L. K.S. முஹம்மது மீரான் மைதீன் அவர்களுடன் நாம் கடந்து வந்த பாதையும் முஸ்லிம் ஹை ஸ்கூலும்


முஸ்லிம் ஸ்கூல், முஸ்லிம் ஹை ஸ்கூல் என மக்களால் பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும் அது 02-06-1941ல் துவங்கப்பட்டபொழுது The Muslim Higher Grade School மேலப்பாளையம் முஸ்லிம் உயர்தர ஆரம்பப் பாடசாலை என்ற பெயரிலேயே துவங்கப்பட்டது. 
(பழைய பெயரான மங்கை நகர்) மேலப்பாளையத்தின் முதல் பட்டதாரி K.M.S. .ஹமீது சாகிப் இப்டி அவரது பெயரைச் சொன்னால் பெரும்பாலான மக்கள் யார் என்றே யோசிப்பார்கள். வக்கீல் ஸாஹிப் என்று சொன்னால் உடனே புரிந்து கொள்வார்கள். ஓ கராம்சு தெரு கோணத்து வக்கீல் ஸாஹிப்பா? என்று.

இந்த வக்கீல் ஸாஹிப்தான் மேலப்பாளையம், கைத் தறி நெசவாளர்கள், தரகனார்கள் என எல்லார் வீடுகளிலும் ஒருவர் வீடு பாக்கி இல்லாமல் ஒவ்வொரு படியாக ஏறி இறங்கி முஸ்லிம் ஹை ஸ்கூல் உருவாக வசூல் செய்தவர்.

அன்றைய சல்லிக்காசுகள், அணாக்கள், பைசாக்கள், ரூபாய் நோட்டுக்கள் என்று ஊர் நெசவாளிகள்,  வியாபாரிகள், மற்றும் தறி கொடுத்து வாங்கும் தரகனார்களான ஜவுளி முதலாளிகளிடமிருந்தும்  நன்கொடைகள் வசூல் செய்தார். 

இந்த வரலாற்றை MLM முஹம்மது லெப்பை (சேமியாப்பா) அவர்கள் அடிக்கடி கூறுவார்கள். இனிய முகம் MLM அவர்களின் முஸ்லிம் பெண்கள் மேல் நிலைப் பள்ளி சார்பில் வெளியான மலரிலும் முஸ்லிம் ஹையர் செகன்ட்ரி ஸ்கூல் தோன்றிய வரலாற்றை எழுதி இருந்தார்.

இந்த வக்கீல் ஸாஹிப் யார் என்றால் இப்பொழுது தாளாளராக பொறுப்பேற்றுள்ளவரின் பெத்தாப்பாவான எல்.கே.எஸ். முஹம்மது மீரான் மைதீன் தரகனார் அவர்களின் மூத்த மருமகனார் ஆவார். 

வக்கீல் ஸாஹிபின் மருமகனார் முக்கடி காதர் மைதீன் எங்களது சம்பந்தி ஆவார். வக்கீல் ஸாஹிப் அவர்களின் மகள் வழி பேரரான K.K. அஹமது கான் திருமணத்தை  25-11-2018   அன்று த.மு.மு.க. சார்பில்  நாம் நடத்தி வைத்தோம்.


1983ஆம் ஆண்டு நடந்த கஃபா சினிமா படம் பிரச்சனைகளால் L. K.S. முஹம்மது மீரான் மைதீன் அவர்களால் முஸ்லிம் லீக் சார்பில் நடந்த எனது திருமணத்தின் போது எனது இல்லத்தின் முன் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடிந்ததில்லை. 

ஆனால் இதுவரை நடந்த எனது பிள்ளைகளின் எல்லாத் திருமணங்களிலும் கலந்து கொண்டு சிறப்பு செய்து வந்துள்ளார் L. K.S. முஹம்மது மீரான் மைதீன் அவர்கள்.
https://www.youtube.com/watch?v=CYLWXRV5SLU&t=12s


முஸ்லிம் லீக் மாணவரணி தலைவராக இருந்த L. K.S. முகம்மது மீரான் மைதீன் அவர்கள் கஃபா சினிமா படத்தால் சந்தித்த பிரச்சனைகளில் ஜின்னா திடல் மு.லீக் மாநாட்டில் நடந்ததை மறக்க முடியாது. சோதனைகள் யாவும் சாதனைகளுக்காகத்தானே!

1984ல் வாய்க்கால் பாலத்தில் ஏற்றப்பட்ட மு.லீக் கொடிக்கம்ப கல் வெட்டில் கஃபா சினிமா படப் பிரச்னையால் அவர் பெயரை போட முடிந்ததில்லை. 

அதே நாளில் ஜின்னாத் திடலில் ஏற்றிய 67 அடி உயர மு.லீக் கொடிக்கம்பத்தில் அவர் பெயரை பதித்தோம். அது இன்றும் இருக்கிறது. எனது தலைமையில் ஏற்றப்பட்ட வாய்க்கால் பால கல் வெட்டை நீக்கி விட்டார்கள் என்ற அரசியல் தனி விஷயம்.

1986 ஆம் ஆண்டு ஜனவரியில் நடந்த நகராட்சி தேர்தலில் L. K.S. முஹம்மது மீரான் மைதீன் நகர் மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட வேண்டும் என்று அவரை மு.லீக் வேட்பாளராக அறிவிக்க காரணமாக இருந்த நான் எடுத்த முயற்சிகள் கடுமையானவை. அல்லாஹ்வின் நாட்டம் அவரால் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டது.

அதே ஆண்டில் தீன் பிரஸ்ஸின் ரப்பாணி மாத இதழை தவ்ஹீது இதழாக வெளியிட தீன் காஜா மைதீன் அவர்களிடம் துபை IAC சார்பில் பல அமர்வுகள் பேசிக் கொண்டிருந்தேன். 

கடைப்பள்ளி அருகில் நின்று குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்கங்கள் கூறிக் கொண்டிருந்தபொழுது வந்த L.K.S. மும்மது மீரான் மைதீன் நீங்கள் சொல்வதெல்லாம் சரியாகத்தான் தெரிகிறது. மக்கள் ஜீரணிக்க மாட்டார்கள் கடும் எதிர்ப்பு வரும் என்றார். இந்த வார்த்தை தீன் காஜா மைதீன் அவர்களை பின் வாங்க வைத்தது. அல்லாஹ்வின் நாட்டப்படி ஏப்ரலில் திருச்சியிலிருந்து அந்நஜாத் வெளியானது.

1988ல் அனைத்து முஹல்லாவாசிகளும் தவ்ஹீது ஜமாஅத்திற்கு எதிராக புதுமனைப் பள்ளியில் கூடினார்கள். அதில் கலந்து கொண்டு நான் நஜாத்காரன் இல்லை என்று துவங்கி தவ்ஹீது ஜமாஅத்திற்கு ஆதரவாக செ.கா.மு, த.மு.சா, ஓவியர் மைதீன் என பல அரசியல் கட்சி பிரமுகர்கள் பேசினார்கள். அவர்களில் L. K.S. மும்மது மீரான் மைதீன் அவர்களும் ஒருவராவார்.

04.09.1993ல் அவரது திருமணம் சுன்னத் ஜமாஅத் முறைப்படி நடந்தது. அவரது   L. K.S. முஹம்மது மீரான் மைதீன் திருமணத்தை ஒட்டி தினகரன் நாளிதழில் மலர் வெளியிட்டோம். அதில் தவ்ஹீது ஜமாஅத் கூறும் குர்ஆன் ஹதீஸ்களை இடம் பெறச் செய்து அதன் மூலமும் தவ்ஹீது பிரச்சாரம் செய்தோம். 







2006ல் துபையிலிருந்த எனக்கு 26-02-06 அன்று த.மு.மு.க. பொதுச் செயலாளர் அண்ணன் ஹைதர் அலி அவர்கள் போன் செய்தார்கள். அப்பொழுது "பாளையங்கோட்டைத் தொகுதியில் முஸ்லிம் லீக் சார்பில் நீங்கள் போட்டியிட வேண்டும்" என்றார்கள். 

மு.லீக் சார்பில் நான் நிற்க விரும்பவில்லை. எங்களூர் எல்.கே.எஸ். முஹம்மது மீரான் மைதீன் அவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்றேன். நீங்கள் நிற்பது சம்பந்தமாக மீண்டும் யோசியுங்கள் என்று கூறி போனை கட் செய்து விட்டார்கள். 

28-02-06 அன்று அதிகாலை துபை நேரம் 5 மணிக்கு மீண்டும் போன் செய்தார்கள். பாளைத் தொகுதியில் போட்டியிடுவது சம்பந்தமாக கேட்டார்கள். "தி.மு.க. ஜெயித்த தொகுதியை கொடுக்காது என பத்திரிக்கையில் எழுதுகிறார்களே எப்படி பாளைத் தொகுதி கிடைக்கும்" என்றேன். 

"அது பற்றி பேச வேண்டாம் பாளைத் தொகுதியை பெறுவது த.மு.மு.க.வின் பொறுப்பு. பெற்று விட்டோம் என வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் போட்டுயிடுவது பற்றி கூறுங்கள்" என்றார்கள். "எல்.கே.எஸ். முஹம்மது மீரான் மைதீன் மு.லீக் சார்பில் 1991ல் பா.ம.க. கூட்டணியில் நின்று வெற்றி வாய்பை்பை இழந்தவர் , இளைஞர் 40 வயது இருக்கும் எனவே எல்.கே.எஸ். அவர்களுக்கே வாய்ப்பு கொடுங்கள்" என்றேன். 

எல்.கே.எஸ். மீரான் அவர்களுக்கு நானே போன் போட்டு பேசினேன். அவர் "மு.லீக் தலைமைக்கு விண்ணப்பம் செய்துள்ளேன்" என்று கூறினார்.   சூழல்கள் மாறியது அல்லாஹ் வின் நாட்டப்படி யாவும் நடந்தது. 

அந்த எல்.கே.எஸ். அவர்கள் தாளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ் தாளாளர் அவர்களின் பணி சிறக்க அல்லாஹ் அருள்புரிவானாக! ஆமீன். 



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு