பகரா ஆண்பாலா? பெண்பாலா? பசு ஆண்பாலா? பெண்பாலா?


கடையநல்லுாரைச் சார்ந்த ஒரு பெண் 2:67. குர்ஆன் தமிழாக்கத்தை ஒப்பீடுடன் படித்திருக்கிறார். அப்போது சவூதி வெளியீடான  இக்பால் மதனி மொழி பெயர்ப்பில் பசு மாடு என்றும் பீ.ஜே. மொழி பெயர்ப்பில் காளை மாடு என்றும் உள்ள வித்தியாசத்தைப் பார்த்து இருக்கிறார். அது  பற்றி ஒரு அக்காவிடம் தெரிவிக்க.. அந்த அக்கா பீ.ஜே. மொழி பெயர்ப்பு தப்பு என்று கூறி இருக்கிறார்.

https://mdfazlulilahi.blogspot.com/2020/07/blog-post_19.html




இதை ஒட்டி  Please can explain என்று நம்மிடமும் ஒரு சகோதரர் விளக்கம் கேட்டு இருந்தார். இது சம்பந்தமாக எட்டு ஆண்டுகளுக்கு முன்பே 2012ல் காளை மாடு என்பதுதான் சரி என்று ஸலபு கொள்கை உடையவர்களிடம் வாதம் செய்து இருக்கிறேன். 

29-11-2012  ஞாயிற்றுக் கிழமை அன்று  கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தினேன்.

முடிச்சுகளில் ஊதும் பெண்கள் -நேரடி பொருள் சரியா?

இதயம், நெஞ்சம்.உள்ளம், மனது,அறிவு,மூளை எது சரி

ஸூரத்துந் நாஸ் நெஞ்சங்களில், (ரு)தயங்களில் என்றுள்ள மொழி பெயா்ப்புகள் சரிதானா?


10:87 வசனத்தில் உள்ள “கிப்லா” என்ற வார்த்தைக்கு யார் மொழி சரி? 

ஆகியவற்றைக் கேள்வியாகக் கேட்டு பீ.ஜே. மொழி பெயா்ப்புகளே சரி என்று   கூறினேன். 

அதே நிகழ்ச்சியில்  சூரத்துல்  பகராவில் கூறப்பட்டுள்ளது காளை மாடுதான் என்றும் கூறி இருக்கிறேன்.

இருந்தாலும் காளை மாடு என்பதுதான் சரி என்ற எனது நிலையை கடையநல்லுார் கேள்வியாளருக்கு பதிலாக அளிக்கவில்லை. பகரா ஆண்பாலா? பெண்பாலா? என்பதை அரபு இலக்கண ரீதியாகவும் பார்க்க வேண்டும். ஆகவே ஆய்வு செய்து விட்டு பதில் சொல்கிறேன் என்றேன். 

அந்தக் கேள்வியை அரபு இலக்கணம் படித்த பல மௌலவிகளின் பார்வைக்கு அனுப்பி வைத்து இருந்தேன். பீ.ஜே.க்கும் அனுப்பி வைத்தேன்.  

ஒரு நல்லுார் மவுலவி அளித்த பதில் 
Please can you explain
[19/07, 9:46 am].................. அஸ்ஸலாமு அலைக்கு ம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
நலமா? நலத்திற்கு துஆ செய்து கொண்டிருக்கி றேன். நீங்கள் நிறைய அனுப்பியுள்ளீர்கள், சிலதின் எனக்கு அனுப்புவதின் காரணம் புரியவில்லை.
جزاك الله خيرا واعطاك الله خير الدارين مع تمام العافية والايمان
அல் பகரத் என்பது பொதுவாக மாடு என்று குறிப்பிட பயன்படுத்தும் வார்த்தையாகும். ஆணோ பெண்ணோ இரண்டுக்கும் பகரத் என்ற பதத்தை பயன்படுத்தலாம் என்று ஒரு மவுலவி பதில் கூறி இருந்தார்.

பகரா என்ற வார்த்தையே பெண் பாலாக இருக்கிறது “முஅன்னதா”  ஆக இருக்கிறது

பகரதன் என்று வரும்போது ஹ மர்பூதா குண்டு தே (த)  வந்தால் பெண்பால் தான்.

குண்டு தே (த) இல்லை  எனில் அது “முதக்கர்” ஆண் பால்

ஹ வந்தால் பெண் பால். அந்த வார்த்தையே பெண்பாலை காட்டும்போது எப்படி காளை என்று மொழி பெயர்த்தார். காளை என்பது ஆண்பால் ஆயிற்றே.

பெண்பாலை காட்டுவதற்கு எந்த வார்த்தையிலும் ஹ (மர்பூதா குண்டு தே -த) வை சேர்த்தால் பெண்பால் ஆகி விடும்.

வாஹித் என்றால் ஒன்று வாஹிததுன் என்றாலும் ஒன்று என்றுதான் அர்த்தம் ஆனால் பெண்பால் ஆகி விடும்.

அர்ழுன் என்றால் பூமி அர்ழதுன் என்றாலும் பூமிதான் பெண்பால் ஆகி விடும். 

இப்படியாக இலக்கண பாடம் நடத்தி வாதங்கள் வைத்தவர்களும் உண்டு. அவற்றுக்கு

பீ.ஜே.யிடமிருந்து வந்த பதிலும் விளக்கமும் இந்த லிங்கில் உள்ளது. கிளிக் செய்து பார்த்துக் கொள்ளுங்கள். 

https://onlinepj.in/index.php/alquran/alquran/quran-descriptions/bakara-enral-pasumaadaa-kalaimada


பீ.ஜே.யிடமிருந்து வந்த பதிலை அரபு மொழி இலக்கண பாடம் நடத்தியவர்களுக்கு அனுப்பி வைத்தேன். அவர்கள் அளித்த பதில்.


[18/07, 11:27 pm] ........அருமையான விளக்கம் ஏற்றுக்கொள்கிறேன் جزاه الله خيرا


[19/07, 10:03 am] ..... இந்த கேள்வி இப்போது தான் அண்ணனிடம் முதலாவதாக வருகிறது அப்படித்தானே

பீ.ஜே.யிடமிருந்து வந்த பதிலில் காளைதான் என்பதற்கு அரபு மொழி இலக்கண ரீதியான விளக்கம் இருந்தது. 

நமது பதிலில்  காளை மாடுதான் என்பதற்கு தமிழ் மொழி  ரீதியாகவும் தமிழ்  மொழி ஸலபு மவுலவிகளிடமிருந்தும் ஆதாரங்கள் இருக்கும் இன்ஷாஅல்லாஹ். 

 2012ல் சவூதி ஸலபுகளை பின்பற்றுபவர்களிடம்  நான்  வைத்த வாதம் என்ன?

”எருமை“ மாடு இனத்தைச் சார்ந்ததா?  என்று 20ஆம் நுாற்றாண்டில் மஷுரா - ஆலோசனை செய்த  மௌலவிகள் உள்ள நாடு நம் நாடு

அந்த எருமை மாடுகளுக்கு ஆண் பெண் இரண்டிற்கும் பொதுவான பெயர் எருமை என்பதே. 

மாடுகளில் இந்த எருமை மாடுகள் அல்லாத மற்ற  இன மாடுகளும்  உள்ளன அல்லவா? எல்லோராலும் எருமையைவிட சிறந்ததாகக் கொண்டாடப்படும் அந்த இன மாட்டுக்கு உரிய பெயர் என்ன ? 

எருமை மாடுகளுக்கு பொதுப் பெயராக  எருமை என்ற பெயர் இருப்பதுபோல அந்த மாடுகளுக்கு பொதுப் பெயர் என்ன? போன்ற விளக்கங்களுடன் நமது அடுத்த பதிவு இருக்கும் இன்ஷாஅல்லாஹ்







Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.