பதவி கிடைத்து விட்டால் தஃவா பணி பற்றி பேசவே மாட்டாரோ அவருக்கு பெயர்தான் J.S. ரிபாயோ?
பகிரங்க கடிதம் -2 ம.ஜ.க. மாநில நிர்வாகி J.S. ரிபாயி அவர்களே! நீங்கள் ஜரீனா மேட்டரை உடனடியாக எனக்கு சொன்னதன் நோக்கம் என்ன? இந்த மாதிரி அநியாங்களை
சம்பந்தபட்டவர்களுக்கு தெரியாமல் மற்றவர்களிடம் சொல்லி புறம் பேசிக் கொண்டிருக்க மாட்டேன். யாருக்கும் பயப்படாமல் பகிரங்மாக சம்பந்தபட்டவர்களை எதிர்த்து நிற்பேன். மக்களிடம் கொண்டு செல்ல தயங்க மாட்டேன் என்பதுதானே!
அப்பொழுது இது பற்றி அப்பல்லோ ஹனீபா, ஆடிட்டர் அப்துர்றஹ்மான், வக்கீல் கோபிநாத், மண்ணடி அப்துல்லாஹ் போன்றவர்கள் சாட்சி சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இதை நான் நம்புவேன். காரணம் கடந்த கால வரலாறு ஆதாரமாக உள்ளது என்று நான் சொன்னதை J.S. ரிபாஇயாகிய
நீங்கள் உங்கள்
விஷயத்திலும் மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.
J.S. ரிபாஇ
அவர்களே! 2011ல் மீண்டும் தமுமுகவின் மாநில பொறுப்பில் வர முடியாது என்று எண்ணிய போது இனி தஃவா பணி செய்ய விரும்புகிறேன் என்று என்னை தொடர்பு கொண்டு சொன்னீர்களா இல்லையா? எதிர்பாராவிதமாக தலைவராக ஆனீர்கள். J.S. ரிபாஇயாகிய தங்களுக்கு தலைவர் பதவி கிடைத்த பிறகு தஃவா பணி பற்றி தாங்கள் பேசவே இல்லையே ஏன்?
2வது முறையாக தமுமுக தலைவராக தாங்கள் வர வாய்ப்பு இல்லை என்று உங்கள் மனதில் எண்ணிய போதும் தாங்கள். எனக்கு போன் போட்டு மீண்டும் தமுமுக தலைவராக நான் வர விரும்பவில்லை. தஃவா பணி செய்ய விரும்புகிறேன் என்று சொன்னீர்களா இல்லையா?
மனதில் எண்ணிய தாங்கள் என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு உள்ளத்தில் உள்ளதை அறிய நீங்கள் என்ன அல்லாஹ்வா என்ற வாதம் வைக்க நினைக்காதீர்கள். தஃவா பணியில்
ஈடுபாடாத, ஈடுபாடு இல்லாத உங்களது பிந்தைய செயல்பாடுகள் தான் நீங்கள் இப்படித்தான் எண்ணியுள்ளீர்கள் என்பதை புரிய வைத்தது.
தமுமுக தலைவராக இருந்து கொண்டே தஃவா பணியை நன்கு செய்யலாமே. மற்றவர்களையும் முடுக்கி விடலாமே தஃவாவுக்காக IPPயை நன்கு பலப்படுத்தலாமே என்றேன்.
மேலப்பாளையத்துக்காரர்கள் உயர் பதவிகளில் இருப்பதை விரும்பும் நான் அப்படியெல்லாம் விட்டு விடாதீர்கள். தமுமுக தலைவராக இருந்து கொண்டே தஃவா பணி செய்யுங்கள் என்றும் அழுத்தமாகச் சொன்னேன்.
அதே கால கட்டத்தில் 2014,
2015களில் பள்ளிவாசல் அமைப்பது சம்பந்தமாக மேலப்பாளையம் நகர தமுமுக நிர்வாகிகளை அழைத்து என் வீட்டில் பல ஆலோசனைகளை நடத்தியுள்ளோம். அதில் உங்களை அழைக்கவே இல்லை. மேலப்பாளையம் தமுமுக நிர்வாகிகள் பல இடங்களை கொண்டு வந்தார்கள்.
போட்டி பள்ளி, பிரிவினைப் பள்ளி மாதிரி ஆகி விடக் கூடாது. பள்ளி இல்லாத பகுதியில்தான் இடம் வேண்டும். டூ வீலர்கள் நிறுத்துவதற்கும் வெளியூர்களிலிருந்து வருபவர்கள் கார்கள்
நிறுத்துவதற்கும் பார்க்கிங் வசதி இருக்க வேண்டும். மக்கள் நடைபாதைகளுக்கு இடையூராக பள்ளி அமைந்து விடக் கூடாது என்று பல இடங்களை தவிர்த்தேன்.
குறிப்பாக கடைப்பள்ளி எதிரிலும் மஸ்ஜிதுர்றஹ்மான் அருகிலும் வந்த இடங்களை போட்டி பள்ளி மாதிரி ஆகி விடக்
கூடாது என்பதற்காக வேண்டாம் என்றேன்.
2014 ஜனவரி, பிப்ரவரி, மார்ச் 2015
மே, ஜுன் ஆகிய இந்த காலக்கட்டத்தில் நடந்த இவற்றில் எதிலும் J.S. ரிபாஇயாகிய நீங்கள் இருக்கவில்லை. காரணம் உங்களை நாம் அழைக்கவில்லை.
தஃவா பணி செய்ய விரும்புகிறேன் என்று என்னிடம் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்த J.S. ரிபாயி அவர்களே தாங்கள் எதிர்பாரா விதத்தில் ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி போன்ற மூத்த தலைவர்கள் தயவில் முதல் முறை தலைவர் ஆனது போல் மீண்டும் அவர்கள் தயவில் இரண்டாவது முறையாகவும் த.மு.மு.க. தலைவராக ஆனீர்கள். அதன் பிறகு தஃவா பணி பற்றி தாங்கள் பேசவே இல்லையே ஏன்?
பதவி கிடைத்து விட்டால் தஃவா பணி பற்றி பேசவே மாட்டாரோ J.S. ரிபாயி?
பதவி கிடைத்து விட்டால் தஃவா பணி பற்றி பேசவே மாட்டாரோ அவருக்கு பெயர்தான் J.S. ரிபாயோ
Comments