ஹவாலா பணம் ரூ.64 லட்சம் பறிமுதல்! - தொண்டி சுங்கத்துறையினர் அதிரடி நடவடிக்கை

சென்னையிலிருந்து தொண்டிக்கு வந்த தனியார் ஆம்னி பேருந்தை மடக்கி சோதனையிட்டனர். அதில்  62,25,200 ரூபாய் பணத்துடன் பயணம் செய்த தொண்டி மரக்காயர் தெருவைச் சேர்ந்த ஹபீப்முகம்மது மகன் அப்துல் ரவூப் (55) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து பணத்தைப் பறிமுதல் செய்தனர்.


பீ.ஜே.யை பலஹீனமான அறிவிப்பாளர் என்று கூறி அவர் ததஜ மீது கூறியுள்ள மோசடிகளை ஏற்க மறுப்பார்களாம். அவர் ஏற்படுத்திய பைலாவையும் மார்க்க விதிகளையும் அப்படியே ஏற்று  அணு அணுவாய் பின்பற்றி செயல்படுவார்களாம்.இவர்கள்தான் ததஜவினர்
 https://mdfazlulilahi.blogspot.com/2018/12/64.html 

08/12, 6:17 am]---------------*சலாமு அலைக்கும்*
* இலாஹி பாய் *

அல்தாபி வெளியேற்றப்பட்டவுடன் பண மதிப்பிழப்பு சம்மந்தமாக பேசிய வீடியோவைப் பாருங்கள்.
கையிருப்பு ரொக்கம் சுமார் 6 அல்லது 7 கோடியை ( எத்தனை கோடின்னு உறுதி செய்யுங்கள் ) 10 அல்லது 20 % கமிசன் கொடுத்து பழைய  நோட்டுக்களை புதிய ரூபாய் நோட்டுக்களாக மாற்றியதாக சொல்லியிருப்பார்
10 அல்லது 20 % என்றால் ரொக்கம் கைதிருப்பு வைத்ததினால் சுமார் 70 லட்சம் முதல் 1.50 கோடி வரை ஜகாத் பணம் நஷ்டப்பட்டிருக்கும், லஞ்சம் கொடுப்பவன் மீதும், வாங்குவபன் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக என்னும் நபிவழியை இவர்கள் பின்பற்றவில்லை என்றாலும் பழைய நோட்டை மாற்ற மார்க்கத்திற்கு விரோதமான  கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து, மக்களின் ஜகாத் பணத்தை நஷ்டமாக்கிய PJ மற்றும் TNTJ  நிர்வாகிகளுக்கு என்ன தண்டனை??

சுமார்4000-5000. TNTJ பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் ஆளுக்கு  10000 மட்டும் அவரவர் வங்கிக்கணக்கில் டெபாஸிட் செய்திருந்தாலே பழைய நோட்டை புதிய நோட்டாக மாற்றியிருக்கலாமே, லஞ்சத்திலும் கமிசன் பெற்று, மக்களின் ஜகாத் பணத்தை நஷ்டமாக்கியவர்களுக்கு என்ன தண்டனை??

* குறிப்பு இலாஹி பாய், அல்தாபி வீடியோ இருந்தால தேடிப்பார்க்கவும், அதில் ஆதாரம் உண்டு*
[08/12, 8:28 am]---------: அல்லாஹ் அருள் செய்வானாக

08/12, 7:34 am] Kaja: #உண்மைகள்_உறங்காது

ததஜவில் சமீபத்திய குழப்பங்களால் சமூகத்திற்கு ஏற்பட்ட நன்மைகளும் விழிப்புணர்வும் ஏராளம்  

அதில் சில 

1. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜகாத் நிதியை திரட்டி உரியவர்களுக்கு வழங்கும் என நம்பப்பட்டு வந்த நிலையில் பல கோடி ஜகாத் பணம் நிறுவனங்கள் பெயரால் அளவுக்கு அதிகமாக வசூலிக்கப்பட்டு தேக்கி வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது

2. மக்கள் தரும் ஜகாத் பணத்தை கடன் என்ற பெயரில் எடுத்து நிர்வாக செலவுகள் பல லட்சங்கள் செலவிடப்பட்டுள்ளது தெரியவந்தது

3. கணக்கு வழக்கில் நெருப்பாய் இருப்பார்கள் என நம்பப்பட்ட நிலையில் முறையாக கணக்கு வழக்குகள் பராமரிக்கப்படவில்லை என்ற உண்மை வெளிவந்து மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது

4. குர்ஆன் ஹதீஸ் நீதி நேர்மை என பேசிக்கொண்டே கள்ள ஐடிகளை தலைமை நிர்வாகிகள் சேர்ந்து இயக்கிய உண்மை வெளியான போது ஒவ்வொரு ததஜ தொண்டனும் வெட்கித்தலை குனியும் நிலை ஏற்பட்டது ( இதுல கள்ள ஐடி பயன்படுத்தாதீர்கள் எனும் அறிக்கை வேர)

5. தவறு செய்தாலும் அதை கடுகளவும் ஒப்புக் கொள்ளவோ மாற்றிக் கொள்ளவோ முயலாத ஒரு இயக்கம் ததஜ என்பது பொய் முபாஹலாவிலும் பிறையில் கடைபிடித்த தவறான அணுகுமுறைகளாலும் தெரியவந்தது 

6. கட்டமைப்பை சீர்குலைக்கக் கூடாது எனும் வாதம் ததஜ வினரால் முன்னெடுக்கப்பட்ட போது கொள்கை புறம்தள்ளப்பட்டு கூட்டம் முன்னிலைப்படுத்தப் படுவது உறுதியானது 

7. தலைமை எதை சொன்னாலும் ததஜ காரர்கள் அதை அப்படியே ஆய்வு செய்யாமல் நம்பக் கூடியவர்கள் என்பது பீஜே ஆடியோ விவகாரத்தில் நிரூபனமானது 
இவர்கள் மிமிக்ரி என்றால் மிமிக்ரி என சொல்ல வேண்டும் (இல்லை இல்லை அவதூறு வழக்கு தொடுங்கள் என கேட்டவர்கள் ஏகத்துவ எதிரிகளாய் சித்தரிக்கப் பட்டார்கள் அன்று இன்றோ நிலையே வேறு)

8. தலைமை நிர்வாகிகள் தியாகிகள் என நம்பப்பட்ட நிலையில் ரூ. 40000/- சம்பளம் வரை தரப்படுகிறது என்பதும் மருத்துவ செலவுகள் தனியாக வழங்கப்படுவதும் தெரியவந்த போது நம்பிக்கை பாழ் போனது ( ஜகாத் பணம்தான் கடனாக இவற்றுக்கு பயன்படுத்தப்பட்டது என்பது தனி விஷயம்) 

9. சக நிர்வாகியானாலும் ஆரம்பகாலத்திலிருந்து ஜமாத்திற்காக உழைத்தவனாக இருந்தாலும் ஜமாத்திற்கு எதிராக தவறுகளை தட்டிக் கேட்டுவிட்டால் முதலில் கட்டம் கட்டப்படுவதும் பிறகு அவனுடைய அமானிதங்களை அந்தரங்களை காற்றில் பரக்க விடுவதும் மிரட்டல் எனும் வகையில் நடைமுறைப்படுத்தி வரும் ஜமாஅத் ததஜ என்பது நிரூபணமானது 

10. ஜமாத்திற்கு எதிராக பேசிவிட்டால் அவனுடைய மானம் மட்டுமல்லாது அவனுடைய குடும்ப பெண்களின் மானமும் காற்றில் பறக்க விடப்படும் என்பது சமீபத்திய ஜமாத் நடவடிக்கைகளில் புரிந்து கொள்ளப்பட்டவை 

11. இனி ஒருபோதும் பள்ளிக்காக வாங்கப்படும் இடம் ததஜ பெயரில் பதியப்படக் கூடாது என்பதை திருச்சி பள்ளியை தரைமட்டமாக்கிய போது மக்களால் உணர முடிந்தது 

12. பீஜேவைத்தான் இவர்கள் தக்லீத் செய்துள்ளார்கள் என்பதை நான்கு சாட்சிய விஷயத்தில்  கிரவுண்ட் இல்லை என்பதை அவர் ஜமாஅத்தில் இருந்த போது அதை எதிர்க்க திராணியில்லாமல் செல்லுமிடமெல்லாம் நியாயப்படுத்தியது அவரை தூக்கி எரிந்தபின் இது அவர் தனிப்பட்ட கருத்து என பாஜக போல் பல்டியடித்ததில் தெளிவானது 

13. ததஜ தலைமை நிர்வாகி ஒருவருக்கு அவரின் மனைவியின் மருத்துவ செலவிற்காக 20 லட்சத்திற்கு (?) மேல் ஜகாத் பணம் செலவிடப்பட்ட உண்மை வெளியானபோது நம்பிக்கை துரோகத்தின் விலையை உணர முடிந்தது இது போன்று யாருக்கும் அறிவிக்காமல் அனுமதி பெறாமல் ஒரு கிளை நிர்வாகிக்கு 50 லட்சம் செலவிட நேர்ந்தால் செலவு செய்வீர்களா

கிளையில் எத்தனை நிர்வாகிகள் ஆட்டோ ஓட்டி குடும்பத்தை ஓட்டுகிறான் எத்தனைநாள் தாவாவிற்காக தன்னுடைய வருமானத்தை இழந்து நிற்கிறான் என்பது தெரியுமா மாநில நிர்வாகிகளே அவனுக்கு இப்படி செலவிட முடியுமா செலவிட்டாலும் அவன் நெஞ்சம்தான் இதை ஏற்குமா மக்கள் பணம் எனக்கு மட்டும் ஏன் இப்படி செலவிட வேண்டும் என நிச்சயம் தவிர்க்கவே செய்வான் சாதாரண இறையச்சமுள்ள தினக்கூலியாக உள்ள கிளை நிர்வாகி என்பது உனக்கு தெரியுமா தலைமையே

14. சென்னை வெள்ளத்தில் 33 கோடி வாரி வழங்கிய சமுதாயம் இன்று அதைவிட பன்மடங்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கஜா புயலில் 1.75 கோடியை மட்டுமே வழங்கியுள்ளது மக்களின் நம்பிக்கையை ததஜ இழந்து நிற்பதை கண்கூடாய் இறைவன் உணர்த்திவிட்டான் எனும் போது அல்ஹம்துலில்லஹ் அல்லாஹ் மிகப்பெரிய சூழ்ச்சியாளன் என்பதை உளமாற உணர முடிந்தது.

#பகிர்வுச்_செய்தி

பீ.ஜே.யை பலஹீனமான அறிவிப்பாளர் என்று கூறி அவர் ததஜ மீது கூறியுள்ள மோசடிகளை ஏற்க மறுப்பார்களாம். அவர் ஏற்படுத்திய பைலாவையும் மார்க்க விதிகளையும் அப்படியே ஏற்று அணு அணுவாய் பின்பற்றி செயல்படுவார்களாம். இவர்கள்தான் ததஜவினர்
----------------------------------------------------------------------------------------------

07/12, 2:53 pm] -----: பிஜெ தவ்ஹீத் ஜமாஅத்தை பொது விசாரணைக்கு அழைப்பதில் எப்படி எந்த அர்த்தமும் இல்லையோ
அதே போல், தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் மீது பிஜெ ஆதரவாளர்கள் கோபம் கொள்வதிலும் எந்த அர்த்தமும் இல்லை.

இரண்டையும் புரிந்து கொள்ள,
சுய விருப்பு வெறுப்புகளை மாற்றி வைத்து விட்டு, பொறுமையாக கீழுள்ளவைகளை படியுங்கள்.

பிஜெ சம்மந்தமான 28 நிமிட ஆடியோ கடந்த 2017 ஆம் ஆண்டு சமூக வலைதளங்களில் பரவியது.
அப்போது, ஆடியோ மட்டுமே ஒருவர் மீது குற்றம் சுமத்த போதுமான சான்றாகாது என்பதால் தவ்ஹீத் ஜமாஅத்தின் ஒட்டு மொத்த சகோதரர்களும் அதை ஏற்க முடியாது என சொன்னோம்.

ஒன்று, அதை உறுதி செய்யக் கூடிய மேலதிக ஆதாரம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அல்லது, குற்றத்தை சம்மந்தப்பட்டவரே ஒப்புக்கொள்ள வேண்டும்.
இந்த இரண்டில் எந்த ஒன்றும் நிகழவில்லை என்பதால் அவர் மீது ஒருவரும் இந்த குற்றச்சாட்டை சுமத்தவில்லை.
இன்னும் சொல்லப்போனால், அவரை இது தொடர்பாக விமர்சித்து, கேலி செய்து வந்தவர்களுக்கெல்லாம் நாம் பதிலடி கொடுத்து அவரை தற்காத்து வந்தோம்.

அதன் பிறகு, 2018 ஆம் ஆண்டு மற்றுமொரு ஆடியோ பரவியது. அதையும், அதே போன்றே நாம் உதாசீனம் செய்தோம்.
ஆனால், அந்த சர்ச்சை என்பது வெறுமனே ஆடியோவுடன் நிற்காமல், மேலதிக ஆதாரம், சம்மந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருடைய வருகை என அப்பிரச்சனை வலுவடைந்தது.
அந்த ஆடியோ உரையாடல்கள் பிஜெவினுடையது தான் என்பதை நிருபிக்கும் சில கூடுதலான ஆதரங்களை கொண்டு, சம்மந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் ஜமாஅத் அலுவலகம் நோக்கி வருகிறார்கள்.

அவற்றை கருத்தில் கொண்டு, பிஜெவிடம் அது தொடர்பாக கேட்கப்படுகிறது. பிஜெவும், குற்றத்தை ஒப்புக் கொள்கிறார்.

அப்படியானால் அவரை அதற்கு மேல் ஜமாஅத்தில் வைத்திருக்க முடியாது என்பதால் அவர் நீக்கப்படுகிறார்.

இது தான் ஆடியோ சர்ச்சைக்கும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் இடையிலான தொடர்பு.

அன்றைக்கு குற்றத்தை ஒப்புக் கொண்ட பிஜெ, சில மாதங்கள் கழித்து, நான் குற்றம் எதுவும் செய்யவில்லை, என்னை அந்த குடும்பத்தார் மிரட்டியதால் தான் நான் ஒப்புக் கொண்டேன். அந்த ஆடியோ என்பது மிமிக்ரி செய்யப்பட்டு பரப்பப்பட்டது.. என்று கூறினார்.

இந்த கருத்தில் அவர் உண்மையாளர் என்றால், தனது உண்மைத்தன்மையை அவர் எவ்வாறு நிறுவ வேண்டும்?

ஒரு சாதாரண பாமரனிடம் கேட்டால் கூட என்ன சொல்வான்??

யார் தன்னை மிரட்டினார்களோ அவர்களை பொதுவெளிக்கு கொண்டு வர வேண்டும். அந்த ஆடியோவை முதன் முதலாக பரப்பிய சிறைவாசிகளை இவர் பொதுவில் எதிர்கொண்டு, எனக்கெதிராக நீங்கள் செய்திருக்கும் சதியை நான் பொது மேடையில் முறியடிக்க தயார்.. நீங்கள் தயாரா? என்று அறைகூவல் விட்டிருக்க வேண்டும்.
தனது நற்பெயருக்கு களங்கம் சுமத்திய அந்த குடும்பத்தார் மீதும் அந்த ஆடியோ வெளியீட்டாளர்கள் மீதும் மான நஷ்ட வழக்கு தொடுத்திருக்க வேண்டும், மிரட்டிய குற்றத்திற்காக அவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் தொடுத்திருக்க வேண்டும்..
அவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வெட்கப்பட்டு திரைமறைவில் ஒளிந்திருந்தால் கூட, இவரே வலிய சென்று அவர்களை சமூகத்தில் அடையாளப்படுத்தியிருக்க வேண்டும்.

தன்னிடம் எந்த குற்றமும் இல்லையென்றால், தான் மிரட்டப்பட்டு அடிபணிய வைக்கப்பட்டது உண்மையென்றால்
இந்த அளவிலான எதிர்வினையை தான் எந்த சாதாரண மனிதனும் மேற்கொள்வான்.

ஆனால் வேடிக்கையின் உச்சம் என்ன தெரியுமா?
அந்த ஆடியோ வெளியீட்டாளர்கள், வலிய வந்து, எங்கள் மீது முடிந்தால் வழக்கு தொடு... என்கிறார்கள். இவர் அசையாமல் இருக்கிறார்.
பொதுவெளியில் உங்கள் முகத்தை கிழிக்க நாங்கள் தயார் எங்களோடு விவாதித்து நீங்கள் தூயவர் என்பதை நிரூபித்துக் காட்டுங்கள் என்று அவர்கள் சவால் விடுகின்றனர். அதற்கும் அசைந்து கொடுக்காமல் அசாத்திய மெளனம் காக்கிறார்.

அதே சமயம், என்னை தவ்ஹீத் ஜமாஅத் அநியாயமான முறையில் நீக்கி விட்டது..எனவே ஜம அத்தை நான் விவதத்திற்கு அழைக்கிறேன் என்று, சம்மந்தா சம்மந்தமில்லாமல் ஜமாஅத்தை விவாதத்திற்கு அழைக்கிறார்.

அடிப்படை அறிவுள்ள எந்த ஒருவராவது இந்த அணுகுமுறையை, சரி என ஏற்பாரா?

புகார் வந்த நிலையில், அதை வைத்து இவரிடம் கேட்கப்படுகிறது, அதை அவர் ஒப்புக் கொண்டதால் அவரை நீக்கினார்கள்.. அந்த புகாரில் உண்மையில்லை என்றால், ஒன்று அன்றைக்கே அதை சொல்லியிருக்க வேண்டும், அல்லது அந்த புகாரை யார் தெரிவிக்கிறார்களோ அவர்களை நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டும்.

இடையில் தவ்ஹீத் ஜமாஅத் யார்?

திருடன் ஒருவனை காவல்துறை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துகிறது.
நீதிபதி, என்னப்பா நீ திருடினாயா? என கேட்கிறார். ஆமாங்கய்யா என்று அவன் ஒப்புக் கொள்கிறான். அவனுக்கு 2 வருடம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பெழுதுகிறார்.
சிறைக்கு போன அவன், தான் குற்றமற்றவன் என நிரூபிக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? யார் அவன் மீது அவ்வாறு புகார் தெரிவித்தார்களோ அவர்களை எதிர்கொள்ள வேண்டும்.
அவர்களின் வாதங்களை பொதுவெளியில் நிரூபிக்க முயல வேண்டும்.
இதை செய்யாமல், என் மீது அநியாயமாக தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது எனவே, அந்த நிதிமன்ற நீதிபதியை நான் பொது மேடையில் விவாதிக்க அழைக்கிறேன் என்று சொல்லலாமா?
அப்படி சொன்னால் அவன் நல்ல மன நிலையில் இருப்பதாக பொருளாகுமா அல்லது புத்தி சுவாதீனமற்று நடந்து கொள்வதாக கருதுவோமா?

யோக்கியர் என்றால்
தன் மீதான அவப்பெயரை துடைத்தெறிய சிறு துரும்பேனும் கிடைக்காதா.. அதை வைத்துக் கொண்டு அந்த அசிங்கத்தை துடைத்துக் கொள்ள முடியாதா.. என ஏங்கித் தவிக்கவல்லவா வேண்டும் ?
இங்கு அவர் முன்னால், ஆடியோ வெளியீட்டாளர்களே.. வா வா என அழைக்கிறார்கள்.. என்றால், குற்றமே செய்யாத ஒரு யோக்கியருக்கு இதை விட வேறென்ன வாய்ப்பு இருக்கும் ?

தன்னை மிரட்டி அடிபணிய வைத்த குடும்பத்தார் யார் யார் என்பதும் அவருக்கு தெரியும் எனும் போது, அவர்களை பொதுவெளியில் அடையாளப்படுத்தி, அவர்களின் முகத்திரையை கிழித்தெறிந்து, தனது தூய்மையை அதன் மூலம் நிலை நாட்டிட மிக அரிதான வாய்ப்பு அவர் கண் முன் இப்போதும் இருக்கிறதே, இதை அவர் பயன்படுத்தினாரா?

கிடைத்திருக்கும் எந்த வாய்ப்பையும் பயன்படுத்தாமல் அசாத்திய மெளனம் காப்பது ஒன்றே அவரிடம் குற்றம் இருக்கிறது என்பதை உணர்த்தவில்லையா?

இதை கூட நம்மால் புரிய முடியவில்லை என்றால் நாமெல்லாம் பகுத்தறிவு கொண்ட மனிதர்கள் தானா? என கேட்க விரும்புகிறோம்.

தவ்ஹீத் ஜமாஅத் பொது விசாரணைக்கு வரவில்லை என்றாலும் என்ன நடந்தது, எப்படியெல்லம் தனக்கெதிராக சதி நடந்தது என்பதை நானே பொதுவில் விளக்கத்தான் போகிறேன் எனவும் சொல்லியிருந்தார்.

இதை சொல்லி 4 மாதங்கள் ஓடிப் போன நிலையில் இந்த நிமிடம் வரை அவற்றை அவர் விளக்கவுமில்லை.
அவருடைய ஆதரவாளர்களும் அவரிடம் இதைப் பற்றி கேட்கவும் இல்லை.
அவரை வைத்து இயக்கம் காண்கிறார்கள், பயான் நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள், வாரா வாரம் அவரும் லைவில் தோன்றி தவ்ஹீத் ஜமாஅத்தை இரண்டு மணி நேரம் திட்டி தீர்த்து அதில் அற்ப சந்தோஷம் அடைந்து வருகிறார் என்றால்..
நம்மிடம் இத்தனை கேள்விகள் இன்னும் மிச்சமிருக்கிறதே..இதற்கு எந்த பதிலையும் சொல்லாமல், நானே வலிய வந்து விளக்குகிறேன் என சொல்லி மாதங்கள் கடந்த பின்னரும், அது பற்றி மூச்சு விடாமல் காலத்தை கடத்துகிறார் என்றால், சிந்திக்கும் சமூகத்தை என்ன செய்ய சொல்கிறீர்கள்?

பிஜெ எப்படிப்பட்ட அறிஞர் தெரியுமா.. ஆஹா ஓஹோவென புகழ்ந்து கொண்டே நாங்களும் காலத்தை ஓட்ட வேண்டும் என்கிறிர்களா?

பெண்ணின் தங்கையுடன் பேசியது போட்டு வாங்க பேசியது..என்று பொத்தாம் பொதுவாக ஒரு மழுப்பலை சொன்னார். 

அந்த உரையாடலை கேட்டால் போட்டு வாங்க பேசியது போல் இருந்ததா அல்லது சாட்சியை கலைக்க முயற்சி செய்வது போல இருந்ததா என்பதை கூட எங்களால் சிந்திக்க முடியாதா?

எங்களுக்கு என்ன, இரண்டு பேர் பேசிக் கொள்ளும் தமிழ் புரியதா? அல்லது காது கேட்காத செவிடர்களா நாஙகள்?

உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிகின்ற அந்த நோக்கத்தை திரித்து, அது போட்டு வாங்கப் பேசியது என்றால், என்ன போட்டார் என்ன வாங்கினார்? என்பதை அவர் விளக்க வேண்டுமல்லவா?

விளக்கினாரா

மொபைலை ரிப்பேருக்கு கொடுத்திருப்பாங்க போலிருக்கு என்றாரே.. ஆடியோ குரல் அந்த பெண்ணினுடையது இல்லை என்றால் அவள் அந்த மெபையிலை ரிப்பேருக்கு கொடுத்தது ஏன் கேள்வியாக வேண்டும் ?

அவளிடம் யாராவது கேட்டால், தனது குரலில்லை என மறுக்க சொல்லி விடு.. என்றாரே.. தப்பே செய்யாத ஒரு பெண்ணிடம் இப்படி தான் ஒருவர் மறுக்க சொல்ல வேண்டுமா? இவர் சொல்லிக் கொடுக்கவில்லை என்றால் ஒரு ஒழுக்கமுள்ள பெண் மறுக்க மாட்டாளா?

அப்பட்டமான ஆதாரங்கள் நம்மிடம் கிடைத்த பிறகு, நேரடியாக வந்து வாக்குமூலம் தந்து, ஜமாஅத்தை விட்டு ஒதுங்கி விடுங்கள், அது தான் ஜமாஅத்தின் குட்வில்லுக்கு நல்லது,
அல்லது இன்னும் பல ஆடியோக்கள் இருப்பதாக வேறு சொல்கிறார்கள்.. 
நாம் கண்டுகொள்ளாமல் சென்றால் பிஜெ என்பதால் குற்றத்தை இவர்கள் மூடி மறைக்க பார்க்கிறார்கள் என்று மக்கள் பேச ஆரம்பித்து விடுவார்கள்..
என்று சையது இப்ராஹிம் இவரிடம் தெளிவான முறையில் விளக்கி சொன்னதை,

என்னை மிரட்டி விட்டார்கள், ஜமாஅத் நன்மைக்காக ஒப்புக் கொள்ளுங்கள் என்றார்கள்.. எனவே செய்யாத தப்பை செய்ததாக ஒப்புக் கொண்டேன் என்று அப்பட்டமாக அதை திரித்தாரே..

இதை திரித்து தான் பேசுகிறார் என்பதை கூட புரிய முடியாதா பச்சிளம் குழந்தைகளா நாம்?

மூன்றரை வயது குழந்தையிடம் பொய் சொல்லி காரியம் சாதிப்பதை போல எண்ணிக் கொண்டு இவர் செய்யும் திருகுதாளங்களை கூட புரியாமல் அப்போதும் அவருக்கு ஜால்ரா மட்டுமே தட்டிக் கொண்டிருந்தால், நீங்களெல்லாம் ஆட்டு மந்தை என்றும், பிஜெவை தனி மனித வழிபாடு செய்யக் கூடிய கூட்டம் எனவும் காலா காலமாக நம்மீது சுமத்தப்பட்டு வந்த அவப்பெயரை நாம் அங்கீகரித்தது போல ஆகாதா?

குடும்பத்தார் மிரட்டியதால் ஒப்புக் கொண்டேன் என்று அவர் சொன்னால்.. அதை அப்படியே கண்ணை மூடி நம்புவது அறிவா அல்லது மிரட்டலுக்கு அடிபணிகிற ஆள் தானா அவர் என சிந்திப்பது அறிவா?

கடந்த 30 வருட காலத்தில் இவருக்கு எந்த மிரட்டலுமே இருந்ததில்லையா? என்றைக்கு இந்த சத்தியக் கொள்கையை பிரச்சாரம் செய்தாரோ அன்றைய தேதியிலிருந்தே மிரட்டல்கள் இவருடைய பொதுவாழ்வின் ஒரு அங்கமாகவே ஆகி விட்ட ஒன்றில்லையா?

சாதாரண குடும்பம் ஒன்று, நாங்கள் போலீசில் போய் விடுவோம் என்று மிரட்டினால் இவரை அடிபணிய வைத்து விடலாம் என்றால் இந்த அளவு 'easy target '  தானா பிஜெ ?

சிறு குழந்தையிடம், ஒழுங்கா சாப்பிடு அல்லது போலீஸ் மாமா புடிச்சுட்டு போயிடுவாரு என அம்மாக்கள் மிரட்டும் போது அதற்கு பயந்து சாப்பிடும் குழந்தையை போன்றவராக தான் இவரை நாம் கடந்த காலங்களில் கண்டோமா??

இத்தனை எளிதான டார்கெட்டாக அவர் இருந்திருப்பார் என்றால் இது மாதிரியான மிரட்டும் வாய்ப்புகள் கடந்த 30 வருடங்களில் எதிரிகளுக்கு ஆயிரக்கணக்கில் வந்திருக்குமே.. மறுக்க முடியுமா?
எப்படியாவது இவரை வீழ்த்தி விட வேண்டும் என்று முயற்சி செய்த எதிரிகளுக்கு இதுவெல்லாம் லட்டு மாதிரியான வாய்ப்பில்லையா?

இது போன்ற தர்க்க ரீதியிலான கேள்விகள் கூட நமது உள்ளங்களில் எழவில்லையென்றால் அல்லாஹ் நமக்களித்த பகுத்தறிவு எனும் அமாநிதத்தை நாம் காலில் போட்டு மிதிப்பவர்களாக கருதப்பட மாட்டோமா?

சரி, அன்றைக்கு மிரட்டலுக்கு அடிபணிந்து ஒப்புக் கொண்டார். அப்படியானால் அந்த மிரட்டல் காலத்திற்கும் நிற்காமல் போனது எப்படி ?
அன்றைக்கு மிரட்டியதால் குற்றத்தை ஒப்புக் கொண்ட பிறகு, மூன்று மாதங்கள் கழித்து, என்னை மிரட்டி விட்டார்கள் என்று இவரால் எப்படி சொல்ல முடிகிறது?

அப்படியானால் மூன்று மாதம் கழிந்து விட்டால் மிரட்டல் காலாவதியாகி விடுமா?

மே மாதமாக இருப்பதால் நாங்கள் இப்போது போலீசுக்கு செல்வோம். ஆகஸ்ட் மாதம் ஆகி விட்டால், நீங்கள் உண்மையை சொல்லிக் கொள்ளலாம், நாங்கள் போலீசுக்கு போக மாட்டோம் என்று மிரட்டலுக்கு கூட வாலிடிட்டி கொடுத்து தான் மிரட்டினார்களா?

அல்லாஹ் எங்களுக்கு தந்திருக்கும் மகத்தான பகுத்தறிவை கொண்டு இப்படி தான் நாங்கள் புரிய வேண்டுமா ?

மேற்கூறப்பட்ட எந்த ஒன்றுக்காவது உரிய விளக்கத்தினை இந்த நிமிடம் வரை தந்தாரா?

பொது விசாரணை இல்லாவிட்டாலும் நானே வலிய வந்து விளக்குவேன் என்று சொல்லி முன்று மாதங்கள் ஆகி விட்டதே.. விளக்கினாரா?

அப்படியானால் நாங்கள் என்ன முடிவை எடுக்க வேண்டும் என்று பிஜெ ஆதரவாளர்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

எங்களுக்கு அவர் மீது அன்பு இருக்கவில்லையா?

அவரிடம் கேட்டுப் பாருங்கள்.. முந்தைய பல உரையாடல்களை மன ஓட்டத்திற்கு கொண்டு வர சொல்லிப் பாருங்கள்.. முன்பு நடைபெற்ற மின்னஞ்சல் உரையாடல்களை நினைவலைகளில் கொண்டு வந்து பார்க்க சொல்லுங்கள்.
அவரை நாங்களெல்லாம் எங்கள் தகப்பன் ஸ்தானத்தில், உயரிய ஆசிரியர் ஸ்தானத்தில், எங்கள் குடும்பத்தில் ஒரு அங்கத்தினராக வைத்திருந்தோமா இல்லையா என்பதை அவருடைய மன்சாட்சி சொல்லும்.

தகப்பனாரை இலேசில் எவரும் தூக்கி வீச மாட்டார்கள்.
அதையும் கடந்து ஒருவர் வீசுகிறார் என்றால், அவரால் ஏற்பட்ட பாதிப்பு, அவர் மீது கொண்டிருந்த நேசத்தை மிகைத்து விட்டது என்று பொருள்.

அதற்கு என்ன பரிகாரம் என அவரிடம் கேளுங்கள்..

நாம் எழுப்புகின்ற கேள்விகளுக்கெல்லாம் எங்கள் பகுத்தறிவு ஏற்றுக் கொள்ளத்தக்க வகையிலான விளக்கத்தை சொல்லி விட்டால் இந்த ஜமாஅத்தில் அவரை மீண்டும் இணைத்துக் கொள்ளலாமே..

அல்லது அவர் அமைத்திருக்கும் இயக்கத்தில் நாங்கள் வந்து இணைந்து கொள்கிறோம்.

எங்களுக்கு வேண்டியதெல்லாம், அவர் குற்றமற்றவர் என நிறுவக்கூடிய ஒரேயொரு அர்த்தமுள்ள வாதம்.

அதை நிறுவாமல் இவர் என்ன வியாக்கியானங்கள் பேசினாலும் சரி, ஜமாஅத்தை பற்றி என்ன புகார்களை சொன்னாலும் சரி.. மார்க்க அடிப்படையில் அவர் ஒரு பலகீனமான அறிவிப்பாளர்..!

அசிங்கத்தை செய்து, அதை மூடி மறைக்க அப்பட்டமாக பொய்யுரைப்பவர்.

அவருடைய எந்த கூற்றும் கருத்தில் கொள்ளப்பட மாட்டாது..!








Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.