பள்ளித் தலைவர் பற்றி புறம் பேசுபவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக!


சமுதாயத்திற்கு கேடு செய்தவர்களை செய்து கொண்டிருப்பவர்களை அடையாளம் காட்டியபொழுது புறம் பேசாதீர்கள் என்று ஒன்றாக நின்று ஊருக்கு உபதேசித்தார்கள். அப்படிப்பட்டவர்களெல்லாம் பிரிந்ததும் ஜும்ஆ மேடைகளில்  புறம் பேசுவதாக ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி பள்ளிவாசல்களில் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். புறம் வேண்டாம் என்று ஸ்டேட்டஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். யார் புறம் பேசி இருந்தாலும் நீண்ட உயரமான கம்பங்களில் அவர்கள் கட்டப்பட்டு மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு அவர்களை சூழ்ந்திருக்கும் (104:1- 9)


புறம் எது?  அவதுதுாறு எது ? என்று அறிவைக் கொண்டு சிந்திக்காமல் புறம் பேசாதீர்கள் என்று ஊருக்கு உபதேசித்துக் கொண்டிருப்வர்கள் புறம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளவே இந்த உதாரணம். உதாரணங்களுக்கு ஆதாரம் தேவை இல்லை. ஆனால் இது ஆதாரம் உள்ள உதாரணம்தான்.


ஒருவர் பள்ளிவாசலின் தலைவராக இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.. ஒழுங்காக பள்ளிக்கு தொழ வருவதில்லை. ஏங்க வீட்டில் இருந்து கொண்டே பள்ளிக்கு தொழ வராமல் இருக்கிறீர்கள்? என்று கேட்டால்  தலைவராக இருந்தால் பள்ளிக்கு தொழ வரணும் என்பது சட்டமா? என்று கேட்கிறார். இப்படிப்பட்ட அயோக்கிய தலைவைனை நேருக்கு நேர் சட்டையைப் பிடித்து நாக்கை பிடிங்கி சாகிற நாலு கேள்வி கேட்டால் அது புறமாக ஆகாது.


தனது சுயநலனுக்காக தகுதியற்ற தனது வரட்டு கவுரவத்திறகாக பள்ளித் தலைவர் பதவி பெற  தஃவா பணி செய்யப் போகிறேன் இனி எந்த இயக்கத்திலும் ஈடுபட மாட்டேன் கட்சி கட்சி என அலைய மாட்டேன் என்று கூறி ஏமாற்றி ஒருவர் பள்ளி தலைவர் பதவி பெற்று ஏமாற்றி இருக்கிறார்.


அவரைப் பார்த்து வாக்குறுதி அளித்தபடி தஃவா பணி செய்யாமல் ஏன் கட்சி கட்சி என அலைகிறீர்கள் என்று கேட்டால். கட்சியில் தான் எனது பொழப்பு இருக்கிறது என்று அந்த பள்ளி தலைவர் பதில் சொன்னால் .இப்படிப்பட்ட அயோக்கிய தலைவனை பிஞ்ச செருப்பால் அடித்து நேருக்கு நேர் கேட்டால் அது புறமாக ஆகாது. 

இப்படி யார் நேருக்கு நேர் கேட்கிறார்களோ அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தார் மீதும் அல்லாஹ்வின் பேரருள் என்றென்றும் உண்டாகும் என்பதில் சந்தேகம் இல்லை. மலக்குகளும் நல்லடியார்களும் துஆச் செய்வார்கள். நாமும் துஆச் செய்வோம்.


------ இன்ன பள்ளியில் பொருளாளராக இருந்தபொழுதும் இப்படித்தான் வீட்டில் இருந்து கொண்டு பள்ளிக்கு தொழ வர மாட்டார். ------இன்ன பள்ளியில் செயலாளராக இருந்தெபொழுதும் வீட்டில் இருந்து கொண்டு பள்ளிக்கு தொழ வந்ததில்லை. T.V.யில் சினிமாக்கள் இல்லாவிட்டால்தான் பள்ளிக்கு வருவார் என ------ இன்ன பள்ளியில் பேசிக் கொள்வார்கள்.  ------ இன்ன பள்ளியிலும் இதே நிலைதான் இருந்தது.


அதே மாதிரிதான் இப்பொழுதும் பள்ளிக்கு வராமல் இருக்கிறார். முன்பு போல் இருக்க மாட்டேன் என்றார். வீட்டில் இருந்து கொண்டே பள்ளிக்கு தொழ வராமல் இருக்கிறார். நாங்களும் பல தடவை சொல்லி விட்டோம்

அண்ணே பள்ளிக்கு வாங்க என்று கெஞ்சாமல் கெஞ்சி விட்டோம். தலைவராக இருந்தால் பள்ளிக்கு வரணும் என்பது சட்டமா? என்று கேட்கிறார்.  

இப்படியாக அல்லாஹ்வின் பள்ளியில் இருந்து பேசினாலும் வெளியில் பேசினாலும் அதற்கும் பெயர் புறம். அல்லாஹ்வின் பள்ளியில் உள்ள விளக்குகளையும் பேன் (காத்தாடி)களையும் வீணாக பயன்படுத்தி பேசுவது டபுள் பாவம். யாரெல்லாம் பள்ளியில் இருந்து இந்த மாதிரி எல்லாம் பள்ளித் தலைவர் பற்றி பின்னால் பேசினார்களோ அவர்களெல்லாம் புறம் பேசிய கூட்டத்வர்கள்.

யா அல்லாஹ் யாரெல்லாம் உனது பள்ளியிலிருந்து இப்படியாக பள்ளித் தலைவர் பற்றி புறம் பேசினார்களோ அவர்களை மிக நீண்ட உயரமான கம்பங்களில் கட்டி மூட்டப்பட்ட உனது நெருப்பை அவர்களை சூழ்ந்திருக்கச் செய்வாய் என்பது உனது வாக்காகும். உனது வாக்கை நீ மீற மாட்டாய்.


இப்படியாக பள்ளியிலிருந்து புறம் பேசியவர்கள் மீதும் அவர்களது மனைவி மக்கள் மீதும் உனது சாபத்தை இறக்குவாயாக என்று பாதிக்கப்பட்ட மன நிலையில் வேண்டுகிறோம்.

புறம் பேசித் திரிபவர்கள் குற்றவாளிகள் அவர்களது மனைவி மக்கள் என்ன செய்தார்கள் என்று மக்கள் கேட்கலாம். நேருக்கு நேர் கேள்வி கேட்டவருக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டு இவர்கள் புறம் பேசித் திரிவது மனைவி மக்களுக்கு தெரிந்தும் கண்டிக்காமல் இருப்பதால்தான் அவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்க வேண்டும் என்கிறோம்.



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு