அசத்தியவாதிகளை எப்படி அழித்தான் அழிப்பான் என்று சிந்திக்காதே என்கிறதா அல்குர்ஆன்?

சத்தியத்திற்காக போராடிய நல்லடியார்களும் நபிமார்களும் எப்படி அல்லாஹ்வின் அருளைப் பெற்றார்கள். அசத்தியவாதிகளான பொய் சொல்லி மக்களை ஏமாற்றிய பிர்அவ்ன் மாதிரியான பித்தலாட்டக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தை இறக்கி எப்படி அழித்தான் என்றும்  தான் அல்குர்ஆனில் அல்லாஹ் சொல்லிக் காட்டி உள்ளான்.
7:17645:23ஆகிய  வசனங்களில் நல்லடியார்கள் பற்றி சொல்லி விட்டா சிந்திக்கச் சொல்கிறான்? இப்படி நல்லோர் தீயோர் என எல்லார் பற்றியும் சொல்லிக் காட்டி விட்டுத்தான் திரு குர்ஆனிலுள்ள ஒவ்வொரு வார்த்தைகளையும் சிந்தித்து நல்லுணர்வு பெற மாட்டீர்களா என்று பல இடங்களில் அல்லாஹ் கேட்கிறான். சிந்திக்கும் மக்களுக்கு பல அத்தாட்சிகள் உள்ளன என்றும் அல்லாஹ் கூறுகிறான்.


அசத்தியவாதிகளை எப்படி அழித்தான் அழிப்பான் என்று சிந்திக்காதே என்று குர்ஆனுக்கு மாற்றமாக முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை  இப்னு கையூம் போன்ற அறிஞர்கள் கூறி இருக்க மாட்டார்கள். சத்தியத்திற்காக போராடுவது என்றாலே அசத்தியத்திற்கு எதிரான போராட்டம்தானே! அல்லாஹ் அசத்தியத்தை எப்படி அழிப்பான் என்று சிந்தித்து சொல்லும் போதுதானே அசத்தியம் அழியும். 


அறிஞர்கள் போர்வையில் உள்ள கூ முட்டைகள் அவுச்ச  முட்டைகளான அயோக்கியர்கள் தான், மக்கள் தங்கள் அயோக்கியத்தனங்களை கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காக இப்படி கட்டி விட்டிருப்பார்கள். சுரக்காய் ஹதீஸ் மாதிரி இப்னு கையூம் போன்ற அறிஞர்கள் பெயரால் தங்கள் சரக்கை விற்று இருப்பார்கள் என்று இப்னு கையூம் விஷயத்தில் நல்லெண்ணம் வைப்போம்


இப்னு கையூம் போன்ற அறிஞர்களே சொல்லி இருந்தாலும் நமக்கு குர்ஆனும் ஹதீஸும்தான் மார்கம். நான்கு இமாம்களை பின்பற்ற மாட்டோம் என்று சொல்லி விட்டு. குர்ஆனுக்கு மாற்றமாக 40 இமாம்கள் பெயரால் கதைகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். 


45:23(நபியே!) தன்னுடைய உடல் ஆசையை இச்சையை(த் தான் வணங்கும்) தெய்வமாக எடுத்துக்கொண்ட ஒருவனை நீங்கள் கவனித்தீர்களா? அவனுக்கு(ப் போதுமான) கல்வி அறிவு இருந்தும் (அவனது பாவத்தின் காரணமாக) அல்லாஹ் அவனைத் தவறான வழியில் விட்டு, அவனுடைய செவியின் மீதும், உள்ளத்தின் மீதும் முத்திரையிட்டு விட்டான். அவனுடைய பார்வையின் மீதும் ஒரு திரையை அமைத்து விட்டான். அல்லாஹ் இவ்வாறு செய்த பின்னர், அவனை யாரால்தான் நேரான வழியில் செலுத்த முடியும்? (இதனை) நீங்கள் சிந்தித்து (கவனித்து)ப்   பார்க்க வேண்டாமா?




11:24இவ்விரு பிரிவினர்களுக்கு உதாரணம்: (ஒரு பிரிவினர்) குருடர், செவிடர் போலவும் (இனியொரு பிரிவினர் நல்ல) பார்வையுள்ளவர், (நல்ல) கேட்கும் சக்தியுடையவர் போலவும் இருக்கின்றனர், இவ்விரு பிரிவினரும் ஒப்புவமையில் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு