2:67. பசு என்பது நந்தியா? நந்தினியா? இரண்டுக்கும் பொதுவானதா?

பசு என்பது பெண் மாட்டுக்கு மட்டும் உரிய பெயரா? பொதுவானதா?
“ரிஷபம்” ஆணா?  பெண்ணா?


பசுவிலும் இரு வகை உண்டு. இவ்விரு வகைகளிலுள்ள ஆண்களையா? அல்லது இவ்விரு வகைகளிலுள்ள பெண்களையா? என்று நான் கேட்டால் சிரிப்பீர்கள் அப்படித்தானே?

https://mdfazlulilahi.blogspot.com/2020/07/267.html
குர்ஆனில் 
பகரா” என்று வரக் கூடிய ஒன்பது இடங்களிலும். குறிப்பாக  2:67. வசனத்திலும் எல்லாரும் பெண் மாடு என்று தான் மொழி பெயர்த்து உள்ளார்கள்.

ஆனால்,  பீ.ஜே. மட்டும் 
காளை (ஆண்) மாடு  என்று மொழி பெயர்த்து  உள்ளார். எது சரி? என்ற கேள்விக்கான பதிலின் ஒரு பகுதியை முன்பு கண்டீர்கள். அது அரபு மொழி இலக்கண ரீதியான பதிலும்  விளக்கமும் ஆகும். 
அதில் எருமை மாடுகளுக்கு பொதுப் பெயராக  எருமை என்ற பெயர் இருப்பதுபோல குர்ஆனில் பகரா” என்று வரக் கூடிய 2:67 -71 6;144,146, 12:43. 45 ஆகிய ஒன்பது இடங்களில் கூறப்பட்டுள்ள அந்த மாடுகளுக்கு பொதுப் பெயர் என்ன? என்று கேட்டிருந்தோம்.

ஏழு ஆண்டுகள் படித்து பட்டம் பெற்றவர்கள் எல்லாரும் ஒட்டு மொத்தமாக பெண் மாடு என்று கூறி இருக்க பீ.ஜே. மட்டும் ஆண் மாடு (காளை) என்று கூறி உள்ளதில் எது சரி?  

இதற்கு 2012ல் (சவூதி ஸலபுகள் வைத்த வாதத்தையே ஆதாரமாகக் கொண்டு) நான் அளித்த பதில் விளக்கத்தைத் தருவேன் என்று  எழுதி இருந்தேன் அதை முதலில் பார்ப்போம்.

துபை IACயினரால் உஸ்தாது என்று அழைக்கப்பட்ட  சவூதி அரசிடம் பணி புரிந்த  இக்பால் மதனி முதல் இலங்கை மதனிகள் வரை சொன்ன என்ன?

மாட்டை கடவுள் என்று நம்பி மதித்து வணங்கியவர்கள் பனீ இஸ்ராயீல்கள். அது சம்பந்தமாக அவர்கள் மன்னிப்பு கேட்ட போதிலும் அதனைப் பற்றிய கண்ணியமான எண்ணம் அவர்கள் உள்ளத்தில் இருக்கத்தான் செய்தது. 

அந்த எண்ணத்தை அடியோடு அகற்றி விட வேண்டும் ஒழித்து விட வேண்டும் என்ற நோக்கில் தான் மாட்டை அறுக்குமாறு உத்தரவு இட்டான் அல்லாஹ். மாட்டின் மீது கொண்டுள்ள கண்ணியமான எண்ணமும் அவர்கள் மாட்டை அறுக்காமல் பல கேள்விகள் கேட்க வைத்தது. 

இது மாதிரி அவர்களுக்கே உரிய தமிழில் நிறைய பேசி இருந்தார்கள். அவர்களின் இந்த விளக்கம் ஆதாரப்பூர்வமானதா? என்பது தனி விஷயம். 

சவூதி ஸலபுகளின் இந்தக் கூற்றுப்படி “பகரா” என்பது காளை மாட்டைத் தான் குறிக்கிறது. அவர்கள் கடவுள் என்று நம்பி மதித்து வணங்கியது காளை மாட்டைத் தானே.

அப்படியானால் 
"ஒரு காளைமாட்டை நீங்கள் அறுக்க வேண்டும் என அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்'' என்று பீ.ஜே. மொழி பெயர்த்து உள்ளது தானே சரி  என்றோம். 

பீ.ஜே.யை கடுமையாக  எதிர்த்துக் கொண்டிருந்த 2012லும் சவூதி ஸலபுகள் நமக்கு சூட்டிய பெயர் பீ.ஜே. பக்தன்.

தந்த பதில் அதிகமான உலமாக்கள் பெண் மாடு என்றே கூறி உள்ளார்கள் என்பதுதான்.


பகரா”வுக்கு எல்லாரும் பெண் மாடு என்று கூற ஒருவர் மட்டும்  ஆண் மாடு என்றால் மெஜாரிட்டி அடிப்படையில் ஏற்க வேண்டுமா? சரியா? தவறா? என்று பார்க்க வேண்டுமா?  

காப்பி பேஸ்ட்டாளர்கள் தவிர, சுயமாக சிந்தித்து  ஆய்ந்து தர்ஜமா வெளியிட்ட யாரும் பெண் மாடு என்று கூறவே இல்லை. 

1926 முதல் வெளியான ஆரம்ப கால தமிழ் மொழி பெயர்ப்புகளில் பகரா என்பதற்கு “ரிஷபம்” என்றே மொழி பெயர்த்து இருந்தார்கள். 

குறிப்பாக அப்துல் ஹமீது பாகவி உடைய தர்ஜமாவில் சூரதுல் பகராவுக்கு 
“ரிஷபம்” என்று தான் தலைப்பிட்டிருந்தார். 

“ரிஷபம்” என்றால் தமிழில் காளை மாடு என்றே அர்த்தம். ஆக அப்துல் ஹமீது பாகவி  போன்ற தமிழ் ஸலபுகளும் (ஆண் மாடு)  காளை என்றே மொழி பெயர்த்து உள்ளார்கள். 

ஆண் எருமைக்குப் பெயர் கண்டிபெண் எருமைக்குப் பெயர் நாகு. இது மாதிரி இன்னும் பல பெயர்கள் எருமை வகைகளுக்கு உண்டு. எருமைகளில் உள்ள ஒவ்வொரு இனத்திற்கும். ஒவ்வொரு விதமான பெயர்கள் இருந்தாலும் அவற்றின் ஆண் பெண் இரண்டிற்கும் பொதுவான பெயர் எருமை என்பதே. 

இதை எருமை,  மாடு இனத்தைச் சார்ந்ததா? என்று 20ஆம் நுாற்றாண்டில் ஆய்வு செய்த அறிஞர்கள் குழுவினர் நன்கு அறிந்து இருப்பார்கள்.

மாடுகளில் எருமை மாடுகள் அல்லாத மற்ற இனங்களும் ஏராளமாக உள்ளன. இணைப்பில் உள்ளதை பார்த்துக் கொள்ளவும். அவற்றை எழுதப் போனால் மாடுகளுக்கான ஆய்வாக ஆகி விடும். நாம் பார்ப்பது பகரா” பற்றியது. 

எல்லோராலும் எருமையிலும் சிறந்ததாகக் கொண்டாடப்படும் அந்தப் இன மாட்டுக்கு பகரா”வுக்கு உரிய பெயர் என்ன? இந்தக் கேள்வி தழிழ் ஆசிரியர்களுக்கும் புரியாத புதிராகும். 


தழிழ் ஆசிரியர்களுக்கே தெரியாதா? என்ற கேள்வி வரலாம். ஆசிரியர்கள் என்பது வேறு. பண்டிதர்கள் என்பது வேறு. ஆசிரியர்கள் அந்த வேலைக்கு தேவையானதை மட்டும் படித்தவர்கள். பண்டிதர்கள் மொழிக்காக ஆய்வு செய்தவர்கள். இந்த வித்தியாசத்தை விளங்கிக் கொண்டால் அந்தக் கேள்வி வராது.

எருமை அல்லாத வேறு இனத்தைச் சேர்ந்த பெண் மாட்டிற்குப் பசு என்றும், ஆண் மாட்டிற்குக் 'காளை' என்றும் நடைமுறையில் சொல்கிறார்கள். 

ஆனால், பசு மாடு- காளைமாடு ஆகிய இரண்டிற்கும் பொதுவான பெயர் என்ன என்றால் எல்லோராலும் பதில் சொல்ல முடிவதில்லை. 

கண்டி, நாகு போன்றவைகளுக்கு பொதுப் பெயராக எருமை என அந்த எருமை இனத்துக்கு இருப்பது போலத்தான் இந்த இனத்துக்கும் பசு என்பது தான் பொதுப் பெயராகும். 

பசு என்பது சிலர் எண்ணுவதுபோல் பெண் மாட்டுக்கு மட்டும் உரியது அல்ல, ஆண் மாட்டுக்கும் உரியதாகும். 

எனவே, ஆண் எருமை, பெண் எருமை என்று சொல்வது போல, ஆண் பசு, பெண் பசு என்றும் சொன்னார்கள். ஆனால் ஆண் பசு என்று சொல்லும் வழக்கம் இக்காலத்தில் இல்லாமல் ஆகி விட்டது. 

ஆண் பசுவுக்கு (காளைக்கு) நந்தி என்பதும் பெண் பசுவுக்கு நந்தினி என்பதும் மக்கள் மறந்து விட்ட பழைய பெயராகும்.

இந்துக்கள் 
நந்தினி என்று பெண்களுக்கு பெயர் வைப்பது. அவர்கள் கொள்கைப்படி நந்தி என்ற ஆண் மாட்டின்  மனைவியே நந்தினி என்ற பெண் மாடு. 

நந்தி உருவம் ஆண் மாடு வடிவத்திலும் நந்தினி உருவம் பெண் மாடு வடிவத்திலும் கோயில்களில் வைத்து இருப்பார்கள். 

மாடு மாதிரி குறுக்கே வந்து நிற்காதே என்பதை நந்தி மாதிரி குறுக்கே வந்து நிற்காதே என்று சொல்லும் வழக்கம் இன்றும் உள்ளது. 

முஸ்லிம் முன்னோர்களிடமிருந்து முன் மாதிரியை தராமல் பிற மத வரலாறு தருவதாக எண்ணாதீர்கள். அவை தமிழ் மொழி மரபு விளக்கத்திற்காகவே தந்துள்ளேன்.

இனி தமிழ் முஸ்லிம் ஸலபுகள் நிலை பற்றி பார்ப்போம்.   ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி  அவர்களும். 
தென்காசி
  E.M. அப்துர் ரஹ்மான் நூரிய்யி, பாஜில் பாகவி அவர்களும். 6;144 வசனத்திற்கு செய்துள்ள மொழி பெயர்ப்பை இணைப்பில் உள்ள பைல்களில் பாருங்கள். 





பசு இனத்திலும் ஆண் பெண் இரண்டு வகை உண்டு என்ற அவர்கள் மொழி பெயர்ப்பு மூலம். பசு என்பது பெண் மாட்டுக்கு மட்டும் உரிய பெயர் அல்ல. 
ஆண் மாடு  பெண் மாடு ஆகிய இரண்டையும் குறிக்கும் பொதுவான சொல்தான் 
பசு.  இதை தமிழ் முஸ்லிம் ஸலபுகள் விளங்கியே வைத்துள்ளார்கள். இதற்கு 6;144 வசன மொழி பெயர்ப்பு ஆதாரமாக உள்ளது. 

ஆக 2:67 -71 6;144,146, 12:43. 45 ஆகிய வசனங்களில் உள்ள பகரா என்பது பெண் மாட்டை குறிக்கும் சொல் அல்ல. காளை (ஆண்) மாட்டை குறிக்கும் சொல்லே. 

சவூதி ஸலபுகள் உட்பட பெரும்பாலானவர்கள் தப்ஸீர் என்ற பெயரால் எழுதி உள்ளவை. இஸ்ரவேலர்களின் நுால்களில் இருந்து சொல்லப்பட்டவையாகும்.  

இத்தகைய தகவல்களை எடுத்துச் சொல்வது அனுமதிக்கப்பட்டிருந்தாலும் அவற்றை உண்மை என்றோ பொய் என்றோ அறுதியிட்டு உறுதியாக  கூற முடியாது என்றும் அவர்களே சொல்வார்கள்.   

உபாகமம் விவிலியம் பழைய ஏற்பாடு சாமுவேல் ஆகமம் 24ஆம் அதிகாரம் என்றெல்லாம் குர்ஆன் தப்ஸீருக்கு ஆதாரம் காட்டி உள்ளவர்கள் கூற்றை ஏற்பார்கள் யாராக இருப்பார்கள்? 










Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.