2:49. எப்படிக் கொலை செய்தார்கள்? அறுத்தா? குத்தியா? நெறித்தா?

“வ நிஸாஅனா வ நிஸாஅனாஃஅகும்” இது பெண் பிள்ளைகளைக் குறிக்கிறதா? மனைவிகளை குறிக்கிறதா?

அரபிகள் இரீது (ர)தபீஃஹ - (அறுத்தது வேண்டும்) என்பார்கள். அரபியுடன் உள்ளவர்கள் இதைக் கேட்டு இருப்பார்கள். இந்த வசனத்தில் யு(ர)தப்பிஃஹுன என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. இது (ர)தபஃஹ் - அறுத்தல் என்ற வார்த்தையில் இருந்து வந்ததுதான் அறுத்தார்கள் என்பது இதன் நேரடி பொருள்.

https://mdfazlulilahi.blogspot.com/2020/07/249.html

2:67.  تَذْبَحُوْ -த(ர்)துபஃஹு- நீங்கள் அறுக்க வேண்டும் 
2:71.  فَذَبَحُوْهَا - Fப(ர)தபஃஹுஹாஅவர்கள் அறுத்தனர்.

5:3.  وَمَا ذُ بِحَ - வமா(ரு)துபிஃஹ - அறுக்கப்பட்டது 
27:21. اَذْبَحَنَّهٗۤ -அ(ர்)துபஃஹன்னஹுஅதை அறுத்து விடுவேன்
37:102.   اَذْبَحُكَ -அ(ர்)துபஃஹுக - (நேரடி பொருள்) உன்னை நான் அறுப்பேன்  ( அடுத்துள்ள வார்த்தைகளை வைத்து அந்த வசனத்தில்  அறுப்பது போல் என பொருள் வரும்) 
  
ஆகிய இந்த  வசனங்கள்  மூலமும் “யு(ர)தப்பிஃஹுன”  வுக்கு அறுத்தார்கள் என்பது  நேரடி பொருள் என்பதை அறியலாம்

இந்த 2:49 வசனத்திலும் இது போன்றுள்ள   14:6.   28:4   வசனங்களிலும்  அறுத்தார்கள் என்றும் கொலை செய்தார்கள் என்றும்  இருவிதமாக முதர்ஜிம் (மொழி பெயர்ப்பாளர்)கள்  மொழி பெயர்த்துள்ளார்கள். 

கொலை செய்தார்கள் என்பதில் அறுத்தார்கள் என்பதும் அடங்கி இருக்கிறது. 

அறுத்தார்கள் என்பதில் கொலை செய்தார்கள் என்பதும் அடங்கி இருக்கிறது. இப்படி விளக்கம் சொல்பவர்களும் உண்டு.

இதே நிகழ்வை சொல்லக் கூடிய  7:141.ல்  يُقَتِّلُوْنَ - யுஃகத்திலுான - கொன்று - (கொலை செய்து) என்றே உள்ளது. ஆகவே இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று விளக்கமாக உள்ளது. 

கொலை செய்வதில் குத்திக் கொலை செய்வது நெறித்துக் கொலை செய்வது என பல வகை இருக்கிறது. அந்த மாபாவிகள் ஆண் குழந்தைகளை அறுத்துக் கொலை செய்தார்கள் என்பதை 14:6.   28:4,   7:141. ஆகிய வசனங்களை இணைத்துப் பார்க்கும் போது அறியலாம். 

இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள இன்னுமிரு வார்த்தைகள் “அப்னாஃஅ”   “நிஸாஃஅ“ 

அப்னாஃஅ” என்பதற்கு  நேரடி பொருள் ஆண் மக்கள். “பனாத்” என்றால் பெண் மக்கள். 

இன்றுள்ள அரபிகளின் நடைமுறையிலும் ஆண் மக்கள். பெண் மக்கள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கி அப்னாஃஅ” என்று சொல்கின்ற பழக்கம் இருக்கிறது

3:61 ல் அப்னாஃஅனா” - எங்கள் பிள்ளைகளையும்  “வஅப்னாஃஅனாஅகும் - உங்கள் பிள்ளைகளையும் என்று அப்துல் ஹமீது பாகவி, E.M. அப்துர் ரஹ்மான், நூரிய்யி, பாஜில் பாகவி, பீ.ஜே, தாருல் ஹுதா, றஹ்மத், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT)  தாருஸ்ஸலாம்   ரியாத்   போன்றவர்கள்  மொழி பெயர்த்து இருக்கிறார்கள். 

அதாவது ஆண் மக்கள். பெண் மக்கள் ஆகிய இரு பாலரையும் உள்ளடக்கி பிள்ளைகளையும் - மக்களையும் என மொழி பெயர்த்து  இருக்கிறார்கள். 


“வ நிஸாஃஅனா வ நிஸாஃஅனாஃஅகும்” - இதற்கு  எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும் என்று எல்லாருமே இந்த பொதுவான வார்த்தையை  மொழி பெயர்ப்பாக ஆக்கி இருப்பார்கள். 

இந்த இடத்தில் இடம் பெற்றுள்ள நிஸாஃஅ -  பெண்கள் என்பது மனைவிகளையே குறிக்கிறது.   எங்கள்   மனைவிகளையும்  உங்கள் மனைவிகளையும்  என்றே அர்த்தம் தருகிறது. 

இதற்கு,   2:187.   2:223.   2:226.   4:23.   4:129.   33:30.   33:32.   58:2.   58:3.    ஆகிய வசனங்களில் மனைவிகளை குறிக்க  இடம் பெற்றுள்ள  நிஸாஃஅ  ஆதாரங்களாக  உள்ளன.

ஒரு வார்த்தைக்கு நேரடி பொருள் ஒன்று இருந்தாலும் அதன் முன் பின் வார்த்தைகள், வசனங்களை வைத்தே  சரியான பொருள் காண முடியும். இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள ஆகிய வார்த்தைகள் நமக்கு படிப்பினை தருகின்றன.
இனி 2:49 வார்த்தைக்கு வார்த்தை

 وَاِذْ வஇ(ர்)து  (இது தனித்து பொருள் தாராத இடைச் சொல்)
போது - சமயம் -நேரம்- சந்தர்ப்பம் 


 نَجَّيْنَاநஜ்ஜைனா

நாம் காப்பாற்றினோம் -  விடுவித்தோம் - விடுதலை அளித்தோம் 

كُم - கும்  
உங்களை

مِنْ -  மின் 
இருந்து - From -லிருந்து

آلِ - ஆலி
கூட்டம் - குடும்பம்- ஆட்கள்

فِرْعَوْنَ ஃபிர்அவ்ன 

 ஃபிர்அவ்னின் - ஃபிர்அவ்னுடைய

يَسُومُونَ - யஸுமூன
வேதனை (நோவினை - சிரம) ப்படுத்துவார்கள் - 

كُمْ கும் 

உங்களை

سُوءَ ஸுஃஅ 
கடுமை - தீய - கொடிய

الْعَذَاب - அல் ஃஅராபி 
வேதனை - சித்திரவதை

يُذَبِّحُونَ யு(ர)தப்பிஃஹுன 
அறுப்பார்கள் - அறுத்தார்கள் (என்பது நேரடி பொருள் என்றாலும் வசன நடையில் அடுத்து வரும் வார்த்தையின் அடிப்படையில் கொலை செய்தார்கள் என்று மொழி பெயர்த்துள்ளார்கள்

أَبْنَاءَ - அப்னாஃஅ

ஆண் மக்கள் - (ஆண்) குழந்தைகள்

كُمْ கும் 
உங்கள்

 وَيَسْتَحْيُوْنَ - வயஸ்தஃஹ்யூன 
உயிருடன் விட்டனர்வாழவிடுவார்கள் - வாழவிட்டார்கள்

نِسَاءَ நிஸாஃஅ
பெண்கள்

كُمْ கும் 
உங்கள்

وَفِي ذَٰلِكُم - Fபீ தா(ரா)லிகும்
அதில் 


بَلَاءٌ பலாஃவுன்
சோதனை

مِّن மின் 
இருந்து - From -லிருந்து

رَّبِّكُمْ - ரப்பிகும் 
உங்கள் இறைவன்- 

عَظِيمٌ - ஃஅழீம்
மிகப் பெரும் - மாபெரும்

وَإِذْ نَجَّيْنَاكُم مِّنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَٰلِكُم بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ


வஇ(ர்)து நஜ்ஜைனாகும் மின் ஆலிஃபிர்அவ்ன யஸுமூனகும்  ஸுஃஅல் ஃஅராபி  யு(ர)தப்பிஃஹுன அப்னாஃஅகும்  யஸ்தஃஹ்யூன நிஸாஃஅகும் Fபீ     தா(ரா)லிகும் பலாஃவு(ன்)ம் மின்  ரப்பிகும் அழீம்

மொழிப்பெயர்ப்புகள் :

உங்களைக் கடுமையாக வேதனைப்படுத்தி வந்த ஃபிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து நாம் உங்களை விடுவித்த நிகழ்வை நினைத்துப் பாருங்கள். அவர்கள் உங்களின் ஆண் மக்களைக் கொன்று, பெண் மக்களை வாழ விட்டிருந்தார்கள். அதில் உங்களுக்கு உங்கள் இறைவனது பெரும் சோதனை ஒன்றிருந்தது - (அதிரை ஜமீல்)

ஃபிர்அவ்னின் ஆட்களிடமிருந்து உங்களை நாம் காப்பாற்றியதை எண்ணிப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குக் கடுமையான வேதனையை அனுபவிக்கச் செய்தார்கள். உங்கள் ஆண் மக்களைக் கொலை செய்து விட்டு, பெண்(மக்)களை உயிருடன் விட்டனர். உங்கள் இறைவனிடமிருந்து இது மிகப் பெரும் சோதனையாக இருந்தது.- (PJதொண்டி)

உங்களை கடுமையாக வேதனைப்படுத்தி வந்த ஃபிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து உங்களை நாம் விடு வித்ததையும் (நினைவு கூறுங்கள்)அவர்கள் உங்கள் ஆண் மக்களை கொன்றுஉங்கள் பெண்மக்களை வாழ விட்டிருந்தார்கள், அதில் உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு பெரும் சோதனை இருந்தது. 
-(ஜான் டிரஸ்ட் -K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, கடையநல்லுார்)


அன்றி உங்களுக்குத் தீய நோவினை செய்து கொண்டிருந்த ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிலிருந்து நாம் உங்களை விடுவித்தோம். அவர்கள் உங்கள் ஆண் பிள்ளைகளைக் கொன்றுவிட்டு உங்கள் பெண் (பிள்ளை)களை (மட்டும்) உயிருடன் வாழவிட்டு வந்தார்கள். அதில் உங்கள் இறைவனுடைய ஒரு பெரும் சோதனை ஏற்பட்டிருந்தது. - ( ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்) 


ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரி(ன் அடிமைத் தளையி)லிருந்து நாம் உங்களுக்கு விடுதலை அளித்த சந்தர்ப்பத்தையும் நினைவு கூருங்கள்! அவர்கள் கொடிய வேதனையில் உங்களை ஆழ்த்தி வைத்திருந்தார்கள். உங்களுடைய ஆண் மக்களைக் கொன்றொழித்துக் கொண்டும், உங்களுடைய பெண் மக்களை உயிருடன் விட்டு வைத்துக் கொண்டும் இருந்தார்கள். இதன் மூலம் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு மாபெரும் சோதனை ஏற்பட்டிருந்தது. -(இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)



இன்னும், ஃபிர் அவ்னுடைய கூட்டத்தாரிலிருந்து நான் உங்களை காப்பற்றிய சமயத்தை_ (நினைவு கூறுங்கள்); அவர்கள், தீய வேதனையை உங்களுக்குச் சுவைக்கச் செய்து கொண்டிருந்தார்கள்; அதாவது அவர்கள் உங்கள் ஆண்மக்களை அறுத்துக் கொன்று விட்டு உங்கள் பெண்(மக்)களை உயிருடன் வாழ விட்டு வந்தார்கள; அதில் உங்களுக்கு உங்கள் இரட்சகனுடைய மகத்தான சோதனையும் இருந்தது.- (அல்-மதீனா அல்-முனவ்வரா)


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.