என்பது போல அல்ல. அதைவிட கடுமையானது, ஆபத்தானது உயிரை கொடுத்து தியாகம் செய்ய வேண்டிய போர்க்கள ஒப்பந்தம் அது.


இப்படி ஒப்பந்தம் செய்து கொண்ட நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடம் என்ன சொன்னார்கள். பெரும்பாலான கொள்கை விஷயங்களில் யூதர்களுக்கு மாறு செய்யுங்கள். நமக்காக அவர்கள் வர வேண்டும். அவர்களுக்காக நாம் உயிரை கொடுப்போம் என்ற போர்க்கால ஒப்பந்தம் செய்து விட்டோம் என்பதற்காக கொள்கையில் சமரசம் செய்து விடாதீர்கள் என்றுதான் செயல்பட்டார்கள்.


முஸ்லிம்களே தாடி வையுங்கள் என்று சொன்னபொழுது கூட எப்படி சொன்னார்கள்? யூதர்களுக்கு மாறு செய்யுங்கள். மீசையைக் கத்தரியுங்கள்! தாடியை விடுங்கள் என்றார்கள். எப்பொழுது சொன்னார்கள்? கூட்டணி உடன்படிக்கைகள் செய்த பிறகு சொன்னார்கள். அபூ உமாமா (ரலி) அறிவிக்க அஹ்மதிலும் இப்னு உமர் (ரலி) அறிவிக்க   முஸ்­லிமிலும் 434  இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.


அவர்களுக்கு ஆபத்து வந்தால் நாம் போய் பாதுகாப்போம். நமக்கு ஆபத்து வந்தால் அவர்கள் வந்து பாதுகாக்க வேண்டும். ஆனால் அவர்கள் கொள்கை வேறு நம் கொள்கை வேறு அவர்களோடு எந்தக் கொள்கையிலும் வளைந்து போகக் கூடாது என்றுதான் நபி(ஸல்) அவர்களின் வழி காட்டல் இருந்துள்ளது.


அவர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டோமே அவர்களை விட்டு விடக் கூடாதே. அவர்களது தவறான கொள்கையை விமர்சித்து அவர்களை எதிரியாக ஆக்கி விடக் கூடாதே!. அவர்கள் விரும்பக் கூடியதை அவர்கள் சந்தோஷப்படும்படியாக ஏதாவது சொல்வோமே  செய்வோமே என்று சொன்னார்களா

முஸ்லிமின் குரல் சமுதாய குரல் என்று சொல்லாதீர்கள். தமிழனின் குரல் என்று சொல்லுங்கள் என்கிறார்களே வேடதாரிகள். அது போல நம்மை முஸ்லிம் என்று சொல்லாதீர்கள். அரபியின் குரல் என்று சொல்லுங்கள் என்று அறிக்கை விட்டார்களா? என்றால் இல்லை.


யூதர்களுக்கு மாறு செய்து தாடி வையுங்கள் என்று சொன்ன மாதிரி ஒவ்வொரு விஷயத்திலும் யூதர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று சொல்லி விட்டுத்தான் என்ன செய்ய வேண்டும் என்று  சொன்னார்கள்


செருப்பு போட்டு தொழும் விஷயத்தில் கூட யூதர்களுக்கு மாறு செய்யுங்கள் அவர்கள் காலணிகளுடனும் காலுறைகளுடனும் தொழ மாட்டார்கள் நீங்கள் யூதர்களுக்கு மாறு செய்ய வேண்டும் என்பதற்காக செருப்பு போட்டு தொழுங்கள் என்றார்கள். இதை ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) அறிவிக்க அபூதாவூது 556 ல் இடம் பெற்றுள்ளது

செருப்பு போட்டு தொழுவது பெரிய விஷயமல்ல. கொள்கையில் மாறு பட்டவர்களுடனான கூட்டணி உறவு அவர்களை மாதிரி போகச் செய்து விடக் கூடாது என்பதுதான் நோக்கமாக இருந்துள்ளது.


இதனால் யூதர்கள் என்ன பேசிக் கொண்டார்கள்? முஹம்மதுக்கு இதே வேலையாக ஆகி விட்டது. நாம் கொள்கையில் என்ன சொன்னாலும் செய்தாலும் நமக்கு மாற்றம் செய்வதையே கொள்கையாக வைத்திருக்கிறார் என்கிற மாதிரி பேசிக் கொண்டார்கள். இது சம்பந்தமாக முஸ்­லிமில் உள்ள 507வது ஹதீஸை பாருங்கள்.


யூதர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுடன் அமர்ந்து சாப்பிடமாட்டார்கள்; வீடுகளில் அவர்களுடன் ஒட்டி உறவாடாமல் (ஒதுங்கி) இருப்பார்கள். எனவே, நபி (ஸல்) அவர்களுடைய தோழர்கள் (இது குறித்து) நபியவர்களிடம் கேட்டனர். அப்போது, ''(நபியே!) அவர்கள் மாதவிடாய் பற்றி உம்மிடம் வினவுகின்றார்கள். 'அது ஓர் (இயற்கை) உபாதை' என்று நீர் கூறுவீராக! எனவே, மாதவிலக்குற்றபோது பெண்களை (தாம்பத்திய உறவு கொள்வதை) விட்டு விலகியிருங்கள்...'' என்று தொடங்கும் (2:222ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ''தாம்பத்திய உறவைத் தவிர மற்ற காரியங்களைச் செய்துகொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்.

இந்தச் செய்தி யூதர்களுக்கு எட்டியபோது, 'நம்முடைய காரியங்களில் எந்த ஒன்றுக்கும் மாறு செய்யாமல் விடக்கூடாது என்பதே இந்த மனிதரது விருப்பம்' என்று கூறினர்.

அவர்கள் கொள்கை வேறு நமது கொள்கை வேறு என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதைத்தான் நபி வழி காட்டுகிறது.


'யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிவிட்டனர்' என்று கூறினார்கள். (புஹாரி 1330)


'யூதர்களை அல்லாஹ் சபிப்பானாக! அவர்களுக்குக் கொழுப்பு ஹராமாக்கப்பட்டபோது அதைவிற்று அதன் கிரயத்தை அவர்கள் சாப்பிட்டார்கள்.' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.( புஹாரி 2224)


சமுதாயத்தை காக்க நாட்டை காக்க ஊரை காக்க உலகைக் காக்க என்று உடன்படிக்கை - ஒப்பந்தம் என்பது அதில் மட்டுமே தவிர அடிப்படை கொள்கையை விட்டு விட்டு உறவு உடன்படிக்கை கூட்டணி என்பது கிடையாது.


அவர் யாதவ மாநாட்டு சிலை திறப்பு விழாவில் பங்கேற்று யாதவராகி விட்டார்.  இவர்  தலித்  பிரமுகா்  முருகன்  படத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு தலித் ஆகி விட்டார் என்றெல்லாம் 10 ஆண்டுகளுக்கு முன் விவாதங்கள் நடந்தன. அந்த மாதிரி கருணாநிதி சிலை திறப்பு விழாவும் ஆகி விடக் கூடாதே என்று கொள்கைவாதிகள் கவலைப்பட்டனர்.

மறைந்த கருணாநிதி சிலை திறப்பு விழாவில் தமுமுக பங்கெடுக்கவில்லை  சிலைகலச்சாரம் இஸ்லாத்தில் இல்லை என்ற செய்தி மகிழ்ச்சி தந்தது.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு