பீ.ஜே. நன்றி சொல்ல கடமைப்பட்டவரா இல்லையா?

தலைப்பாகை தாடி என்றெல்லாம்  விமர்சிக்கலாமா?

சும்மா சாபம் கேட்கலாமா?

ஹஜ் அழைப்பு போலியா?

2006 காலக் கட்டத்தில் சவூதி அரசின் ஜாலியாத் சார்பில் பீ.ஜே.க்கு ஹஜ் அழைப்பு கொடுத்து இருக்கிறார்கள் என்ற செய்தி வந்தது. அப்பொழுது பீ.ஜே. எதிர்ப்பாளர்களான  65:2ல் கூறப்பட்டுள்ளவை போன்றவர்கள்  சும்மா விட்டு அடிக்கிறார்கள்  என்றார்கள்.

அரபி தெரிந்த அந்த நம்பிக்கை துரோகிகள் சொன்னதை  நம்பி இருந்து விட்டோம். அது JPG பைலாக இருந்ததால் நாம் சரியாக  ஒப்பிட்டு பார்க்க முடிந்ததில்லை, பார்க்கவில்லை. அதனால் பீ.ஜே. தரப்பு சொன்னதை ஏற்கவில்லை. 

https://mdfazlulilahi.blogspot.com/2020/07/blog-post.html

இந்த வாரம் அரபு மொழியில் உள்ள கடிதங்களைக் காட்டி தெளிவான முறையில் தமிழில் மொழி பெயர்த்தும் போட்டு இருக்கிறார்கள்.  நாமும் அரபு மொழி தெரிந்தவர்களிடம் காட்டி  உறுதி செய்து கொண்டோம்.


தலைமை முஃப்தி அப்துல் அஸீஸ் அவர்கள் புகார் கொடுத்தவர்களுக்கு இட்டக் கட்டளை அடங்கிய  கடிதத்தில் எங்கே விவாத அழைப்பு  இருக்கிறது?  முபாரக் மதனியை துாக்கித் திரிபவர்கள் தான் ஆதாரம் தர வேண்டும்.

சவூதியில் உள்ள தலைமை  முதீருக்கு முபாரக் மஸ்வூத் லெப்பை (அதாவது முபாரக் மதனி), முஹம்மது ஜக்கி,  முஹம்மது நூஹ் ஆகியோர் மூலம்  பீ.ஜே. பற்றிய நல்ல அபிப்பிராயம் தான் ஏற்பட்டிருக்கிறது. இது அவர்கள் கொடுத்துள்ள ஹஜ் அழைப்பு மூலம் விளங்குகிறது, நிரூபணம் ஆகி இருக்கிறது.

மதனிகள் எழுதியதை ஒரு குறையாகவே அவர்கள் எடுத்துக் கொள்ளவில்லை. மாஷா அல்லாஹ் இவர் ஒரு சரியான முஜ்தஹிது. இஜ்திஹாது செய்பவர் என்றே  அறிந்துள்ளார்கள்.  

தலைமை முஃப்தி அப்துல் அஸீஸ் அவர்கள் பாராட்டுக்குரியவர். அல்லாஹ் அவருக்கு நற் கூலி கொடுப்பானா ஆமீன். 

கம்ளைண்ட் எழுதியவர்கள் ஜாலியாத்திலிருந்தே பீ.ஜே.யை கவுரவிக்கும் விதமான அழைப்பு அனுப்ப உத்தரவு போட்டு இருக்கிறார்கள். அதுவும் கம்ளைண்ட் எழுதிய  மஸ்வூத் லெப்பையைக் கொண்டே அழைப்பை சேர்க்கச் செய்திருக்கிறார்கள். 

ஆக சவூதி  அறிஞர்கள் பீ.ஜே.யை ஒரு முஜ்தஹிதாகத்தான் பார்த்து உள்ளார்கள்.  இவர்கள் அனுப்பிய கம்ளைண்ட் கடிதத்தை வைத்து குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு  ஆளாகப்  பீ.ஜே.யை  பார்க்கவில்லை. 



அந்தரங்மாக அதாவது ஒழிவு மறைவாக என்பார்களே அது போல் சவூதி தலைமை முதீருக்கு பீ.ஜே.யின் கருத்துக்கள்  நல்லதாக மிகச் சரியானதாகப்பட்டிருக்கிறது. 

அதனால்தான் அவரை கவுரவிரவிப்பதற்காக ஹஜ்ஜுக்கு விருந்தாளியாக அழைத்து இருக்கிறார்கள். அதுதான் உண்மை. அல்லாஹ் யாருக்கு ஹிதாயத்தை காட்ட நாடுகிறானோ அவர்களுக்குத்தான் ஹிதாயத்தைக் காட்டுவான். 

ஒரு முஜ்தஹிதை ஒரு  முஜ்தஹிதால் தான் அறிய முடியும். முஃகல்லிதுகளால் முஜ்தஹிதை விளங்கவே முடியாது. சுயமாக சிந்திக்கின்றவன்தான்  இன்னொரு சுயமாக சிந்திக்கின்றவன் பற்றி  விளங்கிக் கொள்ள முடியும். 

முபாரக் மதனி அணியினர் பீ.ஜே.க்கு எதிராக எடுத்து வைத்த விமர்சனங்கள் அனைத்துமே என்ன ஆனது?   பீ.ஜே.யின் அறிவையும் அவரது திறமையையும்  அவரிடம் உள்ள ஆய்வு தன்மையையும் தான் சவூதி தலைமை  முதீருக்கு  தெளிவுபடுத்தி  இருக்கிறது.

முபாரக் மஸ்வூத் லெப்பை அதாவது முபாரக் மதனி, முஹம்மது ஜக்கி,  முஹம்மது நூஹ் ஆகியோருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டவர் பீ.ஜே.


இவர்கள் எழுத்து மூலமாக அனுப்பிய கடிதத்தி்ற்கு பீ.ஜே. பின்னால் நின்று தொழக் கூடாது என்று பதில் சொல்லி இருந்தால் அதுவும் எழுத்து மூலமாகவே வந்து இருக்கும். அதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு முபாரக் மதனியை விட  அவரது கூற்றை பரப்பி  மகிழ்ந்தவர்களுக்கே இருக்கிறது.

சும்மா சாபம் கேட்கலாமா?

தன்னை விசாரிப்பதற்காக  ஹஜ் விசா கொடுத்ததை பயபுள்ள (PJ) தன்னை கவுரவிப்பதற்காக  அழைத்ததாக புளுகியது இப்போதுதான் விளங்குகிறது என்று எழுதி இருக்கிறார் ஒருவர். இவர் எழுதியது உண்மை  என்றால் . யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அல்லாஹ்வின் அருள் உண்டாகும். இல்லை என்றால்?

.

பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் 3:61.

அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் 7:4411:18. இந்த மாதிரியாக குர்ஆனில் பல இடங்களில் வருகிறது.

இந்த வசனங்களெல்லாம் யுக முடியும் நாள் வரை குர்ஆனில் இருந்து கொண்டுதான் இருக்கும். அதை ஓதக் கூடிய மக்கள் தினமும் ஓதிக் கொண்டுதான் இருப்பார்கள்.

அந்த சாபத்துக்குண்டான பிரார்த்தனை என்பது பொய்யர்களுக்கும்  குர்ஆன் ஹதீஸுக்கு எதிரான அநியாயக்காரர்களுக்கும்  எதிராக உலகில் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும்.

குறிப்பாக  ஒரு  தனி  நபரை குறிப்பிட்டு காரண காரியம் இல்லாமல்  ----  இன்னவர் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று சொல்வதுதான் தப்பு. அது கூடாது.

அல்லாஹ்வும் அவனது துாதரும் காட்டிய வழி முறைக்கு எதிரான தன்மையைக் கொண்டவர்கள். குர்ஆன் ஹதீஸ் கூறிய தீர்ப்புக்கு எதிரான செயலை செய்பவர்கள்  செயலை, தன்மையைக் கூறி  அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று கூறுவது எப்படி தப்பாக ஆகும்?

தலைப்பாகை தாடி என்றெல்லாம்  விமர்சிக்கலாமா?

தலைப்பாகை தாடி என்றெல்லாம் சொல்ல வேண்டிய நிலைமை எதனால் ஏற்பட்டது? அந்த தலைப்பாகையும்  தாடியும் அவர்கள்  வைத்திருப்பதால் மட்டுமே அவர்கள் மீது சாதாரணமான மக்களுக்கும்   பாமர மக்களுக்கும் ஏன்  படித்தவர்களுக்கும்  கூட   ஒரு இமேஜ் ஏற்படுகிறது. இந்த  இமேஜ்  எதனால்  ஏற்பட்டது அவர்கள் தோற்றத்தைப் பார்த்து தான்.

ஒருவர் அறிஞர் என்பதற்கு, ஆய்வில் சிறந்தவர் என்பதற்கு அந்த தோற்றம் மட்டும் தகுதி அல்ல. என்பதை சுட்டிக் காட்டத்தான் அந்த வார்த்தை பயன்படுத்தப்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.  அதைச் சொல்லி அவர்களை குறைபடுத்தவதற்கு அல்ல.  அதைப்  புரிய வேண்டும். உமர் ஷரீஃபுக்கு  சாட்டை அடி கொடுத்த மாதிரியான சரியான பதில் தான் அது.  என்பது எமது நிலை.

உமர் ஷரீஃபிடம் கேட்கும் கேள்விகளுக்கு அழகான பதில் தருகிறார் என்று சொல்பவர்கள். அவருக்கு (தாருல் ஹுதாவுக்கு)  நான் அனுப்பிய கேள்விக்கு  அழகான பதில் பெற்றுத் தாருங்கள். 





Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.