JSR அவர்களே அவசர கதியில் உருவாக்கிய பள்ளியில் ஒழுங்காக தொழ வந்தீர்களா? தஃவா பணிதான் செய்தீர்களா?


கடிதம் -3 ம.ஜ.க. மாநில நிர்வாகி J.S. ரிபாயி அவர்களே!  இரண்டாவது முறையான தலைவர் பதவி பாதியில் போகப் போகிறது என்ற நிலை வந்ததும் எனக்கு போன் போட்டு தமுமுக தலைவராக நீடிக்க விரும்பவில்லை. அரசியல் பேச்சுக்கள் மனதுக்கு ராஹத் இல்லை. தஃவா பணி செய்ய விரும்புகிறேன் என்று சொன்னீர்களா இல்லையா?
https://mdfazlulilahi.blogspot.com/2018/12/jsr.html

தமுமுக தலைவராக இருந்து கொண்டே தஃவா பணியை நன்கு செய்யலாமே என்றே மீண்டும் வலியுறுத்தினேனா இல்லையா? அல்லாஹ்வின் நாட்டம் குணங்குடி ஹனிபா விட்டுக் கொடுத்த தயவில் J.S. ரிபாஇயாகிய நீங்கள் துணைத் தலைவராக ஆனீர்கள்.


தக்வா இனாயதுல்லாஹ் போன்றவர்கள் தலைவராக இருந்தவர் எப்படி துணைத் தலைவராக கீழே இறங்கலாம் என்று விமர்சனம் செய்தார்களா இல்லையா?

K.S. ரஹ்மதுல்லாஹ் இம்தாதி போன்றவர்கள் நேரில் எனது முன்பாகக் கேட்டார்களா இல்லையா?  தஃவா பணியில் ஈடுபடப் போகிறேன். இனி எந்த இயக்கத்திலும் ஈடுபட மாட்டேன்  என்றீர்களா இல்லையா? 


இம்தாதியை தென்காசியில் ஒரு முறையும் கடையநல்லுாரில் ஒரு முறையும் சந்தித்தபொழுது இனி தஃவா பணியில் ஈடுபடப் போகிறேன். இனி எந்த இயக்கத்திலும் ஈடுபட மாட்டேன்  என்று அவரை அருகில் வைத்துக் கொண்டு என்னிடம் வாக்குறுதி அளித்தீர்களா இல்லையா?. இம்தாதியிடமும் சொன்னீர்களா இல்லையா?


இம்தாதி மட்டுமல்ல இன்னும் பல மவுலவிகள் இது மார்க்க அறிஞர்களுக்கு இழுக்கு. தர்ஜா உயர வேண்டுமே தவிர கீழிறங்குவது சரி இல்லை. தலைவராக இருந்த நீங்கள் எப்படி துணைத் தலைவராக இருக்கலாம்? என்று கேட்டார்களா இல்லையா?  

உடனே ராஜினாமா செய்து விடுகிறேன். தஃவா பணியில் இறங்கி விடுகிறேன். இனி எந்த இயக்கத்திலும் ஈடுபட மாட்டேன்  என்று பல மவுலவிகளுக்கு முன்பும் வாக்குறுதி அளித்தீர்கள் அவர்களும் அதை நம்பினார்கள். நானும் நம்பினேன்

உங்கள் வாக்குறுதியை நம்பி செயல்பட்ட எங்களை ஏமாற்றினீர்களா? இல்லையா?


நீங்களும் நானும் கடையநல்லுார், தென்காசி, நாகர்கோயில் என பல ஊர்களுக்கு பல முறை சென்றுள்ளோம். அப்படிச் சென்ற ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஊரிலும் சந்தித்த எல்லா மவுலவிகளிடமும் என் முன்னிலையில் நீங்கள் சொன்னது. ஊருடன் இருந்து தஃவா பணி செய்யப் போகிறேன். இனி எந்த இயக்கத்திலும் ஈடுபட மாட்டேன் என்பதுதான். அப்படிச் சொன்ன J.S. ரிபாயி அவர்களே நீங்கள் ரய்யானில் செய்த தஃவா பணிகள் என்ன?


தஃவா பணியில் இருந்த ராஹத் மன சந்தோஷம் அரசியலில் இல்லை என்று கமாலுத்தீன் மதனி அவர்கள் வீடு தேடிப் போய் சொன்னீர்கள். உடன் இருந்த நான் உங்களை ரொம்ப உயர்வாக எண்ணினேன்.


நான் நினைத்து இருந்தால் என்னையே முன்னிலைப்படுத்தி இருக்க முடியும். ஸபா பள்ளிக்கு இடம் தருவதாக என்னிடம் சொன்னவரிடம் என் பெயரிலேயே எழுதி வாங்கி இருக்க முடியும்.

எல்லாரும் இலாஹி நீங்கள் தான் தலைவராக இருக்க வேண்டும். உங்கள் பெயரில்தான் பதிய வேண்டும் என்று சொன்னார்கள். உங்கள் கடந்த கால வரலாறு எப்படி இருந்தாலும் ஊருடன் இருந்து தஃவா பணி செய்யப் போகிறேன். இனி எந்த இயக்கத்திலும் ஈடுபட மாட்டேன்  என்று மூச்சுக்கு முன்னுாறு தடவை என்பார்களே அது போல் சொன்ன உங்கள் சொல்லை நம்பினேன். அதனால்தான்  J.S. ரிபாயி அவர்களே உங்களை நான் முன்னிலைப்படுத்தினேன்.


2016ல் உங்களுடன் நான் நேரில் பார்த்து வண்டிகள் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி இல்லை. மக்கள் நடைபாதைகளுக்கு இடையூராக பள்ளி அமைந்து விடும். ஆகவே இந்த இடம் சரி இல்லை, காணாது எனவே இது வேண்டாம் என்று சொன்ன இடம்தான் இன்றைய ரய்யான். அன்று அந்த குடோன் டபுலாகவும் இருந்தது. அவசர கதியில் தங்களுக்கு பள்ளித் தலைவர் என்ற பெயரால் ஒரு இருப்பிடம் வேண்டும் என்ற வரட்டு கவுரவத்திற்காக என்னிடம் பணம் வாங்கி சிறிய இடத்திற்கு அட்வான்ஸ் போட்டு விட்டீர்கள்.


ஆனால் வேறு ஒரு பெரிய இடத்தைச் சொல்லித்தான் என்னிடம் அட்வான்ஸ் போட பணம் கேட்டு போன் போட்டீர்கள்.  மஸ்ஜித் - பள்ளிவாசல் அல்லாஹ்வுக்காகத்தான் உருவாக்க வேண்டும். உங்களின் வரட்டு கவுரவத்தை நிலை நாட்ட உங்களுக்கு தலைவர் பதவி வேண்டும் என்பதற்காக  அல்லாஹ்வின் பள்ளியையும் பயன்படுத்திக் கொண்டீர்கள்

யா அல்லாஹ் J.S. ரிபாஈயின்  இந்தச் செயலுக்காக ரிபாஇ  மீதும் அவரை ஆதரித்து நிற்பவர்கள் மீதும் உன் சாபத்தை இறக்குவாயாக ஆமீன்.


J.S. ரிபாஈ அவர்களே! பார்க்கிங் வசதி இல்லாத மக்கள் நடைபாதைகளுக்கு இடையூரான நாம் வேண்டாம் என்று சொன்ன இடம் இது. ஆகவே அட்வான்ஸை திரும்ப கேளுங்கள் என்று எனது நண்பர்கள் சொன்னார்கள். அல்லாஹ்வின் நாட்டம் என விட்டு விட்டேன்

J.S. ரிபாஈ அவர்களே! தங்களைக் காட்டிக் கொள்ள ஒரு இருப்பிடம் வேண்டும் என்பதற்காக மிக மிக வேகமாக பள்ளிவாசலாக ஆக்கும் பணியை அவசர கதியில் செய்ய வைத்தீர்கள். அதில் 1. தஃவா பணி செய்தீர்களா? 2. நீங்கள்தான் ஒழுங்காக தொழ வந்தீர்களா?

யா அல்லாஹ்  எங்களிடம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாதவரும்   தஃவா பணியில் ஈடுபடப் போவதாக  நீண்ட காலமாக  ஏமாற்றி எங்களை ஏமாற்றி வந்தலருமான J.S. ரிபாஈ மீதும் அவரை ஆதரித்து நிற்பவர்கள் மீதும் உன் சாபத்தை இறக்குவாயாக! ஆமீன்.

கடிதம் -2 பதவி கிடைத்து விட்டால் தஃவா பணி பற்றி பேசவே மாட்டாரோ அவருக்கு பெயர்தான் J.S. ரிபாயோ?


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு