Posts

Showing posts from 2007

மேலப்பாளையம் த.மு.மு.க.சார்பில் சிலம்பாட்ட கலைக்குழு ஆரம்பம்.

Image
மேலப்பாளையம் நகர த.மு.மு.க.சார்பில் சமுதாய பிரமுகர் கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹி அவர்கள் முயற்சியில் சிலம்பாட்ட கலைக்குழு 30.12.2007 அன்று ஆரம்பிக்கப்பட்டது. இக்கலைக்குழுவை த.மு.மு.க மாநிலப் பொதுச் செயலாளரும் வக்ஃபு வாரிய தலைவருமான S.ஹைதர் அலி அவர்கள் ஆரம்பித்து வைத்தார்கள். நெல்லை வண்ணாரப் பேட்டை சுற்றுலா மாளிகையில் நடந்த இந்நிகழ்வில் மாநில துணை பொதுச் செயலாளர் மவுலவி J.S.ரிபாயீ ரஸாதி, மேலப்பாளையம் பிரமுகர் தீன் சுடர் சம்சு, சிலம்பு வாத்தியார் ஹபீப், இனமான சிங்கம் முன்னாள் துபை முஸ்லிம் லீக் இளைஞர் அணி செயலாளர் துணை வாத்தியார் காயங்கட்டி கமால், மாநில துணை செயலாளர் மைதீன் சேட்கான்,நெல்லை மாவட்ட துணைத் தலைவர் பாளை பாரூக், நகர த.மு.மு.க தலைவர் K.S.ரசூல் மைதீன், செயலாளர் A.M.மைதீன் பாதுஷா, பொருளாளர் A.காஜா, E.M.அப்துல் காதர், அப்துல் அஜீஸ், மகபூப் ஜான், ஹக்கீம், கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிலம்பம் வாத்தியார் ஹபீப் அவர்களிடம் சிலம்பம் அளிக்கிறார் த.மு.மு.க மாநிலப் பொதுச் செயலாளரும் வக்ஃபு வாரிய தலைவருமான S.ஹைதர் அலி அவர்கள். இனமான சிங்கம் முன்னாள் துபை முஸ்லிம் லீக் இளைஞர் அணி செயல...

2008 புனித ஹஜ்ஜின் இனிய காட்சிகள்.

Image

வலசை பள்ளிவாசலில்

அனுப்புநர் வலசை ஜமாத் தலைவர் வலசை ஜமாத் கமிட்டி, வலசை ஜமாத் ஊர் பொதுமக்கள், வலசை பெறுநர் ஆய்வாளர் அவர்கள் சேர்ந்தமரம் காவல் நிலையம், சேர்ந்தமரம். மதிப்பிற்குரிய ஆய்வாளர் அவர்களுக்கு வணக்கம், நேற்று 27.12.2007 அன்று இரவு எங்களது ஊரில் உள்ள பள்ளிவாசலின் இரண்டு பூட்டுகள் மற்றும் கதவு கம்பிகள் மற்றும் இரண்டு பீரோ, ஒரு ஒலிபெருக்கி, அலைமாறி, உள்ளிட்ட பொருள்கள் சேதப்படுத்தப்பட்டும் பள்ளிவாசலில் உள்ள குர்ஆன் அவமதிக்கப்பட்டு கீழே தள்ளியும் விடப்பட்டுள்ளது. இதனை தாங்கள் விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு வலசை ஜமாத் மற்றும் ஜமாத் பொதுமக்கள் ஜமாத் தலைவர். U.M. முகைதீன் பிச்சை, இர்

மதச் சுதந்திரமும் கிறிஸ்துமசும் -முக்ரின்

அன்புச் சகோதரர் ஃபள்லுல் இலாஹி அவர்களுக்கு, வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹஹ§. தங்களின் அஞ்சல் பெற்றுக் கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி. உங்களது இணைய தளத்தில் அவற்றை இடம்பெறச் செய்ததற்காக அல்லாஹ் தங்களுக்கு நற்கூலி வழங்குவானாக. நஜ்ரான் நாட்டிலிருந்து வந்த கிறிஸ்துவப் பாதிரிகள் இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களுடன் கிறிஸ்துவக் கொள்கையை நிலைநாட்ட விவாதம் செய்தனர். சில நாட்கள் நடந்த இந்த விவாதத்தின்போது மஸ்ஜிதுன் நபவியிலேயே அந்த பாதிரிகள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அப்பாதிரிகள் அவர்களின் முறைப்படி மஸ்ஜிதுன் நபவியிலேயே வணக்க வழிபாடுகளில் ஈடுபட இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அனுமதி அளித்துள்ளார்கள். இரண்டாம் கலீஃபா உமர் (ரழி) அவர்கள் கிறிஸ்துவர்களின் ஆலயம் சென்று பாதிரிமார்களுடன் உரையாடி இருக்கின்றார்கள். நபி (ஸல்) அவர்களும் கலீஃபாக்களும் தமது ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிற மத வணக்க வழிபாடுகளை தடை செய்யவில்லை. இந்நிலையில் ஜமாஅத்தே இஸ்லாமி நிர்வாகத்திற்குட்பட்ட பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட அனுமதித்ததை எப்படி குறை கூறமுடியும்? மேற்கண்ட கேள்விகள் மிகவும் நியாயமா...

2007குர்பானி

Image
மேலப்பாளையம் குர்பானி காட்சிகள். இது நள்ளிரவு 2 மணிக் காட்சி. அறிஞர் அண்ணா வீதியை அடைத்து நிற்கும் மக்கள். மேலப்பாளையம் காஜா நாயகம் தெரு முனையில் அவ்வப்போது குர்பானிக்காக கொண்டு வரப்பட்ட மாடுகள். பெருநாள் தொழுகைக்குப் பின் ஆரம்பிக்கப்பட்டு விடிய விடிய நடந்த குர்பானி. இது நள்ளிரவு 3 மணிக் காட்சி. அறிஞர் அண்ணா வீதியை அடைத்து நிற்கும் மக்கள். இது அதிகாலை 4 மணிக் காட்சி. காஜா நாயகம் தெரு, அறிஞர் அண்ணா வீதி முனையில் அறுக்கப்பட்வை உடனுக்குடன் த.மு.மு.க. அலுவலகத்தினுள் வைத்து வெட்டிபார்சல் போடப்படுகிறது. தினமும் 4 நாட்களாக பஜ்ரு வரை நடந்த இந்த குர்பானி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற த.மு.மு.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் மவுலவி ஜே.எஸ்.ரிபாஈ, நகர தலைவர் ரசூல் மைதீன், செயலாளர் மைதீன் பாதுஷா, பொருளாளர் காஜா, துணைச் செயலாளர் அப்துல் காதர், மஜீத் லெப்பை பெயரர் அப்துல் அஜீஸ், K.S.ஹக்கீம், அப்துல் காதர், ஹஸன், மாப்ஜான், ராஹத் செய்யது அலி என த.மு.மு.க.வினர் அனைவரும் கடுமையாக உழைத்தார்கள். நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் Rs 2,84,000. தாழையூத்து, தச்சநல்லூர், சுரண்டை, வீராணம் பாளை ரபீக் மூலம் ராஜா முஹம்மது ...

எப்படி குறை கூற முடியும்?

