2:55. பேரிடியா? பெரும் சப்தமா? எது சரி?

ஆன்மீக குருக்கள் ஆன்மீகத் தந்தைகள் என்போர் கடவுளைக் கண்டதாகக் கூறுவது உண்மையா?
இதிலும் (2:55) இதற்கு முந்தைய 12 வசனங்களின் துவக்கத்திலும் வஇ(ர்)து”. என்ற துணைச் சொற்கள் வந்துள்ளன. இது தனித்து  வந்தால் பொருள் தராது. ஒரு சொல்லுடன் இணைந்து வந்தால் போது -சமயம் - நேரம் என்ற பொருள் தரும்.
https://mdfazlulilahi.blogspot.com/2020/07/255.html


இந்த (2:55)வசனத்தில் இடம் பெற்றுள்ள இன்னொரு துணைச் சொல்  Fப என்பது ஆகும். இது தனித்து  வந்தால் பொருள் தராது. ஒரு வார்த்தையின் துவக்கத்தில் சேர்ந்து வரும்பொழுது தான் எனவே, ஆகவே என்ற பொருள் தரும்.



 “Fபஅக(ர)தத்” என்ற சொல்லில் உள்ள அக(ர)த என்றால் எடுத்தான் என்ற ஆண்பால் பொருள் தரும்.  

அக(ர)தத் என்றால் எடுத்தாள் - எடுத்தது என்ற பெண்பால் பொருள் வரும்.  - பிடித்தான் பிடித்தது என்ற பொருளும் கொள்ள முடியும்.

ஸ்ஸாஃயிகது என்பது பெண்பாலாக இருக்கிறது. ஹ மர்பூதா சேர்ந்து பெண்பாலாக இருக்கிறது. அதனால்  அதற்கு வரக் கூடிய வினைச் சொல் (Fபிஃல்) பெண்பாலாகத்தான் வர வேண்டும். இது அரபு (கிராமர்) இலக்கணச் சட்டம். அந்த அடிப்படையில் எடுத்தது, பிடித்தது என்று வரும்.

ஸ்ஸாஃயிகது என்பதற்கு பெரும் இடி முழக்கம் - பேரிடி - இடியோசை என்று எல்லாரும் மொழி பெயர்த்து இருக்கிறார்கள். ஆனால் ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி E.M. அப்துர் ரஹ்மான், நூரிய்யி, பாஜில் பாகவி ஆகிய முன்னவர்கள் பெரும் சப்தம் என்று மொழி பெயர்த்து உள்ளார்கள். அதனால் பேரிடியா? பெரும் சப்தமா? எந்த மொழி பெயர்ப்பு சரி? என்ற கேள்வி உள்ளது.


இடியில் பல வகை இடி இருக்கிறது. கூட்ட நெரிசலில் உயிரினங்கள் இடித்து தள்ளுவது. இந்த மாதிரி இடிகளில் இருந்து பெரும் சப்தம் வராது. ஆயுதங்களால் இடித்து தள்ளப்படும் இடியில் இருந்து ஏதோ சப்தம் வரும். மேகங்கள் இடித்துக் கொள்ளும்போது தான் பெரும் சப்தம் வரும்.

இடி என்றால் என்ன? என்பதற்கு விளக்கம் தான் பெரும் சப்தம் என்பது. ஆக இரண்டு மொழி பெயர்ப்புகளும் ஒன்றுக்கு ஒன்று விளக்கமாகத்தான் உள்ளன. அது போல்தான் தாக்கியது - பற்றிக்கொண்டது போன்றவை. இது போன்ற விளக்கங்களை விளங்கிக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் உண்மைப் பொருளை தெரிய முடியும். 

2:55 போன்றே  4:153, 7:143, 25:21 ஆகிய வசனங்கள் அல்லாஹ்வின் தூதர்கள் உட்பட எந்த மனிதரும் இந்த உலகில் அல்லாஹ்வைப் பார்த்ததில்லை; பார்க்கவும் முடியாது.  என்று  கூறுகின்றன. அதுவும் அறுதி இட்டு உறுதியாக - திட்டவட்டமாகக் கூறுகின்றன. 

அவனைப் பார்வைகள் அடையாது; அவனோ பார்வைகளை அடைகிறான் என்று 6:103 ல் அல்லாஹ் கூறி உள்ளான்


"நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்ததுண்டா?'' என்று அல்லாஹ்வின் துாதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, "அவனோ ஒளிமயமானவன்; நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்?'' எனக் கூறினார்கள். முஸ்லிம் 291
இறைவனின் துாதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்  இறைவனை பார்த்ததில்லை  புகாரீ 3234, 4855, 7380
ஆன்மீகவாதிகள், ஆன்மீக குருக்கள் ஆன்மீகத் தந்தைகள் என்று சொல்லிக் கொள்பவர்கள். கடவுளைக் கண்டதாக மக்களை ஏமாற்றி வருகின்றனர்.  இவ்வுலகில் காண முடியாது என்று அல்லாஹ்வும் அவனது துாதரும்  கூறி  உள்ளார்கள். நம்பிக்கையாளர்கள் (மூமின்கள்) அல்லாஹ்வும் அவனது துாதரும் சொன்னதையே ஏற்பார்கள்.

முந்தைய தலைப்புகள்

“அருகாமை”யில் காப்பாற்றிய கலைஞர் கருணாநிதி

https://mdfazlulilahi.blogspot.com/2020/07/blog-post_24.html

2:54 பெருநாள் டிரஸ் பரிசும் கேள்வியும்



இனி 2:55ன் வார்த்தைக்கு வார்த்தை

وَإِذْவஇ(ர்)து 
போது -சமயம் - நேரம் 

قُلْتُمْ -  ஃகுல்தும்
நீங்கள் கூறினீர்கள்

وَإِذْ قُلْتُمْ - வஇ(ர்)து ஃகுல்தும் 
 நீங்கள் கூறிய போது

يَا مُوسَىٰ யா மூஸா 
மூஸாவே

لَن نُّؤْمِنَ - லன்நுஃமின 

நம்பவே மாட்டோம் - நாம்பிக்கை (விசுவாசம்) கொள்ளவே மாட்டோம்

لَكَ - லக 
உம்மை

حَتَّىٰ - ஃஹத்தா 
வரை

نَرَى - நர
காண்போம் - பார்ப்போம்

اللَّهَ - அல்லாஹ 
அல்லாஹ்வை

جَهْرَةً - ஜஹ்ரதன் 
கண்கூடாக

فَأَخَذَتْ -  Fபஅக(ர)தத் 
எனவே பற்றிக் கொண்டது - பிடித்தது (தாக்கியது)

كُمُ - குமு 
உங்களை

الصَّاعِقَةُ - அஸ்ஸாஃயிகது 
இடி

وأَنتُمْ - வஅன்தும் 
 நீங்கள்

تَنظُرُونَ தன்ழுரூன
பார்க்கிறீர்கள் -



وَإِذْ قُلْتُمْ يَا مُوسَىٰ لَن نُّؤْمِنَ لَكَ حَتَّىٰ نَرَى اللَّهَ جَهْرَةً فَأَخَذَتْكُمُ الصَّاعِقَةُ وَأَنتُمْ تَنظُرُونَ

வஇ(ர்)து ஃகுல்தும்  யா மூஸா லன்நுஃமின லக  ஹத்தா நரல்லாஹ 
ஜஹ்ரதன்  Fபஅக(ர)தத்குமுஸ்ஸாஃயிகது  வஅன்தும் தன்ழுரூ(ன)

தமிழாக்கங்கள் :
மேலும் நீங்கள், "மூஸாவே! நாங்கள் அல்லாஹ்வைக் கண்கூடாகக் காணும் வரை உம்மீது நம்பிக்கை கொள்ள மாட்டோம்" என்று கூறினீர்கள் (என்பதையும் நினைத்துப் பாருங்கள்). அப்பொழுது, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்களை ஓர் இடி முழக்கம் தாக்கியது. - (அதிரை ஜமீல்)

"மூஸாவே! அல்லாஹ்வை நேரில் பார்க்காத வரை உம்மை நம்பவே மாட்டோம்'' என்று நீங்கள் கூறியபோது, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே உங்களை இடிமுழக்கம் தாக்கியது.21 -(PJதொண்டி)


இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்) நீங்கள், “மூஸாவே! நாங்கள் அல்லாஹ்வை கண்கூடாக காணும் வரை உம்மீது நம்பிக்கை கொள்ள மாட்டோம்” என்று கூறினீர்கள்அப்பொழுதுநீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே உங்களை ஓர் இடி முழக்கம் பற்றிக்கொண்டது. - (ஜான் -K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, கடையநல்லுார்)


அன்றி நீங்கள் மூஸாவை நோக்கி "நாங்கள் அல்லாஹ்வைக் கண்கூடாக காணும் வரையில் உங்களை நம்பமாட்டோம்" என்று கூறியபொழுது, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்களை (பூகம்பம் போன்ற) பெரும் சப்தம் பீடித்துக் கொண்டது. -( ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்)


“மூஸாவே! நாங்கள், அல்லாஹ்வை (உம்முடன் உரையாடும் நிலையில் எங்கள் கண்களால்) வெளிப்படையாகக் காணாத வரை உம் கூற்றை நாங்கள் ஒருபோதும் நம்பமாட்டோம்” என்று நீங்கள் கூறியதை நினைவுகூருங்கள். அப்பொழுது, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே உங்களை ஒரு பேரிடி தாக்கிற்று! உடனே நீங்கள் மாண்டு வீழ்ந்துவிட்டீர்கள். -(IFT)


நீங்கள் “மூஸாவே! நாங்கள் அல்லாஹ்வைக் கண்கூடாகக் காணும் வரை உம்மை நாம் விசுவாசிக்கவே மாட்டோம்” என்று நீங்கள் கூறியதைப் பார்த்துக்கொண்டு இருக்கும்பொழுதே உங்களை இடிமுழக்கம் பிடித்துக் கொண்டதையும் (நினைவுகூறுங்கள்) -(அல்-மதீனா அல்-முனவ்வரா)


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.