இறந்தவரை இகழாலாமா? வரம்பு மீறி புகழலாமா?

தவ்ர் குகையில்  இருந்தவர்கள்  காப்பாற்றப்பட்டது எப்படி?

......... எனும் வசனத்தில் ها  எனும்
 ضمير பெண்பால் ஆயிற்றே அது
عمد நோக்கி எப்படி  மீளும் ?

இன்று (10-07-2020) ஜும்ஆவுக்கு வருவதற்கு முன்பு வரை  இஸ்லாமும் அறிவியலும் என்ற தலைப்பின் தொடரை பேச வேண்டும் என்ற முடிவிலேயே இருந்தேன்.

https://mdfazlulilahi.blogspot.com/2020/07/blog-post_12.html

புறப்படுவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பு ஆன்மீகத் தந்தை,  ஆன்மீகக் குரு  மறைவு என வலம் வந்த கட்டுரைகளையும். வாட்ஸப் புரோ பைல்களில் இறந்தவர்கள் நினைவு போட்டோக்கள் வைத்து இருப்பதையும் கண்டேன். தவ்ஹீதுவாதிகள் என்போரும் இறந்தவர்கள் நினைவு படங்களை வைத்திருந்தார்கள்.

செய்தியாக படங்களை வெளியிடுவது வேறு. நினைவு படங்களை  வைப்பது வேறு. செய்திப படங்கள் குப்பைக்கு போகும். நினைவு படங்கள் இணை வைப்புக்கு  வழி வகுக்கும்.

பிற மதத்தவர்கள் இறந்தவர் நினைவஞ்சலிக்கு படத்தை வீட்டில் வைத்தார்கள். அரசியல்வாதிகள் வீதிகளுக்கு கொண்டு வந்தார்கள்.  வலைதளத்தினர் வலை தளத்திற்கு கொண்டு வந்துள்ளார்கள். நோக்கம் இறந்வர் நினைவாக என்ற ஒன்றுதான்.

நினைவு படத்தை முதலில் சும்மா வைத்தார்கள். பிறகு மாலை போட்டார்கள்.  ஒருவர் ஊது பத்தி கொளுத்தி வைத்தார். இன்னொருவர் சாம்பிராணி பிசின் புகைக் காட்டினார் பிறகு இறந்தவர் வணக்கத்துக்கு உரியவராக ஆகி விட்டார். குர்ஆன் ஹதீஸ்களை அறியாத முஸ்லிம்களிடம் இருந்த இந்த வழக்கம். தவ்ஹீது புலிகளையும் பாதித்தது.

கல்யாணத்தில் மாலை போட மாட்டேன். தொப்பி மாட்டேன். என துவங்கி எல்லாம் பித்அத்களும் வழிகேடு என வாதித்த தவ்ஹீது மாப்பிள்ளையை திடீரெனக் காணவில்லை. திருமணம் நடக்க இருக்கும் பெண் வீட்டுக்கு புறப்பட எல்லாரும் தயார். மாப்பிள்ளையை மட்டும் காணவில்லை.

காதலா? கட்டாயக் கல்யாணமா? என ஆளுக்கொரு கேள்வி கேட்க. அவரது வீட்டின் அறையில்  இருந்து அழு குரல் கேட்கிறது.  அந்த அறைக்குள் போனால் அங்கு  அழுது கொண்டு நிற்பது யார்?  மாப்பிள்ளை.

அறையில்   இருந்த அவரது தாயாரின் படத்துக்கு முன் நின்று அழுது படத்துடன்  பேசிக் கொண்டு இருக்கிறார். கற்பனை அல்ல கதை அல்ல. மேலப்பாளையத்தில் நடந்ததுதான். பெயரை எழுதினால்,  இயக்கம் மற்றும் தனி நபர் விமர்சனமாகவே பார்க்கப்படும்.

பித்அத் செய்ய மாட்டேன் என்றவர் ஷிர்க்கை நோக்கி போய் விட்டார். வீடுகளிலும் வீதிகளிலும் இறந்தவரது நினைவாக படம் வைப்பது ஹராம் என்றால்.

புரோபைலில் நினைவாக  வைப்பது எப்படி ஹலாலாக  ஆகும்? உயிருடன் இருப்பவர்  போட்டோ பக்தியை ஏற்படுத்தாது.  இறந்தவர்கள் போட்டோக்கள்  அப்படி அல்ல.

ஆன்மீகத் தந்தை,  ஆன்மீகக் குரு  என்று புகழப்பட்டுள்ள  ..... இவர் ஏழை  பணக்காரர் என பார்க்க மாட்டார் என்று வர்ணித்துள்ளார்.

இப்படி இறந்தவரிடம் இல்லாததை இருந்ததாகச் சொல்லி புகழும்போது இறந்தவருக்கு அளவுக்கு அதிகமாக இமேஜ் (மாயை, பிம்பம்)  ஏற்பட்டு மரியாதைகள் கூடும்.

அதனால் குர்ஆன் ஹதீஸ்களில் இல்லாததையும் குர்ஆன் ஹதீஸ்களுக்கு எதிராக அவர்கள் கூறியதையும் பாமர மக்கள்  பக்தியுடன் தலையில் துாக்கித் திரிவார்கள்.

இப்பொழுது இறந்து விட்ட .... இவரை தோசைக் கல் ..... என்பார்கள். 1987ம் ஆண்டு துபை ஈமானின் மீலாது விழாவுக்கு வந்தார்.  அவரிடம் ஓதிய மாணவர்களான மஹ்ழரிகளை அழைத்துக் கொண்டு போய் சந்தித்தேன். அவரால் நாம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடிந்ததில்லை.

இவரை வைத்து ஹோர் அல் அன்Zஸ்  D பிளாக்கில் மீலாது விழா நடந்தது. டி பிளாக் மீலாது விழா  என்றாலே கீழக்கரை பணக்கார பெண்களும் ஆண்களும் சங்கமிக்கும் நிகழ்ச்சியாகும். அங்கே இவரிடம் கேட்க வைக்கப்பட்ட கேள்விகளில் ஒன்று.

அல்லாஹ் மஹர் கொடு என்று கட்டளை இட்டுள்ளான். மஹர் கொடுக்காமல்  வரதட்சணை  வாங்கியும்  கொடுத்தும் நடத்தப்படும் திருமணங்கள் கூடுமா? பெரிய பெரிய ஹஜரத்மார்கள்  தானே இந்த திருமணங்களை நடத்தி வைக்கிறார்கள்  இது சரியா? 

தலைப்புக்கு அப்பால் பட்ட இந்தக் கேள்வியை  D பிளாக்கில் வைத்து கேட்க வைக்கப்பட்டதன் நோக்கம். கீழக்கரை, காயல்பட்டணம் போன்ற ஊர்களில் தான் மாப்பிள்ளைகள் அநியாய விலைக்கு விற்கப்படுவதும் வாங்கப்படுவதும் நடந்தது. ஆகவே கேட்க வைக்கப்பட்டது.

ஏழை  பணக்காரர் பாகுபாடு பார்க்காத ஹஜரத் கீழக்கரை பணக்காரர் முகம் பார்க்காமல்  வரதட்சணைக்கு எதிராக அடித்துப் பேசி இருப்பார் என்று  எண்ணுகிறீர்கள் அப்படித்தானே? ஹஜரத் என்ன பதில் சொன்னார் தெரியுமா?

அல்லாஹ் இட்டக் கட்டளைப்படி கண்டிப்பாக  மஹர் கொடுக்க வேண்டும். அதனால்தான் திருமணம் நடத்தி வைக்கும் உலமாக்கள் ஷாபி மத்ஹபு என்றால் உங்க ஊர் (கீழக்கரை) ஷாபிதானே.  நுாற்றி முப்பத்தி இரண்டரை ரூபாய் மஹருக்கு உனக்கு மணம் முடித்து தந்தேன் என்கிறார். ஆக எந்த உலமாக்களும் மஹரைக் குறிப்பிடாமல் திருமணம் செய்து கொடுக்க மாட்டார்கள்.

மஹர் என்பது வேறு வரதட்சணை என்பது வேறு. நாம் ஒரு பொருளை  வாங்கப் போகிறோம்.  கடைக்காரர்  இவ்வளவு தந்தால்  இந்த பொருளைத் தருவேன் என்பார். அது அவர் வைக்கும் டிமாண்ட். அது மாதிரியான டிமாண்ட்தான் வரதட்சணை. உங்களுக்கு இந்த மாப்பிள்ளை வேண்டும் என்கிறீர்கள். மாப்பிள்ளை வீட்டார். உங்களுக்கு இந்த மாப்பிள்ளை வேண்டும் இன்ன இன்ன வேண்டும் என்று டிமாண்ட் வைப்பது  ஹராம் இல்லை என்றார்.

இவர்தான் இறந்ததும் பணக்காரர் முகத்துக்காக ஒன்று ஏழைக்கு ஒன்று என பேசாதவர் என புகழப்பட்டுள்ளார்.

அல்லாஹ்வின் துாதர் ஹிஜரத் செய்து  போனபோது தவ்ர் குகையில் நடந்த அற்புத நிகழ்ச்சிகள் என வண்டி வண்டியாக மீலாது விழாவில் அவிழ்த்து விட்டார். மூஸா நபி காலத்துக்கு முந்தைய  பாம்பு நபிய்யல்லாஹ்வைக்  காண தவ்ர் குகையில் வந்து மூவாயிரம் ஆண்டுகள் காத்துக் கிடந்தது.  அதற்கு தடையாக இருந்த அபுபக்கர்(ரலி) காலை அது விஷத் தன்மையுடன் கொத்தவில்லை். இது போன்று அவர் விட்ட கதைகள் ஏராளம். புராணங்களை விஞ்சி நின்றது.

தவ்ர்  குகையின் மிக அருகில்   எதிரிகள் வந்ததும் இரண்டு புறாக்கள் கூடு கட்டின. சிலந்தி வலை பின்னியது.  ஒரு மரத்தின் கிளைகள் வளர்ந்து வாயிலை அடைத்து நின்றது. நபிய்யல்லாஹ்வை  அல்லாஹ் எப்படி காப்பாற்றினான் பார்த்தீர்களா?  என்றார்.

 لَا تَحْزَنْ اِنَّ اللّٰهَ مَعَنَا
“லா தஹ்ஸன், இன்னல்லாஹ மஅனா” 
"நீர் கவலைப்படாதீர்! அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்'' என்று நீங்கள் சொல்லிக் காட்டிய அந்த வசனத்தில் தான். 


நீங்கள் பார்க்க முடியாத - பார்க்காத - காணமுடியாத - பார்வைக்குத் தென்படாத படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான்; 9:40என்று அல்லாஹ் கூறி உள்ளான்.

1. புறாக்களை  பார்க்க முடியும்
2. அதன் கூட்டைக் காண முடியும்
3. சிலந்தி  பார்வைக்கு நன்றாகத் தென்படும்
4. சிலந்தியின் வலையும் கண்ணால் பார்க்க முடியும்
5. மரமும் அதன் வளர்ந்த கிளைகளும் பார்வைக்கு தெரியக் கூடியவைகளே!
ஆகவே அல்லாஹ்  கூறி உள்ள படைகளாக பார்வைக்கு தெரியக் கூடிய இவை எப்படி இருக்கும்?  உங்களைப் போன்றவர்கள் சொல்வதை நம்புவதா? அல்லாஹ் கூறி உள்ளதை நம்புவதா? 

நீங்கள் பார்க்காத படைகளின் மூலம் அவரைப் பலப்படுத்தினான்  என்று அல்லாஹ் கூறி உள்ளானே என  கேள்விகள் கேட்கப்பட்டன.  அதற்கு அவர் கொடுத்த பதில். “பெரியார்களை மதிக்கத் தெரியாதவர்கள் நீங்கள்” என்பதே.  

இவர்கள் சொல்லும் கட்டுக் கதைகளை நம்பாதவர்கள் பெரியார்களை மதிக்கத் தெரியாதவர்கள்  என்றால். அல்லாஹ் சொல்லி உள்ள உண்மையை  நம்பாது  கதைகளை  விட்டடிப்பவர்கள் யார்?

9:40. ல் இடம் பெற்றுள்ள  لَّمْ تَرَوْهَا-லம் தரவ்ஹா என்பதற்கு நீங்கள் பார்க்க முடியாத -  காணமுடியாத - பார்வைக்குத் தென்படாத என்று தான் எல்லாரும் மொழி பெயர்த்து உள்ளார்கள்.  இந்த வசனம் நாம் சில வாரங்களுக்கு முன்பு  பேசிய விஞ்ஞான கருத்தை நினைவுக்கு கொண்டு வருகின்றது.

தன்னுடைய அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழாது அவன் தடுத்துக் கொண்டிருக்கிறான். என்று 22:65.ல் அல்லாஹ்  கூறி உள்ளான். 

கண்ணுக்குத் தெரியாத ஈர்ப்பு விசையின் காரணமாகத் தான் ஒவ்வொரு கோளும் அந்தரத்தில் எவ்விதப் பிடிமானமும் இன்றி தொங்குகின்றன  என்பது நிரூபிக்கப்பட்ட  அறிவியல்.

தான் கட்டளையிட்டால் தவிர பூமியின் மேல் வானம் விழாதவாறு தடுத்து வைத்துள்ளான் என்று 22:65.ல்   சொல்லி உள்ளபடி அல்லாஹ்  எப்படி  தடுத்துக் கொண்டிருக்கிறான்?  என்பதை 13:2, 31:10  ஆகிய வசனங்களில் அல்லாஹ்வே கூறி உள்ளான். 
  اَللّٰهُ الَّذِىْ رَفَعَ السَّمٰوٰتِ بِغَيْرِ عَمَدٍ تَرَوْنَهَا‌ 
அல்லாஹுல்ல(ரீ)தீ  ரFபஃஅஸ்ஸமாவாதி  பிஃகய்றி ஃஅமதின் தரவ்னஹா

நீங்கள்    பார்க்கின்ற   தூண்களின்றி   வானங்களை   அல்லாஹ்வே உயர்த்தினான் (13:2, 31:10 ). (பீ.ஜே. தர்ஜமா) 

துாண்கள் இருக்கின்றன அதை மனிதர்கள் பார்க்க முடியாது என்கிறது. இது பற்றி முஃதஸிம்  போன்ற அரபிகளிடம் பேசி அவர்களும் ஒப்புக் கொண்டுள்ளதை முன்பு சொல்லிக் காட்டி இருக்கிறேன். 

13:2. உங்கள் பார்வைக்குப் படக்கூடிய தூண்கள் எதுவுமின்றி அல்லாஹ்தான் வானங்களை உயர்த்தினான்; (IFT)


31:10. அவன்   உங்கள்  பார்வையில்  படக்கூடிய  தூண்கள்  எதுவுமின்றி  வானங்களைப்    படைத்துள்ளான். என்று  (IFT) யின் தமிழாக்கங்கள் உள்ளன. 

அதாவது துாண்கள் இருக்கின்றன. அது உங்கள் பார்வைக்கு படாது என்று மொழி பெயர்த்துள்ளார்கள்.

இதற்கு மாற்றமாக துாண்களின்றி என மற்றவர்கள் மொழி பெயர்த்துள்ளார்கள். அதை ஒட்டி இந்த வசனத்திற்கு பீ.ஜே.யின் மொழி பெயர்ப்பில் இலக்கண ரீதியாக சந்தேகம் இருக்கிறது என்றார் ஒரு மவுலவி. 


[22/06, 9:37 pm] : الله الذي رفع السموات بغير عمد ترونها

எனும் வசனத்தில் ها  எனும்
 ضمير பெண்பால் ஆயிற்றே அது
عمد நோக்கி எப்படி  மீளும்

என்று என்னிடம் கேட்டிருந்தார். இலக்கண ரீதியான கேள்வி என்பதால்  அதை சம்பந்தப்பட்ட  பீ.ஜே.க்கு பார்வேடு செய்து கேட்டேன். 


[22/06, 11:24 pm] PJ வாட்ஸப்: عمد என்பது பெண்பால் சொல்லாகும்

فِی عَمَدࣲ مُّمَدَّدَةِۭ

ஹுமஸா அத்தியாயத்தில் அமத் என்பதற்கு வர்னணையாக முமத்தத் என்று ஆண்பாலாக சொல்லாமல் முமத்ததா என்று பெண்பாலாக பயன்படுத்தப்பட்டதை கவனிக்க வும்

பீ.ஜே.யின் இந்த பதிலை அந்த மவுலவிக்கு அனுப்பி வைத்தேன். அவர் தந்த பதில்
[23/06, 7:13 am]: جزاك الله خيرا
[23/06, 9:51 am] : நீண்ட நாளய சந்தேகம் நீங்கி தெளிவு கிடைத்தது என்றார். 

இறந்தவர் கூறிய  குர்ஆன் ஹதீஸுக்கு விரோதமானதை சுட்டிக் காட்டுவதால் அவரை  இகழ்ந்ததாக  ஆகாது.  வரம்பு மீறி புகழ்வதால் தேவையில்லாமல் மரியாதை என்ற பெயரால் பக்தி ஏற்பட்டு விடும். அதனால் அவர்களது தவறான கொள்கையின் பக்கம் மக்களை ஷய்த்தான் எளிதில் இழுத்துச் சென்று விடுவான். 

அல்லாஹ்விடம் நேரடியாக கேட்கக் கூடாது. அவ்லியாக்கள் மூலம் தான் கேட்க வேண்டும் என்றவர் தான் புகழப்பட்ட இறந்து விட்டவர். 

அல்லாஹ் நெருப்பு மாதிரி  மனிதர்கள் மாவு மாதிரி.  மாவு  தோசையாக ஆக வேண்டும் என்றால்  நெருப்பின் மேல் மாவை ஊற்றினால் என்ன ஆகும்? தோசை கிடைக்குமா?  மாவும் பயனற்றதாக ஆகி நெருப்பும் அணைந்து, அழிந்து விடும்.

ஆகவே தோசைக் கல் மீது மாவை ஊற்றினால் தான் தோசை கிடைக்கும். தோசைக் கல் மாதிரிதான் அவ்லியாக்கள். இப்படி ஒவ்வொரு விதமான உதாரணங்களைச்  சொல்லி வழி கெடுத்தவர் தான் இறந்து விட்டவர். 

அல்லாஹ் நெருப்பு மாதிரி என்று கூறிய அவரிடமே நெருப்பின் மீது மாவை ஊற்றினால் மாவும் பயனற்றதாக ஆகி நெருப்பும் அழிந்து விடும் என்பதன் மூலம் அல்லாஹ்வும் அழிந்து விடுவான்  என்றல்லவா சொல்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவரால் பதில் சொல்ல முடிந்ததில்லை. அவரைத்தான்  ஆன்மீகத் தந்தை,  ஆன்மீகக் குரு  என வரம்பு மீறி புகழ்ந்தள்ளார்கள்.

இவர்களை விட்டும் அல்லாஹ் நம்மைக் காப்பானாக ஆமீன்.


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.