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். அன்புள்ள அப்துல்லாஹ் முக்ரிப் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. தாங்கள் அனுப்பிய மெயில்களை அப்படியே இடம் பெறச் செய்துள்ளோம். நஜ்ரான் நாட்டிலிருந்து வந்த கிறிஸ்துவ பாதிரிகள் இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களுடன் கிறிஸ்துவ கொள்கையை நிலை நாட்ட விவாதம் செய்தனர். சில நாட்கள் நடந்த இந்த விவாதத்தின்போது மஸ்ஜிதுன் நபவியிலேயே அந்த பாதிரிகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அப்பாதிரிகள் அவர்களின் முறைப்படி மஸ்ஜிதுன் நபவியிலேயே வணக்க வழிபாடுகளில் ஈடுபட இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அனுமதி அளித்துள்ளார்கள். இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மதினாவில் ஆட்சியாளராக இருந்தார்கள். அவர்களது ஆட்சி அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தான் யூதர்களும் கிறிஸ்தவர்களும் வாழ்ந்தார்கள். அவர்களின் முறைப்படி தான் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வந்தார்கள். அவர்களுக்கு இஸ்லாத்தை எத்தி வைக்கும் பிரச்சார பணியைத்தான் செய்தார்கள். தவிர, இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி தனது ஆட்சி அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பிற மத வணக்க வழிபாடுகளை தடை செய்யவில்ல...

முஸ்லிம்களும் கிறிஸ்துமசும்.

from Abdullah Muqrin date Dec 26, 2007 3:06 AM subject முஸ்லிம்களும் கிறிஸ்துமசும் mailed-by gmail.com அன்பான முஸ்லிம்களே! நாம் ஒரு பன்மைச் சமூகத்தில் வாழ்ந்து வருகின்றோம். தொழில் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் நாம் மாற்று மத அன்பர்களுடன் நட்பு கொண்டிருக்கின்றோம். ஆனால் ஒருபோதும் அவர்களுடன் கொண்ட நட்பு இறைக் கொள்கையை விட்டுக்கொடுக்கும் நிலைக்கு நம்மை ஆளாக்கிவிடக்கூடாது. இதில் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். உதாரணமாக நம்மிடம் பழகும் கிறிஸ்தவ நண்பர் HAPPY CHRISTMAS என்று கூறும்போது அல்லது நம்மைக் கிறிஸ்துமஸ் விருந்துக்கு அழைக்கும்போது அல்லது கிறிஸ்துமசிற்காக படைக்கப்பட்ட பலகாரங்களை வழங்கும்போது நம்மில் பலரும் ஒரு கணம் சருகி அவரிடம் திரும்ப அதே வார்த்தையைக் கூறிவிடுகின்றோம். அல்லது கிறிஸ்துமஸ் விருந்துக்குச் செல்கின்றோம் அல்லது கிறிஸ்துமசிற்காகப் படைக்கப்பட்ட உணவை உண்டுவிடுகின்றோம். இன்னும் சிலரோ பட்டும் படாமல் வேண்டா வெறுப்புடன் அவர்களை நோகடிக்கக்கூடாது என்ற எண்ணத்தில் அவர்களுக்கு வாழ்த்து சொல்கின்றோம். அல்லது அவர்கள் தரும் உணவை வாங்கி வைத்து விட்டு அதனை உண்ணா...

தவறான கொள்கையில் உள்ள நல்ல மனிதர்.

Image
இந்திய அரசியலில் வாஜ்பாய் பற்றி கூறப்பட்ட கவர்ச்சியான சொல். தவறான இடத்தில் உள்ள நல்ல மனிதர். மக்களை ஏமாற்ற அரசியல் சாணக்கியரால் சொல்லப்பட்ட இந்த சொல்லில்தான் கவர்ச்சி உள்ளது. ஆனால் உண்மை இல்லை. இடமும் தவறானது. மனிதரும் தவறானவரே, வேடதாரியே. இதுபோல்தான், பி.ஜெ.யும் நல்ல கொள்கையை பிரச்சாரம் செய்து பிரபலமடைந்த தவறான மனிதர். உண்மையான கொள்கையைச் சொல்லி தனது பொய்யான முகத்தை மறைத்த போலியான, பொய்யான மனிதர். இதற்கு மிகப் பெரிய எடுத்துக்காட்டு அவர் செய்த குர்ஆன் மொழி பெயர்ப்பில் இறை வார்த்தைகளை நீக்கி விட்டு செய்த மோசடி. http://mdfazlulilahi.blogspot.com/2005/05/blog-post.html http://mdfazlulilahi.blogspot.com/2007/05/blog-post_05.html http://mdfazlulilahi.blogspot.com/2007/05/blog-post_03.html சமீபத்தில் சில வாரங்களாக ஈரான் நாட்டு ஆட்சியாளரை மற்ற ஆட்சியாளர்களுடன் ஒப்பிட்டு உயர்வுபடுத்தி மெயில்கள் வந்த வண்ணம் உள்ளன.இப்பொழுது இந்த ஆண்டு அவர் ஹஜ் செய்த காட்சிகளை அனுப்பி உள்ளனர். இந்த காட்சிகளை மட்டும் வைத்து தவறான கொள்கையில் உள்ள நல்ல மனிதர் என்று மட்டுமே சொல்ல முடியும். இந்த காட்சிகளைக் காட்டி ...

அன்றே அடையாளம் காட்டி ஒதுக்கி இருக்க வேண்டும்.

Image
salaam i am regular listener of PJ Bayan's.When i came across your blogs i am shocked to learn your wording about PJ.Is they are true.Please reply பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். அன்புள்ள சகோதரர் --- அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ஜாக் அமைப்பினர் நிகழ்ச்சி நடத்தினால் அரபியில் போர்டு வைக்கிறார்கள். புத்தகம் வெளியிட்டால் அதிலும் அரபியில் முன்னுரை கொடுக்கிறார்கள். காரணம் அதைக் காட்டி அரபுகளிடமுமு; அரபுநாட்டு நிறுவனங்களிடமும் காசு வாங்கவே இந்த வேலை என பி.ஜெ. குற்றம் சாட்டினார். திருவாளர் பி.ஜெ. மொழி பெயர்த்த திர்மிதி தமிழ் மொழி பெயர்ப்புக்கு அரபியில் அணிந்துரை வாங்கி வெளியிட்டுள்ளார். அந்த அணிந்துரைகளை பார்க்க இதனை கிளிக் செய்யவும். http://mdfazlulilahi.blogspot.com/2001/10/blog-post_01.html இதன் நோக்கம் என்ன? அணிந்துரை வழங்கியுள்ள 3 சிலோன் மவுலவிகளும் தமிழர்களே. கடையநல்லூர் அப்துல் ஜலீல் மதனியும் தமிழரே. நூலும் தமிழ் நூலே. இவர் சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாக உள்ளவர். எப்பொழுது அந்நியனின் மனைவிக்கு தர்ஜுமதுல் குர்ஆனில் வைத்து காதல் கடிதம் கொடுத்தாரோ அன்றே அடையாளம் காட்டி ஒதுக்கி இர...

ஜமாஅத்தே இஸ்லாமியால் நடத்தப்படும் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா.

Image
from Abdullah Muqrin date Dec 24, 2007 11:38 AM subject ஜமாஅத்தே இஸ்லாமியால் நடத்தப்படும் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா mailed-by gmail.com அன்பானவர்களே! அஸ்ஸலாமுஅலைக்கும். இஸ்லாமியப் பேரியக்கம் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் ஜமாஅத்தே இஸ்லாமியர் தாங்களின் நிர்வாகத்தின் கீழ் கேரளாவில் இயங்கும் ஒரு கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடியுள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த நிகழ்ச்சியில் ''கிராஅத்'' ஓதியதாகும். ஆம் அல்லாஹ்வின் மகனுக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் கிராஅத்துடன் நடந்துள்ளது. ஒரு தனிமனிதன் இத்தவறைச் செய்திருந்தால் கூட நாம் உபதேசிக்கலாம். தங்களை சமூகத்தின் வழிகாட்டிகள் என்று காட்டிக்கொள்ளும் இந்த இயக்கப் பேர்வழிகளின் இந்த தரம் தாழ்ந்த நிலையை மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்து அல்லாஹ்வின் எதிரிகளான இவர்களை அடையாளம் காட்டவேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு. இதற்கு முன்னரும் இந்துக்களின் பண்டிகைகளான ஓணம் என்னும் பண்டிகைக்கு விருந்து நடத்திய சமரசப் பேர்வழிகள் இவர்கள். கேரளாவில் இவர்களாலேயே நடத்தப்படும் மாத்யமம் என்ற பத்திரிகையில் இவர்கள் நடத்திய கி...

மிகப்பெரிய அபாண்டம்!!! pls forward

from Abdullah Muqrin date Dec 24, 2007 10:09 AM subject மிகப்பெரிய அபாண்டம்!!! pls forward mailed-by gmail.com மிகப்பெரிய அபாண்டம்!!! உமர் (ரழி) அவர்களுக்கு முன்னால் வயது முதிர்ந்த பாதிரி ஒருவர் தோன்றுகின்றார். அவரது நல்ல செயல்கள் உமர் (ரழி) அவர்களுக்கு முன் புகழப்படுகின்றது. உமர் (ரழி) அவர்கள் உடனே திருக்குர்ஆனின் 88 ஆம் அத்தியாயத்தின் வசனங்களை அவருக்கு முன் ஓதிக்காட்டுகின்றார்கள். அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும். (88:2) அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும். (88:3) கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை புகும். (88:4) கொதிக்கும் ஊற்றிலிருந்து, ( அவர்களுக்கு) நீர் புகட்டப்படும். (88:5) அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை. (88:6) அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது, அன்றியும் பசியையும் தணிக்காது. (88:7) இறை விசுவாசத்தின் உன்னதமான நிலையில் உமர் (ரழி) போன்ற ஸஹாபாக்கள் இருந்தனர். ஆனால் இன்று சில முஸ்லிம்களின் நிலையை எண்ணும்போது அன்று உமர் (ரழி) அவர்கள் எந்த பாதிரியைப் பற்றி அந்த வசன...

'அஹ்லே சைத்தான்' என்ற புதிய அமைப்பு.

from adam arif reply-to tmmk_thonderanie-owner@yahoogroups.com date Dec 23, 2007 3:56 AM subject [tmmk_thonderanie] தோப்புத்துறை-யில் 'அஹ்லே சைத்தான்' என்ற புதிய அமைப்பு signed-by yahoogroups.com mailed-by returns.groups.yahoo.com நாகப்பட்டினம் மாவட்டம் தோப்புத்துறை-யில் அவுலியா முஹம்மத் என்பவன் தலைமையில் 'அஹ்லே சைத்தான்' என்ற புதிய அமைப்பு ஒன்று ஊடுருவி உள்ளது, இவர்கள் இஸ்லாத்திற்கும் நம் உயிரினும் மேலான முஹமது நபி ( ஸல் ) அவர்களை கொச்சை படுத்தும் செயல்களில் ஈடுபட்டும் மற்றவர்களுக்கு மூளை சலவை செய்தும் வருகின்றார்கள், இப்போது தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள், இந்த அவுலியா என்பவன் ஏற்கனவே காவல் துறையால் தேடுபட்டு வருபவன் என்பது குறிப்பிடதக்கது, அவன் பாஸ்போர்டும் முடக்கப்பட்டும் வேறு போலி பாஸ்போர்ட் மூலம் துபாய் தப்பிசென்றுவிட்டு மீண்டும் தோப்புத்துறை-யில் காலடி எடுத்து குழப்பம் விளைவிகிறான் என்பதும் குறிப்பிட தக்கது, எனவே இவர்களிடம் நம்மையும் நம்மை சார்ந்தோரையும் இந்த சைதனிடம் இருந்து பாதுகாத்து கொள்ளுங்கள். அல்லா நம்மை இந்த கூட்டத்தில் இருந்து பாதுகாப்பனாக...

புனிதமிகு கஅபாவும் அதன் மீது போர்த்தப்பட்டு வரும் ரூபாய் 20கோடி மதிப்புள்ள 'கிஸ்வா'வும்.

Image
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. அனைவருக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் நல் வாழ்த்துக்கள். கஅபாவை நோக்கி தொழுமாறு ஏக இறைவன் அல்லாஹ் அணுமதி அளித்தான். ஆதி மனிதர் என்று அழைக்கப்படும் முதல் மனிதர் ஆதம்(அலை) என்ற நபியும் அவரது குடும்பத்தாரும் தொழுவதற்காக கட்டப்பட்ட பள்ளிவாசலே இன்று கஅபா என்று அழைக்கப்படுகிறது. முதலில் முஸ்லிம்கள் ஜெரூஸலத்தில் உள்ள பைத்துல் முகத்திஸ் என்ற பள்ளியை நோக்கியே அல்லாஹ்வை தொழுது வந்தனர். இறைவனை வணங்குவதற்காக பூமியில் கட்டப்பட்ட முதல் பள்ளிவாசலான கஅபாவை நோக்கி தொழ இறைத் இதி தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் விரும்பினார்கள். எனவே அல் குர்ஆன் 2:144ஆவது வசனத்தின் மூலம் கஅபாவை நோக்கி தொழுமாறு ஏக இறைவன் அல்லாஹ் அணுமதி அளித்தான். முதன் முதலாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல். இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் வீடு (ஆலயம்) நிச்சயமாக பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதுதான். அல் குர்ஆன் 3:96. அது பழமையான ஆலயம். அல் குர்ஆன் 22:33. பூமியில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் மக்கா நகரிலுள்ள புனித பள்ளிவாசல் என்று இறுதி இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள...

உள்ளூர்வாசிகளை ஏமாற்ற முடியாது.

சகோ. பழுலுல் இலாஹி அறிவது, நேற்று வின்டிவியில் கேள்விபதில் லைவ் நிகழ்ச்சியில் தென்காசி விஷயமாக சௌதியிலிருந்து கேட்கப்பட்ட கேள்விக்கு தத-ஜ தான் அமைதிக்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாக பதில் கூறினார் பீஜெ விவரம் தரவும். இவ்வாறு கேள்வி கேட்டு ஒரு சகோதரர் மெயில் அனுப்பி உள்ளார். அந்த கேள்வியின் கீழ் குறிப்பும் உள்ளது. அந்தகுறிப்பு:- தென்காசியில் படுகொலை செய்யப்பட்ட மூன்று முஸ்லிம்களும் கடையநல்லூர் பள்ளி விஷத்தில் நமக்கு எதிராக இருந்தவர்கள் அவர்களை அல்லாஹ் தண்டனை வழங்கிவிட்டான் அல்ஹம்துலில்லாஹ் என்று பெருமையுடன் கூறி அலைந்தனர் தென்காசி மற்றும் கடையநல்லூர் ததஜவினர்.-இதுதான் அந்தக் குறிப்பு. சகோதரர் கேட்டுள்ள கேள்விக்கு அவர் அனுப்பி உள்ள குறிப்பையே பதிலாக ஆக்குகிறோம். இந்த உண்மை உள்ளூர்வாசிகளுக்குத் தெரியும் பி.ஜெ.யின் பிழைப்பே வெளிநாட்டில் உள்ளவர்களை ஏமாற்றுவதில்தான் உள்ளது. சவூதிவாசிகளிடம் சொன்னதை பி.ஜெ.யும் த.த.ஜ.வினரும் உண்மையாளர்களாகவும் ஆண் மக்களாகவும் இருந்தால் தென்காசியில் கூட்டம் போட்டு சொல்லட்டும். செருப்படி இன்றி திரும்ப முடியுமா? உள்ளூர்வாசிகளை ஏமாற்ற முடியாது.கெட்டிக...

பாமனில் பஸ்லுல் இலாஹி இதில் என்ன செய்தி இருக்கிறது.

Image
பாமனில் பஸ்லுல் இலாஹி இதில் என்ன செய்தி இருக்கிறது என்று பலர் கேட்டுள்ளனர். இந்த கேள்வி வர வேண்டும் என்பதற்காகவே வெறுமனே விட்டு வைத்து இருந்தோம். நாம் நிற்கும் இந்த பாலத்தில் பின்னால் பல வராலாறுகள் இருக்கிறது. இது பிரபலமான பாமன் பாலம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். கால்வாயா? சமுத்திரமா? ஷீதுக் கால்வாயா? சேதுக் கால்வாயா? ஷீது சமுத்திரமா? சேது சமுத்திரமா? என்ற விவாதங்கள் நடந்தது ஒரு காலத்தில். அது அமைதியாக முடிந்து விட்டது. மன்னிக்கவும் ஷீது என்ற பெயர் அமுங்கி விட்டது. அமுக்கப்பட்டு விட்டது. இப்பொழுது ராமர் பாலமா மணல் திட்டா என்ற விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஆதம் பாலம் என்றுதான் அதற்கு பெயராக இருந்தது. இப்பொழுது அதுவும் மறக்கடிக்கப்பட்டு விட்டது. எனவே இந்த வரலாறுகளை சொல்ல வரவில்லை. நாம் நிற்கும் பிரபலமான இந்த பாமன் பாலத்தை கடக்கும்போது பள்ளிவாசலின் மினாராவைத்தான் முதன் முதலில் பார்க்க முடியும். இமயம் முதல் குமரி வரை என எந்தப் பகுதயிலிருந்து வாகனத்தில் ராமேஸ்வரம் வந்தாலும் இந்த பாமன் பாலத்தை கடந்துதான் போக வேண்டும். அப்படி இந்த பாமன் பாலத்தை கடந்து போகும்போது ராமேஸ்வரம் ...

வரவேற்க வேண்டிய தீர்மானம்.

Image
சச்சார் குழுவின் பரிந்துரையை ஏற்று சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என தி.மு.க. இளைஞரணியின் முதல் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எந்த மீடியாக்களும் சொல்லாத செய்தியா? எல்லா மீடியாக்களும் இரட்டடிப்பு செய்து விட்ட செய்தியா? எதுவாக இருந்தாலும் எப்படி இருந்தாலும் வரவேற்க வேண்டிய தீர்மானம். மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கம் பெயர் வைக்க பரிந்துரை செய்தார் கலைஞர். அது போல் முஹம்மதுஇஸ்மாயில் ஸாஹிப் பிறந்த பூமியில் நடக்கும் தி.மு.க. இளைஞரணியின் முதல் மாநில மாநாட்டில் திருநெல்வேலி புதிய பஸ் நிலையத்துக்கு முஹம்மது இஸ்மாயில் ஸாஹிப் பெயரை சூட்டி விடுவார் என லீக் பிரமுகர்கள் சொன்னார்கள. அந்த அறிவிப்பு வரவில்லை. லீக்குக்கு இவ்வளவுதான் மதிப்பா?

கற்றவரும் கல்லாதவரும் சமமில்லை.

Image
கல்வி வழங்கப்பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். அல்குர்ஆன் 58:11 அறிந்தோறும் அறியாதோறும் சமமாவர்களா? அறிவுடையோர்தான் நல்லறிவு பெறுவார்கள். அல்குர்ஆன் 39:9 வாழ்த்துக்கள்

இது இன்றைய கலைஞர்.

Image
இன்றைய கலைஞரைக் கண்ட நீங்கள் அன்றைய கலைஞரைக் காண இதனை கிளிக் செய்யுங்கள். http://mdfazlulilahi.blogspot.com/1996/12/blog-post_05.html